PAGE LOAD TIME

சினிமாவின் தாக்கத்தால் பாதிப்பு பெண்களுக்கா ஆண்களுக்கா? வலையுலகப் பட்டிமன்றம் ---பகுதி 1

வாங்க வாங்க கன ஜோரா களை கட்டியிருக்கு பட்டிமன்ற விவாதம்.
சைடுல தூக்கி வாரி முடிஞ்ச கொண்டையும் மயில் கண் கரை வச்ச பட்டு வேஷ்டியும் உடம்பு நிறைய அப்புன சந்தனமுமா சும்மா ‘நாட்டாமை ‘ விஜயகுமார் ரேஞ்சில் நம்ம 'தல' தருமி சார் உட்கார்ந்திருக்கார்.

முன்னால எதிர் சீட்டுல தருமி சாரோட ரங்கமணி தருமி சார் கெட்டப்ப பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு உட்கார்ந்திருக்காங்க.அப்ப கண்மணி ஒரு வெள்ளி சொம்பக் கொண்டுவந்து நாட்டாமை பக்கத்துல வைக்க’’தேங்க்ஸ் கண்மணி ‘தல’ யா இருக்க சம்மதித்ததுக்கு எனக்கு வெள்ளி சொம்பு பரிசா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ னு சொல்ல

‘சார் ரொம்ப ஆசைப் படாதீங்க ஏதோ வீடியோ கவரேஜ்லாம் இருக்கே ஒரு கெட்டப்பா இருக்கட்டுமேன்னு வச்சிருக்கேன் .முடிந்ததும் எடுத்துட்டுப் போயிடுவேன்.’ என்ற கண்மணீஎதுக்கும் உஷாரா பக்கத்துல கோபியை உட்காரச் சொல்லிட்டு’’கோபி இந்த சொம்பு மேல ஒரு கண்ணு வச்சிக்க ‘ ன்னாங்க

‘யெக்கா நான் பட்டிமன்றத்துல பேசாட்டிக் கூட பரவாயில்லை சொம்ப பாத்துக்கிறேன்’வீடியோகாரர் எல்லோரையும் புடிக்கும்போதுகூட கோபி சொம்பையே பார்க்க ‘சார் கொஞ்சம் முகத்தக் காட்டுங்க’ ன்ன போதும்‘யோவ் என் முகம் விடியோவில தெரியாட்டியும் பரவாயில்ல எங்க அக்கா சொன்ன வாக்கை காப்பாத்தனும்னு முதுகாட்டி சொம்பையே பார்த்திக் கொண்டிருக்கிறார் பாருங்க.

ஓகே மக்கள்ஸ் ஆரம்பிச்சாச்சு நம்ம நடுவர் நாலு கொழுக்கட்டையை வாயில அமுக்கியபடியே பேசறாரு கவனியுங்க

நடுவர்:மக்கள்ஸ்இங்க இந்தப் பட்டி மண்டபத்துக்கு ..ச்சே..பட்டி மன்றத்துக்கு (தருமின்னு பேரு வச்சிக்கிட்டாலும் வச்சிக்கிட்டேன்.. இப்படி எப்ப பார்த்தாலும் மண்டபம் ஞாபகம் தான் வருது !) வந்திருக்கிற பெருமக்கள்ஸ் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நம்ம பா.கு. (பாசக்காரக் குடும்பம்) சார்பாக நடத்தப் படும் இந்த சிந்தனையைத் தூண்டும் பட்டி மன்றத்துக்கு நடுவராக என்னை மாட்டி உட்ட பெரிய மனசுக்காரங்களுக்கு நன்றி.நம்ம தமிழ்ச்சமுதாயத்தோடு ஒட்டி உறவாடும் ஒரு பெரிய விஷயம் சினிமாதான். இது நாளுக்கு நாள் கூடிக்கிட்டேதான் போகுது அப்டிங்கிறதை நமக்கு இருந்த, இருக்கிற , இன்னும் வரப்போறேன்னு பயங்காட்டிக்கிட்டு இருக்கிற – கடந்த கால, நிகழ்கால, எதிர்கால முதலமைச்சர்களின் (?!) பட்டியலைப் பார்த்தாலே தெரியும். மலரும் மணமும் போல அப்டின்னு சொல்றதா, பன்றியும் சகதியும் போல அப்டின்னு சொல்றதா (ஆஹா! இதுவே அடுத்த பட்டிமன்ற தலைப்பா வச்சுக்கலாமோ?) தமிழ்க் குடிமக்களும் சினிமாவும் ஒன்றரக் கலந்து விட்டோம். சேர்ந்தே இருப்பது, பிரிக்கவே முடியாதது அப்டின்னு தருமி கேட்க, சிவபெருமானே பதில் சொல்றதுன்னா, தமிழனையும், தமிழ் சினிமாவையும் தான் நியாயமா சொல்லணும். அப்படி ஒன்றிப் போய்ட்டோம் நாம எல்லோரும். எல்லோருமே ஒன்றிப் போய்ட்டாலும் ரொம்பவே ஒன்றி, ஒட்டிப் போனது ஆண்களா, பெண்களா அப்டின்றதுதான் நம்முடைய இன்றைய தலைப்பு.
வழக்கம்போல ஒட்டி, வெட்டிப் பேச நம்ம பா.கு. மக்கள்ஸ் வரப் போறாங்க ஒவ்வொருத்தரா. மொதல்ல வரப் போறது ஜெஸிலா. ரொம்ப சூடா ஆண்களை உண்டு இல்லைன்னு பார்க்கிறதுக்கு கங்கணம் கட்டிக்கிட்டு வந்திருக்காங்க. வாங்க ஜெஸிலா

