PAGE LOAD TIME

பாசக்கார குடும்பம் @ கலைஞர் டி.வி

அசத்தப் போவது யாரு யூனிட் சன் டி.வி கூட இருந்ததால புதுசாத் தொடங்கப் போற கலைஞர் டி.வி க்கு 'சொதப்பப் போவது யாரு' ன்னு ஒரு புரோகிராம் தொடங்கப் போறாங்களாம். அதுக்கு புது டீம் தேர்ந்தெடுப்பதாக பாசக்கார குடும்பத்திற்கு அழைப்பு வந்திருந்தது.

அந்த டீம் நல்லா பெர்பார்ம் பண்ணா அடுத்தடுத்து புரோகிராம் வாய்ப்பு கிடைக்குமாம்.
தருமி சார் தலைமையில எல்லோரும் ரிகர்சல் பாக்க முடிவாச்சு.நம்ம மக்கள்ஸ்தான் சொதப்பல் மன்னர்களாச்சே.அதுனால கலந்துக்க ஓகே சொல்லிட்டாங்க.

யார் யாருக்கு எதுல தெறம இருக்கோ அந்த வகையில் ரிகர்சல் பண்ணனும்னு முடிவு பண்ணாங்க.

அதுல விசேஷம் என்னன்னா அந்த புரோகிராமிற்கு 'நமீதா'சிறப்பு விருந்தினர்.:)
சிறந்த சொதப்பல் மன்னருக்கு அவர் கையால் பரிசு;)

ஆணி புடுங்கறதக் கூட விட்டுட்டு அத்தனை பேரும் ரிகர்சல் பார்த்தனர்.

ஒரு வழியா ரிகர்சல் முடிய புரோகிராமுக்கு அழைப்பு வந்தது.

காம்பியரிங் பண்ண ராஜ் டி.வி. பிந்தியா குட்டை கவுனும் கழுத்தில் ஸ்கார்ப்பும் தலையில் குல்லாவும் [இதென்ன காஸ்ட்யூம்னு என்னக் கேட்டா அவங்க அப்படித்தான் 'கெக்கே பிக்கே'ன்னு போட்டுக்கிறாங்க]
வாயெல்லாம் பல்லுமாக சித்துபடியே வரவேற்றார்.:))

மீசையில்லாத சதன் பாப்பும் ,மீசையோடு கிட்டி பாபுவும் இருந்தனர்.

பேஜாரே....பேஜாஆஅ....பேஜாரே...பேஜாஆஅ....என்று ஆடியன்ஸ் கையசைக்க 'நமீதா' வர ஸ்டேஜ் லேசாக தள்ளாடியது.[போதையில் இல்லை நமீ வெயிட் தாங்காமல்].

முதலில் வந்து சொதப்பப் போவது அடர் கானகப் புலி அய்யனார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பிந்தியா வீறிட,
அய்யனார் தன் டிரேட் மார்க் 'புலி' கெட்டப்பில் வருகிறார்.

என்ன செய்யப் போறீங்க என கிட்டிபாபு கேட்க அய்யனார் புலி வேஷத்தில் ஆடிப்பாடுகிறார்.

''அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ'

ஆடிக் கொண்டிருக்கும் போதே புலிக்கு அரிப்பெடுக்க சொறிந்து கொண்டே ஆடுகிறார்.நமீதாவுக்கு சிரிப்பு தாங்கலை ஹஹ்...ஹஹ்ஹ்ஹா..என குலுங்கிச் சிரிக்க

சதன் பாபு கேட்கிறார்,'இவரப் பத்தி என்ன மேடம் நினைக்கிறீங்க'

மிஸ்டர் புலி அப்படியே நாலு கால்ல நடங்கப் பார்ப்போம் என நமீ சொல்ல அய்யனார் நாலு காலில் [2கால்+2 கை]நடந்து காட்டுகிறார்.

