PAGE LOAD TIME

சி.அ.பா.பெண்களா. ஆண்களா. .வலையுலகப் பட்டிமன்றம் பகுதி.-2

சி.அ.பா.பெண்களா?ஆண்களா? வலையுலகப் பட்டிமன்றம் பகுதி-1
நடுவர்:
வழக்கம்போல நீங்க பேசியிருக்கலாம். சுருக்கம் அப்டின்னு சொல்லிட்டு நீங்க சொன்ன ஒரு பாய்ண்ட்: ஆண்களின் ரசிகர் மன்ற வேலைகள் பற்றியெல்லாம் சொல்லியிருக்கீங்க. அந்த மாதிரி ஒரு வாய்ப்பைப்பெண்களுக்கு நம் சமூகம் கொடுப்பதில்லை அதனாலேயே ஆண்களிடம் சினிமாவின் தாக்கம் அதிகம் என்று சொல்வதை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூட பசங்க நோட்டு அட்டைகளில் இரு பாலாருமே சம அளவில் சினிமா நடிக நடிகையர் படம் போட்ட நோட்டுகளைப் பயன்படுத்துவதை அவர் பார்த்திருக்க மாட்டார் போலும். அந்த விஷயத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றுதான் என்றே நினைக்கிறேன்.தங்கமணியைத் தூக்கி ரங்க மணி சுத்தணும்கிறதை எதுக்குச் சொன்னாங்கன்னு எனக்குப் புரியலை.

அடுத்து வாங்கம்மா டாக்டரம்மா உங்க கருத்து என்னன்னு சொல்லுங்க என்று டெல்பினைக் கூப்பிடுகிறார்.

சட்டென்று எழுந்து வந்த டாக்டர் கையிலிருந்த கத்தி,ரம்பம்,ஆக்சா பிளேடு போன்ற அறுக்கும் உபகரணங்களை மேசைமீது வைக்க மொத்தக் கூட்டத்தோடு நாட்டாமையும் அதிர்ந்து போகிறார்.

உடனே அபிஅப்பா 'அம்மா இது டூ மச் உங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொல்லனும்னு இப்படி கத்தியக் காட்டி மிரட்டக் கூடாது'
'யோவ் தொல்ஸ் உன் அவசர புத்தியக் காட்டாதே.நான் இப்பத்தான் தியேட்டர்ல இருந்து நேரா வர்ரேன்'
'அய் எந்த தியேட்டம்மா தேவியா'
'ஹூம் சாந்தி...ஆப்புரேஷன் தியேட்டர்ய்யா.அதான் டூல்ஸ்லாம் கையோட எடுத்து வந்துட்டேன்'
பயம் தெளிந்த நடுவர்,'ஓகே நீங்க பேசுங்க ம்மா'என்கிறார்.

டெல்பின்:

சினிமாவினால் சமுதாயத்திற்கு மொத்தமும் பாதிப்புத்தான்.
--
சினிமாவால் பாதிக்கப்படுவது ஆண்களே என்று சொன்னால் மிகையாகாது. இந்த சினிமாக்களை பார்த்து பார்த்து அதில் வரும் பெண்களைபோலவே தங்கள் மனவி மார்களும் காதலிகளும் இருக்கணும்னு நிறைய பேர் கனவு கண்கிறார்கள் . நிறைய சினிமாக்கள் பெண்களின் அடிமைதனத்தை சித்தரிக்கின்றன. அதை பார்த்து ஆண்களும் பெண்களை அவ்வாறு நடத்த ஏதுவாகிறார்கள்.நம்முடைய கலாச்சாரம் சீரழிய காரணாமாக உள்ள சினிமாவை காண்பது. இரட்டை வார்த்தை வசனங்களும், பாடல்களும் இப்பொழுதெல்லாம் அதிகமாக படங்களில் காண்பிக்க படுகின்றன. சினிமாவில் வரும் கலைஞர்கள் உடுத்துவதுபோல நம் ஆண்மகன்களும் உடுத்த ஆசைப்படுகிறார்கள். தங்கள். ஹீரோ செய்வது போல தாங்களும் சேய்ய வேண்டும் என்று துணிகிறார்கள்.
திரைப்படங்கள் சமூகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் தான் எழுகிறது..பெரும்பாலான திரைப்படங்கள் சமூக அநாகரிகங்களைக் சுட்டிக் காட்டினாலும் ஆணீயத்தை தான் பேசுகின்றன.

சினிமா பெண் கலைஞர்களீன் நடனம் பார்க்க சகிக்கவில்லை. அவர்களது உடைகள் நமது சமுதாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது..

