PAGE LOAD TIME

வாங்க பழகலாம்..................

அம்புஜம் மாமி ஏதோ வேலையா இருந்தாள்.

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள் யாரோ ஒரு ஆள் கையில் ஒரு பார்சலுடன் நிக்க,

'யாருப்பா நீ என்ன வேனும்'?

'மாமி இதான் கிட்டுமாமா வீடா'

'ஆமாம் அவரு ஊர்ல இல்லையே''

'தெரியும் மாமி அவருதான் இந்த போர்டுக்கு ஆர்டர் குடுத்திருந்தார் ரெடியானதும் என்னையே வந்து மாட்டச் சொன்னாருன்னு'சொல்லி வெளியே வாசப்படிக்கிட்ட மாட்டினான்.

'வாங்க பழகலாம்'
பழக சொல்லித் தருபவர்: கிட்டுமாமா


ன்னு இருந்தது.

மாமிக்கு திகீரென்று இருந்தது.

நாலு நாளைக்கு முன்ன மாமிதான் சொன்னாள்.

'சும்மா மூனு நேரமும் வாய்க்கு வக்கனையா சாப்பிட்டுட்டு டிவி முன்னாடியே இருக்கீங்களே
ஏதாச்சும் செஞ்சு நாலு காசு பாத்தா என்ன?இதோ பாருங்க சாலமன் பாப்பையாவை.
ஒரு நாளு கிழமைன்னா அவரு இல்லாம சன் டி வி புரோகிராம் இருக்கா?இப்ப சினிமாவிலும் தலை காட்ட ஆரம்பிச்சிட்டார்.நீங்களும் இருக்கீங்களே'

'இப்ப என்னை என்ன செய்யச் சொல்றே அம்பு. நானும் பழகச் சொல்லித் தரவா'?

'என்னாது?பழகவா?ஏதோ அவ்ருதான் யோசிக்காம அப்படியொரு ரோல்ல நடிச்சாரு.அங்கவை,சங்கவைங்கிறது வள்ளல் பாரியோட பெண்கள் .அதுங்க பேரு வச்சது இல்லாம வாங்க வந்து பழகிப் பாருங்கன்னு சீப் காமெடி வேற.நான் ஏதாச்சும் பேச்சு பட்டிமன்றம்னு போங்கன்னு சொன்னா புத்தி போகுது பாருன்னு'திட்டினாள்.

அத்தோட அந்தப் பேச்சும் மறந்துடுச்சி.மாமாவும் ஒரு கல்யாணம்னு வெளியூர் போயிட்டார்.
இதென்ன போர்டு.நாம சொல்லியும் மனுஷன் கேக்கலையேன்னு கோபம் வந்தது.

லாண்டரி முனுசாமி துணியெடுக்க வந்தவன் போர்டு பார்த்துட்டு நமட்டூச் சிரிப்பு சிரிச்சான்.

'இன்னா மாமி மாமா இந்த வேலையத்தொடங்கிட்டாரா?'சிவாஜி யில' நம்ம பாப்பையா சாரு போல'

மாமி என்னத்தைச் சொல்வாள்?

வேலைக்காரி முனியம்மா,'யெம்மா அங்கவ,சங்கவ ல்லாம் இட்டாந்திட்டியா? எங்கம்மா அவிங்கல்லாம்? அய்யிருக்கு ஏன் புத்தி இப்படி போவுது.அது அது கடலைப் போட்டு பழகிக்கிதுங்க.அதுக்கு இன்னாம்மா போர்டு போட்டு சொல்லித் தரோனும்'

'வாயை மூடு முனியம்மா எனக்கே குழப்பமா இருக்கு நீ வேற'

கொஞ்ச நேரம் கழித்து ரெண்டு இளம் பெண்கள் வந்தனர்.பார்க்க கல்லூரி மாணவிகள் போல இருந்தனர்.

'மேடம் கிட்டு சார் இல்லையா?'