குட் குட் என நமீதா சர்டிபிகேட் தருகிறார்.

அடுத்து மின்னல் வாப்பா என அழைக்க திடீரென்று அரங்கில் லைட் ஆப்.
கண்ணைக் கூசும் ஒளியுடன் மின்னல் ஆஜர்.

'நீங்க என்ன வெரைட்டியா...ஜோக்ஸா...மிமிக்ரியா' என

'நான் மிமிக்ரிதான் எனக்கு பல பேர்ல பின்னூட்ட்ம் போட்டு கும்மியடிக்கத்தான் வரும்'


'என்ன சொல்றீங்க'

'ஓ சாரி பல குரல்ல பேசுவேன்னு சொன்னேன்'

'எங்கே பேசுங்க பாப்பம்'

நொந்தவன்...வெந்தவன்...தடுக்கி விழுந்தவன்..தண்ணியடிப்பவன்...நல்லவனுக்கு கெட்டவன்...கெட்டவனுக்கு நல்லவன்...என பல குரல்களில் மின்னல் பேச நமீதா கை கொட்டி ரசிக்கிறார்.

'ஏய் மின்னல் என்னைப் பத்தி ஒரு பாட்டு பாடு மேன் 'என நமீ கொஞ்ச

'நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான்
ரோடு ரோலர் என்பேன்
செம கட்டை என்பேன்'

மவனே நீ ரிஜெக்டட் என நமீ முறைக்க,

அடுத்து கோபி என பிந்தியா கீச்சுக் குரலில் வீறிட....கோபி...கோபி...கோபி..என அரங்கம் முழுதும் எக்கோ.

'கோபி கொஞ்ச நாளாக் காணோம் என்னாச்சுன்னு தெரியலை' என கிட்டி பாபு சொல்ல

ஒரு முகமூடி உருவம் உள்ளே வருகிறது.

அப்படியே நமீதா உக்கார்ந்திருக்கும் இடத்துக்குப் போயி ,'நமீ நமீ இது நிஜமா? நான் காண்பது கனவா?'

கிட்டிபாபு,'ஹேய் யார் மேன் நீ'

சார் நமீ சார்...என் நமீ சார்..'

அவங்க நமீதாதான் நீ யாரு மேன்'

'நான் கோபி சார்'

'ஏன் இப்படி மாறு வேஷத்துல வர்றீங்க' என கிட்டிபாபு கேக்க

'மூஞ்ச காமிச்சா நமீ நம்மள ரிஜெக்ட் பண்ணிடும்னு பயம்தான்'
என மனதில் நினைத்ததைச் சொல்லாமல் 'ஒரு ஜாலிக்குதான்'என

'சரி மேடத்துக்கிட்ட ஜொள்ளு விட்டதிலேயே உங்க டைம் முடிஞ்சிப் போச்சு நீங்கப் போகலாம்'

அடுத்ததாக குட்டிபிசாசு அழைக்கடுகிறார்.

அக்கா வாழ்க நமீதா அக்கா வாழ்க என கூவியபடியே குட்டிபிசாசு வர

'ஹேய் பைய்யா நான் உன்கு அக்காவா ?என்கு 17 வய்சுதான் ஆவுது.உன்கு இன்னா ஒரு 36 இருக்குமா?'

'அய்யோ எனக்கு 24 தான் .நான் படிக்கிற பையன்'

'படிக்கிறயோ வடிக்கிறயோ என்னை எதுக்கு அக்கா கூப்பிட்டே சைத்தான் கீ பச்சா பேர் பாரு குட்டி பிசாசு கரீட்டாத்தான் உங்க மம்மி வச்சிருக்கு.ஜாவோ...ஜாவ்... யூ ஆர் ரிஜெக்டெட்'

'போங்கடி நீங்களும் உங்க பரிசும்
தாய்குலமாச்சேன்னு மருவாதியாக் கூப்டேன் என்று நொந்தபடி 'அக்கா சொன்னா தப்பா'ன்னு பதிவெழுதப் போயிடுச்சி.

