PAGE LOAD TIME

ஓட்டைவாய் உலகநாதன்

ரகசியம்னா இன்னாங்க.ரெண்டுபேருக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்.
ஆனா பெரும்பாலூம் ஒரு வீட்டு ரகசியம் அந்த வீட்டு வேலைக்காரங்க மூலமும்
ஒரு ஆபிஸ் இரகசியம் அங்க வேலை செய்யற ஆபிஸ் பையன் மூலமோ வெளியப் போச்சின்னா அப்பால ஊருக்கே தெரிஞ்ச மாதிரிதான்.
பத்திரிக்கையை வாங்கினா பல பேரு மொதல்ல படிக்கிறதே அதில் வந்திருக்கும் கிசு கிசுதான்.
தமிழ்மணத்துல கூட இரவுக் கழுகார்னு ஒருத்தர் இருந்த ஞாபகம்.
சரி மேட்டருக்கு வர்ரேன்.
இங்கிட்டும் ஒரு ஓட்டைவாய் உலக நாதனைப் புடிச்சி வச்சிருக்கோம்.
அப்பப்ப ஏதாச்சும் நியூஸ் சொல்லுவான்.லேட்டஸ்ட் நியூஸ் என்னான்னா......

பாப்பா பேருல பிளாக் வச்சிருக்கும் அப்பா பதிவருக்கூ ஆபிஸ்ல வச்சாங்களாம் பெரிய ஆப்பு.
தமிழ்மணத்தையே திறக்க முடியாதபடி பிலாக் பண்ணிட்டாங்களாம்.யானை அக்காகிட்ட உதவி கேட்டப்ப கூகுள் ரீடர் பத்தி சொல்ல ஏதோ பதிவ மட்டும் படிக்கிறாராம்.பின்னூட்டம் போடக்கூட முடியலையாம்.பாவம் நொந்து போயிருக்கார்.

பாசக்கார குடும்பத்து மூத்த மணியான அம்மணி கொஞ்ச நாளா பிளாக் பக்கமே காணோம்.
கேட்டா ஆணி அதிகம் கை வலின்ன்னு பிலடப்பாம்.உலக நாதன் விசாரித்ததில் அம்மணியின் கண்ணாடி காணாமப் போச்சாம். பிளாக் போர்டையே தடவித் தடவி எழுதுறவர் எப்படி பதிவு எழுதுவாரு?

அத்தோட அம்மணி ஏக வருத்தத்தில் இருக்காராம்.நாலு நாள் முன்ன மெதுவா ஒரு பதிவப் போட்டாராம்.ஆனா 1/2 மணி நேரத்துல பாசக்கார குடும்பம் கும்மியடிச்சி பதிவை முன்னால இருந்து தூக்கிடுச்சாம்.ஒரு ரெண்டு நாளாவது சுத்தி வந்தாத்தானே மக்கபதிவு படிப்பாங்க.200,300 கும்மியடிச்சி 30 நிமிஷத்துல தூக்கினா இன்னா செய்யறதுன்னு ஒரே பீலிங்ஸாம்.


நாலு தபா படிச்சாலும் புரியாம 'லெஹர் பெப்ஸி' பையன் மாதிரி முடி சிலிர்க்கும் கதை கவிதை எழுதும் புலி கூட ஒரு வாக்குவாதம் ஆகிப் போயி சம்மந்தப் பட்டவங்க பேசாம இருக்க மத்தவங்க இத வச்சி காமெடி பண்ணி 'வண்டு' மாதிரி குடையராங்கலாம்.

முத்தான இன்னொரு பதிவருக்கு திடீருன்னு பதிவு போட மேட்டரில்லாம போயிடுச்சாம்.
கைவசம் இருந்த பெயிண்டிங்,தையல்,சமையல் எல்லாம் போட்டாச்சி.அடுத்து என்னான்னு யோசிச்சா ஒரே மெர்சலா யிருக்காம்.நமக்கு மட்டும் அப்படியா எல்லோருக்குமான்னு மணியான பதிவர்கிட்ட முத்தான பதிவர் கேட்க இங்கிட்டும் அதே கதைதான்னு புலம்பல்ஸாம்.

