PAGE LOAD TIME

ஜியோ ஃபோன்....நாய் மொபைல் வாங்கிட்டீங்களா?

சாம்சங்,சோனி எரிக்சன்,நோக்கியா எல்லா மாடல் போனும் பார்த்திருப்பீங்க.இந்த ஜியோ போன் பார்த்திருக்கீங்களா?
இது நாய்க்கான மொபைல் ஃபோனுங்க.என்ன பாக்கறீங்க நெசந்தேன்.
அமெரிக்காவுல செல்போன் இல்லாத மனுஷன் இருக்கலாம் ஆனா ஜியோ போன் இல்லாத பப்பியே கிடையாதாம்.

இது GPS [global positioning system அப்படீங்கற செயற்கைக் கோள் இணைப்புடன் செயல்படுகிறது.இது கட்டியிருக்கும் போது நாய் எந்த இடத்தில் இருந்தாலும் துல்லியமாகக் காட்டிக் கொடுத்து விடும்.
நாய் எங்கு ஓடினாலும் நாமும் துரத்திக் கொண்டு ஓடி கண்டுபிடித்து விடலாம்.

அப்புறம் கல்லைக் கண்டா நாயைக் காணோம்
நாயைக் கண்டா கல்லைக் காணோம்னு கவலைப் பட வேண்டாம்.

அமெரிக்காவுல சான்பிரான்ஸிஸ்கோ விஞ்ஞானி 'கேம்ரூன் ராப்' என்பவர்தான் கண்டு பிடிச்சிருக்கார்.
[எப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது பாருங்க]
இந்த நாய் மொஃபைலுக்கு ஜியோ போன் னு பேரு ஏன்னா இருக்கிற இடத்த துல்லியமாக் காட்டுதில்ல.
நாயின் கழுத்துப் பட்டை போலிருக்கும் இதை அதன் கழுத்தில் கட்டி விட்டால் அது நம்மை விட்டு வெகுதூரம் சென்று விட்டாலும் கூப்பிட்டுப் பேசலாம்.

இதுல இரண்டு வழி ஸ்பீக்கர் இருக்காம்.போனில் எஜமானன் கூப்பிட்டால் [நாய் பாஷை அவசியம் தெரிஞ்சிருக்கனும்.இப்பவே 'லொள்' பாஷைக் கத்துக்கங்க] நாய் பதில் சொல்லும் [அதே நாய் பாஷைதான்].அவர் கட்டளையைக் கேட்கும்.
போனில் உள்ள திரையில் எஜமானர் நாயைப் பார்க்கலாம்.அதன் மூலம் பின் தொடர்ந்தும் செல்லலாம்.
இது நாயை வாக்கிங் அழைத்துப் போகும் போது உபயோகப் படும்.
ஒரு வேளை வேறு யாராவது நாயைக் கண்டுபிடித்தாலும் இந்த ஜியோ போனிலிருந்தே அவரைக் கூப்பிட முடியும்.

[என்ன அப்பப்ப ஒழுங்க பேட்டரி சார்ஜ் பண்ணி வச்சிக்கனும்]

முன்னாடி குழந்தைகள் விளையாடும் போது மிஸ்ஸாகாமல் இருக்க இப்படி ஜியோ டிராக்கிங் மொபைல் கண்டு பிடிக்கப் பட்ட்து.ஆனா அதையும் குழந்தைங்க தொலைச்சிட்டாப் பிரச்சினை.

ஆனா ஜியோ போன் கழுத்துப் பட்டை வடிவில் கட்டப் படுவதால் பாதுகாப்பாக இருக்கும்.
என்ன பெட் டாக் வச்சிருக்க மக்கா சீக்கிரம் ஒரு ஜியோ ஃபோன் வாங்கிடுங்க.
நானும் ச்சுப்பிரமணிக்கு ஒன்னு வாங்கனுங்கோ.

டிஸ்கி:[நாய்க்கு சரி...காணாமப் போன காதலன்/காதலி யைக் கண்டு பிடிக்க ஒன்னுமே இல்லையான்னு புலம்புற மக்கா இருங்க கேம்ரூன் ராப்' புக்கு ஒரு மனு குடுங்க சீக்கிரம் ஒரு கருவி கண்டு பிடிப்பார்]

16 மறுமொழிகள்::

குட்டிபிசாசு said...

