PAGE LOAD TIME

ஃபாஸ்ட் ஃபுட் அண்டு ஜங்க் ஃபுட்


இந்த ஃபாஸ்டான உலகத்துல மக்கள் நாடுவது எல்லாம் குயிக் அண்டு ரெடிமேட் அயிட்டங்கள் தான்.

அது வீடோ,உடையோ இல்லை உணவோ எல்லாம் கை சொடுக்கும் நேரத்துல கிடைக்கனும்.
அதுல முதல் இரண்டும் பரவாயில்லை.ஆனால் உணவு விஷயத்தில் அப்படி இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதைக் கூட உணர மறந்து ஓடி ஓடி உழைக்கின்றனர்.

ஃபாஸ்ட் ஃபுட் என்பது துரிதமாக செய்யப்படும் உணவு வகைகள்.
இட்லி, தோசை, பிரட் சாண்ட்விச் , பீஸா இதில் அடக்கம்.

ஜங்க் ஃபுட் என்பவை உடம்புக்குத் தேவையில்லாத,எந்தப் பயனும் தராத வயிற்றை மட்டுமே நிரப்பும் உணவுகள்.

ஸ்நேக்ஸ்,ஜெல்லி,கேண்டி,சாக்லெட்ஸ்,டெசெர்ட்ஸ்,கார்பனேட்டட் குளிர் பானங்கள்,டிண்டு ஃபுட்,பேக்டு ஃபுட் முதலியவை இதில் அடங்கும்.

பல அவசர நேரங்களில் கொஞ்சம் ஸ்நேக்ஸும் ஐஸ்கீரிமோ அல்லது ஸ்நேக்ஸ் வித் காபி அல்லது கோக் என்று துரிதமாக பிரேக்ஃபாஸ்டை/லன்ச்சை முடித்துக் கொண்டு வேலை வேலையென்று ஓடுவோர் பெருகி விட்டனர்.

இப்பெல்லாம் புளியோதரை,தயிர்சாதம்,புலாவ் ,குருமா அயிட்டங்கள் எல்லாம் ரெடிமேட் ஆக 'டெட்ரா பேக்கில்' வைத்து கிடைக்கிறது.அப்படியே சூடு பண்ணி சாப்பிட வேண்டியதுதான்.

ஜங்க் என்றாலே தேவையற்ற குப்பை மாதிரிதானே.

வெறும் கலோரிகளும்,உப்பும் சுகரும்,கொழுப்பும் நிறைந்த இந்த உணவில் எந்த வித நியூட்ரிஷனல் [சத்தான] பொருளும் இல்லை.

மாறாக அதிகக் கொழுப்பும்,உப்பும்,சர்க்கரையும் நோய்களுக்கு கட்டியம் கூறி வரவேற்கும்.
இதில் சேர்க்கப்படும் இரசாயன பிரெசெர்வேடிவ்கள் ஃபுட் கிரேடு என்றாலும் தொடர்ந்து சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல.

மிக முக்கியமாக 'கலரிங் ஏஜண்ட்ஸ்' கேன்ஸர் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இப்பெல்லாம் நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப காமன்.என் தோழியின் 2 வயதுக் குழந்தை மூணு வேளையும் நூடுல்ஸ் மட்டுமே கேட்கிறது.இட்லி,தோசை தொடுவதுகூட இல்லை.
தினமும் வாங்கிக் கொடுக்க வசதி இருப்பதால் அதையே செய்வதோடு இப்படியாவது எதையாவது சாப்பிட்டா சரி என்கிறாள்.

சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் எனர்ஜெட்டிக்காக தோன்றினாலும் உடலுக்குத் தேவைப்படும் எந்த சத்தும் இல்லை.அதிக கொழுப்பு 'ஒபிஸ்ட்டி' [குண்டுத்தன்மை] ஏற்படுத்தும்.

சாப்பிடவே கூடாது என்பதல்ல.எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதுவே சாப்பாடாக இருக்கக் கூடாது.

