PAGE LOAD TIME

மாம்பழமாம்.....மாம்பழம் எமனாகும் மாம்பழம்


மா...மாம்பழம்...கேட்டாலே இனிக்கும்.முக்கனிகளில் முதல் கனி.
மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும் என்பார்கள்.
அதுவே மாம்பழமாக இருந்தால் சோறு கூட வேண்டாம் என்று சொல்ல வைக்கும்.
வகை வகையான பழைய ரகங்களோடு புதிய ஒட்டு ரகங்களும் சேர்ந்து தினுசு தினுசாக கண்ணையும் கருத்தையும் சுண்டியிழுக்கும் அந்த மாம்பழங்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயம் உயிர் கொல்லும் ஸ்லோ பாய்சன் என்பது தெரியுமா?


முன்பெல்லாம் மாங்காய்கள் பறிக்கப்பட்டு வைக்கோல் முதலியவை போட்டு பரப்பி தேவையனால் புகை மூட்டம் போட்டு பழுக்க வைப்பார்கள். வாங்கும் போது மாம்பழங்களின் மீது வைக்கேல் பிசிறுகள் கூடக் காணப்படும்.
இது ஒரு சீசனல் பழமாக இருப்பதால் கிடைக்கும் அந்த ஓரிரு மாதங்களிலேயே நிறைய லாபம் பார்த்து விட வேண்டும் என்று வியாபாரிகள் இப்படி செய்தார்கள்.
இப்போ அறிவியல் நுட்பத்தைப் புகுத்தி விரைவில் பழுக்க வைக்கிறேன்னு 'கல்லு' வச்சு பழுக்க வைக்கிறாங்க.
'கல்லு' ன்னு சொன்னதும் ஏதோ கருங்கல்லு செங்கல்லு இல்லீங்க.அதுனாக் கூட உடம்புக்கு ஒன்னும் செய்யாது.இது 'கெமிக்கல்' கல்லுங்க அதன் நாமகரணம் 'கால்சியம்
கார்பைடு'ங்க


இதுதாங்க அது.பார்த்தா சாதா கருங்கல் ஜல்லி மாதிரிதான் தெரியும்.CaC2 என்பது அதன் குறியீடு.சரி நாம் என்ன பாடமா படிக்கிறோம்.மேட்டருக்கு வர்ரேன்.இந்த கால்சியம் கார்பைடு கல்ல மாங்காய் குவியலுக்கு நடுவே அப்படியேவோ அல்லது பேப்பரில் சுத்தியோ வச்சிட்டா ஒரு வாரத்துல பழக்கற காய்கூட நாலு நாள்ல பழுத்துடும்.அது மட்டுமில்லாம பழங்களுக்கு நல்ல கலரையும் பளபளப்பையும் தந்து ஏதோ 'கார்டன் பிரஷ்' பழம் போல தோன்றும்.
சரி இதுனால என்ன வந்தது என்கிறீர்களா?அங்கதான் மேட்டரேயிருக்கு.இப்படிப் பழுக்க வைக்கப் பட்ட பழங்களில் படிந்திருக்கும் வேதிப் பொருட்களால் வாந்தி பேதி முதலிய வயிற்றுக்கோளாறு ஏற்படுவதோடு நாளடைவில் கேன்சர் வரும் அபாயமும் உள்ளது.

லாபம் ஒன்றையே கருதும் வியாபாரிகள் இது பற்றிக் கவலைப் படுவதில்லை.அப்படியே வைக்கப்படும் கற்கள் மட்டுமில்லாது இவை பொடியாக்கப் பட்டும் பழங்களின் மீது தூவப் படுகிறது.இன்னும் சீக்கிரம் பழுக்குமென்று.

அந்த மாதிரி பழங்களின் மீது 'சாம்பல்' போன்று ஒரு படிவு காணப்படும் முகர்ந்து பார்த்தால் மூக்கை அரிக்கும் தன்மை கொண்டிருக்கும்.

