PAGE LOAD TIME

கொலை வெறியுடன் நானும்..........

தலைப்பு பார்த்து பயந்துடாதீங்க கவுஜ எழுதப் போறேன்னு சொன்னேன்.
[அப்பத்தான் சீக்கிரம் 100 போடலாம்]

வேண்டாம் விட்டு விலகு என்ற வார்த்தைகளுக்கு
அனுமதிக்கும் காத்திராமல் தானாகவே
தடா போட்டுவிடுகிறது மனது
சர சரவெனப் பெய்யும் மழையில்
உடல் நனைத்து நிற்கும் போது
வேண்டாம் ஆகாது வந்துவிடு
என்ற அம்மாவின் வேண்டுகோள் ஏனோ
காதில் விழுவதேயில்லை.
பறிக்காதே முள் குத்தும் என்றாலும்
ரோஜாவின் மீதுள்ள காதல் முள்ளையும்
நேசிக்க வைக்கிறது
நமக்குள் ஒத்துப் போகாது என
விலகுவதற்காக நீ சொன்ன காரணங்கள்
புதிதாய்க் கற்பிக்கப் பட்டவையா
முன்னமே தீர்மானிக்கப் பட்டவையா
நெருப்புக் குழம்பை உள் வைத்து அப்பாவி போல
வெடிக்கக் காத்திருக்கிறது எரிமலை
ஊழி நெருப்பை அணைத்துவிடும் உத்வேகத்துடன்
வெட்கமறியா விழிகளில் வழிகிறது
கண்ணீர்.

40 மறுமொழிகள்::

மகேந்திரன்.பெ said...

எனக்கு என்னமோ இந்த கொலவெறிக் கவுஜைல வேற அர்த்தம் தெரியுதே அது எனக்கு மட்டும்தானா இல்ல எல்லாருக்குமா? யாராச்சும் சொல்லுங்க

கண்மணி said...

வாங்க மகேந்திரன் இது 100% அக்மார்க் காதல் கவுஜங்க.
உள்குத்து இல்லீங்க

சும்மா அதிருதுல said...

தலைப்பில் மட்டும் தான் உள்குத்து

:)

சும்மா அதிருதுல said...

கண்மணி said...
வாங்க மகேந்திரன் இது 100% அக்மார்க் காதல் கவுஜங்க.
உள்குத்து இல்லீங்க
//

காதலை உள்குத்தா வைச்சி கவுஜ

டைட்டில் மகிக்கு :)

சும்மா அதிருதுல said...

வேண்டாம் விட்டு விலகு என்ற வார்த்தைகளுக்கு
அனுமதிக்கும் காத்திராமல் தானாகவே
தடா போட்டுவிடுகிறது மனது
//

இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்குமோ

வேண்டாம் விட்டு விலகு என்ற வார்த்தைகளுக்கு
அனுமதிக்கும் காத்திராமல் தானாகவே
தறிகெட்டு ஓடுது மனது..!!!


(முனு ஆச்சிரிய குறி)

சும்மா அதிருதுல said...

நமக்குள் ஒத்துப் போகாது என
விலகுவதற்காக நீ சொன்ன காரணங்கள்
புதிதாய்க் கற்பிக்கப் பட்டவையா
முன்னமே தீர்மானிக்கப் பட்டவையா
//


எஸ்கேபுக்காக...
முன்னமே தீர்மானிக்கப் பட்டது தான்யப்பா தாங்கமுடியலை சாமி

கோபிநாத் said...

ம் :)

கண்மணி said...

அய்யா யாருப்பா அது அதிருதுல உங்க புரோபைல் தான் பயங்காட்டுதுன்னா நீங்களுமா??
கவுஜய படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம உள் /வெளின்னு யப்பா வேனாம் சாமீ நான் எந்த ஆட்டைக்கும் வரலை.

அப்பால டீச்சருக்கே பாடமா?
உங்க மாற்று வரிகள் பொருளுடன் பொருந்தலையே

கண்மணி said...

கோபி புடிக்குது இல்லன்னு நச்சுன்னு சொல்ல்லு என்னா ம்ம்ம்ம்???

மின்னுது மின்னல் said...

ஹச்ச்சினு இருக்கு

கண்மணி said...

உள்குத்து அது இதுன்னு பின்னூட்டம் வருவதால

நான் இனி கவுஜ எழுதலை
நான் இனி கவுஜ எழுதலை
நான் இனி கவுஜ எழுதலை
நான் இனி கவுஜ எழுதலை
நான் இனி கவுஜ எழுதலை
நான் இனி கவுஜ எழுதலை
.....
....................
அப்படீன்னு சொல்ல மாட்டேன்.ச்சும்மா இப்படி தலைப்பு வச்சாத்தானே வருவீங்க

தம்பி said...

லேபிள் தப்பா போட்டுட்டிங்க பாருங்க.

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன கொசுமை சார் இது!!!! :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஓகே.. இப்போ கொசு பறந்து போயிடுச்சு.

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்ன கொடுமை சார் இது!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

எதுக்கு உங்களுக்கு இந்த கொல வெறி????

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஒன்னுமே புரியல. :-(

.:: மை ஃபிரண்ட் ::. said...

புரியாமல் இருக்கணும்ன்னுதான் நீங்க இப்படி எழுதினீங்கன்னு சொல்லுவீங்களே?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஸோ, நான் அமைதியா நின்னு கவிதை சூப்பர்ர்னு சொல்லிட்டு நழுவுறேன். :-)

முத்துலெட்சுமி said...

டீச்சர்...

ரோஜாவை ரசிக்கப்பழகனுன்னா முள்ளையும் சேர்த்து தானே ரசிக்க வேண்டி இருக்கு..
நனைஞ்சா சுரம் வரும்ன்னாலும்
மழையை ரசிக்கனுன்னா
வேறென்ன செய்யறது ..