கடேசியா தல அபி அப்பாவக் கூப்பிட அவர் கையில் ஒரு குழந்தைப் படத்துடன் வந்து,


'எனக்கொரு மகன் பிறப்பான்'
அவன் என்னைப் போலவே பிளாக்குவான்
தனக்கொரு பாதை வகுக்காமல்
தந்தை வழியிலே கலாய்ப்பான்.'


எனப் பட நமீதா,'ஹாய் அபி அப்பா பெஸ்ட் ஆப் லக் உங்களுக்கு அழ்கா ஒரு ஆண் குழந்தை பிறந்து என் கூட ஹீரோவா நடிக்கும்னு சொல்ல அபி அப்பா உங்க பரிசே வேணாம் தங்கமணி வைய்யும்னு ஓடுறார்.

'ஆமாம் உங்க டீம்ல 'தம்பி'ன்னு ஒரு தம்பி இருந்துச்சே வரலையான்னு சதன் பாபு கேட்க

'அவன் பாவனா பரிசு குடுத்தாத்தான் கலந்துக்குவேனு வரல்லை'என சொல்ல

இறுதியாக பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் கட்டம்.

யாருக்குக் கிடைக்கும் என ஆவலாக எல்லோரும் பார்த்திருக்க

நமீதா 'இவ்ளோ சூப்பரா சொதப்புற டீமை தயார் செஞ்சி அழைத்து வந்த தருமி சாருக்கு சிறந்த 'சொதப்பல் மன்னன்' பட்டம் தருகிறேன் என்றார்.

கோபி முறைக்க,மின்னல் நொடிக்க,குட்டிபிசாசு திகைக்க,அய்யனார் ஆச்சரியப்பட யூ டூ புரூட்டஸ் என அபிஅப்பா அலற,

தங்கமணிகிட்ட வாங்கப் போகும் திட்டை தற்காலிகமாக மறந்துவிட்டு நமீதா கையால் பரிசு வாங்க படா ஸ்டைலா [இதுமாதிரி ஆகும்னு தெரிஞ்சுதான் மனுஷன் கோட் சூட்னு வந்திருந்தார்]மேடைக்கு வந்து போட்டோவுக்கு போஸும் குடுத்தார்.

டிஸ்கி:சொதப்பியது யாரு நாங்களா?இல்லை நமீதாவா ன்னு மக்கள்ஸ் இன்னும் மண்டையப் பிச்சிக்கிறதாக் கேள்வி.

66 மறுமொழிகள்::

நாமக்கல் சிபி said...

:))

வேற யாரு தருமி சார்தான்!

(சரியாகப் படிக்கவும். சாத்தான் அல்ல! சார்தான்)

கண்மணி said...

ஹை குழந்தை சிபி எப்ப பெரிய ஆளானாரு
சிண்டுல்லாம் நல்லா முடியிறீங்க [தருமி சார்தான் சாத்தான் இல்லை.?]

நாமக்கல் சிபி said...

//சிண்டுல்லாம் நல்லா முடியிறீங்க //

நம்ம தொழிலே அதான்!

அடுத்து நம்ம குசும்பன் வருவாரு பாருங்க!

Anonymous said...

:))))))))))))

நமீதா said...

அடப் பாவி மின்னலு என் பல் செட்டை லவட்டிக்கிட்டுப் போயிட்டியா

நமீதா said...

அதப் பாவி மின்னலு,
என் பல் செத்தை லவத்திகித்து போயித்தியா!

குட்டிபிசாசு said...

சொதப்பியது கன்மணி அக்காதான்! அவங்களுக்கு தான் பரிசு குடுக்கனும்.
பல்கலை வித்தகர்கள் நிறைந்த பாசக்கார குடும்பத்தில் திறமைக்குப் பஞ்சமா?

