PAGE LOAD TIME

மீண்டும் ச்சுப்பிரமணி.....

ஆத்தாடி இந்த விளம்பர மோகம் மனுஷங்களுக்கு மட்டும்தான்னு நெனச்சேன்.ஆனா ச்சுப்பிரமணிக்கும் இருக்கும்னு நான் நெனைக்கவேயில்லை.

ச்சுப்பிரமணி யாருன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.என்ன ஞாபகம் இல்லையா?

ச்சுப்பிரமணி சொன்னது சரிதான்.அப்பப்ப எதாவது சொல்லிக்கிட்டேயிருக்கனும் இல்லையின்னா மக்கள்ஸ் நம்ம மறந்துடும்னு சொல்லிச்சு.

ரெண்டு நாளா என்னைப் பத்தி ஏதாச்சும் பதிவு போடுங்கன்னுச்சு.

'உனக்கு ரொம்பத்தான் ஏத்தம் நீயி என்ன ‘சிவாஜி’ ரஜனியா உன்னைப் பத்தி அடிக்கடி சொல்ல?'

‘இங்க பாருங்க ஏதோ கவுஜ ,கடி,காமெடின்னு கிறுக்கிக்கிட்டிருந்தீங்க என்னைப் பத்தி பதிவு போட்டப்புறம் தான் மக்கள்ஸ் படிக்க ஆரம்பிச்சாங்க மறந்துட்டீங்களான்னு’ நக்கலாக் கேட்டது.

'அப்படியும் நீ எங்க வீட்டுக்கு வந்த கதையிலிருந்து

உனக்குப் பேர் வச்ச கதை

உனக்கு வயிறு சரியில்லாமப் போனது

டாக் ஷோவுல டைகரோட சேர்ந்து சொதப்புனது


எல்லாம் சொல்லிட்டேன் இன்னும் என்ன?'


‘ஏன் எனக்கு ஒரு தம்பிப் பாப்பா வந்திருக்கானாம் அவனப் பத்திச் சொல்லுங்க'’

‘உனக்குத் தம்பியா
நீயே டாக்டர் வீட்டுகிட்ட சுத்திக்கிட்டிருந்தே ரங்கமணி அப்பாதானே உன்னை தூக்கிட்டு வந்தாரு'

'ஓ தனியா சுத்திக்கிட்டிருந்தா நான் என்ன ‘சுயம்புவா?’எனக்கு ‘மம்மி’ யில்லையா?
டாக்டர் போனவாரம் வந்தப்ப என்ன சொன்னார்?’

‘என்ன சொன்னார்?நான் கிச்சன்ல காபி போடப் போயிட்டேன் எதுவும் கேக்கலையே'?

‘ஆனா நான் கேட்டேனே.எங்க மம்மி அவர் வீட்டு வாட்ச்மேன் வீட்லதான் இருக்காங்க போன வாரம்தான் மறுபடியும் குட்டி போட்டிருக்காங்களாம்.வேனுமின்னா நீங்க ஒன்னு எடுத்துக்கங்கன்னு சொன்னாரே’

ச்சுப்பிரமணிய பாதி நேரம் பெரியவன் பிச்சுதான் வச்சிருப்பான். சின்னவன் கிச்சுவ தொடக்கூட விடமாட்டான்.இதுனால எப்பவும் தகறாருதான் வரும்.

ச்சுப்பிரமணிய எங்களுக்குக் கொடுத்த எங்க பேமிலி டாக்டர் போன வாரம் வந்த போது ரங்கமணிகிட்ட இந்த மேட்டரச் சொல்லி புதுசாப் போட்ட குட்டியில ஒன்னை கிச்சுவுக்காக எடுத்துக்கச் சொன்னார்.இதத்தான் ச்சுப்பிரமணி சொல்லிக் காட்டுறான்.

சரின்னுட்டு மறுநாள் டாக்டரைப் போய் பார்த்து சின்னதா கியூட்டா ஒரு குட்டிய [ஆண்குட்டி]எடுத்து வந்தாச்சு.

அவனுக்கு பேர் வைக்கும் படலமும் ஆரம்பிச்சாச்சு.

ச்சுப்பிரமணி கண்டிப்பா சொல்லிட்டான் என் தம்பிக்கு நாந்தான் பேர் வைப்பேன்.உங்கள மாதிரி ஓல்டு மாடலா பிச்சுமணி,கிச்சுமணி,ச்சுப்பிரமணின்னு வைக்கக்கூடாது.

'சரி சொல்லு என்ன பேர் வைக்கலாம்னு'

'ஹக்கி'..........'டைசன்'.........ரேஞ்சர்.....'டஃப்பி' இந்த நாலுல ஒன்ன சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுங்க'ன்னுச்சு.

உனக்கு ரொம்ப ஏத்தம்தான்னுட்டு அப்படியே செஞ்சோம்.'டஃப்பி' பேர் வந்தது.

அடுத்து என்னையும் என் தம்பி டஃப்பியையும் போட்டோ எடுத்துப் போடுங்க மக்கள்ஸ் பாக்கட்டும்னு சூப்பரா போஸ் குடுத்துச்சு .

பாருங்களேன் எப்படியிருக்குன்னு.


அப்படியே உங்க எல்லோரையும் ரொம்பக் கேட்டதாச் சொல்லனுமாம்.சொல்லிட்டேங்க.