நீங்க சுப்பிரமணிக்கு வாங்கி போடுங்க!! நான் கழட்டிகிறேன்!!

நல்ல தகவல்!! அநியாயத்துக்கு திருந்திடீங்க!!

கண்மணி said...

குட்டி பிசாசு
நான் சீரியஸ் பாதி
கும்மி பாதி கலந்து செய்த கலவை
சீரியஸ் மேட்டருக்கு கண்மணி பக்கம்
கும்மிக்கு 'கும்மி பக்கம்'
குழந்தைகளுக்கு குட்டீஸ் ஜங்ஷன்
[விரைவில் ஆரம்பம்]

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏங்க கண்மணியக்கா!!!

நாங்கெல்லாம் GPS எப்படி மனுஷனுக்கு பயன்படுத்தலாம்ன்னு ஆராய்ச்சியில இறங்கியிருந்தா, நீங்க எப்படி உங்க ச்சுப்ரமணிக்கும் தஃப்பிக்கும் உபயோகிக்கலாம்ன்னு ஆஅராய்ச்சி நடத்துறீங்களே!! ம்ம்.. நடத்துங்க நடத்துங்க.. ;-)

மின்னல் said...

நாய் நல்ல இருக்குனு நாய் கூட திருடுரானுவோ இதுல போன் இருந்தா சொல்லவே வேண்டாம்...:)

மின்னல் said...

[நாய் பாஷை அவசியம் தெரிஞ்சிருக்கனும்.இப்பவே 'லொள்' பாஷைக் கத்துக்கங்க]
//

உங்களுக்கு பிரச்சனை இல்லைனு சொல்லுங்க... :)

குசும்பன் said...

குழந்தைகளுக்கு குட்டீஸ் ஜங்ஷன்
[விரைவில் ஆரம்பம்]

ஐய்யா ஜாலி ஜாலி எனக்காக குட்டீஸ் ஜங்ஷன் ஆரம்பிக்கபோகும் கண்மணி அக்காவுக்கு
நன்றி....

சொப்பு பொம்மை, கிளுகிளுப்பை எல்லாம் அங்கே வாங்கிவையுங்க என்று சொல்லவேண்டியது இல்லை..........

குட்டிபிசாசு said...

அதிக அலட்டிகாதீங்க!! இல்லாட்டி மின்னலும் நானும் சேர்ந்து கும்மியடிச்சி...முகப்புல இருந்து தூக்கிடுவோம்!!

அய்யனார் said...

/நாய் நல்ல இருக்குனு நாய் கூட திருடுரானுவோ இதுல போன் இருந்தா சொல்லவே வேண்டாம்...:)
/

சத்தம் போட்டு சிரிச்சிடன்யா மின்னலு :)

டீச்சர் நாய் மேல இவ்ளோ பாசமா ? ஆனாலும் உங்க நல்ல மனச நெனச்சா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பிரதாப் குமார் சி said...

இப்ப இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

கண்மணி said...

வாங்க பிரதாப் அனானியா இல்லாம நேரடியா சொன்னதுக்கு வாழ்த்து.இது நான் படித்த ஒரு செய்தி அவ்வளவே.
நாட்டுக்கு ஏதாவது செய்யனும்னா ஆரம்பிங்க யார் தடுத்தா ?

கண்மணி said...

@ பிரதாப் விண்வெளிக்குப் போய் வந்த சுனிதா வில்லியம்ஸ் முதல்ல பார்க்க அசைப்பட்டது தன் னோட நாயைத்தானாம்.இதுக்கு என்ன சொல்வீங்க

Anonymous said...

அப்படி போடுங்க அக்கா!!

Anonymous said...

போனு வாங்கினா நாய் இலவசங்களா

Anonymous said...

any mobile tracker to find out missing lovers?

cheena (சீனா) said...

அது சரி - நாயக் கண்டு பிடிக்க ஜியோவா - எங்கே தொலஞ்சாலும் ராத்ரி ஊட்டுக்கு வராதா ? நம்ம வூட்டு நாய் நன்றி உடையதுங்க. அங்கே எல்லாம் ஓடிபோறதே தொழிலா இருக்காங்களே

cheena (சீனா) said...

ச்ச்ச்ச்புரமணீக்கு வாங்கியாச்சா

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)