தருமி ஐயாவிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு சதி புரிந்துவிட்டீர்!!

குட்டிபிசாசு said...

நமீதாஜி,

பல்செட்டை லவட்டினது மின்னல் இல்ல! நான் தான்!!

தருமி said...

எந்த ஸ்மைலி போடுறதுன்னு தெரியலையே !
:)
:(

அய்யனார் said...

கொஞ்ச நாளா சத்தமே இல்லாம இருந்தது ..@@ மறுபடியும் ஆரம்பிச்சாச்சா

தம்பி said...

//அடுத்து நம்ம குசும்பன் வருவாரு பாருங்க//

குசும்பனும் நீங்கதான்னு பேசிக்கறாய்ங்களே???

தருமி said...

சிபி,
அடுத்த தடவை உங்களைப் பார்க்கிறப்போ பிடிச்சி ஆட்டப் போறேன் .. இருங்க வச்சிக்கிறேன்.

- தருமி சார்(த்)தான்.

தம்பி said...

பாவனா என்ற பெயர் இந்த பதிவில் வந்து விட்டது அதனால் இது ஒரு நல்ல்ல்ல்ல்ல நல்ல பதிவு.

அய்யனார் said...

பாவனா ரசிகரே

அபி அப்பா வீட்ல விசேசமாமே உண்மையா

கண்மணி said...

தம்பியண்ணே [உபயம் மை பிராண்ட்]
நீங்க பாவனா ரசிகர்னுதான் உம்மள போட்டியில சேக்கல.அடுத்த கும்மி வித் பாவனா தான் ஓகே வா?

கண்மணி said...

தருமி சார் உங்கள கலாய்ச்சதுல கோபமில்லையே[இருக்காது நமீதாகிட்ட இல்ல பரிசு வாங்கினீங்க]

கண்மணி said...

//அடுத்து நம்ம குசும்பன் வருவாரு பாருங்க//

குசும்பனும் நீங்கதான்னு பேசிக்கறாய்ங்களே??? //

ரிப்பீட்டே......... நானும் டவுட்டானேன்.

கண்மணி said...

அய்யோ அய்யோ அய்யனாரு!
புள்ள பொறந்து பிலாக்கு எழுதச் சொல்ல கேக்காம வுட்டீங்களே 'அபிஅப்பா வீட்ல விசேஷமா'ன்னு :))
என்னோட
கும்மி பிலாக்குல அபிஅப்பா திருமணநாள் வாழ்த்துல எழுதனது படிக்கலையா?

குட்டிபிசாசு said...

கன்மணி அக்கா கவந்த்திற்கு,

மகளிரணி ஏன் பங்கெடுக்கலனு ஒரு விசாரனைக் கமிஷன் வைக்கனும்!

காயத்ரி said...

//'எனக்கொரு மகன் பிறப்பான்'
அவன் என்னைப் போலவே பிளாக்குவான்
தனக்கொரு பாதை வகுக்காமல்
தந்தை வழியிலே கலாய்ப்பான்//

:))))) அக்கா செமயா இருக்கு!! அய்யனார்.. குட்டிபிசாசு.. அபி அப்பா செஷன் ரசிச்சு படிச்சேன். கலக்குறீங்க!

நாமக்கல் சிபி said...

//பிடிச்சி ஆட்டப் போறேன் //

என்கிட்ட நல்ல நல்ல தாயத்தெல்லாம் இருக்கு தருமி சார்!

நாமக்கல் சிபி said...

போட்டோ எப்படி? சும்மா அதிருதா?

Anonymous said...

சிபி இன்னும் தருமி சார் கையக் கூட கழுவலியாம் நமீதா தொட்ட கை ன்னு .
போட்டோ பெருசா லாமினேஷன் போட்டு
தலகாணியடியில வச்சிருக்காராம்.ஹால்ல மாட்னா தங்கமனிக்கு தெரிஞ்சிடுமாம்.

