PAGE LOAD TIME

எட்டு மேட்டரு...படா பேஜாரு...

கொஞ்ச நாளைக்கு முன்னாலே நான் வியர்ட்டுன்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சோம்.
அப்புறம் அழகு ஆறு.
இப்ப எட்டு..................
இனிமே என்ன பத்தா பதினொன்னா?
1. முதல்ல இதைத் தொடங்கி வைத்த புண்ணியவானுக்கு[நீங்களா கொத்ஸூ] ஒரு வேண்டுகோள் இத்தோட நிறுத்திக்கிங்க சாமீ.முடியலை.
என்னை அழைத்து வம்பில் மாட்டிவிட்ட

இலவசக் கொத்தனார்
குட்டிபிசாசு
சதுர்வேதி[?!]
அனைவருக்கும் கோபமான நன்றி.

2.எட்டு [8] ன்னாலே ராசியில்லாத நெம்பராம்.அப்ப ஏன் அதை நெம்பரா வச்சிருக்காங்க.எனக்கு இதுவரை பரீட்சை நெம்பர்னாலும்,வீட்டு கதவிலக்கம்னாலும் கூட்டுத் தொகை எட்டுதான்.
டில் நௌ நொ பிராப்ளம்.அது மாதிரி 'எட்டாம் போரு' பொண்ணு பொறந்தா குட்டிச் சுவராம் குடும்பத்துக்கு ஆகாதாம்.இதுவும் எல்லாத்தையும் போல நெம்பனு நெனச்சா என்ன?
ரைமிங்கா சொல்ல சௌகர்யமா இருக்குன்னு'எட்டை' வதைக்கறாங்க.

3.இந்த லைசன்ஸ் வாங்க மட்டும் 8 போடனுமாம் ஏன்?ஒருத்தர் கேட்டார் ஏன்யா 8 போட்டாத்தான் லைசன்ஸுன்னா.நம்ம ஊர் ரோடுங்க என்ன 8 மாதிரியா இருக்கு ன்னு?ஞாயந்தானே?நேராவோ இல்லை கொண்டை ஊசி வளைவாவோ இருக்கிற ரோட்டுக்கு ஏன் 8 போட்டுப் பழகனும்?

4.நம்மள பொறுத்தவரை எதுன்னாலும் பளிச்சுன்னு பேசிடுவேன்.உண்மையா நடந்ததை நடந்தபடி சொல்லனும்னு நெனைப்பேன்.இதுக்கு எனக்குக் கிடைத்த கெட்ட பேரு 'ஓட்டை வாய்'இதுகிட்ட ரகசியமே தங்காதுன்னு யாருமே சொல்ல மாட்டாங்க.போகட்டும் நமக்கும் மண்டை வெடிக்காம இருக்கும்ல.

5.என்னோட வாழ்கையில் நடக்கிற மாதிரி யார்க்காச்சும் நடக்குமானு தெரியல.எனக்கு யாரைப் பிடிக்காதோ அல்லது ஏதோ காரணத்தால் ஒதுங்கியிருக்கேனோ அவங்கதான் பின்னாளில் ரொம்ப வேண்டியவங்களா ஆயிடறாங்க.நிறைய உதாரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்னு என்னுடைய தோழி ஒருத்தி.நான் யூ.ஜி படிக்கும் போது இருவருக்கும் ஏதோ பிரச்சனை பேச மாட்டோம்.பிறகு பி.ஜி படிக்கும் போது அங்கேயும் வந்துட்டா சரி இதுக்குப் பிறகு ஏன் பார்க்கப் போறோம்னு இருந்தா கல்யாணம் முடிந்து நானிருக்கும் ஊர்லயே செட்டிலாயிட்டா.பிறகு ஏதோ உதவி என்று வர பேசி இப்ப நல்ல நட்பாயிட்டா.

6.சில சமயம் வாழ்க்கையின் முரண்பாடுகள் ஏற்றத்தாழ்வுகள் புரியாத புதிராயிருக்கும்.ஒரு பக்கம் ஸ்டார் ஓட்டல்ல பீஸா சாப்பிடும் கூட்டம் மறுபக்கம் சோத்துக்கே வழியில்லாத கூட்டம்.இந்த சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு யார்,எது காரணம் என்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பது விளங்க வில்லை.அடிப்படை தேவையான,உணவு உடை,உறையுள் கூட இல்லாமல் ஒரு சாரார் ஏங்கும் போது ஆயிரம் ஏக்கர் கணக்கில் நிலமும்,கோடி கணக்கில் பணமும் சிலரிடம் மட்டும் குவிகிறது.இதில் வெட்கமில்லாமல் உலகத்திலேயே யார் பெர்ர்ரிய்ய்ய கோடீஸ்வரன் என்று கணக்கெடுப்பு வேறு.ஹூம்...பெருமூச்சு மட்டும்தான் நம்மால் ஆனது.

