PAGE LOAD TIME

நாங்க காரைக்கால் FM லேர்ந்து வந்திருக்கோம்

கலாய்ப்புக்கும் சந்தோஷத்துக்கும் வயசில்லை ஜாலிய்யா கலாய்ச்சா மத்தவங்களுக்கும் அது சந்தோஷமே தரும்னு இதுக்கு முன்னே ஒரு கலாய்ப்பு பத்தி சொல்லியிருந்தேன்.
கண்மணி அக்கா வாயைத் திறந்தாலே கத உடறாங்கன்னு மக்க சத்தியம் பண்ணாத குறையா நெனச்சிடுது.
இது கதையில்லை தம்பிகளே நிஜமா நான் என் தோழியோடு அடிச்ச லூட்டி.

போன வருஷம் மார்ச் மாசம் +2 பிராக்டிகல் எக்ஸாமுக்காக [ஹி..ஹி..நான் எழுத இல்ல கண்ணுங்களா] நடத்த காட்டுமன்னார்குடி பக்கம் ஒரு ஸ்கூலுக்குப் போயிருந்தேன்.
தனீயாப் போகனுமேன்னு என் ஃபிரண்டு ஒருத்தியும் கூட்டிப் போயிருந்தேன்.

எக்ஸாம்ஸ் மதியமே முடிஞ்சிடுச்சி.கார்ல வேற போனதால பக்கத்துல இருக்கிற கங்கை கொண்ட சோழபுரம் போய்ப் பார்ப்போம்னு கெளம்பினோம்.

அங்கு போனபோது மணி 3 தான் இருக்கும்.மாலை 4 மணிக்கு மேலதான் கோயில் திறப்பாங்க என்பதால் சுற்றி இருந்த பிரகாரத்தையும் புல்வெளிகளையும் பார்த்தபடி இருந்தோம்.
அந்த நேரம் சென்னையிலிருந்து ஒரு கல்லூரி மாணவர் கூட்டமும் வந்திருந்தது. கோயிலைப் பற்றியும்,சிற்பங்களைப் பற்றியும் பேராசிரியர் விளக்கியபடி செல்ல சில மாணவர்கள் குறிப்பெடுத்தபடியும்,சிலர் புகைப்படம் எடுத்தபடியும் இருந்தனர்.

நானும் என்னிடம் இருந்த செல்ஃபோனில் சிற்பங்களை படம் பிடித்தபடி என் தோழியுடன் சென்று கொண்டிருந்தேன்.

அங்கு கோயில் வெளிப் பிரகாரத்தில் ஏதோ கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது.
நிறைய ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

ஏதோ பெரிய ஒளி ஓவியர் ரேஞ்சுக்கு நான் என் செல்போனில்
கண்ணில் பட்டதையெல்லாம் திரும்பித் திரும்பி படம் பிடித்தபடி சென்றேன்.

உணவு இடைவேளைக்காக அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நான் மாஞ்சு மாஞ்சு பந்தாவோடு படம் பிடிப்பதைப் பார்த்ததும் ஒரு இளம் வயதுப் பெண் என்னிடம்,
'ஏங்க நீங்க காரைக்கால் FM லேர்ந்தா வர்ரீங்க' என்றாள்.

கோயில் திறக்கும் வரை பொழுது போக்கனும் என ஆமாம் என்றேன்.
உடனே அவளும் இன்னும் ரெண்டு பேரும் வந்து,

'ஏங்க நாங்க கேக்கும் பாடலைப் போடுவீங்களா?'

'நாலு நாளைக்கு முன்னாடிகூட காரைக்காலேர்ந்து வந்தாங்க'
என ஆளாளுக்கு சொன்னதும்

'சரி என்ன பாட்டு வேணும் சொல்லுங்க நிகழ்ச்சியில போடுறோம்'

'என்னைக்கு வரும்?நாங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?'