சினிமாவில கூட ஆண்கள் அதாவது ஹீரோக்கள் சாதாரணமாக ஆடை அணிவார்கள், பாடல்காட்சிகளில் பார்க்கலாம். ஆனால் ஹீரோயின்கள் தான் மிக மோசமாக ஆடை அணிவார்கள். அதுவும் சமீபகாலமாய் வருகிற படங்களில் மிக மோசமாய் இருக்கும். இது கூட பெண்களை இன்னும் போகப்பொருளாய் தான் சினிமா சமூகம் பார்க்கிறது என்கிறது புரிகிறது. இந்த தாக்கம் நமது சமூகத்திடம் நன்றாக தெரிகிறது.


உணர்ச்சிகளிற்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன். நடை உடை பாவனை போன்றவை உணர்ச்சிகளை கிளப்பி விடக்கூடியவாறு அமைகிற நிலையில். பல சமூகப்பிரச்சனைகளை நாம் எதிர் நோக்க வேண்டி வரப்போகிறது. இன்று மேடையில் அரை குறை ஆடையுடன் ஆரம்பம் இதுவே தொடர்கதையாக போனால் நாளை நமக்கு கலாச்சாரம் என்ற ஒன்று இல்லாமலே நாம் போகலாம். பெண்களிற்கு மட்டும் அல்ல ஆண்களிற்கும் தான் ஆடைகளில் அடக்கம் தேவை. ஆனால் ஆண்கள் ஆடை விஷயங்களில் மோசமாக நடந்து கொள்வது குறைவு. வளர்ந்து வருகின்ற சமுதாயம் இதனை கருத்தில் கொள்ளாவிட்டால் நமது சந்ததிகள் பல பிரச்சனைகளை தாங்கியவாறு இந்த உலகத்தில் பிறக்க வேண்டி வரலாம். இப்படி பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் எனினும் ஒளிபரப்புவதை தவிர்க்கலாம். இந்த நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்களும் என இப்படி பட்ட விஷயங்களை கருத்தில் எடுக்கலாம்.

நடுவர்:
ஏதோ கத்தியக் காட்டி மிரட்டினாலும் !!!!! இரண்டு பேருக்கும் பொதுவான பாதிப்புகளை டெல்பின் சொன்னதாலதீர்ப்பு என் இஷ்டப்படி குடுக்கலாம்.

காலம் கருதி விரைவாக அடுத்து அபிஅப்பாவை அழைக்கிறேன். ஜோக் அடிக்கப் போகிறாரா, செமையா பாய்ண்ட் குடுக்கப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்/வாங்க .. அபி அப்பா …

அபி அப்பா:

