PAGE LOAD TIME

தேடலின் முடிவில்...

சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை
ரசிக்கும் தருணங்களைக் காட்டிலும் என்றைக்கேனும்
இந்த வண்ணக்கலவை நிறமிழந்து போகுமோ என்ற அச்சம் மிகுகிறது.
இரவுப் பனியில் குளித்தெழுந்து தலை துவட்டாத ஈரத்தில்
இதழ் மலரக் காத்திருக்கும் ரோஜாக்களைப் பார்த்து
புன்னகைக்கவும் மறந்து போய்
இன்று ஒரு நாள் மட்டும்தானே இந்த அழகு என
கவலை தொற்றிக் கொள்கிறது
ஓயாத உன் பேச்சொடு கலந்து வரும் புன்னகையில்
அதிக பங்களிப்பு இதழ்களுக்கா விழிகளுக்கா என
ஆராயவும் மனமின்றி இது எனக்கானதா என
ஏக்கமே நிலை தடுமாறச் செய்கிறது
எதன் மீதுமான நிச்சயமற்ற நம்பிக்கைகள்
தொடக்கமறியத ஒரு தேடலில் முடிந்து போகிறது
தேடுவது எதுவெனத் தெரியாமலே
தேடலின் வீச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது
இருப்பை மறந்த தேடலில்
கரைந்து ஓடும் கால வெளியில்
தொலைந்து போவது
என் சுயம் மட்டுமே

18 மறுமொழிகள்::

Anonymous said...

mmmmmm

சுகுணாதிவாகர் said...

nalla kavithai

குசும்பன் said...

ய்யோவ் கவிதை சூப்பர், மிக்க நன்றி எனக்கு போஸ்ட் போட ஒரு மேட்டர் சிக்கிச்சு...

Anonymous said...

எதன் மீதுமான நிச்சயமற்ற நம்பிக்கைகள்
தொடக்கமறியத ஒரு தேடலில் முடிந்து போகிறது
தேடுவது எதுவெனத் தெரியாமலே
தேடலின் வீச்சு தொடர்ந்து கொண்டிருக்கிறது
இருப்பை மறந்த தேடலில்
கரைந்து ஓடும் கால வெளியில்
தொலைந்து போவது
என் சுயம் மட்டுமே
ithu nijam...adikkadi naan ennai kekum kelvi... ungkalukku eppadi kettathu ammaa
self-confidence illatha manithan..
ethaiyum nambikkai illatha mana vottatthodu paarkum...manam
some what pessimism....

மங்கை said...

ஹை ...இந்த நாயணத்திலேயும் அதே சத்தம்தே வருது...

:-)))) நல்லா இருக்குப்பா...

முத்துலெட்சுமி said...

ஒருபக்கம் காமெடி இன்னொருபக்கம் கவிதையா ?/ என்ன நடக்குது இங்க...
குசும்பனுக்கு யாராவது பதிவு போட ஐடியா குடுத்துக்கிட்டே இருக்கீங்க அவர் காட்டுல தான் மழை.

கவிதையின் கருத்துன்னுபார்த்தா ரசிக்க வேண்டியவைகளைக்கூட ஓவரா யோசிச்சு ரசிக்காம போயிடும் மனப்பான்மை ரொம்ப கஷ்டம் ..வாழ்க்கையை சீரியஸா திங்க் பண்ணற ஒரு ஆளோட பார்வையில் சொல்லி இருக்கீங்கபோல..நீங்க தான் காமெடி ஆளாச்சே...

கண்மணி said...

நன்றிங்க சுகுணா திவாகர்.ஏதோ நம்மாள முடிஞ்சது ;)

கண்மணி said...

அனானி இது 100% பெசிமிஸ்டிக் பார்வை பற்றியதுதான்.
ஆனா எழுதுறவங்க அப்படிப் பட்ட ஆளாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

கண்மணி said...

குசும்பா நெசமா டிஸ்கியில உன்னைக் கூப்பிட்டு எதிர் கவிதை போட நெனச்சேன் ஹாஹா
ஓகே டிரை பண்ணு பாப்பம்

கண்மணி said...

//ஹை ...இந்த நாயணத்திலேயும் அதே சத்தம்தே வருது...//

இதுல ஏதோ உள் குத்து இருக்குங்கோ

கண்மணி said...

ஆஹா முத்து லட்சுமியை நான் தொட முடியாத ஃபீல்டு கூட இருக்கே ஓவியம் பெயிண்டிங் போட்டோகிராபி etc...etc..
டோண்ட் ஒர்ரிம்மா

சுல்தான் said...

இன்றைய நாளை வாழப்பழகி விட்டால்
நாளை என்ற துண்பம் மறந்து
இன்றைய வாழ்வே நாளைக்கும் வாழலாம்
சரிதானா/னே டீச்சர்.

கோபிநாத் said...

ம்ம்ம்ம்...கவிதை அருமை :)

காமெடியும் சரி, கவிதையும் சரி கண்மணி "கண்மணி" தான் :)

கண்மணி said...

வாங்க சுல்தான் பாய் இப்படியாருமே திருப்தி படுவதில்லையே உங்களையும் என்னையும் சேர்த்து.
கனவுகளிலேயே வாழ்வின் பெரும்பகுதி போய்விடுகிறதே.

கண்மணி said...

கோபி இப்ப நான் பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அக்காதான்னு புரூவ் பண்ணிட்டேன் ;)

காட்டாறு said...

யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னாத்துக்கு இதெல்லாம்.... அம்புஜம் மாமி, சித்தப்பூ, குட்டி பிசாசுங்க (அதான் பசங்களை சொல்லுறேன்), ச்சுப்ரமணி, ரங்கமணியெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுறேன். சிரிச்சி, சிரிச்சி கண்ணுல தண்ணி வருவது மட்டுமில்லாம, பக்கத்து ரூமிலிருந்து மானேஜரும் வந்து என்னவோ ஏதோன்னு பார்க்கும் அந்த நாள் திரும்ப எப்ப வரும்?

delphine said...

யக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... என்னாத்துக்கு இதெல்லாம்.... அம்புஜம் மாமி, சித்தப்பூ, குட்டி பிசாசுங்க (அதான் பசங்களை சொல்லுறேன்), ச்சுப்ரமணி, ரங்கமணியெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுறேன். சிரிச்சி, சிரிச்சி கண்ணுல தண்ணி வருவது மட்டுமில்லாம, பக்கத்து ரூமிலிருந்து மானேஜரும் வந்து என்னவோ ஏதோன்னு பார்க்கும் அந்த நாள் திரும்ப எப்ப வரும்?/////////
repeat!

cheena (சீனா) said...

கவிதை அருமை - வர்ணணைகள் எளிமை - எதிலும் நம்பிக்கை இல்லாமல் ஒரு விரக்தி எல்லாவற்றின் மீதும் கொள்வது பற்றிய கவிதை.

ம்ம்ம்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி. நாமும் படிக்கலாமே - எதற்கு கவலைப் பட வேண்டும்.

//எதன் மீதுமான நிச்சயமற்ற நம்பிக்கைகள்
தொடக்கமறியத ஒரு தேடலில் முடிந்து போகிறது
//

தொடக்கமறியத : தொடக்கமறியாத

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)