7.எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி சமீப காலமாக பேசப் படுகிறது.தப்பு செய்யாதே எனச் சொல்லாமல் பாதுகாப்பாக தப்பு செய் என்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.சொன்னால் யார் கேட்பார்கள் என்பது விதண்டா வாதம்.சொல்லித் திருத்தத் தானே சட்டங்கள்.
பாலியல் தொழிலாளர்கள் என்றால் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப் படுகிறதா?இதைச் சொல்லத்தான் மக்கள் பிரதிநிதிகளும் ஒரு அரசியல் அமைப்பும்? நல்ல கூத்து.

8.ஏழையாக இருந்தாலும் பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம்.ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டதால் 'பயித்தியம்' என்ற பட்டத்தோடு குடும்பத்தாரால் புறக்கணிக்கப் பட்டு ஊருக்கு ஊர் தெரிவில் அலைபவர்களைப் பார்த்தால் சங்கடமாக இருக்கும்.மிக மிக அழுக்கான கிழிந்த அல்லது கிழித்து விடப் பட்ட ஆடைகளுடன் ஏதோ ஒரு துணி மூட்டையை வைத்துக் கொண்டு[பெரும்பாலானோர் மூட்டை வைத்திருப்பர்]நடுவீதியில் கூட உருண்டு கொண்டு அடுத்த வேளை உணவு யார் கொடுப்பார் எங்கிருந்து கிடைக்கும் என்ற சிந்தனையும் இன்றி பேதலித்திருப்போரைப் பற்றி அரசு என்றைக்காவது யோசித்திருக்குமா?[ஓட்டிருந்தால் யோசித்திருக்கும்.அவங்க ஓட்டைக் கூட இவங்களே போட்டுக்குவாங்களே]
வாயில்லா ஜீவன்களுக்குக் கூட சரணாலயமும் பாதுகாப்பும் கொடுக்க சங்கங்களும் தனியார் அமைப்புகளும் இருக்கும் போது இவர்களை அரசு ஏன் தண்ணீர் தெளித்து விட்டது.ஏதாவது ஒரு காப்பகத்தில் வைத்து ஆதரிக்கலாமே.மனிதராய்ப் பிறந்து புத்தி பேதலித்தைத் தவிர என்ன குற்றம் செய்தார்கள்?

இந்த விளையாட்டே வேண்டான்னு சொல்லிட்டு நான் எப்படி அடுத்த 8 பேரை அழைப்பது?
எல்லோரும் தங்கள் நண்பர்களால் அழைக்கப் பட்டிருப்பர் என்பதால் அதிகம் கும்மியடிக்காத நல்ல கருத்துக்கள் எழுதும் [அய்யே எல்லோரும்தான் நல்ல கருத்து சொல்றோம் ஆனா இவிங்கல்லாம் கடமையே கண்ணாயினார்.கும்மியடிக்க மாட்டாங்க] இந்தப் பதிவர்களை அழைக்கிறேன்.

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.


1.புதுவை கோ.சுகுமாரன்
2.ஆசிப் மீரான்
3.வள்ளி
4.கானா பிரபா
5.தருமிசார்
6.லஷ்மி
7.சின்ன அம்மிணி
8.அவந்திகா

21 மறுமொழிகள்::

தருமி said...

//அதிகம் கும்மியடிக்காத நல்ல கருத்துக்கள் எழுதும் ..//

ஏங்க.. நம்ம பாசக்காரக் குடும்பத்து பதிவுகளிலெல்லாம் நான் பங்கெடுத்திருக்கேனே .. அதெல்லாம் கும்மியில சேராதா? இந்த classification-ல் சேராத என்னை நீங்க எப்படி அழைக்கலாம்.