அன்புள்ள நடுவர் தருமி அய்யா, நிகழ்ச்சி அமைப்பாளர் டீச்சர் என் பக்க சிங்கங்கள் எதிர்பக்க வேண்டாம் நான் திட்டு வாங்க விரும்பவில்லை, எனக்கு ஏகப்பட்ட பதிவுகள் படிப்பதற்க்கு மீதி இருப்பதாலும் பின்னூட்டம் வராமல் சிறிது நாட்களாக கை நடுக்கம் ஏற்பட்டிருப்பதாலும் சுருக்கமாக என தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளேன். மீதியை இரண்டாவது "ரவுண்டில்". தருமி சார் நன்றாக புரிந்து கொண்டு பக்கா((ர்டி) தீர்ப்பு வழங்குமாறு கேட்டு கொள்கிறேன். ஒரு வேளை தவறான தீர்ப்பு வந்தால் உங்கள் பெயரின் முதல் எழுத்தில் மிக சிறிய மாற்றம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறேன். நன்றி வணக்கம்.
இன்றைய சூழ்நிலையில் சினிமாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே!
அனேகமாக இரு பாலரும் சினிமா என்னும் ஊடகத்தில் மூழ்கி கிடந்தாலும் அதனால் பாதிப்பு என்னும் வரும் போது அது பெண்களுக்கே அதிகமாக அமைந்துவிடுகிறது . சினிமாவை பார்த்து அதில் மயங்கிபோய் வீட்டை விட்டு ஓடிப்போய் வடபழனியில் வாய்ப்பு தேடி அலைந்த்து பகுதி நேரமாக உணவகங்களிலும் மற்ற இடங்களிளும் பணிபுரிநது ஒரு நான்கு ஐந்து வருடங்களிள் போதும் போ இந்த வாழ்க்கை என அலுத்து போய் சொந்த ஊரில் விவசாயம் பார்த்து பின் காலா காலத்தில் திருமணம் , குழந்தை என வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள். அந்த ஆண்மகனை திருமணம் செய்யும் அந்த வெள்ளேந்தியான அந்த பெண் அதற்காக வெட்கப்படவோ வேதனைபடவோ செய்யாமல் மாறாக தன் தோழிகளிடம் பெருமையாக "எங்க மாமா சின்ன வயசுலேயே மெட்ராஸ் போயி சினிமாவுக்கு சேர முயற்சி பண்ணுச்சு. அதோட கெரகம் கெடக்கல . ஆனாலும் மாமா ரசினி,கமலகாசங்கூடல்லாம் போட்டோ கூட வச்சிருக்கு. ஏலே தங்கராசுன்னு சத்திராசு உரிமையா கூப்புடுவாருன்னா பாத்துகயேன்"ன்னு கூறும் நிலை தான் ஆண்களுக்கு .
ஆனால் அதே பெண்கள் சினிமாவினால் கவரப்பட்டு அஜீத்கூட நடிச்சே தீரனும்ன்னு சென்னைக்கு ஓடி வந்தவர்கள் தினதந்தியில் செய்தியாகி சொந்த ஊருக்கு திருப்ப அனுப்பபட்டாலும் ஊர் பஞ்சாயத்து அபராதம் பின் பெற்றோர் தற்கொலை அந்த விரக்தியில் பெண் திரும்பவும் சென்னை பின் விபசாரம் என அவள் வாழ்க்கை சீரழிந்து போய் விடுகிறது. அப்படியே அந்த பெற்றோர் அந்த பெண்ணை ஏற்று கொண்டாலும் அவளை திருமணம் செய்ய எந்த ஆண் முன் வருவான். வந்தாலும் ஏதோ ஒரு நாள் நடக்கும் உப்பு பொறாத சண்டையில் குத்தி கிழிக்கப்படாதா அவள் மனம். சாகும் வரை அவளுக்கு நிம்மதி ஏது ? அப்படியே அந்த கணவன் நல்லவனாகவே இருந்து விட்டு போகட்டும், இவ்வளவு நல்ல கணவனுக்கு நாம் துரோகம் செய்து விட்டோமே என வருந்தி வருந்தியே சாகமாட்டாளா ?
இதில் ஆணீயம் வெங்காயம் என்பது பற்றிய பேச்சே இங்கு பேச வரவில்லை . இது தான் இயற்கை. சினிமாவில் மயங்கி ஒரு ஆணும் பெண்ணும் கலாசார சீர்கேடு நடத்தினால் வயிற்றை கழுவ வேண்டும் பெண்ணினம், வயிற்றுக்கு கீழே கழுவினால் மட்டும் போதும் ஆணினம் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கின்றது இந்த பாழாய் போன சமுதாயத்தில்.இதனால் மட்டுமே என் வாதம் சினிமாவினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே!

நடுவர்:

அபி அப்பாவிற்கு ஒரு வார்த்தை. நீங்கள் நெற்றிக் கண் காட்டினாலும், என்னை கருமி, கிருமி என்று எப்படி அழைத்தாலும் நான் நெறிதவறா பாண்டிய மன்னர்களின் மதுரைக்காரன் என்பதையும், உங்கள் அச்சுறுத்தலுக்கும் எந்தவித சலசலப்புக்கும் அஞ்சாது என் முடிவைத்தெரிவிப்பேன் என்பதையும் தெளிவு படுத்திக் கொள்ளும் இந்த நேரத்தில் … அப்பாடா, மூச்சு வாங்கிரிச்சி …அபி அப்பா தடம் புரண்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். நம் தலைப்பு சினிமாவினால் பாதிப்படைவது என்ற பொருளில் கேட்டபோது, அது சினிமாவைப் பார்ப்பதால் வரும் பாதிப்பு என்ற பொருளில் கொள்வதற்குப் பதில் சினிமா என்ற industry ஆண்களையும் பெண்களையும் எப்படி சீரழித்துவிடுகிறது என்ற பொருளில் ‘பேசிவிட்டு’ சென்று விட்டார். இது காலங்காலமாய் வரும் வேலியில் சேலை விழுந்தால் … என்ற தத்துவம்தான். ஆனால் இது இன்றைய பேசுபொருள் இல்லை என்பதாக நினைக்கிறேன்.அடுத்து ….