ஊழி நெருப்பையே அணைக்க துடிக்கும் கண்ணீருன்னு சொன்னீங்க பாருங்க அட்டகாசமா காதலைப்பத்தி
சொல்லி இருக்கீங்க
நடக்கமுடியாததெல்லாம் நடப்பது
காதலில் தான்.
சாத்தியமே இல்லாததெல்லாம் சாத்தியப்படுவதும் காதலில் தான்
வெறியோட எழுதினாலும் சரியாக எழுதி இருக்கீங்க :)

கண்மணி said...

முத்து நீங்க ஒருத்தராவது புரிஞ்சிகிட்டீங்களே ஆனா வெறி காதல் மீது இல்லை...கவுஜ எழுதிவதில்...;)
ஆனாலும் பாருங்க வயசான காலத்திலும் [படிப்பவர்களுக்கு] காதல் கத்தரிக்கா ன்ன உடனே கவுஜ ரசிக்கத்தோனுது :(

கோபிநாத் said...

\\கண்மணி said...
கோபி புடிக்குது இல்லன்னு நச்சுன்னு சொல்ல்லு என்னா ம்ம்ம்ம்???\\

சரி நச்சுன்னு இருக்கு உங்க பின்னூட்டம் :)

சுல்தான் said...

உள்குத்து இருந்தாலும் இல்லன்னாலும் சரியாகத்தான் இருக்கிறது.

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
டீச்சர்...

ரோஜாவை ரசிக்கப்பழகனுன்னா முள்ளையும் சேர்த்து தானே ரசிக்க வேண்டி இருக்கு..
நனைஞ்சா சுரம் வரும்ன்னாலும்
மழையை ரசிக்கனுன்னா
வேறென்ன செய்யறது ..

ஊழி நெருப்பையே அணைக்க துடிக்கும் கண்ணீருன்னு சொன்னீங்க பாருங்க அட்டகாசமா காதலைப்பத்தி
சொல்லி இருக்கீங்க
நடக்கமுடியாததெல்லாம் நடப்பது
காதலில் தான்.
சாத்தியமே இல்லாததெல்லாம் சாத்தியப்படுவதும் காதலில் தான்
வெறியோட எழுதினாலும் சரியாக எழுதி இருக்கீங்க :) \\

அட கொடுமையே...இதுல இம்புட்டு உள்குத்து இருக்கா!!!...என்னை போல சின்ன புள்ளைங்களுக்கு இதெல்லாம் தெரியது :))

கண்மணி said...

அடடா முத்து லஷ்மிக்கு விளக்கம் குடுத்த பின்ன பாவம் கோபியும் சுல்தான் சாரும் மாட்டிக்கிட்டாங்களே:(

குசும்பன் said...

எக்ஸ் கூயுஸ் மீ டீச்சர் எனக்கு புரியிர மாதிரி ஒரு கவிதை எழுதினீங்கன்னா நானும் ஒரு போஸ்ட் போட்டுவிடுவேன்:))))))

குசும்பன் said...

ஆனாலும் பாருங்க வயசான காலத்திலும் [படிப்பவர்களுக்கு] காதல் கத்தரிக்கா ன்ன உடனே கவுஜ ரசிக்கத்தோனுது :(

அப்பாடி இப்பயாவது ஒத்துக்கிட்டீங்களே!!!:)))))))

கண்மணி said...

அய் குசும்பனுக்கு இப்ப எதிர் கவிதை போட முடியாதே ஆம்லேட்டு சாக்லேட்டுன்னு

அப்பால வயசானன்னு சொன்னது .கவுஜ படிக்கிறவங்களை எழுதுன நான் இல்லை

Anonymous said...

:(

சுகுணாதிவாகர் said...

கவிதைக்கான தொடக்கம் உள்ளது. சற்று முயற்சி செய்தால் நீங்கள் இதுபோன்ற நல்ல கவிதைகளை எழுதலாமென்றுதான் தோன்றுகிறது. (நீ யார் தீர்ப்பு சொல்ல என்று கேட்காதீர்கள், தோன்றியது சொன்னேன்.)

கண்மணி said...

நமக்கு காமெடிதாங்க கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுவதோடு வேலை முடிஞ்சது.
கவிதைக்கான சாத்தியக் கூறு இம்மியும் இல்லேங்க. சும்மா தலைப்ப வச்சி பயம் காட்டவும் பின்னூட்டம் போட்டுட்டீங்க பாத்தீங்களா?:))
எப்பவோ ஒட்டிபிறப்பதால வாழைப்பழம் இரட்டையாத்தான் இருக்கும்னு சொல்ல முடியுமா?
அது மாதிரிதான் நம்ம கவிதையும்

காட்டாறு said...

// கண்மணி said...
நமக்கு காமெடிதாங்க கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுவதோடு வேலை முடிஞ்சது.
//

எப்போக்கா?

கவிதை நல்லாயிருக்குது. நெசமாவேத்தான்.

கவிஜ said...

ஏன் ஏன் ஏன்

கொலை வெறி said...

நானும் ஏன் ஏன் ஏன்

கொலை வெறி கவிஜ said...

எனக்காக தான்

ஏமாத்தனுவன் said...

என்னயவா சொல்லுறாங்க..?

வேடிக்கை பாத்தவன் said...

ஆமாண்டா உன்னத்தான்

கவிஜ said...

அதுக்கு நாங்க ஏன்

ஐ.பெல் said...

நான் அப்படி தான் எழுதுவேன்

ஏமாத்துனவன் said...

வேண்டாம்...நான் ஏமாத்தாம இருக்கேன்..கவிஜ வேண்டாம்

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)