'இல்லை அவர் ஊருக்குப் போயிருக்கார் என்ன விஷயம்'

'சாரு கிட்ட அட்மிஷனுக்கு எங்க பேரு குடுக்கனும்'
'அட்மிஷனா'

'ஆமாம் மேடம் எங்களுக்கும் ரொம்ப நாளா பழகனும்னு ஆசை.ஆனா எப்படி? யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு தெரியலை.சார் ரெண்டு நாளைக்கு முன்ன எங்க காலேஜ் வந்து பழக விருப்பமுள்ளவர்கள் வாங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது மேடம்.
இந்தாங்க எங்களைப் பத்தி டீடெய்ல்ஸ் சார் வந்ததும் போன் பண்ணச் சொல்லுங்க'

மாமிக்கு தலை சுத்தியது.
முனியம்மா வேறு வாயப் பொளந்தபடியே இருந்தா.'இதென்னாம்மா அய்யிரு காலெஜுக்குப் போயி புள்ளைங்களே வரச் சொல்லியிருக்காரு.அங்கன பழகாமயா இங்க வந்து கத்துக்கப் போவுதுங்க' ன்னு சொல்லிட்டுப் போனவ

சாயந்திரம் தன் குப்பத்துல இருந்து ரெண்டு வயசுப் பொண்ணுங்களோட வந்தா.
'யெம்மா இதுக என் சொந்தக்கார புள்ளிங்கதான் அப்பன் ஆத்தா இல்ல.ஆரும் இல்லாம ஏதோ கூலிவேலை செஞ்சி வயித்தக் கழுவுதுங்க இதுகளையும் பழகச் சொல்லி அய்யாவை ஒரு வழி காட்டி உடச் சொல்லுங்க' ன்னா.

மறுநாள் நாலு காலேஜ் மாணவர்கள் வந்தனர்.'மேடம் எங்க பேரையும் சார்கிட்ட குடுத்துடுங்க இந்தாங்க ஃபீஸ் இதையும் குடுத்துடுங்க.எங்களுக்கும் இதுல நெறைய டவுட் இருக்கு அதான் சார் கிட்ட கேட்டு நல்லாப் பழகிக்கலாம்னு வந்தோம்.'னு சொல்லி பணமும் பயோ டேட்டாவும் குடுத்தனர்.

மாமி எங்கிட்ட வந்து ,'தங்கமணி எனக்கு பயமாயிருக்குடீ.படபடன்னு வருது மாமா டூ மச்சா ஏதோ பண்றாருன்னு நெனைக்கிறேன்' னு 'செல்வியில வந்த லதா மாதிரி கையை உதறினாள்.

'மாமா வரட்டும் நீங்க பேசாம இருங்க.அவர்கிட்டயே இது ஞாயமா ன்னு கேப்போம்'

'என்னத்தக் கேக்கறது இந்த வயசுல மனுஷனுக்கு இப்படி புத்தி கெட்டுப் போச்சே.சினிமாவில எதுனாலும் செய்வான் அதைப் போல வாழ்க்கையில முடியுமா'

'டென்ஷன் ஆகாதீங்க மாமி'

'என்னத்தடீ டென்ஷன் ஆகாம இருக்கறது.இதுவரைக்கும் 56 பேர் பேரும் பணமும் குடுத்திருக்காங்க.26 பொண்ணுங்க 30 பசங்க.இதுகளுக்கும் ஏன் இப்படி புத்தியோ.இதுல முனியம்மா வேற குப்பத்து குட்டிங்க ரெண்டைக் கூட்டாந்து ஃபீரியா மாமாவச் சொல்லிக் குடுக்கச் சொல்லுங்கறா. பால்கார கோயிந்து இன்னேரம் ஊர் முழுக்கச் சொல்லியிருப்பான்.கடைக்குப்போனாக்கூட ''மாமி நானும் பேர் குடுக்கட்டுமா' ன்ன்னு கேக்கறாங்க.அவமானமா இருக்கு.
இதுல 'வாங்க பழகலாம் ' பழகச் சொல்லிக் கொடுப்பவர்:கிட்டுமாமா ன்னு போர்டு தொங்க உட்டாச்சு'