ஏழைக்கு ஏத்த பழம்னு கிடைக்கிற காலத்தில் வாங்கி ருசிக்கும் அப்பாவி பொது ஜனம் இது பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை.
'ஆமா வருஷத்துல கொஞ்ச நாள்தான் கிடைச்சு சாப்பிடுறோம் இது ஒன்னும் பண்ணாது'என்ற அறியாமையும் அலட்சியப் போக்குமே வியாபாரிகளுக்கு இதைச் செய்ய சாதகமாக அமைகிறது.

உடனடியாகக் கொல்லும் விஷமில்லை யென்றாலும் கேன்சர் போன்ற கொடிய நோய்க்கு வித்திடும் இதைக் கண்டிக்க தடுக்க யாருமே ஏன் முன்வருவதில்லை.

கோக்,பெப்ஸி போன்ற பானங்களில் உள்ள பூச்சி மருந்தின் அளவை ஆராய்ச்சி செய்து அறிக்கை தரும் சுகாதார,மக்கள் நலத்துறை அமைப்புகள் கண்ணுக்கு எதிரே நடந்து கொண்டிருக்கும் இந்த சுகாதாரக் கேட்டை சீர் செய்ய முனையவில்லை.
சட்டங்கள் போட்டோ தண்டனைகள் மூலமோ ஏன் தடுக்கவில்லை.
ஏனென்றால் இது நடுத்தர,ஏழை வர்க்கம் சம்மந்தப் பட்ட விஷயம்.மேட்டுக் குடி மக்கள் என்ன மார்க்கெட்டிலா மாம்பழம் வாங்குகின்றனர்.தங்கள் பண்ணைகளிலும்,தோட்டத்திலும் பறிக்கப் பட்டு பாதுகாப்பாகக் கனிய வைக்கப் பட்ட பழங்களை உண்ணும் அவர்களுக்கு இதுபற்றிக் கவலையில்லை.
கடந்த சில வருடங்களாகவே 'கல்லால் பழுக்க வைக்கும்' முறை பற்றிய விழிப்பு மக்களுக்கு தெரிந்திருந்த போதிலும் ஏதும் செய்ய முடியாத கையாலாகத தனத்தால் ஆசைப்பட்டதை தின்று சாவோம் என்று நினைக்கின்றனர்.
கொஞ்சம் படித்த விஷயம் அறிந்தவர்களும் பழங்களை நன்கு நீரில் கழுவி உண்டால் ஆபத்து குறைவு என்ற அளவில் செயல்படுகின்றனர்.

இந்த கல்லு வைத்த மாம்பழங்களால் வாந்தி.பேதி மட்டுமில்லாமல் தலைவலி,உடல் சோர்வு,நெஞ்சரிச்சல்,உடம்பு சூடாகுதல் ஏற்படும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டைஒழிக்க முடியாது என்பது போல வியாபாரிகளே உணர்ந்து திருந்தனும் இல்லை சமூக நல அமைப்புகளோ,அரசோ நடவடிக்கையெடுக்க வேண்டும்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

டிஸ்கி:ரஜனிக்கு அப்புறம் மாம்பழத்தைக் குறை சொன்னா மக்களுக்குப் பிடிக்காது.என்ன செய்ய ?

28 மறுமொழிகள்::

குட்டிபிசாசு said...

நாந்தேன் முதல்ல!!

குட்டிபிசாசு said...

அப்படியா? தெரியல!!

குட்டிபிசாசு said...

ஐயா வாங்க!! அம்மா வாங்க!! கண்மணி அக்கா அட்வைஸ் சொல்லுராங்க! கேட்டு போங்க!

பிறகு வாந்தி.பேதி மட்டுமில்லாமல் தலைவலி,உடல் சோர்வு,நெஞ்சரிச்சல்,உடம்பு சூடாகுதல் எதுவும் வராதுங்க!!

கண்மணி/kanmani said...

அடப்பாவி இப்படித்தான் விஷயம் தெரியாம தின்னுட்டு [பத்து தபா போனாக்கூட] வயித்த வலிச்சாக் கூட 'ஜூடு'[சூடு]ன்னு மக்கா நெனைக்குது.

