PAGE LOAD TIME

ஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்

கலாய்க்கிறதுக்கும் குறும்புக்கும் வயசென்னங்க வேண்டியிருக்கு.
நம்ம விளையாட்டுத்தனம் நாலு பேர புண்படுத்தாம சிரிக்க வைக்குதுன்னா
வெளையாடலாம் கலாய்க்கலாம் தப்பேயில்லை.
இப்படி கண்மணி கலய்ச்ச சில சம்பவங்களை [கதையல்ல நிஜம்]
சொல்றேன் கேளுங்களேன்.

கலாய்ப்பு -1
என்னோட கொலீக் அதாங்க எங்கூட வேலை செய்யும் தோழி ஒருத்திக்கு ரெண்டு பசங்க.
அதுங்க படிக்கனும்னு அவங்க வீட்ல அப்பப்ப கேபிள் டிவி கட் பண்ணிடுவாங்க.
எக்ஸாம் முடிஞ்சதும் மறுபடி கனெக்ஷன் குடுப்பாங்க.
ஒரு நாள் இரவு நான் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணேன்.
தோழியோட பொண்ணு 5 வது படிக்கிறா.அவதான் ஃபோனை எடுத்து
'ஹலோ யாரு' ன்னா.
நான் உடனே குரலை மாத்திக் கிட்டு,'நாங்க சன் டி.வியிலிருந்து பேசறோம்.
பெப்ஸி உங்கள் சாய்ஸ் ல நீங்க கேட்ட பாட்டு போடறோம்.என்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க'
பொண்ணு ஒன்னும் புரியாம +1 படிக்கும் அண்ணன் கிட்ட குடுத்தா.
''யாருங்க நீங்க'
'நாங்க சன் டி.வியில இருந்து பேசுறோம்.என்ன பாட்டு வேனும்'
'யாரு எழுதி போட்டா'
'உங்கப்பா'
'எங்கப்பாவா?பேரு'
'மூர்த்தி' [தோழியின் கணவர் பெயர் தெரியும்]
பேரு கரெக்டாச் சொன்னதும் பையன் நம்பிட்டான்.'ஓ என்ன வேணும்'
'உங்களப் பத்தி சொல்லுங்க .உங்க வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா'
'எங்கம்மா இருக்காங்க கூப்பிடுறேன்'
'சரி அவங்க வர்ரதுக்குள்ள நீ ஒரு பாட்டுப் பாடேன் பாடுவியா?'
'வேண்டாம்.எனக்கு வராது'
அதுக்குள்ள என் தோழி வந்து யாருன்னு கேட்க நான் சுருக்கமாகச் சொன்னேன்.
[சத்தியமா என் குரலை அடையாளம் கண்டுபிடிக்கலை.அது என் சாமர்த்தியமா? இல்லை அவ ஏமாளியான்னு தெரியலை.]
'உங்க பையனை பாடச் சொல்லுங்க'
மறுத்தவனை,'பரவாயில்லை கேக்கறாங்க இல்லை பாடு' என அவள் தூண்ட
'சினிமாப் பாட்டு பாடவா '
பையன் 'மன்மத ராசா மன்மத ராசா என நாலு வரிப் பாட,
'ஏன் தம்பி நீ படிக்கிற பையன் தானே பாட்டு பாடச் சொன்னா இப்படி மன்மத ராசா பாட்டா பாடுவது உருப்பட முடியுமா ' என நான் கேட்க
பையன் கடுப்பாகி 'யாரும்மா இது அப்பா எப்போ எழுதிப் போட்டாங்க'
அதற்குள் தோழி,'ஏங்க இது எப்ப டி.வியில வரும்?'
'இது லைவ் புரோகிறாம்.இப்ப வந்துகிட்டே இருக்குங்க'
'ஐய்யோ எங்க வீட்ல கேபிள் கட் பண்ணிட்டோம்'
'அதுக்கு நான் என்னங்க செய்யறது.போய் பக்கத்து வீட்ல பாருங்க' என
பையன் 'அம்மா நான் போய்ப் பாக்கிறேன்னு ஓடுவது கேட்டது.
'ரொம்ப நன்றிங்க. மூர்த்தி சாரை நான் விசாரிச்சதா சொல்லுங்க
பை' என்று ஃபோனை வைத்து விட்டேன்.
மறுநாள் ஸ்கூலுக்கு வந்து நேத்து யாரோ ஃபோன் பண்ணி ஏமாத்தினாங்க என்று எங்கிட்டயே சொன்ன போது வந்த சிரிப்பை அடக்க முடியலை.
நான் சிரிச்சதைப் பாத்துத்தான் 'என்வேலைதான்' ன்னு தெரிஞ்சிகிட்டா.

டிஸ்கி:இன்னும் நாலு அஞ்சு இன்சிடெண்ட்ஸ் இருக்கு..ஒவ்வொன்னா சொல்றேன்.நமக்கும் நாலு பதிவு போடனுமில்ல.

28 மறுமொழிகள்::

அபி அப்பா said...

ஹய்யோ டீச்சர் படிக்க முடியல! சீக்கிரம் டெம்பிளேட் சரி பண்ணுங்க!

அனுசுயா said...

Me First :)

அபி அப்பா said...

எல்லரும் ctrl A போட்டு படிங்கப்பா!

கண்மணி said...

வெல்கம் அனுசுயா இன்னைக்கு என்ன ரொம்ப ஃபிரீயா?;) அக்கா பதிவுல பாக்க முடியுது .

கண்மணி said...

அபி அப்பா ctrl+A போட்டு மத்தவங்க படிக்க வேண்டாம்.நீங்க கண்ணாடி போட்டு படிங்க.[40+ ஆயிடுச்சில்ல]
வேற யாரும்சொல்லட்டும் மாத்திடறேன்.

