PAGE LOAD TIME

ஒரு நண்பனின் கதையிது....

திடீரென்று தமிழ் மணத்துல என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது.

எதிர் பாராத இடத்திலிருந்து அதிர்ச்சிகரமான பதிவுகள்.

டெல்பின் பதிவுதான் கடைசியாகப் படித்தது.

நானே எழுத வைத்திருந்த கருப் பொருள்.
குடியைப் பற்றியும் குடிப்பவர்களைப் பற்றியும்.ஏனென்றால் என் நட்பு வட்டத்தில் பல சகோதரர்கள் இதில் அடக்கம்.

ஆனால் டெல்பின் மேம் அளவு மருத்துவம் சார்ந்ததாக இல்லாமல்
மனம் சார்ந்ததாக எழுத முற்படுகிறேன்.

இதை எழுதும் போது 'ஒரு சகோதரனின்'ஞாபகம் வந்து கண்கள் பனிக்கிறது.

எதிர்பாராத அதிர்ச்சிகளை இப்போதெல்லாம் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை.

என் பிளாக்கின் புரோபைல் டிஸ்கிரிப்ஷன் பாருங்கள்,'நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா'

இது சத்தியமான வார்த்தை.எனக்கு காசு பணத்தில் வசதியில் நம்பிக்கையில்லை.
எல்லாம் நாமே தேடிக் கொள்வது.நட்புகள்,உறவுகளின் அன்புக்கும் பகிர்தலுக்கும் முன் இவை தூசுக்குச் சமானம்.

என் நண்பனுக்கு மட்டுமே என்னைப் பற்றித் தெரியும்.
என் குடும்பத்தைப் பற்றி.எல்லாம் இருந்தும் இல்லாத எங்கள் தனிமையைப் பற்றி
ஒரு வேகத்தில் முடிவெடுத்து வனவாசமாய்ப் போன காலங்கள் பற்றி......

அவன் இதைப் பற்றி வருத்தப் பட்ட அளவு கூட நான் அதை/அவைகளைப் பொருட்படுத்தியதில்லை.

என்னை விட நண்பனே நீ எந்த விதத்தில் சோதனைகளைக் கண்டு விட்டாய் உன்னை மறக்க உன் நினைவுகளை இழக்கும் அளவுக்கு....

வயது ஆக ஆக மனம் பக்குவப் பட்டுப் போகிறது.பிரச்சினைகளை மனம் புறந்தள்ளப் பழகிக் கொண்டு விட்டது.

நட்சத்திர வாரத்தில் நான் உணர்ந்து அனுபவித்து எழுதிய கட்டுரைதான்,
'காற்றில் சருகாகிவிடு....ஆற்றில் தக்கையாகி விடு'

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகள் அவலங்கள் பிரச்சினைகள் மனதை அழுத்தும் பாரமாகி விடாமல்
சருகைப் போல உயரே பறக்கக் கற்றுக் கொள் அப்போதுதான் மண்ணோடு புதைந்து போக மாட்டாய்
தக்கையைப் போல நீரோட்டத்தோடு மிதக்கக் கற்றுக் கொள் அப்போதுதான் மூழ்கிப் போக மாட்டாய்.

டெல்பின் மேம்!!

குடிப்பதற்கு துன்பமோ,வருத்தமோ சோதனைகளோ தேவையில்லை.
கோழைத்தனம் மட்டும் போதும்.

நெருப்புக் கோழியாய் மண்ணுக்குள் முகம் மறைத்துக் கொண்டால் தப்பி விட்டோம் என நினைக்கும் முட்டாள்தனம் போதும்.

தான் மட்டும் தப்பித்தால் போதும் தன்னைச் சார்ந்தவர்கள் எக்கேடும் கெடட்டும் என்ற சுயநலம் போதும்.

எல்லாத்துக்கும் மேலே தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கும் அதி முட்டாள் நணபர்கள் போதும்.

நட்பின் பரிமாணம் புரியாமல் தலைகால் தெரியாமல் சேர்ந்து கூத்தடித்து விட்டு பின் கண் கெட்டபின் சூர்ய நமஸ்காரம் செய்யும் அறிவு கெட்ட நண்பர்கள் கூட்டம் இங்கு மட்டுமில்லை உலகின் எல்லா மூலைகளிலும் பரவிக் கிடக்கிறது.

விளையாட்டாக ஆரம்பித்தது வாழ்வுக்கு வினையாகும் போதுதான் புத்தி வருகிறது.

இந்த மட ஆண்களைப் போல பிரச்சினைகளுக்கு பெண்களும் இதற்கு துணிந்தால் இவர்கள் என்ன செய்வார்கள்.

எதற்காகவாக இருந்தாலும்,என்ன சூழ்நிலையில் அடிமைப் பட்டிருந்தாலும் தானாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் கடவுளே கூட திருத்த முடியாது.

இதில் நான் என்ன நீங்கள் என்ன செய்யமுடியும்.

அடடே அந்த அளவுக்குக் கூட நட்புக்கு மதிப்புண்டா இந்தக் காலத்தில்.!!!!!....நோ சான்ஸ்.

இப்படி அறிவுரை சொல்லப் போய்,'உங்க வேலையைப் பாருங்க' என்று மூக்குடைந்த அனுபவம் இருக்கிறது எனக்கு.

மீண்டும் மீண்டும் மூக்கு உடைபட நான் முட்டாளில்லை.

