PAGE LOAD TIME

நான் சூர்யாவோட மிஸ் பேசுகிறேன்

என்னுடைய கலாய்ச்சல் வரிசையிலசொல்லுவதற்கு நிறைய்ய இருந்தாலும் மக்கள்ஸ் எதோ கதைன்னு பாராட்டறாங்க. அதுக்காக பயப்பட மாட்டா இந்த கண்மணி அக்கா
இது என்னோட மூணாவது கலாய்ப்பு.

ஒரு நாள் இரவு ஊரில் இருக்கும் என் தம்பி வீட்டுக்குப் போன் பண்ணேன்.

ஃபோனை என் தம்பியோட பையன் சின்னவன் யூ.கே.ஜி படிக்கும் சூர்யா எடுத்தான்.

உடனே நான் குரலை மாற்றி ஹலோ சூர்யா நாந்தான் மிஸ் பேசுறேன்னு சொன்னேன்.

உடனே அவன் அம்மா ,'மிஸ்ஸாம் நீயே பேசு' ன்னு அவங்க அம்மாகிட்ட குடுத்தான்.
'உங்க மிஸ்ஸா டா'
'தெரியலை'
என் தம்பீ வொய்ப் போனை வாங்கி ஹலோ ன்னதும்
'நான் *********ஸ்கூல்ல இருந்து சூர்யாவோட மிஸ் பேசுறேங்க'

'யாரு அவன் கிளாஸ் மிஸ்ஸா'

'இல்லைங்க அவனோட மேத்ஸ் மிஸ் '

'என்னங்க ராத்திரியில'

'உங்க சூர்யா இன்னைக்கு ஸ்கூல்ல அவன் கிளாஸ்ல படிக்கும் பையனை அடிச்சிட்டான்.கீழேயும் புடுச்சித் தள்ளிட்டான்.ஆஸ்பத்திரியில சேர்த்திருக்குங்க'

'அவன் யாரையும் அடிச்சிருக்க மாட்டான்.அவன் தாங்க அடி வாங்கிட்டு வருவான்'

'நான் என்ன பொய்யா சொல்றேன் அவனைக் கூப்பிட்டு கேளுங்க'

'சரி யாரை அடிச்சான்'

எந்த பேரு சொல்வதுன்னு தெரியாததால் 'அவனையேக் கூப்பிட்டுக் கேளுங்க' என்றேன்.
'டேய் சூர்யா இன்னைக்கு யாரையாவது அடிச்சியா'

'இல்லம்மா'
'உன்னை யாராவது அடிச்சாங்களா'
'இல்லை'

உடனே அவள்'ஏங்க என் பையன் யார்கிட்டயும் சண்டை போடலை.நீங்க வேற யாரையாவது சூர்யான்னு நெனச்சிக்கிட்டு தப்பா சொல்றீங்க'என்றதும்

பொய்யாக வரவழைத்த கோபத்துடன்,'உங்க பையன் T.சூர்யா தானே.நான் சரியாத்தான் சொல்றேன்.

நேத்து உங்க வீட்டுக்கு அவங்க மாமா ஊர்ல இருந்து வந்தாங்களா'
'ஆமாம்'
'அல்வாவும்,பிஸ்கட்டும் வாங்கி வந்தாங்களா'
'ஆமாம்'

'நீங்க அவருக்கு காபி போட்டுக் குடுத்தீங்க.தோசை செய்யட்டுமான்னு கேட்டதுக்கு வேண்டாம் நேரமாச்சு கிளம்பறேன்னு சொன்னாரா?'

'ஆமாம்'
'சும்மா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடாமப் படிக்கனும் னு சூர்யா கிட்ட சொன்னாரா?'
'ஆமாம் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்' யாருங்க நீங்க'என

'சூர்யா இன்னைக்கு ஸ்கூல்ல இதைத்தான் சொல்லிகிட்டிருந்தான்'

[எங்க தங்கமணி ஊருக்குப் போய் வுட்டு வந்து சொன்ன மேட்டரை இப்படி போட்டுத் தாக்கினேன்.வேறொன்னும் இல்லை]

'சரி.பசங்கன்னா விளையாடும் அடிச்சிக்கும் அதுக்கு ஸ்கூல்ல கண்டிங்க.ராத்திரி நேரத்துல வீட்டுக்கு ஏன் போன் செய்யறீங்க'?

உங்க ஹஸ்பெண்ட் கூப்பிடுங்க.அடிபட்ட பையனுக்கு நிறைய செலவாகும் போல இருக்கு.அந்த பையன் வீட்ல வசதியும் இல்ல.நீங்கதான் பணம் கட்டனும் னு சொன்னதும் அரண்டு போனாள்.

