PAGE LOAD TIME

பீம்பாய் கிளினிக்........

சதம் [100] அடித்துவிட்ட தம்பிக்கு இந்த பதிவு பரிசு
இன்னும் ரெண்டு நாளுல நாங்களும் 100 ஆயிடுவமில்லே;)

பீம்பாய் கிளினிக்

டாக்டர் பேரு வேறன்னாலும் ஆளு வாட்ட சாட்டமா இருப்பதால்
எல்லோரும் அவரை பீம் பாய் பீம் பாய்னு சொல்ல கிளினிக் பேரும் அப்படியே வைச்சாச்சு.

டாக்டரோட அஸிஸ்டெண்ட் கு.சுப்பன்.ஆனா கூப்பிட்டு கூப்பிட்டு நடுவுல இருக்கிற கேப்பு மறந்து குசுப்பன் னு சொல்லறாங்க.

டாக்டர் தினமும் காலையில நடிகை புவனா படத்தப் பாத்துட்டுத் தான் கிளினிக் வந்து ஈ ஓட்டுவாரு.

வாரத்துல 6 1/2 நாள் ஈ ஓட்டுனாலும் மிச்சம் அரை நாள்ல ஏதாச்சும் கேஸ் மாட்டும்.
இன்னிக்கு காலையில குசுப்பன் போன் பண்ணி ‘டாக்டர் டாக்டர் சீக்கிரம் வாங்க கிளினிக்ல கூட்டமாயிருக்கு’

‘குசுப்பா நல்லா பாத்தியா அது பக்கத்து கிள்னிக்கு வந்த கூட்டமாயிருக்கப் போவுது’
இல்லை டாக்டர் நம்ம கிளினிக்குத் தான் நீங்க சீக்கிரம் வாங்க’

டாக்டர் வந்த போது மூனு பேர் காத்துக் கொண்டிருந்தனர்.
‘யோவ் குசுப்பா என்ன கூட்டம்னே காணோம்’

‘ஈ ஓட்டுற எடத்துல மூனு பேர் வந்தா கூட்டம்தானே சார்’

உனக்கு ரொம்பத்தான் நக்கலு சரி சரி ஒவ்வொருத்தரா உள்ள அனுப்பு’

முதல் பேஷண்ட் வந்ததும்,

’உனக்கு என்ன பிரச்சினை’

‘ஒன்னுமில்லை சார் நான்...உங்களுக்கு....’

‘இதப்பாரு நானே உனக்கு என்ன வியாதின்னு பாக்கறேன் நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு.

நல்லா பசிக்கிதா?
தலை வலி இருக்கா?

‘சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’

குறுக்கப் பேசாதே பேஷண்ட்டுங்க ரொம்பப் பேசினா எனக்குப் பிடிக்காது.நல்லா தூக்கம் வருதா?

BP ,ஷுகர் பாக்கனும் பிளட் டெஸ்ட் எடுத்துக்க நம்ம லேபிலேயே’

‘ யோவ் நான் கூரியர் குடுக்க வந்தேன் எனக்கு ஆயிரத்தெட்டு டெஸ்டு சொல்றீங்க.நல்ல ஆஸுபத்திரிய்யா’ ன்னு கிளம்ப

அடுத்த பேஷண்ட் உள்ளே வந்தார்.

‘உங்களுக்கு என்னன்னு டாக்டர் கேட்க,

‘சார்...ரொம்ப வேகமா ஓடுது சார்..உடனே கவனிக்கனும்’

‘ஓ இதயத் துடிப்பு வேகமா இருக்கா அப்ப ஒரு ECG எடுக்கனும்.’

‘அதில்லை சார் அப்படியே விட்டா ஓவராயிடும்
மாத்திட்டாதான் சார் நல்லது’

‘அதான் நானும் சொல்றேன் ஆரம்பத்துலயே மாத்திட்டா பிரச்சினையில்லை ’

‘ மாத்தாட்டி உங்களுக்கு பில்லு அதிகமா வரும் சார்’

இருதய மாற்று ஆப்ரேஷன்னா உனக்கில்லயா பில்லு போடுவோம்
இதுவரைக்கும் நான் ஆப்புரேஷனே செஞ்சதில்லை.நீதான் பர்ஸ்ட் கேஸு.உனக்கு கன்ஸெஷன் தரேன்’

‘யோவ் டாக்டர் நான் எலக்ட்ரீஷியன் உங்க கிளினிக்ல மீட்டர் வேகமா ஓடுது மாத்தலாம்னு சொல்ல வந்தா படுக்க வச்சி கிழிச்சிடுவே போலயிருக்கே’ னு ஓடுகிறார்..

அதற்குள் கு.சுப்பன் வந்து ,’டாக்டர் 6 ம் நெம்பர் பேஷண்டும் 100ம் நெம்பர் பேஷண்டும் அவுட்டு.’
‘ஆஹா இதைத்தான் 6 லும் சாவு 100 லும் சாவுன்னாங்களோ
சரி சரி அடுத்த ஆளை அனுப்பு.’

மூனாவது ஆள் வருகிறார்.

‘யோவ் மொதல்ல நீ பேஷண்ட்டா சொல்லு’

‘என்ன டாக்டர் இப்படி கேக்கறீங்க'.