'சரி மாமாக்கு என்ன ஐடியாவோ அவர் வரட்டுமே'

'இல்லடீ இதை இப்படியே விட்டா சரிப் படாது.நான் இப்பவே போலிஸுக்கு சொல்றேன் அவா மிரட்டினாத்தான் மாமா க்குச் சரிப்படும்'

'அய்யோ மாமி என்னன்னு தெரியாம அவசரப் படக்கூடாது'

நான் சொன்னதைக் கேக்காம மாமி ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டா.

உண்மையான திருட்டு ,கொலை,கொள்ளை நடந்தாக்கூட ஆடி அசைஞ்சி வரும் போலிஸ் ஏதோ தீவிரவாதியை வளைத்துப் பிடிக்கும் ரேஞ்சுக்கு வீட்டைச் சுற்றி காவல் நிக்க

காலனி மக்கள் ஏதோ சினிமா ஷூட்டிங்க் பார்ப்பது போல வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

முனியம்மாதான் பாவம் ஓடி ஓடி பக்கத்துக் காலனி,ஊருக்கு வெளியே எக்ஸ்டென்ஷன்ல புதுசா வந்திருக்கிற அபார்ட்மெண்ட் எல்லா இடத்துக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை வேலை செஞ்சிக் கிட்டிருந்தா.பக்கத்து ஊருக்குக் கூட மாமி கிட்டயே பைசா வாங்கிப் போயி சொல்லிட்டு வந்ததா வதந்தி.

ஒருவழியா ஒரு சுபயோக சுபதினத்தில் மாமா ஊரிலிருந்து வந்து சேர்ந்தார்.

காத்திருந்த போலிஸ் 'லக்கென்று' பிடித்து ஸ்டேஷனுக்குக் கூப்பிட,

'ஹலோ இன்ஸ்பெகடர் வாட் நான்சென்ஸ் என்னை எதுக்கு ஸ்டேஷுக்குக் கூப்பிடறீங்க.'

'உங்க மேல பப்ளிக் நியூசென்ஸ் புகார் வந்திருக்கு'

'என்னது பப்ளிக் நியூசென்ஸா? யார் குடுத்தது?என்ன விஷயம்?'

ஸ்டேஷனுக்கு வாங்க சொல்றோம் னு கூட்டிப் போய் விஷயத்தைச் சொல்ல மாமா ஒருகணம் ஆடிப் போனார்.

பின்ன சுதாரித்துக் கொண்டு சொன்னார்.

'இன்ஸ்பெக்டர் நான் பழகச் சொல்ல்லித்தரேன்னு சொன்னது உண்மைதான். ஆனா அது சாலமன்பாப்பையா சொன்ன 'பழக' இல்லை.

தமிழில் இப்பல்லாம் நிறைய பேர் பிளாக் ஆரம்பிச்சு பதிவு போட்டு கலக்குகிறாங்க.பதிவர் பட்டறை கூட அடிக்கடி நடக்குது.போன மாசம் சென்னையில் நடந்த பட்டறைக்குப் போன பிறகுதான் அதுல எவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சது.

[ஐஸ்.....ஐஸ்...ஐஸ்....யாருப்பா அது நேரங்கெட்ட நேரத்துல ;)]

ஆனா படிச்சவங்களுக்கே பல பேருக்கு எப்படி பிளாக் ஆரம்பிப்பது தமிழில் எழுதுவதுன்னு தெரியலை.அதான் இதைப் பழகச் சொல்லிக் குடுப்போமின்னு போர்டு போட்டேன்.இது தப்பா'

'ஆனா போர்டுல அப்படியில்லையே' ன்னு இன்ஸ் கேக்க
'ஆமா சார் போர்டுலயே எல்லாத்தையும் விலாவரியா அடிக்க முடியுமா அதான் ஷார்ட்டா அடிக்கச் சொன்னேன்'

மாமாவோட விளக்கத்துக்குப் பிறகு இன்ஸ்பெகடர்,காண்ஸ்டபிள்ஸ்னு எல்லோரும் தங்கள் பேரையும் குடுத்தனர்.