இதற்குள் அங்கு அவங்க வீட்டில் இருந்த எங்க அம்மா,'என்னம்மா விஷயம்' எனக் கேட்டது காதில் விழுந்தது.

'ஏங்க எங்க மாமியார்கிட்ட பேசுங்க'
சொல்லியபடி மாமியாரிடாம் [என் அம்மா] போனைக் கொடுக்க
உடனே நான் சாதாரண வாய்ஸில் எப்பவும் போல,'என்னம்மா எப்படியிருக்கே சூர்யா,தினேஷ்ல்லாம் நல்லாயிருக்காங்களா' என்றதும்

எங்க அம்மா,'அக்கா தான் போன்ல பேசுறா நீ என்னவோ மிஸ்ஸூ ன்னு சொன்னியே'என
அவள் மறுபடியும் போனை வாங்கி ஹலோ என

நான் பழையபடி மிஸ்ஸாகி குரலை மாத்தி
'என்னங்க விளையாடறீங்களா உங்க மாமியார் என்னமோ அக்கான்னு சொல்றாங்க. கிண்டலாப் பண்றீங்க கூப்பிடுங்க உங்க ஹஸ்பெண்டை'

'அவரு இல்லைங்க வெளியே போயிருக்காரு.எங்க மாமியார் பேசும் போது எங்க நாத்தனார் [நாந்தேன்] பேசினாங்க.இப்ப எப்படிங்க ஒரே குழப்பமாயிருக்கு' என

போதும் இதுக்கு மேல கலாய்ச்சா பயந்துடுவான்னு சிரிச்சி உண்மையைச் சொல்ல

'தொத்தா பயந்தே போயிட்டேன். இப்படியா வெளையாடுவீங்க நெஜமா அவன் மிஸ்ஸு கூப்பிட்டாக்கூட இனி நம்ப மாட்டேன் 'என்றாள்.

டிஸ்கி: என்னா அக்கா கத சூப்பருன்னு வழக்கமான பல்லவியா....
எங்க உங்க வீட்டு போன் நெம்பர் குடுங்க அப்பால பாருங்க

30 மறுமொழிகள்::

குட்டிபிசாசு said...

இந்த வரிசை நல்லா போகுது அக்கா!!

அடிச்சி ஆடுங்க!

குட்டிபிசாசு said...

இப்படி போன் செய்தால் பில் ஏறும்!!

குட்டிபிசாசு said...

என்னோட நிலைமைய பார்த்திங்களா!

10:35க்கு வந்து கமெண்ட் போட வேண்டி இருக்கு!!

கண்மணி/kanmani said...

நீயாச்சும் நம்பறீயா தம்பி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆமாம் அமீரக மாநாடு பதிவு இன்னும் காணோமே

கண்மணி/kanmani said...

10.35 க்கு கமெண்ட் போடக்கூடாதுன்னு தடா வா

Anonymous said...

அக்கா கத சூப்பரு....

நாமக்கல் சிபி said...

ஆஹா! நீங்களும் இந்த மாதிரிதானா?

ஒரு கலக்கு கலக்கி இருக்கீங்க போல!

கண்மணி/kanmani said...

தேங்க்ஸ் சிபி நீங்களாவது நம்புறீங்க.
கலாய்த்தல் திணைக்கே சொந்தக்காரர் ஆச்சே.
நேத்து டெல்பின் பத்திய உங்க பதிவ்வுல போட்ட பின்னூட்டம் காண்லையே.

ILA (a) இளா said...

இதனால மக்களுக்கு அறிவிக்கிறது என்னான்னா எக்காரணத்தைக் கொண்டும் கண்மணி அக்காகிட்டே போன் நம்பர் மட்டும் குடுத்துறாதீங்க. நாம் நல்லா இருக்கனும்லே. ஜாக்கிரதை.

Anonymous said...

;((

MyFriend said...

nakka, kathai superu!!!

pst: Neenggal dial seyya vendiya en +0091XXXXXXXX..
:-P

குசும்பன் said...

ய்கோவ் சூப்பரா கலாயாச்சு இருக்கீங்க

"'அவன் யாரையும் அடிச்சிருக்க மாட்டான்.அவன் தாங்க அடி வாங்கிட்டு வருவான்'"

ஏன்னா அவன் அவுங்க அப்பா மாதிரி:)

delphine said...

பல குரல் மன்னியா நீங்கள்?//
nice one.

அபி அப்பா said...

00971 999 டீச்சர் இது தான் என் துபாய் நம்பர் ப்ளீஸ் கலாய்ங்க டீச்சர்!:-))

Anonymous said...

