PAGE LOAD TIME

தேடிப் போனவர்களும் ஓடிப் போனவர்களும்

வேக வேகமாக ஒரு உருவம் தலை தெறிக்க ஓடியது.

ஆள் நல்ல உயரம்.உயரத்திற்கேற்ற ஆஜானுபாகுவான உடல்.

ஓடிய வேகத்தில் மேல் மூச்சு வாங்கியது.
ஓடியதில் வியர்த்து சட்டை தொப்பலாக நனைந்திருந்தது.

இருட்டாக இருந்ததால் ஆள் யாரென்று தெரிய வில்லை.

திடீரென்று எதிரே வந்த யார் மீதோ மோத பார்த்தால்
ஒல்லியாக மெலிந்த தேகம் வெட வெடக்க
அந்த உருவமும் ஓடி வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு காரின் வெளிச்சம் மேலே விழ
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திடுக்கிட்டனர்.

'அடப்பாவி தம்பி நீயா?'

'ஆமாம் அபி அப்பா நீங்க ஏன் இப்படி ஓடறீங்க'?

' காலையிலிருந்து அவ என்னைத் துரத்துறா'

' இங்கேயுமா இவளும் என்னைத் துரத்துறா'

'இப்ப என்ன செய்யலாம்?'

'எந்தப் பக்கம் போனாலும் மாட்டுவோமே'

'கட்டாம விட மாட்டாளாம்.செத்தாலும் சாவேனே தவிர என் பாவனா கையால ராக்கி கட்டிக்க மாட்டேன்'

'நானும்தான் .இன்னைக்குப் பூரா தலை மறைவா இருக்கப் போறேன்.ஆனா தீபா வெங்கட் கிட்ட மாட்டி ராக்கி கட்டிக்க மாட்டேன்.'

'யோவ் அபி அப்பா இது உங்களுக்கே ஓவராத் தெரியலை.நானாவது கல்யாணம் ஆகாத சின்னப் பையன்.
நீங்க ரெண்டாவதும் பெத்துட்டீங்க.உங்களுக்கு யாரு ராக்கி கட்டுனா என்னா?'

'தம்பி தீபா வெங்கட் என் ஆதர்ச காதலி. கட்டிக்க முடியலைன்னாலும் மனசுலயும்,கனவுலயுமாவது நெனச்சிக்குவேன்.ராக்கி கட்டிட்டா தங்கச்சி ஆயிடுமே.அவ்வ்வ்வ்வ்' ன்னு அழுகிறார்.

'சரி சரி சத்தம் போட்டு காட்டிக் குடுக்காதீங்க.இந்தப் பக்கம் என்னை பாவனா துரத்துது.அந்தப் பக்கம் உங்களை தீபா துரத்துது.என்ன செய்யலாம்னு யோசிங்க'

கொஞ்சம் நேரம் கழித்து ,அபி அப்பா 'தம்பி எனக்கொரு யோசனை உனக்கு நான் மச்சான் எனக்கு நீ மச்சான் ஆயிடுவோம்' னு சொல்ல

'நீங்க நிதானமா பேசினாலே ஒன்னும் வெளங்காது.இப்ப பயத்துல உளறாதீங்க'

'இல்லை நான் பாவனா தங்கச்சி பக்கம் ஓடுறேன்.நீ தீபா அண்ணி பக்கமா ஓடு'

'இன்னாது அண்ணியா'

'பின்ன எனக்கு லவ்வர்னா உனக்கு அண்ணிதானே?
அவங்க ராக்கி கட்டினாலும் நாம தப்பிச்சிடலாம்.

பாவனாவுக்கு நான் அண்ணன்.தீபாவுக்கு நீ அண்ணன்'

'இப்ப உங்களைக் கொன்னுடுவேன்.கொஞ்ச முன்ன அண்ணி ன்னீங்க இப்ப எனக்கு தங்கச்சியா? கொழப்பறீங்களே நீங்க சொல்ற மாதிரி செஞ்சா சரிவராது'

'பின்ன பாவனா கையால ராக்கி கட்டிக் கிட்டு பாசமலர் போல நீடுழி வாழு.நான் தீபாகிட்டயிருந்து தப்பிக்கனும்' னு ஓட

'சரி அபி அப்பா நீங்க சொல்றபடி செய்வோம்.காலையில் எடுத்த ஓட்டம் இருட்டியும் தொடருது.எதாச்சும் செய்யனும்.மாத்தி ஓடிப் பார்ப்போம்.
நாம ஜெயிச்ச பின்ன நாளை கிடேசன் பார்க்ல பார்ட்டிதான்' னு தம்பி சொல்ல

இருவரும் வந்த திசை விட்டு எதிர் திசையில் ஓடுகின்றனர்.