பதிவர் பட்டறையில் ஆப்டிகல் எலிக் குட்டி காணலைன்னு கமிஷனர் நாஞ்சில் குமரனை பொன்னான அக்கா பாத்து மனு குடுக்க,'அடப் போம்மா ஏதோ யானைக்கு வந்தது எலியோட போன மாதிரி உன் யானையைத் திருடாம உட்டாங்களேன்னு சந்தோஷப் படுன்னு' சொல்லியனுப்பினாராம்.

**ம்பன் எனும் பேரில் பதிவு போடும் பதிவர் காட்ல இப்ப மழையாம்.ஒரு நாளைக்கு மூனு,நாலு ன்னு போட்டுத் தாக்குகிறாராம்.யாரைப் பத்தியாவது ஒரே ஒரு 'நாட்' கிடைச்சாப் போதுமாம் அடுத்தப் பத்தாவது நிமிஷம் சுடச் சுட பதிவு ரெடியாம்.

டிஸ்கி: இப்போதைக்கு இது போதும். மறுபடியும் உலக நாதனை பாத்து பேசின பிறகு புது மேட்டரோடு வரேன்.

44 மறுமொழிகள்::

delphine said...

சான்ஸே இல்லா அம்மணி...
எல்லாவற்றிலும் வெழுத்து வாங்கிரீங்க..

Anonymous said...

:))

முத்துலெட்சுமி said...

ஆகாகா ..அசத்தல் போங்க...AIR இல்லாம கஷ்டம் தான்.

காட்டாறு said...

நமக்கும் கிசுகிசுக்கும் ராசியில்லை. ஏன்னா பத்திரிக்கையில வரும் கிசு கிசு ஒன்னு கூட புரிய மாட்டிக்குதுன்னு நெனச்சி வாசிக்காம விட்டுருவேன். ராசியில்லைன்னு நெனக்கிறதை உடைத்தெரிந்த கண்மணி அக்கவுக்கு இல்லை உலக நாதனுக்கு ஜே ஜே.

கலக்கல்ஸ்!

Anonymous said...

//பாசக்கார குடும்பத்து மூத்த மணியான அம்மணி கொஞ்ச நாளா பிளாக் பக்கமே காணோம்.//

சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிட்டீங்களா

கோபிநாத் said...

யக்கோவ்....எப்படிக்கா இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க :)

அட்டகாசமான பதிவு :)

கோபிநாத் said...

\\"ஓட்டைவாய் உலகநாதன்" \\

தலைப்பை பார்த்ததும் ஒரே சிரிப்பு தான் :)))))))

இம்சை said...

:) :) ரீப்பிட்டேய்....

அபி அப்பா said...

அந்த உலகநாதன் மட்டும் என்கிட்ட மாட்டினான் அப்புரம் இருக்கு அவனுக்கு! ராஸ்கோல் பிச்சுபிடுவேன் அவனை:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...
This comment has been removed by the author.
.:: மை ஃபிரண்ட் ::. said...

சூப்பர்... :-D

சிரிப்பான் said...

:))

வழிப்போக்கன் said...

பாசக்கார குடும்பத்து மூத்த மணியான அம்மணி பதிவுல 12 பின்னூட்டங்கள்தானா?

கூட்டத்தில் ஒருவன் said...

ஏத்திடுவோமா?

கூட்டத்தில் இன்னொருவன் said...

அதுக்குதானே நான் இருக்கேன்

வாத்தியார் said...

நாமெல்லாரும் போய் பதிவு படிச்சுட்டு வருவோம். வாங்க வாங்க

தத்துவ சீடன் said...

//ரகசியம்னா இன்னாங்க.ரெண்டுபேருக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம்.//

கண்மணி தத்துவம் 1

ஆணி பிடுங்குபவன் said...

//ஒரு ஆபிஸ் இரகசியம் அங்க வேலை செய்யற ஆபிஸ் பையன் மூலமோ வெளியப் போச்சின்னா அப்பால ஊருக்கே தெரிஞ்ச மாதிரிதான்.//

அடடா.. எங்க ஆபிஸ்ல ஆபிஸ் பாய் இல்லையே! அப்புறம் எப்படி ரகசியம் வெளியே போகும்?