முத்துலெட்சுமி said...

அபிக்கு தம்பி பிறந்தாச்சு.......

கண்மணி said...

ஹை எனக்கு முன்னாடியே தெரியுமே.
நாந்தான் அபிஅப்பாக்கு அருள் வாக்கு சொன்னேன்.பையன் பொறக்குமின்னு.

மனுசன் மயிலு ஒன்னும் அனுப்பலை.

அய்யனார் சொல்லித்தான் தெரியும்

நாமக்கல் சிபி said...

//சிபி இன்னும் தருமி சார் கையக் கூட கழுவலியாம் நமீதா தொட்ட கை ன்னு .
போட்டோ பெருசா லாமினேஷன் போட்டு
தலகாணியடியில வச்சிருக்காராம்.ஹால்ல மாட்னா தங்கமனிக்கு தெரிஞ்சிடுமாம்//

அனானி,

நீங்களும் "குடும்பத்தில் குண்டு வைப்போர்" சங்கத்துல உறுப்பினரா?

மங்கை said...

இங்கேயும் நமீதா தானா...:-))

தருமி said...

சிபி,
தாயத்தெல்லாம் நம்ம கிட்ட ஒண்ணும் பண்ண முடியாது .. ஜாக்கிரதை.

தருமி said...

கண்மணி,
இதென்ன இப்படி கேட்டுட்டீங்க .. சந்தோஷம்தான்.
அப்டி நினைக்கிறதா இருந்தா பாசக்காரக் குடும்பத்தில சேர்ந்திருப்பேனா?

ஜமாய்ங்க ..

தருமி said...

நெஞ்சுக்குள்ளே புதச்சி வச்சத
எதுக்கு தலையணைக்கி கீழே புதைக்கணும்.

:(

கை கழுவ மாட்டேன்........

Chinna Ammini said...

இனி கொஞ்ச நாள் அபி அப்பா நம்ம கிட்ட அபிதம்பி புராணம் பாடுவார் பாருங்க!!(அபி பாப்பா டைகர விட்டு கவனிக்கற வரைக்கும்)
நமிதா முடிஞ்சு பாவ்னாவா!! அப்ப நாங்கெல்லாம் என்ன பண்ணறது.
எங்கள மாதிரி பொண்ணுங்களுக்கு ஒரு பதிவு கிடையாதா???

Chinna Ammini said...

நாமக்கல் சிபி போட்டொல நல்லாத்தான் இருக்காரு.
சிபி கலாய்ப்பொர் சங்கம் ஒண்ணு ஆரம்பிக்கலாமா

சி.க.ச said...

//சிபி கலாய்ப்பொர் சங்கம் ஒண்ணு ஆரம்பிக்கலாமா
//

ஆரம்பிச்சிடுவோம்!

சி.க.ச
சென்னை திருமங்கலம் கிளை!


(சி.க.ச - சின்ன அம்மணியைக் கலாய்ப்போர் சங்கம்)

சௌந்தர்யாவின் ஆவி said...

//நெஞ்சுக்குள்ளே புதச்சி வச்சத
எதுக்கு தலையணைக்கி கீழே புதைக்கணும்//

தருமி சார்,

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா? அது கொஞ்சிக் கொஞ்சிப் பேசுறது கண்ணில் தெரியுமா?

உலகே அழிஞ்சாலும் உங்க உருவம் அழியாது!
உயிரே பிரிஞ்சாலும் உங்க உருவம் மறையாது!

உண்ணாமல் உறங்காமல் உங்களால் தவிக்கும் பொண்ணு மணி!

தருமி said...

செளந்தர்யாவின் ஆவி,

ஹி ... ஹி ...

கண்மணி said...

தருமி சார் மச்சம் தான் உங்களுக்கு நமீதா சௌந்தர்யானு ஆஃபர் அதிகமாருக்கு..
பாத்து தங்கமணி அக்கா பூரிக்கட்டையைத் தேடுறாங்களாம்.