நட்புக்கு மதிப்பளிப்போரை ஏற்பேன்.
இல்லை ஒதுங்கி விடுவேன்.அவ்வளவே

டிஸ்கி:பிரச்சினைகளுக்கு தீர்வு 'மது' மட்டுமே என நினைக்கும் என் நண்பர்களுக்கு என் நண்பனின் கதை சமர்ப்பணம்.

9 மறுமொழிகள்::

delphine said...

THANK YOU.

குட்டிபிசாசு said...

என்னக்கா மட ஆண்கள்னு என்னை சேர்த்துட்டீங்க! நான் திருந்தி நாள் ஆச்சு!!

அபி அப்பா said...

அருமையான பதிவு! நானும் எழுதனும்ன்னு நெனச்சேன்! நீங்க முந்திகிட்டீங்க!

கோபிநாத் said...

தேவையான பதிவு

நன்றி

குசும்பன் said...

"தான் மட்டும் தப்பித்தால் போதும் தன்னைச் சார்ந்தவர்கள் எக்கேடும் கெடட்டும் என்ற சுயநலம் போதும்.

எல்லாத்துக்கும் மேலே தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கும் அதி முட்டாள் நணபர்கள் போதும்."

அக்கா நீங்க எழுதியதில் பிடித்த வரிகள், நான் யாருடய பர்ஸ்னலிலும் தலையிடாத சுபாவம், இருந்தாலும் ஒரு சில சமயங்கள் சொல்லி பார்த்து மூக்குடைந்தது உண்டு.

நண்பரோடு பழகியது சில காலம்தான் என்றாலும் அன்புக்கு,நண்பர்களுக்கு கட்டுபடும் ஆள் ஆகையால் மாற்றம் நிச்சயம் இருக்கும் நம்பிக்கைதான் வாழ்கை. நம்புவோம்.

அன்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்று நம்புவன் நான். நம் எல்லோருடய அன்பும் அவரை மாற்றும்.

Chinna Ammini said...

உங்கள் அறிவுரையை ஏற்றிக்கொண்டு இனிமேல் மது அருந்துவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறேன்

Jazeela said...

நகைச்சுவையாக மட்டும்தான் எழுதுவீங்கன்னு பார்த்தா என்ன இது சின்னபுள்ளத்தனமா ரொம்ப சீரியஸா எழுதிக்கிட்டு. நீங்க சொல்லி நாலு பேரு திருந்துனாங்கன்னா, அந்த நாலு பேரு சொல்லி நாப்பது பேரு திருந்துனாங்கன்னா, அந்த நாப்பது பேரு சொல்லி நானூறு பேரு திருந்துனாங்கன்னா நீங்க சீரியஸா எழுதுறதுல தப்பேயில்ல ;-)

arun said...

nalla topic. its really a pain watching our beloved persons addicted to drinks.

cheena (சீனா) said...

திடீரென ஒரு சீரியஸ் பதிவு - வழக்கமான மொக்கைகளுக்கு நடுவினில்

குடி - குடியைக் கெடுக்கும் - இள வயதில் மகிழ்ச்சிக்காக ஆரம்பித்து - நண்பர்களின் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து - பின் ஏதோ துன்பங்களை மறக்கும் வழியாக(???) - தொடர்ந்து கொண்டே இருந்து - எப்படி விடுவது எனத் தெரியாமல் அழிந்தவர்கள் பலர். அறிவுரைகள் பயன் தராது. உறவினரின் - நண்பர்களின் குடிப் பழக்கத்தால் துன்பப்பட்டவர்கள் ஏராளம். என்ன செய்வது. அவர்களாகத் தான் திருந்த வேண்டும் - அதற்குள் காலம் கடந்து விடுகிறதே.

//என் பிளாக்கின் புரோபைல் டிஸ்கிரிப்ஷன் பாருங்கள்,'நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா'//

உண்மை- பதிவுகளைப் படிக்கும் போதெ அது புரிகிறது. ஆனால் கண்ணின் கருவிழியில் ஏதோ சொல்ல முடியாத சோகம் தெரிகிறது.

"காற்றில் சருகாகி விடு ...
ஆற்றில் தக்கையாகி விடு ...."

உண்மையான வரிகள். உலகத்தோடு ஒட்ட ஒழுகி நடப்பவைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதனுடனே செல்வது - நல்லதொரு முடிவு. ஆனால் நாணலைப் போல் வளைந்தால் நன்றாக இருக்கும். வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து நிமிர வேண்டிய நேரத்தில் நிமிர்ந்து - காற்று இழுத்த இழுப்பெக்கெல்லாம் போகும் சருகாக இல்லாமல் - ஆறு போகும் போகில் எல்லாம் போகும் தக்கையாக இல்லாமல் - இருதட்தல் நலமல்லவா

//இப்படி அறிவுரை சொல்லப் போய்,'உங்க வேலையைப் பாருங்க' என்று மூக்குடைந்த அனுபவம் இருக்கிறது எனக்கு.

மீண்டும் மீண்டும் மூக்கு உடைபட நான் முட்டாளில்லை.

நட்புக்கு மதிப்பளிப்போரை ஏற்பேன்.
இல்லை ஒதுங்கி விடுவேன்.அவ்வளவே//

இயன்றவரை நட்பின் அடிப்படையில் நண்பர்களுக்கு அறிவுரைகள் கூறத்தான் வேண்டும். நட்பில் மூக்குடைபடுவது பற்றி எல்லாம் கவலைப் படக் கூடாது. தவறென்று தெரிந்தால் நட்பினைத் திருத்த வேண்டிய கடமை நம்முடையது. கடைசி வரை முயல வேண்டும்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)