ஜெஸிலா:

இன்றைய காலகட்டத்துல சினிமான்னாலே பாதிப்புதான் இதுல ஆண்- பெண் அப்படின்னு பேதமே கிடையாது. ஆனா அதிகம் பாதிக்கப்படுவது யாருன்னு கேட்டா கண்ணை மூடிக்கிட்டு ஆண்களே 'நாங்கதான்'னு ஒத்துக்குவாங்க.திரைத்துறையில எல்லாப் பிரிவுகளையும் சதவீத அடிப்படையில எடுத்துக்கிட்டா பெண்களுக்கு இடஒதுக்கீடே தராம எல்லா பிரிவுகளிலுமே ஆக்கிரமிச்சு உட்கார்ந்திருக்கிறது யாரு? சின்ன வயசுலிருந்தே ஏதாவது ஒரு வகையில திரைத்துறையோட தொடர்புப்படுத்தி வேலை பார்க்கணும்னு ஆவல அதிகமா வச்சிருக்கிறது யாரு? சினி இன்ஸ்ட்டிடியூட்ல படிக்கிறது அதிக அளவில் ஆண்களா பெண்களா? ரசிகர் மன்றம்னு குடும்பத்த விட்டுட்டு சோறு தண்ணியில்லாம உட்கார்ந்து கிடக்குறது ஆண்களா பெண்களா? இந்த கேள்விகள்லேயே உங்களுக்கு புரிஞ்சிருக்குமே சினிமா மோகமும் தாக்கமும் அதிகம் பாதிக்கிறது ஆண்களைத்தான்னு.சினிமால வர கதாநாயகனின் ஆடைகளையும், சிகையலங்காரங்களையும், 'ஸ்டைல்'களையும் பார்த்து அதன்படி நடக்கத் துடிப்பதும், தன்னையே ஒரு ஹீரோவா நினைச்சுக்கிட்டு கண் மூடித்தனமான செயலில் ஈடுபடுவதும் ஆண்கள்தானே?டைட்டானிக் படம் வந்த புதுசுல பார்த்தா ஆளாளுக்கு அந்தக் கதாநாயகன் மாதிரி முடியை வைத்தார்கள், ஆளவந்தான் படம் வரும் போது கமல் மாதிரி முடியை எடுத்தார்கள். சமீபத்துல chewing gumன் விற்பனை அதிகரித்துள்ளதாம் ஏன் தெரியுமா? எல்லாம் 'சிவாஜி' பண்ற வேல. ரஜினி மாதிரியே 'ஸ்டைலா'chewing gumஐ வாயில போடப் பழகவே பாக்கெட் பாக்கெட்டாக வாங்கித் தள்ளுகிறார்களாம் வாலிபர்கள்.வாலிபர்கள் மட்டுமா? திருமணமான வயது முதிர்ந்த ஆண்களும்தான். இப்படித்தான் கணவனும் மனைவியும் ஒரு படத்திற்குப் போயிருக்காங்க. படம் பார்த்துக்கிட்டே இருக்கும் போது மனைவி சொல்லியிருக்கா அந்த ஆளு படத்தை பார்க்காம என்னையே பார்க்கிறான்னு. உடனே கணவன் பொங்கி எழுந்து 'எவண்டா அந்த இரசனை கெட்டவன், இவ்வளவு பெரிய திரைல அழகா வர பாவ்னாவையும், நமிதாவையும் ரசிக்காம இவளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறவன்'னு சொல்லியிருக்காரு. அந்த மாதிரி கட்டுன பொண்டாட்டியை விட திரையுலக கன்னிகைங்கதான் அழகா தெரியுறாங்க இந்த ஆண்களுக்குன்னு சொன்னா மிகையில்லதானே?எத்தனையோ கொள்ளை, கொலையெல்லாம் சினிமாவை பார்த்து கத்துக் கிட்டு திருடுறதும், வன்முறையில இறங்குறதும் நாம தினமும் பத்திரிகையில வாசிக்கத்தானே செய்றோம்? 100வது நாள் படம் பார்த்துதான் அதே மாதிரி கொலை செஞ்சேன்னு ஒருத்தர் வாக்குமூலம் தந்ததை நாம மறக்க முடியுமா? இப்ப தான் சினிமால வன்முறை, கொலை, கொள்ளை, முதலிரவு, கற்பழிப்புன்னு அவங்களுக்கு தேவையான எல்லாத்தையுமே விலாவாரியா காட்டுறாங்க. தரமான படங்கள் வந்தாலும் எங்க ஓடுது? ஓடிச்சுன்னா அதற்குக் காரணம் தாய்குலங்கள்தான்னு அடிச்சு சொல்லலாம். அழுமூஞ்சி சீரியலை ரசிக்கும் தாய்மார்கள்தான் குடும்பப் பாங்கான படங்களை ரசிக்கிறாங்கன்னு ஒரு 'டிரேட் மார்க்' வச்சிட்டாங்க. எல்லாப் படத்திலும் ஒரு கவர்ச்சி ஆட்டமிருக்கும் அதை யாருக்காக வைக்கிறாங்க? பெண்களுக்காகவா? ம்ஹும் இந்த ஆண்கள் ஜொள்ளுவிட்டு பார்த்து ஒரு பத்து நாளாவது படத்தை ஓட்டத்தான். அதனால ஆண்களுக்குப் பிடிக்கிற மாதிரிதானே படத்தையே அமைக்கிறாங்க. படத்தைப் பார்த்து அதுல வர வசனத்தை மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காதலிக்கிட்ட ஒப்பிக்கிறாங்க. இப்படித்தான் ஒரு காதலன் காதலியைப் பார்த்து அது இதுன்னு நிறைய பட வசனம் சொல்லியிருக்கான், அப்படியே ஏமாந்து வலையில் விழுந்து காதலித்து கல்யாணம் வரை போயிடுச்சாம். அப்புறம் 'வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்னு பாடிக்கிட்டு இருந்திருக்காங்க' அப்ப மனைவி கேட்டிருக்கா 'ஏங்க காதலிக்கும் போது நான் உலக அழகின்னு சொன்னீங்களே'ன்னு அதற்கு கணவன் சொல்லிருக்கான் 'அப்ப நான் உலகம் தெரியாமல் இருந்துட்டேம்மா'ன்னு இப்படித்தாங்க படங்களை பார்த்த தாக்கத்தில் ஏற்படும் காதல் நிலைக்காமல் நிலைக்குலைந்து போகுது. இப்பல்லாம் கவிதை புஸ்தகம் விற்பனையே குறைந்து போச்சாம் காரணம் திரைப்பட பாடலை வைத்தே காதலியை ஒப்பேத்திடுறாங்களாம். அதனால அதிகமென்ன அதிகம் ரொம்ப ரொம்ப ரொம்ப சினிமாவால பாதிக்கப்படுறது/ பட்டது எல்லாமே ஆண்களேன்னு சொல்றேன்.