சரி,,போங்க..மணியன் வேறு அழைச்சிருக்கார். What you cannot eat, you have to spit; what you cannot spit you have to eat அப்டின்னு சொல்லியிருக்காங்களாம்ல .. தலைவிதின்னு (வாசிக்கிறவங்களோடு தலைவிதின்னு சொல்றேன்!) நினச்சிக்கிட்டு முயற்சிக்கிறேன்....

வல்லிசிம்ஹன் said...

எட்டும் பட்டுப் பட்டுனு நறுக்குத் தெறிச்சாப்போல சொல்லியாச்சா.
இதுல பேஜாருன்னு அலுப்பு வேற:-)))))

எல்லாமே யோசிச்சு நல்லா எழுதிட்டீங்க கண்மணி.
வள்ளினு என்னையா குறிப்பிட்டீங்க.
நானா இருக்க முடியாது நான் வல்லி.

நானும் இன்னிக்குக் காலைலியே எழுதிட்டேன்.
நான் கூப்பிட்ட யாரெல்லாம் எழுதப் போறாங்களோ தெரியலை.
நன்றிப்பா.

கண்மணி/kanmani said...

நான் சொல்ல வந்தது உங்க பதிவுகள்ல சமூகப் பிரக்ஞையுடையக் கருத்துக்கள் இரூக்கும் என்று.
ஆனால் மத்தவங்க பதிவுகள்ல கும்மி யடிப்பீங்க அதான் தெரியுமே....
[அது ஜாலிக்குத்தான்]

கண்மணி/kanmani said...

@நாச்சியார் வல்லியம்மா உங்க பத்துக்குள்ள நெம்பர் எட்டு முன்பே பார்த்தேன்.இது புதுசா ஒரு வள்ளி கொஞ்சம் ஃபோகஸ் பண்ணலாம்னு கூப்பிட்டேன்.

அம்மாடி வசிஷ்டர் கையால் 'பிரம்ம ரிஷி' பட்டம் வாங்கின மாதிரி இருக்கு நீங்க பாராடுனது.நன்றிம்மா.

குட்டிபிசாசு said...

அக்கா,

8 வச்சியே முதல் மூன்ற ஒப்பேத்திடீங்க!!

உங்க கருத்து 5 தான், ஆனா எல்லாம் நல்லா இருக்கு!!

//வாயில்லா ஜீவன்களுக்குக் கூட சரணாலயமும் பாதுகாப்பும் கொடுக்க சங்கங்களும் தனியார் அமைப்புகளும் இருக்கும் போது இவர்களை அரசு ஏன் தண்ணீர் தெளித்து விட்டது.ஏதாவது ஒரு காப்பகத்தில் வைத்து ஆதரிக்கலாமே///

இவர்களை அனுக சட்டத்தில் எதுவும் இல்லை. ஒருமுறை திருப்பத்தூரில் பேருந்து நிலையத்தில் பைத்தியங்களால் தொல்லை என்று பொதுமக்களின் வேண்டுகோளின்படி, காவல்துறை பைத்தியங்களை பிடித்து கோர்ட்டிற்கு கொண்டுசென்று நீதிபதியைக் கேட்டால், இதற்கு எந்த வழியும் இல்லை என கூறி விடுவித்துவிட்டார்.

குசும்பன் said...

எப்படி இப்படி? எப்பவுமே இப்படிதானா? இல்ல அப்ப அப்ப மட்டும் தானா? (நல்ல பதிவு)

கண்மணி/kanmani said...

@குசும்பன்
இப்பத்தான்யா உம்ம பேருக்கு அர்த்தம் புரியுது.இந்த குசும்புதானே வாணாங்கிறது.அப்பப்ப நிறம் மாற நான் என்ன அரசியல்வாதியா?
நான் நாந்தான்...[அது தனி]
கும்மி கும்மிதான்...[இது தனி]

ILA (a) இளா said...

ஷங்கர், விக்ரம் இவுங்களோட அதிர்ஷ்டமான் எண்ணே 8தான்.

கண்மணி/kanmani said...

@கு.பிசாசு
என்ன சொல்றே நீ.சுய நினைவு இல்லாதவங்களை ஏதாவது காப்பகம் வச்சி ஆதரிக்கனும்னு சொல்றேன்.கோர்ட்டுல கொண்டு நிறுத்துனா பின்ன ஜட்ஜு பயப்பட மாட்டாரா?
புளூ கிராஸுன்னு வாயில்லா ஜீவனுங்களுக்கு இருக்கறா மாதிரி இவங்கள அரசு போஷிக்கனும்.பாவம்தானே.

