PAGE LOAD TIME

லீவு லெட்டர் பலவிதம்...

லீவு லெட்டருன்னு பார்த்ததுமே மக்கா ஆஹா டீச்சரு ஏதோ அவிங்க ஸ்கூல் மேட்டர எடுத்து உடப் போறாங்கன்னு நெனச்சிடாதீங்க.

இன்போஸிஸ் போன்ற ஐ.டி நிறுவனங்கள் ,இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனம் இப்படி பெரிய்ய்ய்ய்ய நிறுவனங்களில் வேலை செய்வோர் எழுதிய 'காமெடி லீவ் லெட்டர்' பல இண்டெர் நெட்டில் உலா வருகிறதாம்.
லீவ் லெட்டரில் என்னங்க காமெடிங்கிறீங்களா?

அதாங்க அவ்ளோ ஆங்கிலப் புலமையோட எழுதப் பட்டிருக்காம்.
படிச்சிட்டுத்தான் சிரிங்களேன்:

லெட்டெர்-1
''சின்ஸ் ஐ ஹேவ் டு கோ டு மை வில்லேஜ் டு செல் மை லேன்ட் அலாங் வித் மை வொய்ப் ,பிளீஸ் சேங்ஷன் மீ ஒன் வீக் லீவ்''

என் நிலத்தை என் மனைவியுடன் விற்பதற்கு,கிராமத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் ஒரு வாரம் விடுமுறை தேவை.
[அடப் பாவி ஃபிரிட்ஜ் வாங்குனா ஸ்டேண்ட் ஃபிரீ மாதிரில்ல இருக்கு.]

லெட்டர்-2
''அஸ் ஐ யாம் மேரியிங் மை டாட்டர் பிளீஸ் கிராண்ட் ய வீக்ஸ் லீவ்''


மகளுக்குத் திருமணம் செய்வதால் என்பதைத் தான் இப்படி நான் என் மகளைத் திருமணம் செய்வதால் எனக்குஒரு வாரம் விடுமுறை.....என்ற பொருளில்...
[கடவுளே...கடவுளே....இதென்ன கலி முத்திப் போயிடுச்சின்னு ...]

லெட்டர்-3
அஸ் மை மதர்-இன் -லா ஹேஸ் எக்ஸ்பையர்ட் அண்ட் ஐயாம் ஒன்லி ஒன் ரெஸ்பான்ஸிபிள் பார் இட்,பிளீஸ் கிராண்ட் மீ டென் டேஸ் லீவ்''

மாமியார் இறந்ததற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதால் ஒரு வாரம் லீவ் கேட்கிறார்.
[நிச்சயம் இது தானா வெளிப்பட்ட உண்மையாத்தான் இருக்கும்.வரதட்சணைக் கேட்டு படுத்தினாரோ என்னமோ.].

லெட்டர்-4
சின்ஸ் ஐ ஹேவ் டு கோ டு தி கிரிமேஷன் கிரவுண்ட் அட் 10 ஓ கிளாக் அண்ட் ஐ மே நாட் ரிட்டர்ன், பிளீஸ் கிராண்ட் மீஹாப் டே கேஷுவல் லீவ்''

அதாவது 10 மணிக்கு சுடுகாட்டுக்குப் போக வேண்டியுள்ளது.நான் திரும்பி வர முடியாது.எனவே விடுமுறை வேண்டும்....
[சுடுகாட்டுக்குப் போனா திரும்ப முடியாதுன்னு தெரியுதில்ல அப்ப ஏன் லீவ் ஒருவழியா ராஜினாமா செய்யலாமே].