மாமா வீட்டுக்கு வந்ததும் மாமி வாங்கிக் கட்டிக்கிட்டதும் தனிக் கதை.

பாவம் வயசான காலத்துல மாமி வாங்கிக் கட்டிக்கிட்டதைச் சொல்லனுமா?
இப்பவே பதிவு பெரிசாயிடுச்சி. விட்டுடுங்க.

டிஸ்கி:அன்புத் தோழி 'காட்டாறுக்கு 'இந்த பதிவு பரிசு.....

30 மறுமொழிகள்::

delphine said...

சான்ஸே இல்ல கண்மணி...
எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ..ஹ ஹ் அஹ் ஹா ஹா

கண்மணி/kanmani said...

யூ த பர்ஸ்ட்!!!!!!!!
தேங்யூ !!!!

மை பிரண்ட் நீ எங்கே இப்பல்லாம் டாக்டரம்மாதான் முந்திக்கிறாங்க

Anonymous said...

no e-kalappai.

Anonymous said...

எனக்காக ஒரு பதிவு போட்டு அதை எப்ப பரிசாக கொடுக்க போறீங்க????

குசும்பன் said...

சூப்பர்:)))

Anonymous said...

வைகை ஆறு சார்பாக இங்கு எங்கள் கோபத்தை பதிவு செய்கிறோம்!!!

கண்மணி/kanmani said...

அமீரகம் ஈ கலப்பை இல்லைன்னா என்ன இங்கிலிபீஸுல சொல்ல வேண்டியதுதானே பதிவு எப்படின்னு....அவ்வ்வ்வ்வ்

கண்மணி/kanmani said...

காவிரி,கங்கை,வைகை எல்லாத்துக்கும் 100 பின்னூட்டம் என் பதிவுல போட்ட பின்னால பரிசு குடுப்பேன் ;)

Yogi said...

பதிவு சூப்பர்...

என்னங்க கவிதாயினியா மாறினவுடனே ப்ரொபைல் படமெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு..

கண்மணி/kanmani said...

மின்னல் நீ இருக்கியா?

குசும்பா ஆர் யூத பிளாக் ஷீப்....ம்ம்ம்ம்?

கண்மணி/kanmani said...

பொன்வண்டு நன்றி.அப்புறம் உங்க புரோபைல் படம் காப்பியடிச்சி என் மொபைல் வால் பேப்பராக்கிட்டேன்.
கோபம் வரும்போது பாத்தாக்கூட சிரிக்க வைக்கிறான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைச்சேன் முதல்லயே இப்படித்தான் எதாவதா இருக்கும்ன்னு தமிழ் பழகலான்னு சொல்லப்போறார்ன்னு பாத்தா தமிழ் வலைப்பதிவு சொல்லித்தருவார் ன்னு முடிச்சிட்டீங்க... :) ப்ளாக் எல்லாம் ப்லாக் ஆகிடுச்சே

MyFriend said...

:-)))

MyFriend said...

@கண்மணி:

//மை பிரண்ட் நீ எங்கே இப்பல்லாம் டாக்டரம்மாதான் முந்திக்கிறாங்க //

டாக்டரம்மா ரொம்ப ஃப்ரீயா இருக்காங்க.. டாக்டர் டாக்டர், நாளையில இருந்து எனக்கும் நீங்களே ப்ராக்ஸி கொடுத்துடுங்க ப்ளீஸ். ;-)

MyFriend said...

//முனியம்மாதான் பாவம் ஓடி ஓடி பக்கத்துக் காலனி,ஊருக்கு வெளியே எக்ஸ்டென்ஷன்ல புதுசா வந்திருக்கிற அபார்ட்மெண்ட் எல்லா இடத்துக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை வேலை செஞ்சிக் கிட்டிருந்தா.பக்கத்து ஊருக்குக் கூட மாமி கிட்டயே பைசா வாங்கிப் போயி சொல்லிட்டு வந்ததா வதந்தி.
//

;-) இதுதான் டாப். :-)))))

MyFriend said...