( நடுவர்:
அவரு உண்மையைத் தானே சொல்லியிருக்காரு .. ! ;))
எத்தனையோ கொள்ளை, கொலையெல்லாம் சினிமாவை பார்த்து கத்துக் கிட்டு திருடுறதும், வன்முறையில இறங்குறதும் நாம தினமும் பத்திரிகையில வாசிக்கத்தானே செய்றோம்? 100வது நாள் படம் பார்த்துதான் அதே மாதிரி கொலை செஞ்சேன்னு ஒருத்தர் வாக்குமூலம் தந்ததை நாம மறக்க முடியுமா? இப்ப தான் சினிமால வன்முறை, கொலை, கொள்ளை, முதலிரவு, கற்பழிப்புன்னு அவங்களுக்கு தேவையான எல்லாத்தையுமே விலாவாரியா காட்டுறாங்க. தரமான படங்கள் வந்தாலும் எங்க ஓடுது? ஓடிச்சுன்னா அதற்குக் காரணம் தாய்குலங்கள்தான்னு அடிச்சு சொல்லலாம். அழுமூஞ்சி சீரியலை ரசிக்கும் தாய்மார்கள்தான் குடும்பப் பாங்கான படங்களை ரசிக்கிறாங்கன்னு ஒரு 'டிரேட் மார்க்' வச்சிட்டாங்க. எல்லாப் படத்திலும் ஒரு கவர்ச்சி ஆட்டமிருக்கும் அதை யாருக்காக வைக்கிறாங்க? பெண்களுக்காகவா? ம்ஹும் இந்த ஆண்கள் ஜொள்ளுவிட்டு பார்த்து ஒரு பத்து நாளாவது படத்தை ஓட்டத்தான். அதனால ஆண்களுக்குப் பிடிக்கிற மாதிரிதானே படத்தையே அமைக்கிறாங்க. படத்தைப் பார்த்து அதுல வர வசனத்தை மனப்பாடம் செஞ்சிக்கிட்டு காதலிக்கிட்ட ஒப்பிக்கிறாங்க. இப்படித்தான் ஒரு காதலன் காதலியைப் பார்த்து அது இதுன்னு நிறைய பட வசனம் சொல்லியிருக்கான், அப்படியே ஏமாந்து வலையில் விழுந்து காதலித்து கல்யாணம் வரை போயிடுச்சாம். அப்புறம் 'வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்னு பாடிக்கிட்டு இருந்திருக்காங்க' அப்ப மனைவி கேட்டிருக்கா 'ஏங்க காதலிக்கும் போது நான் உலக அழகின்னு சொன்னீங்களே'ன்னு அதற்கு கணவன் சொல்லிருக்கான் 'அப்ப நான் உலகம் தெரியாமல் இருந்துட்டேம்மா'ன்னு இப்படித்தாங்க படங்களை பார்த்த தாக்கத்தில் ஏற்படும் காதல் நிலைக்காமல் நிலைக்குலைந்து போகுது. இப்பல்லாம் கவிதை புஸ்தகம் விற்பனையே குறைந்து போச்சாம் காரணம் திரைப்பட பாடலை வைத்தே காதலியை ஒப்பேத்திடுறாங்களாம்.அதனால அதிகமென்ன அதிகம் ரொம்ப ரொம்ப ரொம்ப சினிமாவால பாதிக்கப்படுறது/ பட்டது எல்லாமே ஆண்களேன்னு சொல்றேன்.
நடுவர்: ஜெஸிலா நினச்சது மாதிரியே காட்டமா பேசியிருக்காங்க. அதில இருந்து ஒண்ணு ரெண்டு பாய்ண்ட் மட்டும் எடுத்துக்குவோமா?மொதல்ல சொன்னமாதிரி எல்லா துறையிலும் இருக்கிறது மாதிரி இங்கேயும் சினிமாத் துறையிலும், அதன்பிறகு அவங்க சொன்ன ஸ்டைல்களைக் காப்பி அடிக்கிறது இதுகளையெல்லாம் நான் முக்கியமா எடுத்துக்கலை. ஏன்னா, இது ஆணாதிக்க சமூகம். ஒரு பையன் சினிமா ஹீரோ மாதிரி ட்ரஸ் போட்டா அப்பா, அம்மாவே ரசிப்பாங்க, அனுமதிப்பாங்க. பெத்த பொண்ணு கேட்டா நம்ம வீடுகள்ல உடுவோமா .. அதனால அது பெரிய பாய்ண்டா எடுத்துக்க முடியலை. அதே மாதிரி அந்த சினிமாவைப் பார்த்துதான் இப்படியெல்லாம் பண்ணினேன் அப்டின்னு ஒரு தறுதலை சொல்றதையும் ஒரு freak case அப்டின்னுதான் சொல்லணும்.ஆனா ஒண்ணு சொல்லியிருக்காங்க .. ஏன் படத்துக்குப் படம் குத்துப் பாட்டு இருக்குன்னு. ஆம்பிளைகளை மனசில வச்சுதான் இந்தப் பாட்டு எல்லாம் இருக்கு அப்டின்னா யாரால படம் ஓடும் அப்டின்னு ஒரு கேள்வி கேட்டிருக்காங்க, நல்ல கேள்வி தான்.ஆனா ஒண்ணு .. இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவங்க அதோடு ஒரு படம் ஒடுச்சின்னா அது தாய்க்குலத்தினால்தான் அப்டின்னும் ஒரு பாய்ண்டு வச்சிட்டாங்க. இது ரெண்டும் கொஞ்சம் self contradictory-ஆகத் தெரியுது.சரி..அடுத்து வரப்போறது கோபிநாத். ஜெஸிலாவுக்குப் பதில் சொல்லுவார்னு நினைக்கிறேன். வாங்க கோபி …