வர்ரவனெல்லாம் எலெக்ட்ரீஷியனும் கூரியர் சர்வீஸுமாவே இருக்கான்’

எனக்கு உடம்புல ஏகப்பட்ட வியாதி.எப்படியாவது சரி பண்ணுங்க என் சொத்து முழுக்க செலவு பண்றேன்’

டாக்டர் டெஸ்ட் பண்ணுகிறார்.
‘ஆமாம் என்னய்யா ஹார்ட் பீட்டே கேக்கலை’

‘டாக்டர் மொதல்ல ஸ்டெதாஸ்கோப்பை காதுல மாட்டுங்க.’

குசுப்பன் வந்து ‘டாக்டர் ரெண்டு மாசமா AC கடைக்கு டியூ கட்டலை 7000 பில்லு வந்திருக்கு.’

‘ஓகே இந்த ஆளுக்கு இம்மீடியட்டா ஒரு ஆப்புரேஷன் பண்ணிடுவோம் பில்லு 7000 போட்டு ரெடி பண்ணிடு’

பேஷண்ட்,’சார் ஆப்ரேஷானா?எங்க பண்ணுவீங்க’

‘உனக்கு எங்க இஷ்டமாயிருக்கோ சொல்லு அங்கேயே பண்ணிடுவோம்.

இல்லைனா எங்க வழக்கப் படி சீட்டு குலுக்கிப் போட்டுப் பாத்து பண்ணுவோம்’

‘அடப் பாவிங்களா நீங்க நெசமாவே டாக்டர் தானா?என்னா வியாதின்னு பாக்காம பணம் வேனும்னா உடனே ஆப்புரேஷனா?’

குசுப்பன்,’டாக்டர் இவனுக்கு நம்ம ரகசியம் தெரிஞ்சிடுச்சி.நீங்க +2 படிச்ச டாக்டருன்னு கண்டுபுடிச்சிட்டான்’ னு பதற

‘அடங் கொய்யாலே நான் சும்மா கேட்டா நீங்க நெசமாவே +2 டாக்டரா’ ன்னு வந்தவர் ஓட,

அடுத்து யாராவது மாட்டுவாங்களான்னு டாக்டரும் குசுப்பனும் வெயிட்டிங்.

ஆமா மக்கா யாருக்காச்சும் ஒடம்பு சொகமில்லையா?
பீம்பாய் கிளினிக் போங்க நல்ல +2 படிச்ச கைராசி டாக்டர்;)


14 மறுமொழிகள்::

Anonymous said...

ஆஹ்ஹா...:)))))))))))

delphine said...

+2 படிச்சுட்டு டாக்டர் பட்டமா? கண்மணி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்.

Anonymous said...

சீக்கிரம் 100 போட வாழ்த்துக்கள். வாழ்த்த முந்திக்கணுமல்ல

பாலராஜன்கீதா said...

செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் 167ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தி:
=====================================
குட்டீஸ் ஜங்க்ஷன்
www.arumbugal.blogspot.com

குழந்தை விளையாட்டுகள், புதிர், ஜாலியான குட்டிக் கதைகள், எளிமையான கட்டுரைகள், குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் என மலரும் மொட்டுகளுக்கான வலைப்பூ (blog). டெல்லி பள்ளி மாணவி அவந்திகாவும், அவரது நண்பர் கண்மணியும் இணைந்து நடத்தும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்குக் குழந்தைகள் எழுதும் 'கமென்ட்'டுகள் அத்தனை சுவாரஸ்யம்!
====================================

அவந்திகா மற்றும் கண்மணி அவர்களுக்கு வாழ்த்துகள்

கோபிநாத் said...

யக்கோவ்..ஆட்டம் கலைகட்ட ஆரம்பிச்சிடுச்சின்னு நினைக்குறேன் :))

கலக்குங்க :)

கோபிநாத் said...

\\பேஷண்ட்,’சார் ஆப்ரேஷானா?எங்க பண்ணுவீங்க’

‘உனக்கு எங்க இஷ்டமாயிருக்கோ சொல்லு அங்கேயே பண்ணிடுவோம்.\\

சூப்பர் காமெடி :-))))))))))

கண்மணி said...

நன்றி டெல்பின் மேடம்

நன்றி சின்ன அம்மினி

கண்மணி said...

மிக்க நன்றி பாலராஜன் சார்.
உங்க பின்னூட்டம் பாத்த பிறகுதான் ஆனந்தவிகடன் பார்த்தேன்.

கண்மணி said...

கோபி உங்க பழைய அக்காதானா?;)

Navin said...

எப்படிங்க 100 Blog எழுதினீங்க அதுவும் தழிழ்ல ஏதாவது technic இருக்கா

Navin said...

எப்படிங்க 100 Blog எழுதினீங்க அதுவும் தழிழ்ல ஏதாவது technic இருக்கா

தம்பி said...

உங்கள் அன்புக்கு நன்றி.

10 ஆம்கிளாஸ் ஸ்டூடண்ட் said...

ஏனுங்ணா என்னையும் சேத்துக்கங்னா எனக்கும் ஆப்புரஷன் பண்ண ஆசைங்க்னா

Anonymous said...

Thambi + Kusumbar nalla combination..

naan sirithathai paarthu my friend
ippadiye sirithukitiru...unn room ikku vaaravan unnai paarthu keelpak
anuppa Officer kitta recommend pannee file poda poraa..paar... appadinu solra.. eppadi sireethiruppen entu paarunka..ungka comedy yai padithu.. nalla comedy panreenga teacher.. ippathaan ungka kavithai padithen...

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)