மறுநாள் கிடேசன் பார்க்கில் இருவரும் சந்தித்தனர்.

அழுது அழுது இரண்டு பேர் முகமும் வீங்கியிருந்தது.

'ஒழுங்கா ஓடிக்கிட்டிருந்தேன்.ஐடியா குடுக்கிறேன்னு என்னைக் கவுத்திட்டீங்களே அபி அப்பா'

'நானும் இப்படி ஆகும்னு நெனைக்கலை தம்பி'

'நாம பிளான் பண்ண மாதிரியே அவளுங்களும் ஒன்னா சேர்ந்து பிளான் பண்ணி திசை மாத்தி ஓடி வந்து ராக்கிய கட்டி இப்படிக் கவுத்திட்டாங்களே.

ஆமாம் தம்பி நாம பேசி வச்சது அவிங்களுக்கு எப்படித் தெரிந்தது?'

'ஆமாம் இதுவும் உங்க வேலையாத்தான் இருக்கும்.

ஒரு ரகசியம் சொல்லவான்னு ஒவ்வொருத்தருக்கா சொல்லிச் சொல்லி ஊருக்கே நோட்டீஸடிச்சிருப்பீங்க எப்படியோ நல்லாயிருங்க.

'எண்ட பாவனா சேச்சி எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்'னு பாவனா கட்டிய ராக்கியோடு தம்பி அழுது கொண்டே போக

தீபா வெங்கட் கட்டிய ராக்கியையே அபி அப்பா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.


டிஸ்கி: பாசக்கார சகோதரர்கள் அனைவருக்கும்
இனிய
ரக்க்ஷா -----o0o------ பந்தன்

33 மறுமொழிகள்::

Anonymous said...

:)))))))))

தம்பி said...

எனக்கு யாரும் ராக்கி கட்ட முடியாது. முக்கியமா(முக்காவிடினும் அதே!) பாவனா.... சான்சே இல்ல.

டீச்சர் கெட்ட கனவு கண்டுட்டிங்க போலருக்கு. ஒரு டம்ளர் தண்ணி அடிச்சிட்டு தூங்குங்க. :)

மங்கை said...

இதுலெயும் அபி அப்பா சொதப்பிட்டாரா..பாவம் தம்பி..:-)

delphine said...

ஆஹா..கன்மணி..விடமாட்டீங்களா? அபி அப்பாவை..
hmm.
as usual அசத்திட்டீங்க!

குசும்பன் said...

இதுலெயும் அபி அப்பா சொதப்பிட்டாரா..:))))

டீச்சர் கெட்ட கனவு கண்டுட்டிங்க போலருக்கு. ஒரு டம்ளர் தண்ணி அடிச்சிட்டு தூங்குங்க. :)

thambi i will kill you:))))))

தருமி said...

ஆனாலும் ரொம்ப பாவமா இருக்கு - அபி அப்பா & தம்பி யைப் பார்த்தால் .. என்ன பண்றது ..இப்படி ஆளுகளையா(?) பக்கத்தில வச்சிருந்தாலே இப்படித்தான் ஆகும்.

காட்டாறு said...

சூப்பர்.... தம்பி பாடு திண்டாட்டமா இனி! ராக்கியப்போ ராங்கா ஒன்னும் நீங்க சொல்லலிங்களே. பாவம் அபி அப்பாவும், தம்பியும்.

சும்மா அதிருதுல said...

நல்ல வேலை நான் ஓடலை

தம்பி (மச்சான் )நல்லாயிருய்யா

சும்மா அதிருதுல said...

பாசகார பயல்வோ குசும்பனையும் காட்டி கொடுத்துட்டானுவோ..:)

சும்மா அதிருதுல said...

அய்யனார் வெய்ட்டிங்...

சீக்கிரம் அடர்கானக புலியை வர சொல்லவும் :)

சும்மா அதிருதுல said...

தம்பி said...
எனக்கு யாரும் ராக்கி கட்ட முடியாது. முக்கியமா(முக்காவிடினும் அதே!) பாவனா.... சான்சே இல்ல.

//

பாவணாவுக்கு உன்னால தாலி கட்டமுடியலை...

பாவனா ராக்கி கட்டிடுச்சி வெளிய சொல்லமுடியாமா புழுங்குற...

சும்மா அதிருதுல said...

கண்மணி டீச்சர் எப்போ அபி அப்பா மாதிரி ஆனிங்க

ஓட்ட வாயா...

:)

சும்மா அதிருதுல said...