கோபிநாத்:

எதிர் அணியில் அக்கா ஜெஸிலா அவர்கள் பாதிப்பில் ஆண்-பெண் என்ற பேதமே இல்லைன்னு முதலிலேயே சொல்லிட்டாங்க. எந்ததெந்த விஷயங்களில் பாதிப்பு அதிகம் இருக்குதோ அந்த மாதிரி விஷயங்களில் ஆண்களை வச்சித்தான் சோதனை செய்யுறாங்க அதனால தான் ஆண்களுக்கு பாதிப்பு கொஞ்சம் அதிகம்.இன்றைய காலகட்டத்துல சினிமா துறையை பொறுத்தவரைக்கும் ஆண்களும் பெண்களும் சரிக்கு சமமாகத்தான் இருக்காங்க. எத்தனையோ பெணகள் சிம்ரன் மாதிரி ஆகணும், த்ரிஷா மாதிரி ஆகணும், குஷ்புக்கு கோயில் கட்டுனது போல தனக்கும் கோயில் காட்டனும்ன்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்த பல பெண்கள் இன்னும் ஊருக்கு திரும்பி போக முடியமால் இருக்காங்க. சினிமாதுறையில் படிப்பை பொறுத்த வரைக்கும் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்காங்க. பாடல் எழுதுவதிலும் சரி, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங்க போன்ற பல துறைகளில் பெண்கள் இருக்காங்க. visual media படிப்பை நிறைய பெண்கள் படிக்கிறாங்க. இன்றைய இயக்குனர்கள் ஆன சுகாசினி, ப்ரியா, ரேவதி, மீரா நாயர், அபர்னா சென், தீபா மேத்தா போன்றவர்கள் எல்லாம் சினிமாவின பாதிப்பு இல்லாமலா இந்த துறையில் வென்றார்கள்?? இதுல மீரா நாயர் ஆங்கில படம் எல்லாம் எடுத்து ஆஸ்காருக்கு கூட போயிருக்காங்க. சிவாஜி திரைப்படத்திற்கு எத்தனை கல்லூரி பெண்கள் கூட்டம் கூட்டமா கல்லூரியை கட் அடிச்சிட்டு பார்த்திருக்காங்க. திரையில் ஹுரோ வரும் போது விசில் அடித்து ஆரவாரம் செய்வதில் பெண்களும் உண்டு. எத்தனை பெண்கள் நதியா கொண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. நதியாகூட நடிக்கும் போது மட்டும் தான் கொண்டை போட்டாங்க ஆனா நம்ம பெண்கள் தூங்கும் போது கூட கொண்டையை அவிழ்க்க மாட்டாங்க அந்த அளவுக்கு சினிமாவின் பாதிப்பு. எத்தனையோ பெண்கள் ஜோதிகா கட்டிக்கிட்டு வர புடவை தான் வேணும்ன்னு ரங்கமணிகளை நச்சரித்திருப்பாங்க. எனக்கு தெரிந்த பெண்மணி இன்றும் கூட ரஜினி படம் வந்தால் போதும் முதல் நாளே பார்த்திடுவாங்க. டிவியில் பழைய ரஜினி படங்களை போட்டால் போதும் அப்படியே உட்கார்ந்து பார்த்துட்டு தான் அடுத்த வேலையே அந்த அளவுக்கு அவர்களுக்கும் சினிமாவின் பாதிப்பு இருக்கிறது. அந்த காலத்தில் எம் ஜி ஆர்ஐ திரையில் பார்த்தே எத்தனை பெண்கள் ஓட்டு போட்டுயிருப்பார்கள். ஜஸ்வர்யா ராய் உலக அழகியாக இருந்தாலும் மேலும் பிரபலம் ஆவதற்கு அவர்களின் சினிமா ஆர்வமும் ஒரு காரணம். வேற எந்த துறையில் அவர்கள் இருந்திருந்தாலும் இந்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். காந்தி படத்தில் காந்தி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு வெளிநாட்டுகாரர் தான் கிடைத்தார் அதே காந்தியின் மனைவியாக நடித்தது நம்ம இந்திய பெண்தான் அந்த அளவுக்கு இயற்க்கையாகவே நம்ம பெண்களுக்கு சினிமாவின் தாக்கம் இருக்கு. சினிமா தியோட்டரில் கூட பெண்களுக்குன்னு சிறப்பு கட்டணம் உண்டு ஆண்களுக்கு எங்க இருக்கு சொல்லுங்க.எத்தனை பெண்கள் தங்களுக்கு வரும் கணவர்கள் அஜித் போல இருக்கனும், மாதவன் போல இருக்கனுமுன்னு நினைக்குறாங்க. இன்றைக்கு இருக்குற நிலைமையில் எந்த பொண்ணுங்க எங்க அண்ணன் குசும்பன் போல இருக்குற நல்ல பையன்களை காதிலிக்குதுங்க எல்லாம் ரவுடிகளையும், சண்டை போடுறவனையும் தான் விழுந்து விழுந்து காதிலிக்குதுங்க. இதெல்லாம் எதனால சினிமாவின் பாதிப்பு நாள தான். என்ன ஒன்னு ரசிகர் மன்றங்களில் பெயர்கள் தான் இல்லை. மத்தபடி பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் தான்.இதனால் அதிகம் பாதிக்க படுவது பெண்கள் தான்...... பெண்கள் தான் ;)நன்றி