'டெய்லி FM கேளுங்க அப்பத்தான் உங்க பாட்டு என்னைக்குன்னு கேக்கமுடியும்'

'சரி அதுக்கு முன்னாடி உங்களில் யாராவது பாடுங்க என்றதும் ,
'சுமதிதாங்க நல்லாப் பாடும்.ஏய் சுமதி பாடு' என சுமதி என்ற அந்த இளம்பெண் ஒப்புக்கொண்டாள்.
',மாமா சுமதி பாடப் போவுது இங்கிட்டு வா' என ஒரு இளைஞர் கூப்பிட ஒரு பெரியவரும் மேலும் பலரும் எங்களைச் சூழ்ந்து கொண்டனர்.

'ஏய் சுமதி நல்ல பாட்டா பாடுதே' என உற்சாகப் படுத்த
சுமதி மிகவும் வெட்கத்துடன் கோணியபடியே

'ஒவ்வொரு பூக்களுமே...சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே'

உண்மையிலேயே அழகான குரலில் பாட அதை என் செல்ஃபோனில் ரெக்கார்டு செய்து
அவர்களுக்குத் திரும்பப் போட்டுக் காட்டினேன்.

'நல்லாருக்குடி'
'சூப்பர் சுமதி'
'ஏங்க இவ பாடுனதும் ஒலி பரப்புவீங்கதானே என்னைக்குன்னு சொல்லுங்க'

அவர்களின் ஆர்வத்தோடு சில நிமிடங்கள் விளையாடிப் போக்கு காட்டி விட்டு

'சாரிங்க மன்னிச்சுடுங்க தப்பா எடுத்துக்காதீங்க.நாங்க கோயிலைப் பார்க்க வந்தவங்கதான்.
கோயில் திறக்கலையேன்னு சும்மா போட்டோ புடுச்சிக்கிட்டிருந்தோம்.
நீங்களாவே காரைக்கால் ரேடியோ வான்னு கேட்டதால கொஞ்சம் தமாஸு பண்ணோம்.கோச்சுக்கிடாதீங்க' என்றோம்.

விஷயம் தெரிந்ததும் முதலில் ஏமாற்றத்தில் முகம் மாறினாலும் அனைவருமே இரசித்து சிரித்தனர்.
ஆனால் பாவம் ஆர்வமாகப் பாட்டுப் பாடிய சுமதி மட்டும் மிகவும் ஏமாற்றமடைய,
'சுமதி உங்க குரல் அப்படியே ஸ்நேகா பாடற மாதிரியே இருந்துச்சி.என் செல்ஃபோன்ல
இருந்து அழிக்க மாட்டேன் னு சொன்னதும் கொஞ்சம் சமாதானமடைந்தாள்.

வேலையின் இடையே ஓய்வெடுக்க இருந்தவர்களை இப்படி ஏமாற்றினோமே என்ற குற்ற உணர்வு எங்களுக்கு இருந்தாலும் அவர்கள் பெருந்தன்மையாகவே எடுத்துக் கொண்டது சந்தோஷமாக இருந்தது.
நாங்கள் வாங்கிச் சென்றிருந்த பிஸ்கட்ஸ்,ஸ்வீட்ஸ் இவைகளையெல்லாம் அவங்க கிட்டயே குடுத்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு கிளம்பினோம்.

இந்த கூத்தையெல்லாம் சற்று தொலைவில் புல்தரையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள்,
'மேடம் இங்கிருந்தபடியே எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.நிஜமாவே ரேடியோ இண்டர்வியூ ன்னு நாங்களும் உங்ககிட்ட பாடாலாம்னு ஐடியா பண்ணியிருந்தோம் இப்படி கவுத்துப்புட்டீங்களே' என்று சிரித்தனர்.


டிஸ்கி: என்ன மக்கா அக்கா கதை சூப்பர்னு சொல்லப் போறீகளா? நிஜமா இது நிஜந்தான்.
அடுத்து என் உறவுக்கார பெண்ணை கலாய்ச்சத சொல்றேன்.வெயிட்டீஸ்

27 மறுமொழிகள்::

Anonymous said...

நல்ல கற்பனை வளம் இருக்கு உணங்களிடம் :)

கண்மணி/kanmani said...