ஓட்டைவாய் உகலநாதன் said...

அதுக்குதான் நான் இருக்கேனே

ஆணி புடுங்குபவன் said...

அப்ப சரி. அடுத்து என்ன?

அண்ணாச்சி said...

பதிவ படிங்கலே

பச்சை கொடி கட்சி கோவிந்தராஜு said...

//பத்திரிக்கையை வாங்கினா பல பேரு மொதல்ல படிக்கிறதே அதில் வந்திருக்கும் கிசு கிசுதான்.
//

அப்படின்னா, யாரும் என்னை பத்தி படிக்கிறதில்லையா??

ஊம் கொட்டுபவன் said...

//தமிழ்மணத்துல கூட இரவுக் கழுகார்னு ஒருத்தர் இருந்த ஞாபகம்.
சரி மேட்டருக்கு வர்ரேன்.
//

ஆமா. இருந்தாரு.

கண்ணாமூச்சி விளையாட்டு சேம்பியன் said...

//இங்கிட்டும் ஒரு ஓட்டைவாய் உலக நாதனைப் புடிச்சி வச்சிருக்கோம்.
//

ஹைய்யா.. அது யாருன்னு நான் கண்டுபுடுச்சிட்டேன். நான் கண்டுபுடுச்சிட்டேன்.

டைரக்டர் said...

//லேட்டஸ்ட் நியூஸ் என்னான்னா......
//

இந்த இடத்துல ஏ.ஆர். ரஹ்மானிடம் சொல்லி ஒரு மியூஜிக் போடணும்.

போட்டி அறிவிப்பாளர் said...

//பாப்பா பேருல பிளாக் வச்சிருக்கும் அப்பா //

கண்டுபுடிப்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் வழங்கப்படும் (கண்மணி டீச்சர் செலவில்)

பிஸியா ஆணி புடுங்குபவன் said...

//பதிவருக்கூ ஆபிஸ்ல வச்சாங்களாம் பெரிய ஆப்பு.
//

கடப்பாறைதானே?

அல்வா திருடன் said...

//தமிழ்மணத்தையே திறக்க முடியாதபடி //

திண்டுக்கல் பூட்டு பூட்டிட்டாங்களோ? என் கிட்ட சாவி இருக்கு

உங்களில் ஒருவன் said...

//பாசக்கார குடும்பத்து மூத்த மணியான அம்மணி கொஞ்ச நாளா பிளாக் பக்கமே காணோம்.//

ஆனா பதிவு மட்டும் கரெக்ட்டா போடுறாங்க.

சிரிப்பான் said...

//கேட்டா ஆணி அதிகம் கை வலின்ன்னு பிலடப்பாம்//

ஹீஹீஹீஹீ

கண்ணாடி விற்பவன் said...

//அம்மணியின் கண்ணாடி காணாமப் போச்சாம்//

கண்ணாடி வாங்கலையோ கண்ணாடி.. ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்.

குசும்பன் said...

யக்கா இது என்ன கிசு கிசு மாதிரி இருக்கு??? என்னை மாதிரி சின்னை பிள்ளைங்களுக்கு பிரியில!!!

:) ஆனா அந்த ஓட்டைவாய் உலகநாதன் மட்டும் யார் என்று பிரியிது:))))

மீண்டும் வந்திருக்கிறேன் said...

மீ ஸ்டார்டிங் தி கேம் அகேயின்.

நான் அவன் இல்லை said...

//ஆனா 1/2 மணி நேரத்துல பாசக்கார குடும்பம் கும்மியடிச்சி பதிவை முன்னால இருந்து தூக்கிடுச்சாம்.//

அவனா நீ????

உங்களில் ஒருவன் said...

//200,300 கும்மியடிச்சி 30 நிமிஷத்துல தூக்கினா இன்னா செய்யறதுன்னு ஒரே பீலிங்ஸாம்.
//

எல்லாம் உங்க மேலே உள்ள பாசம்தான்.