Anonymous said...

:)))))))))

Anonymous said...

மின்னலு எங்கப்பா நீ

ஜெயமாலினி said...

அவரு வயசுக்கு சவுந்தர்யா, நமீதா எல்லாம் சரியா வராது!

தருமி said...

செயமாலினி,
பழச எல்லாம் உட்ருமா ...

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

கண்மணி,
தங்கமணிட்ட எல்லாம் சொல்லி சரண்டராகி, முன் ஜாமினெல்லாம் வாங்கியாச்சே .. :)

கண்மணி said...

அது சரி நீங்க ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்டு மேன் இல்லையா அதான் முன் ஜாமீன் மேட்டர்ல உஷார்;)

delphine said...

நெஞ்சுக்குள்ளே புதச்சி வச்சத
எதுக்கு தலையணைக்கி கீழே புதைக்கணும்./////

ஆசை யாரைவிட்டது?

குட்டிபிசாசு said...

அக்கா,

பாசக்கார குடும்பத்துக்கு அடுத்த போஸ்ட் ரெடி!!

புதுஇடுகை
வந்து திட்டிட்டு போங்க!!

மின்னுது மின்னல் said...

'நமீதா'சிறப்பு விருந்தினர்.
:)

may i coming inside..:)

மின்னுது மின்னல் said...

நாயண்தாராவையும் அடுத்த கும்மில் சேர்க்கவும்


இவண்
நாமக்கல் சிபி
கொல வெறி பாசரை
துபாய் கிளை

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...

//சிண்டுல்லாம் நல்லா முடியிறீங்க //
நம்ம தொழிலே அதான்!
///

தள ஏன் இப்படி உண்மையேல்லாம் இங்க பேசிக்கிட்டு...:)

ராயல் ராம் கவுஜ படிச்சவன் said...

முதலில் வந்து சொதப்பப் போவது அடர் கானகப் புலி அய்யனார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பிந்தியா வீறிட,
அய்யனார் தன் டிரேட் மார்க் 'புலி' கெட்டப்பில் வருகிறார்.
//

கானக புலிகளின் அட்டகாசம் அதிகரிக்கிறது

இப்படிக்கு

கணக்கெடுத்தவன் said...

'சொதப்பியது யாரு'
அய்ஸ்
75
மின்னல்
60
தருமி சார்
76

நாமக்கல் சிபி said...

//
கணக்கெடுத்தவன் said...
'சொதப்பியது யாரு'
அய்ஸ்
75
மின்னல்
60
தருமி சார்
76
//

கணக்கெடுத்தவன் தீர்ப்பு! ஆண்டவன் தீர்ப்பு!

Chinna Ammini said...

சிபி அண்ணா
எங்கள மாதிரி சின்னப்பொண்ணுங்களுக்காக ஹ்ரிதிக் ரோஷனயோ இல்ல மாட் டேமன்னய்யோ வச்சு ஒரு பதிவு போட சொல்லுங்க.(அண்ணான்னு கூப்டா உங்களுக்கு தலைல ஐஸ்க்ரீம் வச்சமாதிரியாமே)
எத்தன நாள் தான் நாங்க நமீதா, அசின், பாவ்னா புராணம் கேக்கறது

Chinna Ammini said...

மாட் டேமன் - Matt Damon

நாமக்கல் சிபி said...

//.(அண்ணான்னு கூப்டா உங்களுக்கு தலைல ஐஸ்க்ரீம் வச்சமாதிரியாமே)
//

ம்.ஊரு பூரா தெரிஞ்சி போச்சா!
:)

//எங்கள மாதிரி சின்னப்பொண்ணுங்களுக்காக ஹ்ரிதிக் ரோஷனயோ இல்ல மாட் டேமன்னய்யோ வச்சு ஒரு பதிவு போட சொல்லுங்க.//

பதிவு போடச் சொல்லுறது என்ன தங்கச்சி! நானே போடுறேன்!