மைபிரண்ட்

நடுவில் உட்கார்ந்திருப்பதால் நடுவர் அவர்களே, தப்பு தப்புதான்னு தெரிந்தும் தப்பான வாதங்களை சொல்ல துடிக்கும் எதிர் அணி சிங்கங்களே, சரி எதுன்னு சரியா கணித்து சொல்ல வந்திருக்கும் சொந்த அணி சிங்கங்களே.. சிங்கம் சிங்களாதான் வரும்ன்றதுனால இப்போ நான் தனியா மைக் புடிச்சு நிக்குறேன். :-)) நேத்து நைட்டு சித்து கனவுல வந்து சினிமாவின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்களே / ஆண்களே தலைப்புக்கு சப்போர்ட்டா பேசுன்னு சொன்னதால நானும் சரின்னு சொல்லி என் வாதத்தை முடித்துக்கொள்கிறேன் . நன்றி வணக்கம். வர்ட்டா... :-))

பேசுனா மைபிரண்ட் மாதிரி பேசணும். ரத்தின சுருக்கம்னா இதுதான். ஆனால் என்ன ப்ரச்சனைன்னா அவங்க எந்த சைடு எடுத்து பேசியிருக்காங்கன்னுதான் புரிபடலை. சித்து வேற வந்ததாகச் சொல்றாங்க .. அதுவும் யாருன்னு புரியலை. சரி .. வர்ட்டா அப்டின்னு சொல்லிட்டு போய்ட்டாங்க .. இனிம மறுபடி கூப்பிட்டா பேச வைக்க முடியும். உட்டுருவோம்.


………….இன்னும் வரும்.

எதற்கும் துணிந்தவர்கள் மீண்டும் வாருங்கள் [என் தீர்ப்பைக் கேட்க];)

டிஸ்கி:3வது பகுதியில் வாதாடக் காத்திருப்போர் 1.தம்பி உமாகதிர்2.குசும்பன்3.கண்மணி

16 மறுமொழிகள்::

அனுசுயா said...

me firstuuuuuuuuu :)

கண்மணி said...

@ அனுசுயா
கண்ணு படிச்சுட்டு பின்னூட்டம் போடும்மா

J K said...

me the 3rddddddddd.....

கண்மணி said...

ஜேகே நேத்து முத்துலஷ்மி வரைதானே படிச்சீங்க இன்னைக்கு டெல்பின் அபிஅப்பா மை பிரண்ட் வரை இருக்கு படிங்க

நொந்தவன் said...

அழுகுனி ஆட்டம் அபி அப்பா மட்டும் ரண்டு முறை பேசறாரு...நான் ஒத்துக்க மாட்டேன்.நாட்டாமை தீர்ப்ப மாத்தி எழுது

தருமி said...

வெட்டுற மாதிரி வெட்டி...பதிவுலே போட்டு தாக்கிடாங்கப்பா..கிருமி, இருமின்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்துலெட்சுமி said...

எங்க பள்ளிக்கூடத்தில் எல்லாபெண்களும் ஸ்டெபி கிராப் அன்னைத்தெரசா ன்னு தான் படம் வச்சிருந்தாங்க..இல்லாட்டி கும்பிடும் சாமி படம் தான்... அதுனால எனக்கு தெரியல போல.. :)

தங்கமணி ஆசையெல்லாம் சொன்னது ஒரு காமெடிக்கு ....

J K said...

//கண்மணி said...

ஜேகே நேத்து முத்துலஷ்மி வரைதானே படிச்சீங்க இன்னைக்கு டெல்பின் அபிஅப்பா மை பிரண்ட் வரை இருக்கு படிங்க//

டீச்சர் இப்படி ஸ்கூல் புக்க படிக்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் படிக்க முடியாது....

உங்களுக்கு கமெண்ட்...
எங்க கும்மி..
அம்புட்டுதேன்.

delphine said...

நல்ல முயற்சி கண்மணி.. எதிர் பார்த்ததை விட பட்டி மன்றம் சூடாகவே இருக்கு..

மின்னுது மின்னல் said...

கலக்கலா போகுது

தீர்ப்பு ரெண்டு பேருக்கும் சாதகமா போயிட போகுது

(அப்பாடா நடுவர் வயத்தை கலக்கியாச்சி)

சின்ன அம்மிணி said...

அபிஅப்பா நல்லா கும்மி அடிச்சிருக்காரு போல இருக்கு பின்னூட்டத்துல‌. தீர்ப்பு என்னான்னு தெரிஞ்சுக்க ஆர்வமா கிருக்கு. சீ இருக்கு

கோபிநாத் said...

யக்கா...அபி அப்பா சொம்பு வேணுமுன்னு கேட்குறாரு...:)))

காட்டாறு said...

யக்கோவ்.. பட்டிமன்றம் நெம்ப சூடா இருக்குது.... காமெடிய கலந்து கட்டுங்க. நம்மூட்டு ரங்கமணி, ச்சுப்ர மணியெல்லாம் இட்டாங்க.

சொம்பு திருட வந்தவன் said...

நான்தான் அதுக்கு வெயிட்டு பண்ரேனே அதுக்குள்ள யாருப்பா சொம்ப கேக்குறது

எழுதியவள் said...

கும்மி அபி அப்பாவா அடிச்சாரு..நான் கூட வேற யாரொன்னு நினைச்சேன்...

Anonymous said...

:))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)