PAGE LOAD TIME

ஆஹா...வந்துடுச்சி...[தலைப்பின் மறுபாதி டிஸ்கியில்]

உதிர்ந்து விழுவோம் என அஞ்சியிருந்தால்
பூக்கள் இதழ் விரிக்காமலே இருந்திருக்கக் கூடும்.
பிரிவோம் என நினைத்திருந்தால்
உன்னைப் பற்றிய நினைவுகள்
எனக்குள் வேர்விட்டிருக்காது
காதல் பூத்தும் இருக்காது
கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.
இந்த உலகை வெறுப்பதற்கு பல காரணங்கள்
இருந்தன எனக்கு
உன்னிடம் பேசும் வரை
பேசிய பிறகோ என்னையே வெறுத்துக் கொள்கிறேன்
காரணமே தெரியாமல்.
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.
கவனம் தப்பாத உன் பேச்சுக்களில்
எங்கேனும் காதல் ஒளிந்திருக்குமோ
எனப் பார்த்திருப்பதும்
மட்டறுக்கப் படும் உன் வார்த்தைகளில்
எனக்கான நேசம் தூவப் பட்டிருக்குமோ எனத்
தேடுவதுமே
என் வாடிக்கையாகிப் போகிறது
இலையுதிர் காலங்களுக்குப் பிறகு வசந்தம்
வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை

டிஸ்கி: ....எனக்கும் காதல் கவிதை

31 மறுமொழிகள்::

delphine said...

இலையுதிர் காலங்களுக்குப் பிறகு வசந்தம்
வந்துதானே ஆகவேண்டும்.
காத்திருக்கிறேன் வரும்வரை///
இதுதான் எனக்கு பிடிச்சதே கண்மணி.

கண்மணி said...

டாக்டரம்மா அப்ப மத்த வரியெல்லாம் பிடிக்கலையா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

delphine said...

கண்மணி...
நன்றி.

முத்துலெட்சுமி said...

எனக்கு பிடித்த வரிகளில் ஒன்றை போட்டிருக்கிறேன்...அப்பறம் மத்ததுன்னு க்கேக்கப்படாது ஆம்மாஆ சொல்லிட்டேன்..

//கொட்டியச் சிதறிய சருகுகள்
மக்கிச் சிதைந்து மரத்திற்கே உரமாவதுபோல
உன் சுணக்கமும்,ஒதுங்கல்களும் எனக்குள்ளே
புதைந்து என் கனவுகளுக்கு உரமிட்டு
உன் நினைவுகளை என்னுள் ஆழமாய்
வேறூன்றச் செய்கின்றன.//

காட்டாறு said...

எங்கே ஒளிச்சி வச்சிருந்தீங்க இந்த கவித் திறமையை..... வருகிறது உங்களைத் தேடி ஒரு பட்டம், கவிதாயினி என்று.

கண்மணி said...

முத்து சரியாச் சொன்னீங்க
அதைவிட அடுத்த வரிகள்தானெனக்குப் பிடித்தவ்வை

கண்மணி said...

கண்ணு காட்டாறு ஏற்கனவே ஒரு 100% ISI கவிதாயினி காயத்ரீ இருக்கா
எங்களுக்குள்ள பத்த வக்காத தாயீ
நானெல்லாம் கான மயிலாட கண்டிருந்த வான் கோழி ரகம்[அய்யோ காயத்ரி படிச்சா கோழிகாலு கேப்பா]

கண்மணி said...

முத்து நாம ரெண்டு பேரும் சயன்ஸ் னு ஒத்துக்கிறேன்.
நட்சத்திர வாரத்தில் மக்கின குப்பையை பத்தி அழகாச் சொன்ன உங்களுக்கு இந்த வரிகள் பிடித்ததில் ஆச்சரியமில்லை.

முத்துலெட்சுமி said...

கண்மணீஈஈஈஈ.... குப்பைக்கொட்டிட்டு இருக்கறதால வேற ஒன்னும் சொல்லவரலையோ... :)

காட்டாறு said...

100% மட்டும் இருந்து, கிட்ட (பக்கத்துல) கலப்படம் இல்லைன்னா அது நல்லதில்ல. அதனால பத்த வச்சிட்டேன்.

வவ்வால் said...

ஹி ..ஹி நான் எழுதின கவிதை தவிற மற்றதெல்லாம் எனக்கு மக்கி போன குப்பை மாதிரி தெரியுதே அது ... ஏன்...ஏன்?

என்ன இருந்தாலும் ஆண்கள் அளவு உணர்ச்சிகரமா பெண்களால் கவிதை எழுத முடியாது!

எனவே உங்கள் கவிதை ஒரு சிறுபாண்மை கவிதை ஆகிறது!
(இதைக்கண்டித்து ஒரு கவித கிவித எழுதிடாதிங்க நான் நாட்டு நடப்பை சொன்னேன்)

பாலராஜன்கீதா said...

மட்டறுக்கப் படும் - இதன் பொருள் என்னங்க ?
[ மீதிஎல்லாம் புரிந்துகொண்டாயிற்றா என்றெல்லாம் கேட்கக்கூடாது :-))) ]

Anonymous said...

You tooo

G3 said...

கவிதாயினியோட ஓவரா சேராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே :)

கோபிநாத் said...