ஜி said...

நல்ல அலசல்.. இன்னிலயிருந்து மாம்பழம் சாப்பிடுறது நிறுத்தனும்.. (முடியுமான்னு தெரியலியே :(()

குட்டிபிசாசு said...

எனக்கு இங்க மாம்பழம் விலைய கேட்டாலே, மயக்கம் வருது!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த இனிய பழம் பற்றிய மிகக் கசப்பான செய்தி; இதை ஏற்கனவே அறிந்தேன்.
எங்கள் ஈழத்தில் கூட இது புழக்கத்தில் வந்துள்ளதாக சிலர் கூறினார்கள்.
எதையுமே விட்டுவைக்கிறார்கள் இல்லையே!!!!
பூனைக்கு மணி கட்டவேண்டியவர்கள்; கட்டுவார்களா?

குட்டிபிசாசு said...

இதுக்கு தான் நான் மாம்பழ பல்ப் ரெண்டு பாக்கெட் வாங்கி மொகந்து பார்த்துப்பேன்

கண்மணி/kanmani said...

ஜி பெர்ரிய ஹோல் சேல் கடையில வாங்கினாத்தான் இந்த ஆபத்து.காயா வாங்கி நாமே இயற்கையாப் பழுக்க வச்சித் தின்னலாம்.இல்லை ஒரு 20 நிமிடம் நீரில் முழுகும்வரை கழுவி சாப்பிட்டால் பாதிப்பு குறையும்.

கண்மணி/kanmani said...

வாங்க யோகன் வியாபார லாப நோக்கு இருக்கும்வரை சத்தியமா யாரும் திருந்த மாட்டாங்க.
நம்மை நாமே காப்பாத்திக்கனும்.

கண்மணி/kanmani said...

குட்டிபிசாசு மாம்பழ்த்தை விட மாம்பழ 'பல்ப்புல'அதிகம் கெமிக்கல் புரிஞ்சிக்கோ

குட்டிபிசாசு said...

//குட்டிபிசாசு மாம்பழ்த்தை விட மாம்பழ 'பல்ப்புல'அதிகம் கெமிக்கல் புரிஞ்சிக்கோ//

நான் சாப்பிட சொல்லல, மொகந்து தான் பார்க்க சொன்னேன்.

குட்டிபிசாசு said...

மாம்பழத்தை பல்பாக மாற்ற ரசாயனம் தான் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,
சதாரணமாக பதப்படுத்தப்பட்ட பொருள்களில் (குறிப்பாக..மாஸா, ஸ்லைஸ்) ப்ரிஸர்வேடிவ்ஸ் உண்டு. அதை தவிர்க்கவும் முடியாது. அப்படி பதப்படுத்தப்படும்போது, ரசாயனங்களுக்கு இன்னன்ன பாதுகாப்பான அளவு நிர்னயிக்கப்படுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் விட மாம்பழங்கள் முறையற்றவகையில் பழுக்கவைக்கப்படும்போது, அதனுடைய ரசாயனத்தன்மையை யாரும் கணக்கில் கொள்ப்போகிறார்கள்.

ALIF AHAMED said...

கண்மணி said...
அடப்பாவி இப்படித்தான் விஷயம் தெரியாம தின்னுட்டு [பத்து தபா போனாக்கூட] வயித்த வலிச்சாக் கூட 'ஜூடு'[சூடு]ன்னு மக்கா நெனைக்குது
///

அனுபவம்...::)))

ALIF AHAMED said...

முதலில் ஆப்பிளை பாருங்க அதுல இல்லாத கெமிக்கலா ஆப்பிள் மூனு மாசமானாலும் கெடாமல் எப்படி இருக்குனு ஆராய்ங்க மொதல

நான்கு வகையான புச்சி மருந்துகளில் ஊற வைத்து பிறகு பேக்கிங் செய்யபடுகிறது லேபில் ஒட்ட பட்டு வரும் ஆப்பிகளை முகர்ந்து பாத்தாலோ அல்லது மேல் தோலை ட்டேஸ்ட் செய்து பார்த்தாலோ உண்மை புரியும்

கிராம புறங்களில் மாம்பழக்களை நம்பி நிறைய குடும்பங்கள் வாழுது
இது சிறு விவசாயி பிரச்சனை

அதற்காக இச்செயலை ஆதரிக்கவில்லை

மாம்பழம் சாப்பிடும் போது இந்த பதிவை எழுதியதால் இருக்குமோ...:)

ALIF AHAMED said...