முக்கியமாக தனித்திருக்கும் ஆண்கள்,வேலைக்குச் செல்லும் மகளிர்,குழந்தைகள் தான் இதற்கு அடிமைகள்.

சாப்பாட்டுக்கு முக்கியத்துவமா என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.
சில வருடங்களுக்கு முன்பு டாக்டர்.திருமதி.கமலி ஸ்ரீபால் அவர்களின் டி.வி.பேட்டி ஒன்றில் கேட்டது.
நம் அன்றாட சாப்பாட்டில் மூன்று நிறங்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமாம்.

பச்சை: பச்சைக் காய்கறிகள்,கீரை வகைகள்

மஞ்சள்: எலுமிச்சை,ஆரஞ்சு.சாத்துக்குடி , வாழை,பப்பாயா போன்ற பழங்கள்

>சிகப்பு:கேரட்,பீரூட்,தக்காளி ஆப்பிள் போன்றவை.

தினசரி உணவில் இந்த மூன்று நிறங்களும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே ஆரோக்யமான உடல்நலம் இருக்குமாம்.

ஆனால் மெஷின் மாதிரி இடை விடாது ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதையெல்லாம் கவனித்து சாப்பிட எங்கே நேரம் என்று புலம்புவது மடத்தனம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம்.

நல்ல ஆரோக்யமான உணவு ஆரோக்யமான உடல் நலத்திற்கும் அதன் மூலம் ஆரோக்யமான மனநலத்திற்கும் தேவை என்பதை உணர்ந்து கடை பிடித்தே ஆக வேண்டும்.

அந்தக் காலம் போல கைக்குத்தல் அரிசியும்,பக்குவமான சரிவிகித சாப்பாடும் இனி எங்கே கிடைக்கப் போகிறது.

எல்லாவற்றிற்கும் மெஷினை நம்பி நம் வாழ்க்கை மெஷின் மாதிரி ஆகிவிட்டாலும் அதையும் கண்டிஷனாக வைத்திருக்கனும் தானே.

கண்டதையும் தின்று வயிறு நிறைவதை விட கொஞ்சமானாலும் சத்துள்ளதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.

19 மறுமொழிகள்::

ALIF AHAMED said...

சுவர் இருந்தால்தான் சித்திரம்.
/

பேப்பர் பேனா இருந்தாலும் சித்திரம் வரையலாம் குட்டீஸ்

டீச்சர் பொய் சொல்லுறாங்க என்னானு கேளுங்க :)

Anonymous said...

தனியா இருந்து பொங்கித் தின்னும் போதே 'கொ'அடங்கலையே.
டீச்சர் பாவம் கஸ்டப் பட்டு அறிவுரை சொல்றாங்க.நக்கலா

அபி அப்பா said...

இன்றைய ஸ்பெஷல்: சென்னா+காலிபிளவர் குருமா, கேரட் பொறியல், கொஞ்சம் தக்காளி ரசம், 1 கப் பொன்னி பச்சரிசி சாதம், 1 கப் தயிர், உப்புகண்டம் வருத்தது 2 துண்டு அத்தனையே!!! வாவ்(இது ஏப்பம்)

ALIF AHAMED said...

Anonymous said...

தனியா இருந்து பொங்கித் தின்னும் போதே 'கொ'அடங்கலையே.
டீச்சர் பாவம் கஸ்டப் பட்டு அறிவுரை சொல்றாங்க.நக்கலா
//

ஹி ஹி கொஞ்சம் தொப்பை விழ ஆரம்பிச்சது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா... :)

Anonymous said...

சேன்னாவுல புரோட்டின்,காலிபிலவர்ல கால்சியம்,தக்காளியில வைட்டமின்C,
கேரட்ல கரோட்டின் எல்லாம் ஓகே.
இந்த உப்புக் கண்டம்தான் சரியில்லை.உப்பு கொழுப்பு+BP

Anonymous said...

லவ் பண்ணத்தொடங்கிய பின்னாடிதான் இந்த பாஸ்பூட், யங் பூட் எல்லாமே. அதுக்கு முன்னாடி கையேந்தி பவன் தான். வந்து தொலைஞ்சுது நாலஞ்சு சல்வார் கமிசு. உடலும் கெட்டுது மனசு கெட்டுது.