காட்டு ராஜா said...

//நாலு தபா படிச்சாலும் புரியாம 'லெஹர் பெப்ஸி' //

கண்டுபுடிச்சிட்டேன்.. கண்டுபுடுச்சிட்டேன்

தமிழ்மண சிட்டிசன் said...

//முத்தான இன்னொரு பதிவருக்கு திடீருன்னு பதிவு போட மேட்டரில்லாம போயிடுச்சாம்.//

ஆனாலும் சூப்பரா ஒரு பதிவு போட்டாங்களே. தொடர்ச்சியா அடுத்து ஒன்னு கூட போட்டாங்க.

பாசக்காரன் said...

இன்னும் மூனு இருக்கு. ஆனால் நீங்க சொன்னபடி தமிழ்மணத்துல உங்க போஸ்ட் முகப்பிலேயே இருக்கணும். அதனால இத்தோடு என் உரையை முடிச்சிக்கிறேன். 40 தாண்டுனதும் திரும்ப வாரேன்.

Anonymous said...

lollo lollu

சுல்தான் said...

//உலக நாதன் விசாரித்ததில் அம்மணியின் கண்ணாடி காணாமப் போச்சாம். பிளாக் போர்டையே தடவித் தடவி எழுதுறவர் எப்படி பதிவு எழுதுவாரு?//

ஆரு சொன்னது?. அம்மணி கிட்ட அஞ்சு நிமிடம் வார்ப்புரு கொடுத்ததுக்கு, படம் போட்டு கலக்கோ கலக்குண்ணு கலக்கி, என்னோட கண்ணே பட்டுடும் போலாக்கி கொடுத்துடுச்சி. அதுக்கா கண்ணுல கோளாறு!. என்ன?
நன்றி டீச்சரக்கோவ்!. நன்றி!!

குசும்பன் said...

சுல்தான் said...
"ஆரு சொன்னது?. அம்மணி கிட்ட அஞ்சு நிமிடம் வார்ப்புரு கொடுத்ததுக்கு, படம் போட்டு கலக்கோ கலக்குண்ணு கலக்கி, என்னோட கண்ணே பட்டுடும் போலாக்கி கொடுத்துடுச்சி. அதுக்கா கண்ணுல கோளாறு!. என்ன?
நன்றி டீச்சரக்கோவ்!. நன்றி!!"

உங்களுக்கும் அக்கா என்றால் நாங்க இனி பாட்டின்னு கூப்பிடனும் போல !!!!அவ்வ்வ்வ்வ்

சுல்தான் said...

43லாம் ஒரு வயசா. விட்டா தாத்தான்னு கூப்பிடுவீங்க போலிருக்கே.
நீங்கள்லாம் சொல்றீங்களேன்னு ஒரு ஆர்வக்கோளாறுல 'டீச்சரக்கா'ன்னுட்டேன்.
இனிமே டீச்சர் மட்டும்தான்.
விட்றுப்பா குசும்பு!.
நன்றி சொல்ற நேரத்துல கோச்சிகிறப் போறாங்க.

பொன்வண்டு said...

// ஆனா 1/2 மணி நேரத்துல பாசக்கார குடும்பம் கும்மியடிச்சி பதிவை முன்னால இருந்து தூக்கிடுச்சாம்.ஒரு ரெண்டு நாளாவது சுத்தி வந்தாத்தானே மக்கபதிவு படிப்பாங்க.200,300 கும்மியடிச்சி 30 நிமிஷத்துல தூக்கினா இன்னா செய்யறதுன்னு ஒரே பீலிங்ஸாம். //

உண்மைதாங்க .. ஒரு நாளில் 13 மணிநேரம் தமிழ்மணத்தில் வேலை பார்க்கும் எனக்கே இந்தப் பதிவு தெரியவில்லை. "தேடிப் போனவர்களும் ஓடிப் போனவர்களும்" பதிவினைப் படிக்கும் போதுதான் இங்கே வந்தேன். கண்டிச்சு வையுங்க பாசக்காரப் பயபுள்ளைங்கள .. :))

Anonymous said...

;))))))))))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)