தம்பி இப்ப ஒத்த கையுடன் தான் அலையிரீங்களாமே

உண்மையா...?

சும்மா அதிருதுல said...

டீச்சர் கெட்ட கனவு கண்டுட்டிங்க போலருக்கு. ஒரு டம்ளர் தண்ணி அடிச்சிட்டு தூங்குங்க. :)
//

இனிமே தண்ணிய அடிக்கவேண்டியது நீங்கதான் தம்பி :)

சும்மா அதிருதுல said...

போட்டோவில் கையை கட்டிகிட்டு நின்னா ராக்கி கட்டுனது எங்களுக்கு தெரியாதா...:)

சும்மா அதிருதுல said...

அபி அப்பா வயசான ஆளு அவரால ஜொள்ளு மட்டும் தான் விட முடியும்

அதனால ராங்கியை வாபஸ் வாங்கிடலாம் :)

தம்பி கொல வெறிகழகம் said...

இந்த பொண்னுங்களே இப்படிதான் தம்பி கூல்ல்ல்ல்

இராம் said...

/சும்மா அதிருதுல said...

நல்ல வேலை நான் ஓடலை

தம்பி (மச்சான் )நல்லாயிருய்யா //

ஏலேய் எலும்புக்கூடு,

யாருலே நீயி??? பாவனா'ன்னா கரெக்டா ஆஜரா ஆகிறே???? :-S

அப்புறம் கதிரு மச்சானுக்கு ரக்ஷபத்தன் வாழ்த்துக்கள்.... :)

Anonymous said...

பாவம் அபிஅப்பாவும், தம்பியும். இப்ப நமீதாவுக்கும் நயனதாராவுக்கும் மாறீட்டாங்களாமே

நமீதா said...

I love you Abiappa

Anonymous said...

HI சும்மா அதிருதுல seekarum poie
Doctor ketta kattu summa athuruthuna une uenvudampu weeka irruka pouthu da

அபி அப்பா said...

இல்ல இல்ல இல்ல நான் ஒத்துக்கமாட்டேன்! நான் ஒத்துக்க மாட்டேன்!

Anonymous said...

ayyo kanmani teacher - timly joke mma.. kelapireenka pongka

Anonymous said...

ennamma intha asatthu asatthireenka

pesama cinema pakkam vasanam elutha muyarchikalam

asathireengka ponga
________________
i forgot to write this in the last comment..baskar.. really super

கோபிநாத் said...

\\டிஸ்கி: பாசக்கார சகோதரர்கள் அனைவருக்கும்
இனிய
ரக்க்ஷா -----o0o------ பந்தன்\\

வாழ்த்துக்கள் அக்கா :)

10000000000000$ போதுமா? :))

குசும்பன் said...

அபி அப்பா said...
"இல்ல இல்ல இல்ல நான் ஒத்துக்கமாட்டேன்! நான் ஒத்துக்க மாட்டேன்! "

யாரு கேட்டா நீங்க ஒத்துக்கிட்டிங்களா இல்லையான்னு? முடிஞ்சது முடிஞ்சதுதான்!!!கதம் கதம்

வல்லிசிம்ஹன் said...

KaNmaNi ippadikkooda yosikka mudiyumaa.
top class!!!
aiyo paavam Thambiyum, Abiappaavum.

deepa venkat said...

@ abiappa.

i will tell my maamiyar and my second husband.

deepa venkat said...

@ abiappa.

i will tell my maamiyar and my second husband.

பாவனா said...

சேச்சி வளர சந்தோஷம்.நன்னாயிட்டு இருங்க.அந்த தம்பிகிட்ட இருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு நன்னி.

மின்னுது மின்னல் said...

"தேடிப் போனவர்களும் ஓடிப் போனவர்களும்"
/

மாட்டி கொண்டவர்களும்


மாட்டாத நாங்களும்

இந்த ஆபத்தான விளையாட்டுக்கு தடை விதிக்க இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் !!!!

mglrssr said...

@அபி அப்பா & தம்பி

Family யில பிராப்ளம்னா 'கோலங்கள்' பாரு
Brothers லே பிராப்ளம்னா 'ஆனந்தம்' பாரு
Husband - wife பிராப்ளம்னா 'கணவருக்காக' பாரு
நீ 'Love' பண்ற பொண்ணு பிராப்ளம்னா அவ தங்கச்சிய பாரு

மங்களூர் சிவா

நன்னி ஆ.விகடன்

Biby Cletus said...

hi there, i stumbled across your blog while randomly searching the blogosphere, nice one you have here, i also find the design to my liking. do keep up the good work.

warm regards from the other side of planet earth. i'll be back for more.

Deep Regards

Biby Cletus

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)