நான் தினமும் ஸ்கூல் போகும் போது இது மாதிரி 3,4 பேரை பார்க்கிறேன்.

கண்மணி/kanmani said...

@இளா அடடா எட்டும்மும் எட்டும் குட்டி சுவருன்னு போட்டுட்டு இப்ப பேச்சப் பாருங்க.ஆமாம்...வாஜியும்...பீமாவும் ஊத்திக்கிட்டா எட்டு நல்லதுன்னு சொல்வீங்களா?
அது போகட்டும் எதுக்கெடுத்தாலும் ஏன் சினிமாக்காரங்களை உதாரணம் சொல்றோம்.அறிவாளிங்க,விஞ்ஞானிங்க ஏன் உழைப்பால முன்னேறிய விவசாயிங்க எட்டாம் நெம்பர்னா சொல்லுங்க.

Chinna Ammini said...

கண்மணி அக்கா!! நம்மளயெல்லாம் பதிவு போட கூப்பிட்டு பெரிய ஆளாக்கறீங்க. நானெல்லாம் எல்லாருக்கும் பின்னூட்டம் போட்டு பண்ற கொடுமை பத்தாதா?
ம்ம்ம் ம்ம் பதிவுலகத்துக்கு நேரம் சரியில்லன்னு நினைக்கறேன்

இலவசக்கொத்தனார் said...

ஆனாலும் நன்றி சொல்லறதை எல்லாம் 8 பாயிண்டுகளில் ஒண்ணா சேர்த்துக்கிறது எந்த ஊர் நியாயம். போகட்டும். உங்களைப் பத்தி 8 விஷயம் சொல்லச் சொன்னா அட்வைஸ் மழையா பொழியறது என்ன நியாயம்?


//இதில் வெட்கமில்லாமல் உலகத்திலேயே யார் பெர்ர்ரிய்ய்ய கோடீஸ்வரன் என்று கணக்கெடுப்பு வேறு.//

நான் நேர்மையான வழியில் சம்பாதிச்சு பணக்காரனா ஆனா நான் பணக்காரன் அப்படின்னு சொல்லறதுல எனக்கு எந்த விதமான வெட்கமும் கிடையாது. அதுக்காக என் சம்பாத்தியம் எல்லாவற்றையும் அடுத்தவர்களுக்கு தானம் தரும் அளவுக்கு நான் நல்லவன் இல்லை. எனது சொத்துக்களின் மதிப்பு வருடாவருடம் ஏற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. இதனை முதலாளித்தனம், முட்டாள்தனம் என என்ன சொன்னாலும் சரி, அது என் 'தனம்'தான்!!

துளசி கோபால் said...

எட்டுன்னதும் இப்படிக் 'கொட்டு'தே!
இதுவும் ரைமிங்கா இருக்கட்டுமுன்னுதான்...........:-)))))

கானா பிரபா said...

சும்மா பட்டு பட்டுனு எட்டுப் போட்டுட்டீங்களே ;-) இதுவும் டைமிங்கா?

என்னையும் அழைத்தற்கு நன்றி, இது ஒரு விஷப்பரீட்சை, உண்மையெல்லாம் சொன்னால் கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க, பார்க்கலாம், யோசிச்சு முடிவெடுக்கிறேன் ;-)

லக்ஷ்மி said...

//இவர்களை அனுக சட்டத்தில் எதுவும் இல்லை. ஒருமுறை திருப்பத்தூரில் பேருந்து நிலையத்தில் பைத்தியங்களால் தொல்லை என்று பொதுமக்களின் வேண்டுகோளின்படி, காவல்துறை பைத்தியங்களை பிடித்து கோர்ட்டிற்கு கொண்டுசென்று நீதிபதியைக் கேட்டால், இதற்கு எந்த வழியும் இல்லை என கூறி விடுவித்துவிட்டார்//

அதுக்கப்புறம்தான் தமிழ் வலைப்பதிவுலகில் பதிவர்கள் எண்ணை பெருகிடுச்சோ??? ச்சும்மா ... தமாசு.. ;)

கண்மணி, நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க, பத்மா எல்லாம் எழுதியிருக்கறதை படிச்சப்புறம் நாம எழுத என்ன இருக்குன்னு யோசிச்சுகிட்டிருக்கேன். கிடைச்சதும் பதிவு போட்டுடறேன்.