யக்கோவ்...நானும் ஒரு பின்னூட்டம் போட்டுயிருக்கேன்

1 :)

அரை பிளேடு said...

இந்த கவிதை பார்டரில் பாஸாகி கவிதைக்கான அங்கீகாரம் பெறுகிறது. :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

இப்படி ஒவ்வொருத்தரா கெடுக்குறாங்களே இந்த கவிதாயினி!!!

அய்யோ பாவம் கண்மணி டீச்சர்.. அவங்களுக்கும் கவிதை எழுதுற சீக்கு வந்துடுச்சு.. :-(((

மங்கை said...

அதானே...நீ எழுது தங்கமே..நாங்க படிக்குறோம்..:-))

கண்மணி said...

வாங்க பாலராஜன் கீதா
தமிழ்மணத்துல இருந்துட்டு 'மட்டறுத்தல்' தெரியாதா?
நாம பாத்து பாத்து கமெண்ட் மாடெரேட் பண்ற மாதிரி காதலை வெளிக்காட்டாத வார்த்தைகள்னு சொன்னேன்

கண்மணி said...

வவ்வால் கவிதையில் மட்டுமல்ல,நகைச்சுவையிலும் பெண்களுக்குன்னு ஒரு 'தரம்' இருக்கு.நாங்க அதிலிருந்து இறங்க மாட்டோம்.
நீங்க '*றி' '*னி'அது இதுன்னு எழுதற மாதிரி இல்லாததால இது 'குப்பை' மாதிரி தான் தோனும்.
இதுக்காக நாங்க கவலைப் படலையே.
ஆமாம் என்னை வம்பிக்கிழுப்பதே உமக்கு வேலையா?
''தம்பிக்கு எந்த ஊரு?'

கண்மணி said...

@சின்ன அம்மினி ஹாஹாஹா மீ டூ

@G3 ஏல்லாம் ப பா ச தாக்கம்தான்

@மை பிரண்ட் நாங்களும் எழுதி உங்களைக் கொல்வோம்ல.

@ மங்கை நன்றி மங்கை நம்ம நால்வர் கூட்டணி இருக்கும் வரை நோ பிராப்ளம்.
யார் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்

கண்மணி said...

அரை பிளேடு எங்க உங்கள ரொம்ப நாளா கானோம்.நான் வந்த பிறகு உங்களுக்க்கு வேலையில்லாமப் போச்சா;)
ஆமாம் நீங்க அந்த பழைய அரை பிளேடா?புதுசா?

பாஸ் பெயில் பார்த்து வருவதில்லை கவிதை.
மனசுல தோனும் இங்க வந்து விழும்.[விஜய் ஸ்டைல்ல படிக்க]

குசும்பன் said...

யக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

வல்லிசிம்ஹன் said...

பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம்.
//
ithu uNmai.
nallaa irukku KaNmaNi.

Anonymous said...

ஆஹா இவுங்கல்லாம் கவுஜ எழுதக் கெலம்பிட்டாங்கய்ய்யா.........கெலம்பிட்டாங்க

கண்மணி said...

நன்றி வல்லியம்மா
உங்க வலைப்பதிவர் சந்திப்பு நிறைவாக இருந்தது.எங்களுக்கும் உங்களை சந்தீக்க ஆசை வந்துடிச்சே

காரூரன் said...

உங்கள் கவிதையை பார்த்த பின் தான், பிரகாஸ்ராஜிற்கு "மொழி" எடுக்கத்தோணிச்சோ!. வார்த்தைகளைவிட, விழி ஆயிரம் மொழி பேசும் போலும்.

Anonymous said...

kavithaiyumaa

are you a all rounder...

i believe, you are really a teacher

but try to write something abt. our society...

கண்மணி said...

welcome anony
iam a teacher and a real teacher who teaches to live and love.
are you new to blog?haven't u seen my posts on society,age,god and philosophy of life etc.
if time permits go thro......

மஞ்சூர் ராசா said...

ஆசிரியைக்கு வணக்கம்.

ஒரு சில கருத்துக்கள்:

எனக்குள் வேர்விட்டிருக்காது
போதும்
காதல் பூத்தும் இருக்காது தேவையில்லை

கொட்டிச்சிதறிய சருகுகள் (கொட்டிய சிதறிய எதற்கு?)

மட்டுறுத்தல் - மட்டறுத்தல் அல்ல

பிடித்த வரிகள்:
பேசும் உன் மொழிகளை விட பேசாத உன்
விழிகள் எனக்குள் எழுதும் கவிதைகள்
ஏராளம். (இதில் பேசும் உன் இதழ்களை விட என வந்திருக்கவேண்டும்)

பின்குறிப்பு: எத்தனையோ முறை இந்தப் பக்கம் எட்டிப்பார்த்தும் பின்னூட்டம் போட ஏனோ தோன்றவில்லை. இன்று எழுதவைத்துவிட்டீர்கள்.

இல்லை இல்லை உங்கள் கவிதை எழுதவைத்துவிட்டதோ... வாழ்த்துக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள். வார்த்தைகளை குறையுங்கள். மேலும் செதுக்குங்கள்.

http://groups.google.com/group/muththamiz

பாலராஜன்கீதா said...

//மஞ்சூர் ராசா said...
மட்டுறுத்தல் - மட்டறுத்தல் அல்ல //

நன்றி மஞ்சூர் ராசா :-)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)