வாங்க அனானி நண்பா இது கற்பனைன்னா சிறுகதையென்றே பதிவிடுவேன். பொய் தேவையில்லையே.
இது உண்மைன்னு புரிஞ்சாடீச்சர் எத்தனை ஜாலியான அக்கா ன்னு புரியும்.
குறைந்தபட்சம் என்னை சந்தித்திருக்கும் பாசக்கார குடும்பம் அறியும்.
எப்படியாயினும் வருகைக்கு நன்றி தம்பி/அண்ணா

Anonymous said...

இந்த டீச்சர் பதிவு போடும் போதே எத்தனை பேர் காதுல பூ சுத்தாலாம்னு நெனச்சே பதிவு போடுறிங்க

இந்தாங்க என்னோட காது

ஆனாலும் உங்க கதை சூப்பர்

குட்டிபிசாசு said...

எனக்கு "போனால் போகட்டும் போடா" என்ற பாடலை போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

குட்டிபிசாசு said...

/// Anonymous said...

நல்ல கற்பனை வளம் இருக்கு உணங்களிடம் :) //

யாருமா அது!! என்ன நைனா? எங்க கண்மணி அக்காவ பத்தி இப்படி கேட்டுபுட்ட, இதெல்லாம் என்ன சின்ன பொய், அவங்க எவ்வளவு பெரிய பொய்யெல்லாம் சொல்லி எங்களை கொடுமை செய்து இருக்காங்க தெரியுமா?

குட்டிபிசாசு said...

//Collapse comments

Anonymous said...

நல்ல கற்பனை வளம் இருக்கு உணங்களிடம் :) //

அனானியாரே! அப்பீடு ஆகிடுங்க! பாசக்கார குடும்பம் நீங்க சொன்னத பார்த்தா பழுத்துடும்.

குட்டிபிசாசு said...

என்ன அக்கா, 2 கமெண்ட் தான் இருக்கு!

குட்டிபிசாசு said...

என்ன அச்சி எல்லாருக்கும், நான் கொஞ்சம் நாள் இல்லாட்டி இப்படியா?

குட்டிபிசாசு said...

நீங்க கும்மி பதிவு ஆரம்பிச்சதுல இருந்து இந்த பதிவு டம்மியாகி போச்சு அக்கா!!

குட்டிபிசாசு said...

50 அடிக்கத்தான் நான் வேகமா பதிவெல்லாம் போட்டேன். இனிமேல் மாதம் 10 ...போதுமில்ல!!

கண்மணி/kanmani said...

குட்டி பிசாசு

ஹூ ஆஆன்னு சிரிக்கிறவன்லாம் வில்லனிமில்லை

எல்லா பதிவும் மொக்கையுமில்லை கும்மியடிக்க

ஒன்னு ரெண்டு காத்தாடும்தான்.

குசும்பன் said...

காதுல பூ ஏன் வைக்கிறாங்க, கண்மணி அக்கா?(இது கேள்வி வாக்கியம் தானே?, நீங்க பிரிச்சு படிச்சா நான் பொருப்பு அல்ல.)
அது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

அபி அப்பா said...

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள் போட்டு வைத்திருந்தேன்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்
.
.
.
.
.

நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
பாடல் ஒன்று..ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மாறிவிட்டதென்ன
காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை

ஒரு முத்தாரத்தில்....

டீச்சர் இந்த பாட்டு போடுங்க! புண்ணியமா போகும்:-))

கண்மணி/kanmani said...

யூ டூ அபிஅப்பா
கத உடுறேன்னு சொல்றீங்களா?

குசும்பந்தான் நம்பலை நீங்களுமா?

குட்டிபிசாசு said...

அக்கா,

இந்த டெம்ப்லெட் படிக்க கஷ்டமா இருக்கு! வேற எதாவது போடுங்க!

குட்டிபிசாசு said...

//கண்மணி said...

குட்டி பிசாசு

ஹூ ஆஆன்னு சிரிக்கிறவன்லாம் வில்லனிமில்லை

எல்லா பதிவும் மொக்கையுமில்லை கும்மியடிக்க

ஒன்னு ரெண்டு காத்தாடும்தான். //

ஒன்னுமே புரியல அக்கா!!

குட்டிபிசாசு said...