சிவாஜி இன்னும் பார்க்காததுனால அது என்ன "பழக"ன்னு தெரியவே இல்ல.

MyFriend said...

கிட்டு மாமாக்கிட்டதான் நீங்க ப்ளாக் எழுதுவது எப்படின்னு கத்துக்கிட்டீங்களா? ;-)

துளசி கோபால் said...

//கட்டைக்குப்போனாக்கூட ''மாமி நானும் பேர் குடுக்கட்டுமா' //

ஙேஙேஙேஙேஙேஙேஙே...............................

கண்மணி/kanmani said...

@ முத்துலஷ்மி
@ துளசியக்கா

தப்பை சரிசெய்துட்டேன்.டீச்சருக்கே இம்போஷிஷன் குடுக்காதீங்க டீச்சர்ஸ்

Anonymous said...

"கண்மணி said...

மின்னல் நீ இருக்கியா?

குசும்பா ஆர் யூத பிளாக் ஷீப்....ம்ம்ம்ம்?"

இல்லை நான் தான் அந்த குசும்பன்

Anonymous said...

இல்லை நான்தான் அந்த குசும்பன்.")))

Anonymous said...

நான் தான் அந்த ஷீப்

குசும்பன் said...

யக்கா எனக்கு ஒரு ஒத்த சுழி கொம்பு பக்கத்தில் ஒ அதுக்கு பக்கத்தில் ள அடிப்பது எப்படின்னு கேட்டா? நீங்க மேலே இருக்கும் கமெண்ட் எல்லாம் நான் போட்டது என்று நினைப்பீங்களா?

Anonymous said...

லாலி பாப்
எனக்கு ஒண்ணூ டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

மைஃரண்ட் நீ இன்னுமா சிவாஜி பார்க்கலை..போ போ சீக்கிரம் பாரு.

கோபிநாத் said...

யக்கோவ்...மாமியை வச்சி அல்வா கொடுத்திங்க இப்போ மாமாவை வச்சி ப்ளாகுக்கே அல்வா கொடுத்துட்டிங்க :)))

கோபிநாத் said...

\\'யெம்மா அங்கவ,சங்கவ ல்லாம் இட்டாந்திட்டியா? எங்கம்மா அவிங்கல்லாம்? அய்யிருக்கு ஏன் புத்தி இப்படி போவுது.அது அது கடலைப் போட்டு பழகிக்கிதுங்க.அதுக்கு இன்னாம்மா போர்டு போட்டு சொல்லித் தரோனும்'\\

யக்கா...நம்ம ஏரியா பாசையில உங்களை அடிச்சிக்கா ஆளே இல்ல :))

பதிவு சோக்கா கீதுக்கா :))

மங்களூர் சிவா said...

கண்மணி டீச்சர் உங்களுக்கு பழகறதுல ஒண்ணும் டவுட் இல்லயே??

மங்களூர் சிவா

காட்டாறு said...

யக்கோவ்... எனக்கே எனக்கா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆனந்த கண்ணீரு கொட்டுதே.... அடே சூப்பரு. ஆனாலும் மாமா இல்லாத சமயத்துல மாமி இப்பிடி போலீஸு வரை போயிருக்க வேண்டாம். இவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம். ;-)

லக்ஷ்மி said...

ஏதேது, உங்க அம்புஜம் மாமி- மாமா காம்பினேஷன் சீதா பாட்டி-அப்புசாமி தாத்தா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கு... சும்மா சொல்லக்கூடாது, ரொம்பவே நல்லா இருக்கு.... நானும் ஆரம்பத்துல என்னவோன்னு நினைச்சு பயந்துட்டேன்....க்ளைமாக்சில் சூப்பர் ட்விஸ்ட் வச்சு பின்னிட்டீங்க.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)