அது என் நம்பர்:-))

Anonymous said...

என் நம்பரும் அதேன்:-))

Anonymous said...

என் நம்பர்ல யாரோ இந்தியாவில இருந்து கலாய்க்கிறாங்க காப்பாத்துங்க!

கண்மணி/kanmani said...

அந்த மூனு ஃபோன் நெம்பர் டிரேஸ் பண்ணியாச்சு.விரைவில் கைதாகலாம்
ஸ்காட்லந்து யார்டு

தென்றல் said...

அக்கா! கத (கலாச்சல்) சூப்பரு!!

என்னது.....வீட்டு போன் நெம்பர்ஆ... (அவசரன்னா) 100 ;)

கோபிநாத் said...

\அபி அப்பா said...
00971 999 டீச்சர் இது தான் என் துபாய் நம்பர் ப்ளீஸ் கலாய்ங்க டீச்சர்!:-)) \\

யக்கா உங்களுக்கு புண்ணியமா போகுது தயவு செய்து இவரை கலாய்ங்க...முடியல

கோபிநாத் said...

\அதுக்காக பயப்பட மாட்டா இந்த கண்மணி அக்கா
இது என்னோட மூணாவது கலாய்ப்பு.\\

உங்களை கலாய்பதற்கும் இங்க ஆளுங்களை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கோம்....கொஞ்சம் பொருங்க 10 வருஷம் தான் ;-))

கோபிநாத் said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்....கதை நல்லா போயிக்கிட்டு இருக்கு...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;-))

கண்மணி/kanmani said...

கோபி நீ ஜெஸி +லொடுக்கு பொண்ணுதானே சொன்னே.அவிங்களுக்க்கும் நான் ஃபிரண்டுதான்.

ஓகே அபி அப்பா நெலமைய நாளைக்கு வ.வா.சா பதிவுல பாரு
[உன்னைப் பத்தி சொல்லியிருப்பது ச்சும்மா லுலுலாயிக்கு]

ALIF AHAMED said...

நான் ஜோதிகாவோனு நெனைச்சேன்..:)

ALIF AHAMED said...

ஓகே அபி அப்பா நெலமைய நாளைக்கு வ.வா.சா பதிவுல பாரு
[உன்னைப் பத்தி சொல்லியிருப்பது ச்சும்மா லுலுலாயிக்கு]
//

அதென்ன சும்மா லுலுலாயிக்கு

மண்டையில் குட்டி சொல்லுங்க டீச்சர்..:)

கண்மணி/kanmani said...

மிமி உனக்கும் இருக்குலே ஆப்பு
வ.வா.ச வுல என் அட்லாஸ் பதிவு பாரு .[நாளை??]
உன் வண்டவாளம் தெரியும்.

ALIF AHAMED said...

கண்மணி said...
மிமி உனக்கும் இருக்குலே ஆப்பு
வ.வா.ச வுல என் அட்லாஸ் பதிவு பாரு .[நாளை??]
உன் வண்டவாளம் தெரியும்.
///

ஏன் கொலவேறி என் மேல்

அக்கொண்ட் நம்பர் அனுப்பவும்

பேசி தீர்த்து கொல்லலாம்

லக்ஷ்மி said...

இந்த தொடர் நல்லாவே இருக்குங்க. ஆனா கொஞ்சம் பயமாக்கூட இருக்கு, உங்களோட சேர... :)

கண்மணி/kanmani said...

பயமா?அதுவும் லஷ்மிக்கா சாமீ
ரொம்பத்தான் நெனப்புங்க உங்களுக்கு.
என்ன தொடரா?கதையில்லீங்க நிஜம்
இன்னும் நிறைய்ய இருக்கு வரும்.
நம்பினால் நம்புங்க.இல்லாட்டி பின்னூட்டம் மட்டும் போதும்.ஹாஹா

cheena (சீனா) said...

எங்க வூட்லே கூட மிஸ்ஸூ பேசினாங்க - ஆரம்பிக்கும் போதே நான் கண்மணி இல்லங்கோன்னு டிஸ்கியோட ஆரமிச்சாப்க்க - இப்பத்தான் புரியுது ஏன்ணு

ஆமா - பாவம் தம்பி - பேசவே இல்லையா - அவருக்கு அக்கா தான்னு தெரியுமோ

ம்ம்ம்

//எங்க தங்கமணி ஊருக்குப் போய் வுட்டு வந்து சொன்ன மேட்டரை இப்படி போட்டுத் தாக்கினேன்.வேறொன்னும் இல்லை]//

தங்கமணியா - இல்ல ரங்கமணியா

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)