(அதான் அண்ணான்னு வேற சொல்லிட்டீங்கள்ள இல்ல)

கண்மணி said...

சிபி அண்ணா .....ஆணி புடுங்கற வேலையில்லையா?
இங்கனயே கும்மியடிக்கிறீங்க.:)

நாமக்கல் சிபி said...

//ஆணி புடுங்கற வேலையில்லையா?
இங்கனயே கும்மியடிக்கிறீங்க//

இங்கே கும்மி அடிக்கலாமா கூடாதா?

:-x

கண்மணி said...

கும்மி என்ன கோலாட்டம் கூட அடிங்க நமக்கு கமெண்ட் எகிறுனா சர்தான்.
இருந்தாலும் ரொம்பப் பிரீயா இருக்கிற மாதிரி தெரியுதே....ஆணிய அடுத்தவங்க புடுங்க வுட்டுட்டீங்களோ.

குட்டிபிசாசு said...

@அக்கா,

என்ன தோழர் சிபி இங்கயே சுத்திசுத்தி வரார்! கும்மியடிக்க வேறயிடம் இல்லயா?

இலவசக்கொத்தனார் said...

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும்.

குட்டிபிசாசு said...

@ யக்கோய்,

//இலவசக்கொத்தனார் said...

உங்களை எட்டு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன். மேல் விபரங்களுக்கு இங்கு வந்து பார்க்கவும். ///

போய் ரிஸ்க் எடுக்கதீங்க! சொல்லிபுட்டேன்..அம்புடுதேன்..

குட்டிபிசாசு said...

கண்மணி அக்கா,

மன்னிக்கவும்.நான் இப்பதானே விடுமுறைல ஊருக்கு வந்தேன். மறுபடியும் வரது கஷ்டம். அடுத்தமுறை வரேன். நான் இங்க கரக்பூர்ல இருக்கேன். நான் ட்ரெய்ன்ல சென்னை வரவே 24-30 மனிநேரம் ஆகும்.

//சிரிப்பானக் காணோம் ;(//

நான் சிரிப்பானை போட்டேன். வரலிங்களா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நம்ம மக்கள்ஸ்தான் சொதப்பல் மன்னர்களாச்சே.//

வெளிக்குத்து பலமா இருக்கே!!! இதை கேட்க யாருமே இல்லையா????

.:: மை ஃபிரண்ட் ::. said...

//காம்பியரிங் பண்ண ராஜ் டி.வி. பிந்தியா குட்டை கவுனும் கழுத்தில் ஸ்கார்ப்பும் தலையில் குல்லாவும் [இதென்ன காஸ்ட்யூம்னு என்னக் கேட்டா அவங்க அப்படித்தான் 'கெக்கே பிக்கே'ன்னு போட்டுக்கிறாங்க]
வாயெல்லாம் பல்லுமாக சித்துபடியே வரவேற்றார்.//

நமிதா இப்படிதான் சொல்லியிருப்பாங்க: டைரக்டர் சார் குடுத்துச்சு.. ட்ரஸ் கியூட்டா இருந்துச்சு.. நான் போட்டுக்கிச்சு.. கெக்கே பிக்கே (சிரிப்புதான்)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஜூப்பர் ஜூப்பர்!! :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

அடுத்த போஸ்ட் படிக்க போறேன்.. கமெண்ட்டோடு வர்ரேன். ;-)

cheena (சீனா) said...

நல்லதொரு நகைச்சுவைப் பதிவு. பின்னூட்டங்களெல்லாம் பின்னிப் பெடலெடுத்துருக்காங்க. ரூம் போட்டு யோசிச்சு எழுதி இருக்கீங்க -- நமீதா கிட்டே பரிசு (சொதப்பல் மன்னனா) வாங்கின தருமி வாழ்க. சிரிச்சு சிரிச்சு ...........

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)