நடுவர்:

கோபிநாத் ஜெசிலாவுக்குப் பதில் சொல்றதை மட்டுமே செஞ்சிருக்கார்னு தோணுது. ஆண்கள் மாதிரியே பெண்களும் சினிமாவின் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள், வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகவும் ஆணித்தரமாக (ஆணி புடுங்கிறவர் இல்லையா; அதனால்தான்னு நினைக்கிறேன்) சொல்லிட்டார். மறுக்க முடியாத ஆணிகள்!கோபிநாத் சொன்னதிலேயே எனக்கு மிகவும் பிடிச்சது நம்ம பழைய முதல்வர் எம்.ஜி.ஆரின் தாக்கம் தாய்க்குலத்தில் எந்த அளவுக்கு இருந்தது என்பதுதான். அதை எங்க வயசுக்காரங்க எல்லோரும் நல்லாவே தெரிஞ்சி வச்சிருப்போம். அந்த ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கும்போது கோபியின் விவாதங்கள் உண்மை அப்டின்றது மாதிரி தெரியுது. எதுக்கும் பார்ப்போம் அடுத்த வர்ர முத்துலட்சுமி என்ன சொல்றாங்கன்னு .. வாங்க'மா ...

நடுவர்:

வாங்க முத்துலஷ்மி நீங்க உங்க தரப்பைச் சொல்லுங்க என்றபடியே பாக்கட்டில் இருந்த பஞ்சை எடுத்து காதில் வைத்துக் கொள்கிறார்.கோபி,'தல காதுல பஞ்சு வச்சா பேசுறது எப்படி கேக்கும்''அது பஞ்சையும் தாண்டி கேக்கும் கோபி நீ முத்துலஷ்மிகிட்ட போட்டுக் குடுத்திடாதே'

முத்துலஷ்மி:

சினிமாவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களே என்ற தலைப்பு எனக்கு தரப்பட்டிருக்கிறது...வழமை போல இல்லாமல் சுருக்கமாக முடிக்க முயற்சி செய்கிறேன் :) [பஞ்சு மேட்டரு தெரிஞ்சிடுச்சோன்னு 'தல' தருமிக்கு உதறுகிறது]. ஆண்கள் தான் ரசிகர்மன்றம் எல்லாம் வச்சுக்கிட்டு பணம் மற்றும் உடல் உழைப்பை அதில் போட்டு தங்களின் நேரம் மற்றும் உடல் நலனை கெடுத்துக் கொள்ள நேருகிறது... தீவிரமாக இணைந்து செயல்படுவதால் பணத்தேவைக்கு அவர்கள் குடும்பத்தைக்கூட சில சமயம் கஷ்டபடுத்திவிடுகிறார்கள் .. இதனால் பாதிக்கப்படுவது அதே ஆண்களின் நிம்மதி தான் என்பதை சில்சமயம் அவர்களே உணருவதில்லை.அப்பறம் பெண்கள் சினிமாவில் வரும் ரொமாண்டிக் ஹீரோக்களின் தாக்கத்தால் ஏன் எனக்கு அப்படி சர்ப்ரைஸாக அதை வாங்கித்தருவதில்லை ஏன் என்னை தூக்கி சுத்தவில்லை என்று கேட்டால் அதுவும் கணவன் ஒரு ஒல்லிக்குச்சியாகவும் மனைவி வீராங்கனையாகவும் இருந்தால் பாவம் அந்த ஆண் தான் பாவம் என்ன செய்வான்?
சினிமாவில் ஒரு பாட்டில் ஹீரோ சொந்த தொழில் செய்து முன்னேறலாம்அப்படியே பிரச்சனை வந்தால் ஒத்தையாளாக சண்டையிட்டு வெற்றீயும் பெறலாம் சினிமாவில் ஹீரோயினை காப்பாற்ற தன் உயிரைக்கூட தருவார் என்று காட்டுவதால் நிஜத்தில் இன்னும் இன்னும் ஒரு ஆணைப்பற்றிய எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது.

நான் வாயைத் திறந்தாலே மூடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்[மூக்கை சிந்துகிறார்.]

அடுத்த 2 வது பகுதியில் பேசப்ப் போவது
அபிஅப்பா.......மை பிரண்ட்......டெல்பின்.....

44 மறுமொழிகள்::

கண்மணி said...

டெஸ்டிங்
ஏதோ தவறு.எனவே பதிவு புதுப்பிக்கப் பட்டுள்ளது.

Anonymous said...

ஆவ்வ்வ்வ்வ்வ் டீச்சர் கொட்டாவி வருது...இவ்ளோ பெரிது எப்போ படிக்கிறது ஆவ்;))

மின்னுது மின்னல் said...

நாங்க தான் அதிகம் பாதிக்க படுகிறோம் இதுல எனவே நடுவருக்கு சம்திங் கொடுத்து தீர்ப்பை யாரும் மாத்தாமல் நடுவரை தொடர்ந்து கண்கானிக்கவும் !@! @

காட்டாறு said...

//‘சார் ரொம்ப ஆசைப் படாதீங்க ஏதோ வீடியோ கவரேஜ்லாம் இருக்கே ஒரு கெட்டப்பா இருக்கட்டுமேன்னு வச்சிருக்கேன் .முடிந்ததும் எடுத்துட்டுப் போயிடுவேன்.’ என்ற கண்மணீஎதுக்கும் உஷாரா பக்கத்துல கோபியை உட்காரச் சொல்லிட்டு’’கோபி இந்த சொம்பு மேல ஒரு கண்ணு வச்சிக்க ‘ ன்னாங்க
//

starting trouble இல்லாம ஜோரா ஆரம்பிச்சிட்டீங்க. பார்வையாளர்கள் நாங்க பொறுத்திருந்து பார்ப்போம். தல ஒழுங்கா தீர்ப்பு சொல்லுறாரான்னு.... இல்ல சினிமால்லாம் பாத்திருக்கீங்கல்ல.... என்ன நடக்குமின்னு....;-)

முத்துலெட்சுமி அக்கா அடக்கி வாசிச்சது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

அபி அப்பா புகுந்து விளையாடியிருக்கார்.

Anonymous said...

பரவாயில்லயே!! எல்லாரும் நல்லா பேசியிருக்காங்களே. முத்துலட்சுமி பாவம் இந்த மாதிரி அடக்கீட்டீங்களே. இந்த மாதிரி எழுதறதுல உங்கள மிஞ்ச ஆளில்ல போலிருக்கே

கும்மி said...

ஐ,பெல், நீங்க நல்லவங்களா..? இல்ல கெட்டவங்களா...?

ஐ.பெல் said...

ஏன்....ஏன்....ஏன்.....அவங்கள மாத்தச் சொல்லு நான் மாத்துறேன்..

கும்மி said...

உணர்ச்சிவசப்படாதீங்க....ஏன்....எங்க ஆட்டத்த நீக்கிட்டீங்க....நீங்க கும்மிக்கு எதிரியா..?

ஐ.பெல் said...

நான் சொல்லுற இடத்தில தான் கும்மனும்..மத்த இடத்தில கும்மினா...வெட்டிடுவேன்...

கும்மி said...

அது தானா வருவது...அதை இங்க தான் வரனுமின்னு சொன்னா நல்ல இல்லை..இப்படி எல்லாம் பேசினா நீங்க...கொலை வெறிக்கவிதைக்கு அடுத்த களமான பின் நவினத்துத்துவ கவிஜ எல்லாம் எழுத முடியாது

ஐ.பெல் said...

நான் ஒரு பட்டிமன்றம் வச்சி..அதுல நானே பேசி நானே தீர்ப்பு சொல்லி உங்களுக்கு சொல்லி அனுப்புறேன்....

கும்மி said...

இவங்க ரொம்ப நல்லவங்க போல் இருக்குடா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோபிநாத் said...