பதிவை அல்ல பின்னுட்டத்தை என வாசிக்கவும்

குட்டிபிசாசு said...

அக்கா,
உங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. உங்க பேரு ஏற்கனவே போட்டுடாங்க. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!

குட்டிபிசாசு said...

அக்கா,
உங்களை மாட்டிவிட்டுட்டேன்னு கோவிக்க கூடாது. இது எதோ எட்டு விளையாட்டாம். உங்களபத்தி 8 தகவல் வந்து சொல்லுங்க!!
இதோ பதிவ பாருங்க !!! நன்றி!!!

லக்ஷ்மி said...

கண்மணி டீச்சர், கும்மிகளுக்கு இடையில் இப்படி விழிப்புணர்வு தரும் பதிவுகளும் போட்டு அசத்தறீங்க. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

கண்மணி/kanmani said...

என்ன இப்படி சொல்லிட்டீங்க லஷ்மி..அதுனாலதான் கும்மிக்கு தனி பிளாக்கே போட்டுட்டேன்...குட்டீஸுக்கும் [கிட்ஸ்]ஒன்னு புதுசா போட்டிருக்கேன்.

சதுர் said...

அருமையான பதிவு. உங்களை எட்டு போட அழைத்து இருக்கிறேன்!

சிறப்பாக செய்யுங்கள்.

மாயன் said...

மாம்பழம் கிடக்கட்டும்... நம்ம மக்களின் அன்றாட உணவுகளான அரிசி, கோதுமை என பயிகளையும், மற்ற உணவு பொருட்களையும் கூட விட்டு வைக்க வில்லை பூச்சி மருந்துகள்... அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வேளாண்மை இப்போது சூடான விவாதப் பொருள் என்ன தெரியுமா?

இயற்கை உரங்கள்...

கண்மணி/kanmani said...

மாயன் இது சீசனல் & டாப்பிகல் பதிவு [fruit adulteration by way of ripening methods].
செயற்கை உரம் அல்லது உணவுக் கலப்படம்[food adulteration] அடுத்து வருகிறது

நானானி said...

ஐயையோ! மாம்பழ சீசனில் மாம்பழம்
இல்லாமல் தயிர்சோறு தொண்டையில்
இற்ங்காதே! இனி நான் என்ன செய்ய..?

துளசி கோபால் said...

அடக்கடவுளே............

ஞானப்பழத்துக்கு இந்த கதியா? (-:

cheena (சீனா) said...

மாம்பழம் மட்டுமில்லே - சாப்புடுற எல்லாத்துலேயும் கெமிக்கல்ஸ் இருக்கு - நெல்லுலேந்து தண்ணி வரைக்கும் - என்ன பண்றது - உடம்புலே பெர்சுங்களுக்கு இருக்கற எதிர்ப்புச் சக்தி சிறுசுங்களுக்கு இருக்கா ? ஏன் இல்லை - அந்தக்காலப் பயிருக்கும் - இந்தக்காலப் பயிருக்கும் வித்தியாசம் அது.ம்ம்ம்ம்ம்ம்

அபி அப்பா said...

டீச்சர் அருமையான பதிவு!நானும் எங்க ஊர் பாதிரி மாம்பழம் பத்தின பதிவு ஒன்னு போடனும்!!!!

கண்மணி/kanmani said...

அய்யோ அபி அப்பா அரியர்ஸ் எழுதுன ஞாபகமா?;)
போன ஜூன்ல போட்ட பதிவை இப்பத்தான் படிச்சீங்களா?
சீனா சார் என் பதிவுக்கு புதியவர்.உமக்கென்ன?

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)