PAGE LOAD TIME

'காது கடி' கந்தசாமி

காது கடி கந்தசாமி

அட இதென்ன பேரு புதுசா இருக்கேன்னு பாக்கறீங்களா?
இந்த கந்த சாமி கிட்ட காதைக் கொடுத்துட்டோமின்னா நல்லாக் காதைக் கடித்து எல்லா கிசு கிசு மேட்டரும் சொல்லிடுவாரு.
இவரு நம்ம ஓட்டைவாய் உலகநாதனோட ஒன்னுவிட்ட சித்தப்பு வோட ரெண்டு விட்ட அக்காவோட மூணு விட்ட தம்பி.
என்ன உறவுன்னு புரிஞ்சிடுச்சா? இல்லையா?
அப்படின்னா ஆணி புடுங்கறத நிப்பாட்டிட்டு சுத்தியலை வச்சி மண்டைய ஒடச்சி கண்டுபுடிங்க ;)

அப்பா பதிவர்
இப்ப ரொம்ப பிஸி கம் குஷியில இருக்கார்.
அவரை அடுத்த மாசம் ‘மின்னும் வேலை’ க்கு கூப்பிட்டிருக்காங்களாம். இதை ரகசியம் யாருகிட்டயும் சொல்லாதீங்கன்னு எல்லாருக்கும் தனித்தனியா சொல்லிட்டாராம்.
இவரு மேட்டர் சொல்லாத ஒரே ஆளு அவரோட நியூ பார்ன் பேபி நட்ராஜ் மட்டும்தானாம்.சொன்னா அவருக்கு இன்னா பிரியப் போவுது சும்மா கெக்கே பிக்கேன்னு சிரிக்கப் போறார்னு சொல்லலையாம்.

கண்ணான அம்மணி பதிவருக்கு இப்ப திரும்பிய பக்கமெல்லாம் போர்க்கொடியாம். முன்ன மாதிரி பதிவு ஏன் போடலை?
அடிக்கடி ஏன் டெம்ப்லேட் மாத்தறீங்க ன்னு கண்டணக் குரல்.
அம்மணியும் புதுப் புது வீடு மாத்தி பாத்துட்டு இப்ப பழைய வீட்டுக்கே குடி வந்துட்டாங்களாம்.

ஸ்டெத்தாஸ்கோப் பதிவர் அம்மணி ஆணி அதிகமாயிருக்கு இனி பதிவெழுத போவதில்லைன்னு அறிக்கைவிட பாசக்கார குடும்பத்துகிட்டயிருந்து கொலை மிரட்டலாம்.ஏதோ அம்மணி மட்டும்தான் உருப்படியான பதிவு போட்றாங்க அதையும் நிறுத்திட்டா பாச குடும்பத்துக்கு நல்ல பேரு இருக்காதுன்னு
சொல்றாங்களாம்.

காணாமல் போனவங்க லிஸ்ட்ல ரொம்ப நாளா ஒரு சின்ன பிசாசைக் காணலைன்னு பாச குடும்பம் சொல்லுது.ஆணி அதிகமா இல்லை வேறு காரணமான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பூ.


இப்போதைக்கு கந்த சாமி நல்லாவே கடிச்சிட்டார்னு நெனைக்கிறேன்..அப்பால வாரேன்.

13 மறுமொழிகள்::

பொன்வண்டு said...

யப்பாடா ... இங்க நடக்கிற குழாயடிச் சண்டைக்கிடையில ஒரு ரிலீப் .. உங்க பதிவைப் படிச்ச உடனே !..

வழக்கம்போலத்தான் கலக்கிட்டீங்க ..

delphine said...
This comment has been removed by the author.
delphine said...

ஸ்டெத்தாஸ்கோப் பதிவர் அம்மணி ///
இது நானா கண்மணி?
thank you Kanmani, for the lighter moments..

வல்லிசிம்ஹன் said...

really truely good KaNmaNi.

ottaivaay Ulakanaathanaa:))))
keLvippatten.

கோபிநாத் said...

யக்கோவ் இந்த மாதிரி கிசு கிசு சொல்ல உங்களை விட்ட ஆளே இல்லைக்கா :)))

கோபிநாத் said...

யக்கோவ் காது கடி கந்தசாமி சூப்பர் பேருக்கா :)))

கண்மணி said...

@பொன்வண்டு தேங்க்ஸ்.
புரோபைல் படம் படம் சூப்பர்
@டெல்பின் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா
@வல்லியம்மா நன்றிம்மா இன்னும் 2 கிசுகிசு போட்டு நீக்கிட்டேன்.இப்பவே ஒரே அடிதடியா இருக்கே ;(

@ கோபி நன்றி தம்பி

Anonymous said...

SUPER

காட்டாறு said...

ஏனுங்க கண்மணியக்கோவ்... எங்க்யேயிந்து இட்டாறிங்க இந்த பேர்களை? காது கடி கந்தசாமி... சூப்பருங்கோவ்.

கண்மணி said...

நன்றி சின்ன அம்மினி

காட்டாறு உங்களுக்கும் ஏதாச்சும் பேரு வைக்கட்ட்டுமா;)

Anonymous said...

யம்மோ என் காத கடிக்க மாட்டாரே

தம்பி said...

கண்மணி

ஒன்னு சொல்றேன் தெரிஞ்சிக்கோங்க.

உங்கள பத்தி நீங்களே கிசு கிசு எழுத முடியாது. :) தன்னிலை விளக்கம்னு சொல்லுங்க.

வெளில இருந்து எதாச்சும் கிசு கிசு சொல்வீங்களா அதவிட்டுபுட்டு. உங்க நியூஸ போடறிங்க. :)

எனிவே இதுவும் நல்லாதான் இருக்கு.

கண்மணி said...

@தம்பி
ஆஹா வாங்கய்யா நக்கீரன் புலவரே
கிசு கிசுவா தன்னிலை விளக்கமா எதோ ஒரு மேட்டரு படிப்பீங்களா போவிங்களா?

ஆமாம் என்னைப் பத்தி சொல்ல யாருக்கு தில்லு விட்ருவோமா?

என்னைக் கோபிக்காதவங்கள பத்தித்தான் நான் பதிவும் கிசு கிசுவும் போடுவேன்.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)