லெட்டர்-5
ஐ யாம் ஃசப்பரிங் பிரம் பீவர் ,பிளீஸ் டிக்ளேர் ஒன் டே ஹாலிடே

இவருக்கு உடம்பு சரியில்லன்னு ஒரு நாள் லீவுன்னு அறிவிக்கனுமாம்...
[அது சரி பந்த் அது இதுன்னு எது எதுக்கோ லீவு விடறாங்க. அட மாட்டுப் பொங்கலுக்குக் கூட லீவுதானே இவருக்காக விட்டா என்ன]

லெட்டெர்-6
அஸ் ஐயாம் ஸ்டடியிங் இன் திஸ் ஸ்கூல்,ஐயாம் ஸ்ப்பரிங் பிரம் ஹெட்டேக் ,ஐ ரிக்வெஸ்ட் யூ டு லீவ் மீ டுடே

அது சரி இந்தப் பள்ளிக் கூடத்துல படிச்சதினால தலைவலியாம் அதனால லீவ் வேனுமாம்.
[ஒருவேளை கண்மணி டீச்சர் அங்கதான் வேலை செய்யறாங்களோ?]

லெட்டெர்-7
மை வொய்ப் ஈஸ் ஸ்ப்பரிங் பிரம் பீவர்,அண்ட் ஆஸ் ஐயாம் ஒன்லி ஹஸ்பெண்ட் அட் ஹோம்,ஐ மே பி கிராண்டட் லீவ்

மனைவிக்கு உடல்நிலை சரியில்லை.ஓகே.வீட்டில் இவர் ஒரே கணவராம்..அதனால் லீவ் வேனுமாம்...கடவுளே...
[அம்மாடி உன் பேரக் கெடுக்க மத்தவங்க வேனாம் உங்க வீட்டுக்காரரே போதும் ஆத்தா]

நன்றி:தினமலர் வாரமலர்

23 மறுமொழிகள்::

.:: மை ஃபிரண்ட் ::. said...

எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க டீச்சர். :-D

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹய்யா.. நாந்தான் ஃபர்ஸ்ட்டூ.. :-D

கண்மணி said...

அடிப் பாவி நான் நல்லாத் தெரிஞ்சாதான் இங்கிலிபிசு இல்லாட்டி தங்கிலீசு தான்

Anonymous said...

Inime Idhu POla leave letter eludha kathukanum.. appadiyaachum leave kodukiraanunghala paakalam .. oowwwwwwww

delphine said...

Inime Idhu POla leave letter eludha kathukanum.. appadiyaachum leave kodukiraanunghala paakalam .. oowwwwwwww...

டீச்சர்... என்னங்க டீச்சர்? இப்படியா தப்பு தப்பா சொல்லி கொடுப்பது?

J K said...

டீச்சர், இப்படியா தப்பு தப்பா சொல்லிககொடுக்கிறது.

கண்மணி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் இல்ல நான் இல்ல
அது பெர்ர்ர்ர்ரிய பெர்ர்ர்ர்ர்ரிய கம்பெனில வேலை செய்யற சாப்டுவேர் மக்க எழுதினதாம்.

siva gnanamji(#18100882083107547329) said...

சொல்லித்தந்த டீச்சர்.......
வாழ்க வாழ்கவே!

கண்மணி said...

வேனும் எனக்கு நல்லா வேனூம்.
சொந்தமா எழுதாம மண்டபத்துல எழுதனதைப் போட்டேன் பாருங்க இதுக்குப் பேருதான்
சொ.செ.சூ
அவ்வ்வ்வ்வ்வ்வ்

கதிரவன் said...

இதெல்லாம் ஏதோ ஒரு சர்தார் எழுதினதாத்தான் கேள்விப்பட்டிருக்கேன். ஏற்கனவே படிச்சதுதான்னாலும், உங்க கமண்ட்டோட படிக்கறதும் நல்லாத்தான் இருக்குது :-)

mglrssr said...

அரத பழசிலும் ஆகாச பழசு
மங்களூர் சிவா

காட்டாறு said...

உங்க காமெண்ட் சூப்பருங்கோ கண்மணி. ஏற்கனவே வாசிச்சிருந்தாலும், உங்க காமெண்ட் எல்லாமே சூப்பர். இதுல ஹை லைட் இதோ இது தான்
//அது சரி பந்த் அது இதுன்னு எது எதுக்கோ லீவு விடறாங்க. அட மாட்டுப் பொங்கலுக்குக் கூட லீவுதானே இவருக்காக விட்டா என்ன//

Anonymous said...