ஜி said...

யக்கா... எட்டு போட மாட்டேன் போட மாட்டேன்னு சந்திப்புல சொல்லிட்டு இப்படி வந்தவுடனே போட்டுட்டீங்களே.. :(((

நாகை சிவா said...

//ஒருத்தர் கேட்டார் ஏன்யா 8 போட்டாத்தான் லைசன்ஸுன்னா.நம்ம ஊர் ரோடுங்க என்ன 8 மாதிரியா இருக்கு ன்னு?ஞாயந்தானே?//

8 போட சொல்வதுக்கு காரணம், உங்களால் வலது புறமாகவும், இடது புறமாகவும் கட்டுப்பாட்டுடன் வண்டி ஒட்ட முடிகிறதா என்பதற்காக தான். இரண்டும் பக்கம் கட்டுப்பாட்டுடன் வளைத்து 8 போட முடிந்தால் எந்த சாலையிலும் உங்களால் கட்டுப்பாடுடன் ஒட்ட முடியும் என்று ஆர்.டி.ஒ. நம்புகிறது.

நாகை சிவா said...

மனநலம் குன்றிவர்களுக்காக பல தனியார் அமைப்புகள் இருக்கேன்.. அவர்களுக்கு தகவல் கொடுக்கலாமே. ஆனால் அவர்களும் குடும்ப ஆதரவு அற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு தெரியவில்லை. அரசே செய்ய வேண்டும் என்றால் செய்ய வேண்டும் தான். ஆனால் அவர்களுக்கு யாரு மிக பெரிய அதிகாரம் படைத்தவர்கள் என்பதை காட்டுவதற்கே நேரம் சரியா இருக்கு.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பாதுக்காப்பாக தப்பு செய்ய என்ற விதத்தில் அமைந்து விட்டது கொடுமை தான். ஆனால் தப்பே செய்யாமல் யாரோ செய்த தவறுக்காக இந்த கொடுமையால பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை தடுக்க தான் அது போன்ற விளம்பரங்கள் அமைந்து உள்ளது. இன்றைய காலத்தில் சட்டம் போட்டு எல்லாம் திருத்த முடியுமா என்று தெரியவில்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒரேடியாக ஒதுக்கி வைத்து விட கூடாது என்பதற்காகவும் அரசாங்கம் அதிகம் செலவு செய்கிறது. அதில் தவறும் இல்லை.

Priya said...

Thanks for INVITING meeeee.....
First....ஆனா..நீங்க என்ன அழைச்சத சொல்லவே இல்லையே...
நல்ல கருத்துகள்....

Anonymous said...

அடுத்த வேளை உணவு யார் கொடுப்பார் எங்கிருந்து கிடைக்கும் என்ற சிந்தனையும் இன்றி பேதலித்திருப்போரைப் பற்றி அரசு என்றைக்காவது யோசித்திருக்குமா?[ஓட்டிருந்தால் யோசித்திருக்கும்.அவங்க ஓட்டைக் கூட இவங்களே போட்டுக்குவாங்களே]
வாயில்லா ஜீவன்களுக்குக் கூட சரணாலயமும் பாதுகாப்பும் கொடுக்க சங்கங்களும் தனியார் அமைப்புகளும் இருக்கும் போது இவர்களை அரசு ஏன் தண்ணீர் தெளித்து விட்டது.ஏதாவது ஒரு காப்பகத்தில் வைத்து ஆதரிக்கலாமே.மனிதராய்ப் பிறந்து புத்தி பேதலித்தைத் தவிர என்ன குற்றம் செய்தார்கள்?
arumaiyaka solliirukeenka - yaaru kandukira but in tricy oru teacher, with her friends and family neenka sona naparkadu daily annam valankukiraarkal - avarkalin karuthu... pichai edupavarkal eppadiyum pilaithukolvarka, aanal ivarkal, keka kooda theriyathavarkal entu avarkalai care pannukiraarkal

cheena (சீனா) said...

அது சரி - எட்டு நல்லாவே இருக்கு - லேட்டா வந்துருக்கேன். சும்மா எல்லாப் பதிவும் பாக்குறதுன்னு - சலிச்சுக்கிட்டே சொல்லிட்டீங்களே - நன்று

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)