டிஸ்கி : நாய் பேசற மாதிரி பதிவுல்லாம் போட்டா!!!!!காலக் கொடுமைடா சாமீ என்பவர்கள் தம்பி வெட்டியோட பிளாக் டிஸ்கிரிப்ஷனைப் படிக்கவும்.

25 மறுமொழிகள்::

மின்னல் said...

:)

அவந்திகா said...

akaa Toffy ya keteannu sollunga

Chupramaniyum keteannu sollunga

கண்மணி said...

என்ன மின்னலு வெறும் சிரிப்பான். கும்மி கோஷ்டி இல்லையா பாவம் நீயி ;((

கண்மணி said...

ஹாய் அவந்தி உன் 'புரோபைல் நாய் சாரி செல்லம் 'பேரு என்ன?

குட்டிபிசாசு said...

நாய் இன்னா "மூன்றாம் பிறை சுப்பிரமணி" தானா!! டஃப்பி.. குல்பினு பேரு வச்சது நல்லா தான் இருக்கு!

குட்டிபிசாசு said...

அக்கா,

கும்மி அடிக்க யாரும் வரலயா?

குட்டிபிசாசு said...

பாசக்கார குடும்பம் பலம் அவ்வளவு தானா?

காயத்ரி said...

யக்கோவ்! ச்சுப்பிரமணி.. டஃப்பி ஸ்டில் ச்சூப்பர்!

Anonymous said...

:D

Anonymous said...

//குட்டிபிசாசு said...
பாசக்கார குடும்பம் பலம் அவ்வளவு தானா?
//

பாசக்கார குடும்பத்திலிருந்து கிட்டு பலம் இவ்வளவுதானான்னு கேட்ட என்ன நியாயம் இது.நீங்கதான் புகுந்து விளையாடனும்.நான் எஸ்கேப்.

கண்மணி said...

எலே தம்பி குட்டிபிசாசு பாசக்கார குடும்பத்துல இருந்துகிட்டே இப்டி காமெடி பண்றீயே ஞாயமா?அல்லாரும் ஊருக்குப் பூட்டாங்களாம்.

கண்மணி said...

ஹாய் காயூ வாழ்த்துக்கள் பார் யுவர் நியூ போஸ்ட் இன் ப.பா.ச [நானும் ரெக்கமண்ட் செஞ்சானாக்கும் அக்காங்ஹ்]
தூள் கெளப்பு.

கண்மணி said...

துர்கா இன்னா நீயி எப்பப்பாரு நழுவறே .ஆமா நீயி எந்த கோஷ்டி?[குரூப்] வ.வா.ச?அல்லது ப.பா.ச அல்லது பா.கு?

தருமி said...

நானெல்லாம் ஒண்ணும் ஊருக்கெல்லாம் போகலை.

அய்யனார் said...

கண்மணி!!
இந்த டெம்ப்ளேட் பத்தி கேட்டேன் இல்ல @@@@
எனக்கொரு நல்ல டெம்ப்ளேட் வேணும் ..எப்படி மாற்றுவதுன்னும் கொஞ்சம் சொல்லுங்க..

கண்மணி said...

யார் சொன்னா நீங்க ஊருக்குப் போனீங்கன்னு.சிவாஜி படத்துக்கு டிக்கெட் வாங்க ரெண்டுநாளா கியூவுல நிக்கிறீங்கன்னு காத்து வாக்குல சேதி.

கண்மணி said...

அய்யனார் டெம்ப்ளேட் பத்தி எனக்கு அறைகுறையாத்தான் தெரியும் எல்லாம் டிரையல் &எர்ரர் மெத்தடு தான்.சரி உங்க மயில் ஐடி குடுங்க விளக்கத்தோட அனுப்பி வைக்கிறேன்.

குட்டிபிசாசு said...

@ கண்மணி அக்கா,

இந்தியாவிற்கு முதல்குடிமகன்(அதாவது ஜனாதிபதி) ஆனாலும், அக்காவிற்கு தம்பி தான்!!

குட்டிபிசாசு said...

நாய் இடுகை எல்லாம் பழசு! டைனோஸர் பத்தி எதாவது போடுங்க!!

வேணும்னா டைனோசருக்கு லட்சுமிபதி/கோவாலு இப்படி நல்ல பேரா வைங்க!!

அத விட்டுட்டு டாஃபி...சாக்லேட்னு வைக்கதீங்க!!

அபி அப்பா said...

:-)))))))

அபி அப்பா said...

enna kodumai saravana:-)))

அய்யனார் said...
This comment has been removed by the author.
கண்மணி said...

வாங்க அபி அப்பா நான் புது போஸ்ட் போட்டது மூக்குல வேர்த்துச்சா?
அண்ணியார் நலமா?
அபி பாப்பா?
ஊர்லாம் எப்படியிருக்கு?

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்மணி டீச்சர், உங்களுக்கு நாய் பாஷையெல்லாம் தெரியும்ன்னு சொல்ல்லாவே இல்ல? எப்படி பேசுனீங்க? லொள் லொள்ன்னு பேசினீங்களா? இல்ல வள் வல்ன்ன்னு பேசினீங்களா? ;-)

cheena (சீனா) said...

ச்சுப்ரமணிக்குத் தம்பி - டஃபியா - வாழ்க - வாழ்த்துகள். இப்போ ரெMனு பேருமா வூட்ல ரகள பண்றாங்களா - நன்று நன்று ( ஜியோ இவனுக்கும் வாங்கியாச்சா)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)