புள்ளிராஜா

கோபிநாத் said...

அக்கா...ரொம்ப தேவையான அறிவுரை தான்.

குட்டிபிசாசு said...

நல்ல இடுகை!! வாழ்த்துக்கள்!!

கண்மணி/kanmani said...

வாங்க அபி அப்பா
தங்கமணிய விட்டுப் பிரிந்திருந்தாலும் சாப்பாடு வஞ்சனையில்லை போலும் .நல்லாத்தான் இருக்கு மெனு.

கண்மணி/kanmani said...

என்ன மின்னலு& குட்டி பிசாசு &கோபி கும்மி மேட்டரு இல்லன்னு பாக்கறீங்களா?
மைபிரண்ட் புதுசா இடுகை போட்டிருக்கு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லப்பதிவு...அந்த மூணு கலர் காய் சேர்த்துக்கறது ந்ல்ல விஷயம் ...

Anonymous said...

பச்சை சிவப்பு மஞ்சள் ஹய்யா காய்கறியுலும் கட்சியா?
நாந்தான் கொ.ப.செ

தருமி said...

தனி மடல் தனி மடல் தனி மடல் தனி மடல் தனி மடல் தனி மடல்

ஏற்கெனவே உங்களுக்கு என் தனி முகவரியோடு என் சம்மதத்தைத் தெரிவித்து அனுப்பிய மடல் கிடைத்ததா இல்லையா என்பதைத் தெரிவித்தால் நலமாயிருக்கும்.

Chinna Ammini said...

இனிமே எல்லா காய்கறியிம் ஒழுங்கா சாப்பிடுவேன் டீச்சர்

Priya said...

வாழ்த்துக்கள்... நல்ல கருத்துக்கள்...

கண்மணி/kanmani said...

@தருமி சார்.தனிமடல் கிடைக்கலை.கும்மிக்கு விருப்பமில்லையோ என நினைத்தேன். கமெண்ட் மட்டறுத்தல் செய்தாகி விட்டது.ஐடி தந்தால் கும்மி கோடு அனுப்புகிறேன்.

கண்மணி/kanmani said...

கு சின்ன அம்மினி இப்படித்தான் டீச்சர் சொன்னா கேக்கனும்.

கண்மணி/kanmani said...

நன்றி வள்ளி.

லக்ஷ்மி said...

கண்மணி, வெளிநாட்டில் வசிப்போருக்கு இன்னொரு பிரச்சனையும் உண்டு. ஃப்ரோசன் ஃபுட் எனப்படும் உணவு பதார்த்தங்கள் - அநேகமாய் எல்லா வகை வட இந்திய உணவுகளும் இவ்வகையில் கிடைக்கும். வாங்கி வந்து மைக்ரோவேவ் அவனில் இரு நிமிடங்களில் சூடு செய்து சாப்பிட்டு விடலாம். வெளிநாடுகளில் வசிக்கும் திருமணமாக இளைஞர்களுக்கு இதுதான் சர்வ ரோக நிவாரணியாக கைகொடுக்கிறது. ஆனால் தொடர்ந்து இதை சாப்பிட்டு வருவதும் உடல் நலத்துக்கு கேடே. இது சம்பந்தமாய் ஒரு கட்டுரை படித்தேன் - என்ன வகையான பாதிப்பு என்பது தெளிவாக சொல்லப்பட்டிருந்தது. தேடி கிடைத்தால் எடுத்து போடுகிறேன். கும்மியை நீங்கள் தனிக்குடித்தனம் வைத்துவிட்டதும் நல்லதாய்த் தான் இருக்கிறது. இரண்டு வகையிலும் எங்களுக்கு நல்ல பதிவுகள் கிடைக்கிறதே. உங்களோட குழந்தைகளுக்கான பதிவை இன்னும் பாக்கலை. பாத்துட்டு கருத்து சொல்றேன்.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)