யக்கோவ், அவங்க எல்லாம் உங்ககிட்டதான படிச்சாங்க. பொய் சொல்லாம சொல்லுங்க

கிருஷ்ணா said...

Ithu ellame last week Varamalar bookle vanthathe. Yarum padikkalaia ?

Yakka . . . Neenga athai mention panniyirukkalam.

கண்மணி said...

சின்ன அம்மினி நம்மகிட்ட படிக்கிற பசங்கல்லாம் பொட்டிக்கடைதான் அவிங்க எங்கே இன்ஃபோஸிஸ் போய் லீவு லெட்ட்ர் எழுதறது..ம்ம்ம்ம்ம்

கண்மணி said...

குற்றாலக் குறவஞ்சி கிருஷ்னா தம்பி
நீங்க உடனடியா கண்டாக்டரை பார்த்தா நல்லது இல்லாட்டி ஆணி ஒழுங்க புடுங்க முடியாது.
நன்றி: தினமலர் வாரமலர் னு போட்டிருக்கேனே பாக்கலையா?

அபி அப்பா said...

டீச்சர் லெட்டர் படிச்சது தான் ஆனா உங்க கமெண்ட் புது சூப்பர்!:-))

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாரும் உங்களை மாதிரியே இருக்காங்க டீச்சர். :-D \\

தோழி....நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க.. ;-))

கோபிநாத் said...

\அஸ் மை மதர்-இன் -லா ஹேஸ் எக்ஸ்பையர்ட் அண்ட் ஐயாம் ஒன்லி ஒன் ரெஸ்பான்ஸிபிள் பார் இட்,பிளீஸ் கிராண்ட் மீ டென் டேஸ் லீவ்''

மாமியார் இறந்ததற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதால் ஒரு வாரம் லீவ் கேட்கிறார்.
[நிச்சயம் இது தானா வெளிப்பட்ட உண்மையாத்தான் இருக்கும்.வரதட்சணைக் கேட்டு படுத்தினாரோ என்னமோ.]\\\

இதுதான் அட்டகாசம் ;-))

கண்மணி said...

நாந்தான் சொல்லிட்டேனே இது சொந்த செலவில் சூனியம்

நானானி said...

கண்மணி! உங்க வகுப்புல ப்யூச்சரில்
யாரெல்லாம் இன்பொசிஸ்,டிசிஎஸ்,
எஹ்ச்சிஎல் எல்லாம் போகப்போகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு லீவு லெட்டர் எழுத தனி க்ளாஸே எடுக்கவும்.7வ்து லெட்டருக்கு உங்க கமெண்ட்....இல்ல எல்லா கமெண்ட்டும் சிரிப்பை வரவழைத்தது.
பாவங்க இங்கிலீஷ்!

லக்ஷ்மி said...

யக்கோவ், லெட்டரெல்லாம் ஏற்கனவே படிச்சதுதான்னாலும் உங்க கமென்ட் சூப்பரக்கா. கலக்குறீங்க.

Maha said...

//''சின்ஸ் ஐ ஹேவ் டு கோ டு மை வில்லேஜ் டு செல் மை லேன்ட் அலாங் வித் மை வொய்ப் ,பிளீஸ் சேங்ஷன் மீ ஒன் வீக் லீவ்''

என் நிலத்தை என் மனைவியுடன் விற்பதற்கு,கிராமத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் ஒரு வாரம் விடுமுறை தேவை.
[அடப் பாவி ஃபிரிட்ஜ் வாங்குனா ஸ்டேண்ட் ஃபிரீ மாதிரில்ல இருக்கு.]
///

ஏன் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதோ??? கீழ தமிழ்ல மொழி பெயர்த்திருக்கிங்க???அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)