யக்கோவ்...அட்டகாசமான ஆரம்பம் :)))

\\சொல்லிட்டு’’கோபி இந்த சொம்பு மேல ஒரு கண்ணு வச்சிக்க ‘ ன்னாங்க\\

யக்கா..கடைசியில என்னை சொம்பை பார்க்க வச்சிட்டிங்களே..அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோபிநாத் said...

\\டிஸ்கி:2வது பகுதியில் வாதாடக் காத்திருப்போர் 1.தம்பி உமாகதிர்2.டெல்பின்3.குசும்பன்4.கண்மணி\\

ஆமா அது என்ன கடைசியில நீங்க இதுல ஏதே உள்நாட்டு சதி இருக்கு :)

கானா பிரபா said...

நாட்டாமை தீர்ப்ப மாத்து ;) பாதிக்கப்படுவது வலைப்பதிவர்கள் தான்

பொன்வண்டு said...

டீச்சர் ஒரு பத்து,பதினஞ்சு பாகமா பிரிச்சுப்போட்டிருக்கக் கூடாது?? கண்ணைக் கட்டுது..

அபி அப்பா said...

தல, பாண்டிய மன்னன் தவறு செய்யாமலா கோவலன் செத்து போனான். தவறு செஞ்சது உண்மை, அதை ஒத்துகிட்டதால நாம மதிக்கறோம் அவவளவே. அது போல எந்த விதத்துல அபிஅப்பா தலைப்பை விட்டு விலகி போயிட்டேன்ன்னு கொஞ்சம் விளக்க முடியுமா? ஆண்கள் சினிமா பார்த்து கெட்டு போகலை. வடபழனில மாவட்டிவிட்டு திரும்பி வந்து செட்டில் ஆகிடுறானுங்கன்னு சொன்னேன். அவன் சினிமா பார்த்ததினால் தானே வீட்டை விட்டு ஓடினான்.ஸோ அது சினிமாவின் தாக்கம் தானே.

அடுத்து ஒரு கிராமத்து பெண் சினிமா பார்த்தது தான் காரணம் அவள் அஜீத் கூட நடிக்கனும்ன்னு வந்த ஆசை. அவள் அஜீத் வீட்டு வாசலிலேயே பிடிபட்டு தினதந்தி செய்தியாகி போய் வீட்டுக்கு திரும்பி வருவதாக சொன்னேனே தவிர சினிமா இண்டஸ்ட்ரியா அவளை கெடுத்தது? அப்படியா சொல்லியிருக்கேன். நல்லா பாருங்க அவள் சினிமா இண்டஸ்ட்ரி உள்ளயே போகலை. ஆனாலும் அவளுக்கு ஊரில் கெட்ட பெயர்.

இதில் நான் எங்கே தலைப்பை விட்டு போனேன் என்பதை தயவு செய்து விளக்கவும்.

நதியா கொண்டை போட்டுப்பதாலோ, ஆளவந்தான் மொட்டை போட்டுபதாலோ பெரிய சமுதாய சீர்கேடு வர போவதில்லை. ஆனால் சினிமாவின் தாக்கத்தால் ஓடிப்போய் கெட்டு போவது பற்றி விவாதித்தால் பட்டி மன்றம் இன்னும் சூடு பிடித்து நன்மை பயக்கும் என்பதே என் வாதம்.
மேலும் ஜெசீலா சொன்னது போல் சிவாஜி படம் பார்த்து கம் மென்று வருவது புகை பிடிப்பதை விட நல்ல செயல் தானே?

சரி தல தருமி அய்யா, பாண்டிய மன்னன் போல நீங்களும் தப்பை உணர்வீர்கள் அப்படித்தானே! இல்லையெனில் விளக்கம் சொல்லுங்க நானும் உங்க மாணவன் இல்லையா திருந்திகரென்!!

சோடா குடுங்கப்பா!

பட்டிமன்றம் said...

இதுல திவிரமா கருத்து பத்தியெல்லாம்..பேசப்படாது...அபிஅப்பா..அபி பாப்பாவா ஆகிட்டீங்களே...அதனால ஜோடா கிடையாது..

குண்டுக்கல் லியோனி said...

யாரும் பாட்டு பாடலியா...நான் வேனா வரவா

தருமி said...

ஒரு தடவ நான் பாட்டு வாங்கிட்டுப் போயிட்டு நான் வாங்கின பாட்டு பத்தாதா..

மை ஃபிரண்ட் said...

சரி விடுங்க.....நான் வேனா பொம்மரிலு பாட்டு பாடுறேனே..

தருமி said...

பொறுங்க..கூட்டத்தை கலைக்கம் போது கூப்பிடுறோம்..

கூட்டம் said...

அவங்கள பாட விடுங்க..நாங்க...சாகனும்...இந்த பட்டிமன்றம்.கேக்குறதுக்கு அதுவே தேவலை

கோவை சரளா said...

என்ன இங்க சண்டை !!!என்ன இங்க சண்டை !!!

ஐ.பெல் said...

என்ன கும்மி எழுத கூப்பிட்டாக, குட்டிஸ்ல பாடம் சொல்ல கூப்பிட்டாக, கண்மனியில கவிஜ எழுத கூப்பிட்டாக, இதெல்லாம் விட்டுட்டு என் கிரகம், இந்த பட்டி மன்றத்தை போட்டேன்..என்ன இந்த வாரு வாருறாங்க...