//அடுத்து என் உறவுக்கார பெண்ணை கலாய்ச்சத சொல்றேன்.வெயிட்டீஸ்//

வைட்டிங்!!

குட்டிபிசாசு said...

//'சுமதி உங்க குரல் அப்படியே ஸ்நேகா பாடற மாதிரியே இருந்துச்சி.என் செல்ஃபோன்ல ///

இதுக்கே அந்த பொண்ணு உங்கள திட்டி இருக்கனும். சினேகா பேசினாலே கேட்க முடியாது. பாடனுமா?

இதுதான் பெரிய கலாய்ப்பு!!

கண்மணி/kanmani said...

குட்டி பிசாசு ஸ்நேகான்னா ஸ்நேகாவா பாடது பிண்ணனி வாய்ஸ் வேறதானே....
அய்யோ அய்யோ இப்படி கும்மியடிச்சு புத்தி மழுங்கிடுச்சே ;((

கோபிநாத் said...

\\'சுமதி உங்க குரல் அப்படியே ஸ்நேகா பாடற மாதிரியே இருந்துச்சி.என் செல்ஃபோன்ல
இருந்து அழிக்க மாட்டேன் னு சொன்னதும் கொஞ்சம் சமாதானமடைந்தாள்\\

யக்கா..இப்ப இந்த மாதிரி வேற கலாயக்க ஆரம்பிச்சிட்டிங்களா???

கோபிநாத் said...

\ குட்டிபிசாசு said...
நீங்க கும்மி பதிவு ஆரம்பிச்சதுல இருந்து இந்த பதிவு டம்மியாகி போச்சு அக்கா!!\\

இதுக்கு ரிப்பீட்டேய் போட்ட என்னையும் கலாய்ப்பிங்களா ;-))

கோபிநாத் said...

\ குட்டிபிசாசு said...
//கண்மணி said...

குட்டி பிசாசு

ஹூ ஆஆன்னு சிரிக்கிறவன்லாம் வில்லனிமில்லை

எல்லா பதிவும் மொக்கையுமில்லை கும்மியடிக்க

ஒன்னு ரெண்டு காத்தாடும்தான். //

ஒன்னுமே புரியல அக்கா!!\\\

அய்யோ...அய்யோ...ராசா குட்டி இதுக்கு பேரு தான் கலாய்ப்பு ;-)) (எனக்கும் புரியல)

கண்மணி/kanmani said...

பிசாசு உன்னையும் கோபியும் புளிய மரத்துல கட்டி தொங்க விடப் போறேன்.
இது நிஜம்னு சொன்னா மத்தவங்க மாதிரி நம்ப மாட்டேங்கிறீங்களே

ஆமாம் இந்த டெம்ப்லேட் எப்டி?

MyFriend said...

yakkaa, ippadiyellaamaa pandrathu? paavam antha Sumathi!!!

ethukkum konjam jaakkirahthaiyave irungga. hehehe...

cheena (சீனா) said...

அதென்ன அருணுக்கும் ( குட்டி பிசாசு பேரு அருண் தானே) கண்மணிக்கும் அப்ப்டி ஒரு உறவு - எல்லாப் பதிவுலேயும் ஏகப்பட்ட மறு மொழி போட்டு தூக்கு தூக்குன்னு ( தாக்கு இல்லிங்கோ)தூக்கி விடுறாரே !

( எவ்ளோ கமிசன் அருண்)

Vijay said...

யாருபா சொன்னது, டீச்சர் கற்பனையா பேசறாங்கண்ணு? காட்டுமன்னார்குடிக்காஆஆஆஆ வந்தீங்க டீச்சர்? அய்யோ..அய்யோ பதிவுல எங்க ஊரு பேர போட்டு(இந்த பதிவுல இது மட்ட்ட்ட்டும் உண்மைதான்னு தெரிவிச்சிகிறேன், அதாவது இப்பிடி ஒரு ஊரு இருக்கறதுங்க) கௌரவ படுத்தினதுக்கு நன்றி...நன்றி..நன்றி...

கண்மணி/kanmani said...

vijay 'nattarmangalm' theriyumaa?anga oru matriculation school.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)