அபி அப்பா said...

இல்ல டீச்சர் நெசமாத்தான் வெள்ளை கலர்ல இருக்கு எழுத்து! மத்தவங்களும் வந்து சொல்லுங்கப்பா, டீச்சர் என்னய கலாய்கிறாங்கப்பா!

Anonymous said...

Velleluthu illai...manjal eluthu....konjam mathunga...padikka mudilla

உங்கள் தமிழன் said...

//எல்லரும் ctrl A போட்டு படிங்கப்பா//

நானும் அப்பிடித்தாங்க படிச்சேன்.

Anonymous said...

உங்க டெம்ப்ளட் அழகா இருக்குனு அபிஅப்பாவுக்கு பொறாமை டீச்சர் அதான் மாத்தச் சொல்றார்

கண்மணி said...

அனானி நண்பா இதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா?
ரொம்ப ஆசையா போட்ட டார்க் ப்ளூ டெம்ப்ளேட் உண்மைத்தமிழனும் ஆமாம்ம்னு சொன்னதால் மாத்திட்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

kaadhula poovu?

அப்பாவி said...

நீங்க சொல்லிட்டீங்க சர்தானுங்க

Anonymous said...

டீச்சர் எங்களை எல்லாம் பாத்தா உங்கள்ட படிக்க வர்றேனு ஏமந்த ஏமாறுற ஏமாறப் போற ஸ்டுடண்ட்ஸ் மாதிரி இருக்கா?

பெப்ஸி உமா யாருக்கும் போன் பண்ண மாட்டாங்க வந்த காலத்தான் அட்டெண்ட் பண்ணுவாங்க

காமெடி டைம்ல தான் போன் பண்ணுவாங்க

அதனால கதைய மாத்துங்க

குட்டிபிசாசு said...

என்ன கொடுமை இது அக்கா?

குட்டிபிசாசு said...

மொக்கையில உலக மகாமொக்கைனு ஒன்னு இருக்கிறதே இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்

குட்டிபிசாசு said...

நான் அப்பாலிக்கா வந்து கும்மியடிக்கிரேன்

Anonymous said...

உங்க தொலைபேசி எண் குடுங்க பாக்கலாம் க‌ண்மணி. உங்க வீட்டுக்கு ஜார்ஜ் புஷ் போன் பண்ண சொல்லரேன்

கண்மணி said...

குட்டிபிசாசு ஆணி அதிகமா?
மொக்கையும் இருந்தாதான் பதிவு நல்லாருக்கும்,

கண்மணி said...

அனானி தம்பி பெப்ஸி உங்கள்சாய்ஸ் காமெடி டைம் பற்றி ரொம்பத் தெரியாததாலதான் என் தோழி ஏமாந்தார்.
நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு சொன்னா இது என்ன கதையா அடிக்கடி மாத்த.
நிஜமான கலாய்ப்பு.
அடுத்தது வரும் படிங்க.

கண்மணி said...

சின்ன அம்மினி உங்க நெம்பரோட ரெண்டா கூட்டினா என் போன் நெம்பர் தெர்யாத புள்ள மாதிரி கேக்கறீங்க.

delphine said...

good mokkai

குசும்பன் said...

ஹா ஹா சூப்பர் அப்படின்னு சொல்ல மாட்டேன்! நிஜமா மொக்கைன்னு சொல்லவும் மாட்டேன் அப்ப என்னத்த தான் டா சொல்ல வருகிறேன் என்று நீங்க கேட்டா! இங்க கொஞ்சம் வெய்யில் ஜாஸ்தின்னு சொல்லுவேன்!!!

இப்ப புரியுதா நான் என்ன சொல்றேன்னு.

ஜெஸிலா said...

இந்த மாதிரி நிறைய ஃபோன் விளையாட்டு பண்ணிருக்கேன். இதை ஒரு பதிவா போடணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன், நீங்க முந்திக்கிட்டேள்.

Anonymous said...

Nalla kalaikireenka, nalla velai enka veetu phone number unkalukku theriyathu - therinthal innum enna kalatta vellam pannuveenkalo.

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கோ! நீங்க கோயம்பத்தூர் காரங்களா? குசும்பு அதிகமாச்சே! :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

கண்மணி டீச்சர்க்கு பாசக்கார குடும்பத்தின் சார்பா "பல் குரல் மன்னி" பட்டம் கொடுக்கலாமா? ;-)

கண்மணி said...

மை பிரண்ட் பிரீயா இன்னிக்கு?
எனக்கு மிமிக்ரி வராது. சும்மா ரிசீவர்ல துணிய வச்சிகிட்டூ குரலை மாத்துவேன்.இதுக்கே மேல்மாடி காலியாயிருக்க மக்கள்தான் மண்டைய பிச்சிக்கும்
இரகசியம்:ஒருத்தரை ஒரு வாட்டிதான் ஏமாத்துவேன்.இல்லாட்டி தெரிஞ்சிடும்
அப்பப்ப யாராச்சும் மாட்டுவாங்க
சரி உன் மொபைல் நெம்பர் குடு;))

cheena (சீனா) said...

மிமிக்ரி தெரியாது - பல குரல் மன்னி - என்னாது வெளையாட்டா இருக்கே - பாவம் மக்கள்ஸ் - கலாச்சிட்டே இருந்தா எப்டி ? - மறுநாளாச்சும் நெசத்தே சொல்லி ஒரு சாக்லேட் குடுத்துருக்கலாம்லே - ம்ம்ம்ம்ம்

ஹலோ யாரு வேணும் - இல்லீங்க ராங் நம்பர்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)