கிவ்மி said...

என்ன எங்கயும்மே கூப்பிடல..இப்ப தான்...ஒரு இடத்தில கூப்பிட்டு அதுல வியாபாரம் ஆகலையின்னு.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அபி பாதர் said...

என்னயயும் வாழ்க்கையில மேடை ஏத்தி அழகு பார்த்த ஐ.பெல்லுக்கு..மன்னிக்கனும்..கண்மனி டீச்சருக்கு, நான் கடமைப்பட்டுள்ளேன்...அதுனால தான் இங்க சத்தமில்லாமல்..கும்மி அனைவரையும்...இந்த பக்கம் வரச்செய்த்துள்ளேன்..

காட்டாமை said...

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு...ஐ.பெல்லால பாதிக்கப்பட்டது ஆண்களே..
பாருங்க..அபி பாதர் ஒரு ஆண்..அவர் மாங்கு மாங்குன்னு கும்மி அடிக்க வச்ச...ஐ.பெல் தான் பாதிப்புக்கு காரணம்.

நக்கீரன் said...

தருமியே....உந்தன் தலைப்பிலே பிழை இருக்கிறது...

நக்கீரன் said...

தருமியே....உந்தன் தலைப்பிலே பிழை இருக்கிறது...

கிவ்மீ said...

என் தலைஎழுத்தில தான் பிழைன்னு நினைச்சேன்..தலைப்பிலேயும்மா..வழக்கம் போல மண்டபத்தில வச்சி..ஐ,பெல் தான் எழுதி கொடுத்தாங்க...எவ்வளவு பிழை இருக்கிறதோ அதுக்கு தகுந்தா மாதிரி..சாட்டையடி..ஐ,பெல்லுக்கு குடுத்திடுங்க...

ஐ.பெல் said...

முதலுக்கே மோசம் வந்து விடும் போலிருக்கிறதே...அய்யா..கிவ்மீ அய்யா..சும்மா இருங்க...கீரன்...கிரிப்பாரும்..என்ன குற்றம் கண்டீர்...சொற் குற்றமா ..? பொருட் குற்றமா..?

நக்கீரன் said...

தலைப்பிலே ஒரு கேள்விக்குறி மிஸ்ஸிங்க..அம்புட்டு தான்..

ஐ.பெல் said...

இதுக்கு நான்..பத்தாம் வாய்ப்பாடு சொல்லி தரப் போகலாம்...ஷப்ப்ப்ப்ப்ப்ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே...

delphine said...

நல்ல ஆரம்பம் கண்மணி.. இரண்டு மூன்று பாகங்களாக பிரித்துருக்கலாமோ!
அது சரி.. இந்த அமீரகத்து பார்ட்டிகளுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ...ஆஜராகி விடுகிறார்களே!
அமீரகமே!! இது கும்மியல்ல...

எல்லாரும் said...

வேண்டாம்...இப்பவே எல்லாரும்..விரல மடக்கி மடக்கி சிம்பு மாதிரி ஆகிட்டாங்..இப்படியே விட்டா..கேமரா பாத்து வசனம் பேசனுமின்னு சொல்லுவாங்க..பரவாயில்லையா..

அமிரக கும்மி ஏஜென்ட் said...

மருத்துவர டால்பின் அவர்களே..
நாங்க..கும்முறதுக்கு இடம் பொருள் ஏவல் பாக்க மாட்டோம்...மேட்டார் மாட்டினா..கும்மிடுவோம்...

டால்பின் said...

எனக்கு ஊசி வேண்டாம் வலிக்கும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எல்லாரும் said...

உங்க..வரிசை அடுத்த பதிவுல..போய் வலிக்காம ஊசி போடுறத பத்தி கத்துக்கிட்டு வாங்க....

சிம்பு said...

நான் கெட்டவன்....ஆனா ஐ.பெல் நீங்க நல்லவங்க....என்ன மாதிரி அடுத்த தலைமுறையயை தயாரக்குறீங்கன்னு கேள்விபட்டேன்...ஆரோக்கியமான போட்டிக்கு நான் தயார்...

கண்மணி said...

//என்ன கும்மி எழுத கூப்பிட்டாக, குட்டிஸ்ல பாடம் சொல்ல கூப்பிட்டாக, கண்மனியில கவிஜ எழுத கூப்பிட்டாக, இதெல்லாம் விட்டுட்டு என் கிரகம், இந்த பட்டி மன்றத்தை போட்டேன்..என்ன இந்த வாரு வாருறாங்க...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்னை சரளா ரேஞ்சுக்கு பொலம்ப வச்சிட்டீங்களே மக்கா....

கோவை சரளா அகில உலக ரசிகர் மன்றம் said...

யாரு அது எங்க தலைவிய தாழ்த்தி பேசுறது.....?

அபி அப்பா said...

இது எங்க பாசக்கார குடும்பத்து கும்மி சத்தம் மாதிரி தெரியலையே! யாரோ கயமைத்தனம் செய்வது போல தெரிகிறது. தயவு செய்து புரிந்து கொண்டு விலகிவிடுங்கள் ப்ளீஸ், தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே!

Anonymous said...

எங்க கும்மியில என்ன குற்றம் கண்டு புடுச்சீங்க

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)