PAGE LOAD TIME

ஒரு 'A' கவிதை

எதிர்பார்ப்பின் ரணங்களும்
காயப் பட்டுப் போன நிஜங்களும்
உன் ஒரு புன்னகையில் சரி செய்யப் படுமென்று
அப்போது நான் அறிந்திராமல் போனேன்

கனவுகளின் விதைப்பில் கனிந்து
நினைவுகளை மட்டுமல்லாது என்னையே முழுவதுமாய்
ஆளுமை செய்து ஈருயிர் ஓருடலாய் என் வாழ்வில் நீ வந்த தருணம்
என் காத்திருப்பின் தவமாகவே உணர்ந்து கொண்டேன்

நெடிய காலங்கள் வலியையும் சலிப்பையும்
மிகுதியாகவே தந்தது எனினும்
எனக்கான சந்தோஷங்கள் உன் வருகைக்குப் பிறகுதான்
உத்திரவாதம் பெற்றன.

கரை உடைத்து ஓடும் பெருவெள்ளம் போல
என் வேதனையின் வைராக்கியங்கள்
சமனப் பட்டுப் போனது உன் சங்கமத்தில் தான்.

மென்மையான உன் ஸ்பரிசத்தின் இதத்தில் கரைந்த போது
என் அரவணைப்பை மேலும் உனக்காக்கி மகிழ்கிறேன்
வாழ்ந்ததற்கான அடையாளமும் வாழ்வதற்கான அர்த்தங்களும்
உன்னைக் கண்ட பிறகுதான் புரிந்தது எனக்கு
டிஸ்கி: இது ஒரு'அம்மா' [AMMA] கவிதை தன் குழந்தையைப் பற்றியது.
அதுதான் சுருக்கமா 'A' கவிதைன்னு தலைப்பு. ஹி..ஹி..;)

15 மறுமொழிகள்::

அபி அப்பா said...

டீச்சர் இது ஏ கிளாஸ் கவிதைன்னு சொல்லலாமே ஏன்னா எப்பவும் போல எனக்கு புரியலை:-))

அபி அப்பா said...

நான் தான் முதல் போணியா? சூப்பர்:-))

முத்துலெட்சுமி said...

வாழ்ந்ததற்கான அடையாளமும் வாழ்வதற்கான அர்த்தங்களும்
உன்னைக் கண்ட பிறகுதான் புரிந்தது எனக்கு//

wow
ரொம்ப நல்லாருக்கு ...இந்த அம்மா கவிதை :)

கோபிநாத் said...

அட்டகாசமான அம்மா கவிதை :)

அருமையான வார்த்தைகள்...

\\வாழ்ந்ததற்கான அடையாளமும் வாழ்வதற்கான அர்த்தங்களும்
உன்னைக் கண்ட பிறகுதான் புரிந்தது எனக்கு\\

எனக்கும் பிடித்த வரிகள்...

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை!

தம்பி said...

நீங்க எழுதினதிலேயே இது ஒண்ணுதான் கொஞ்சம் நல்லாருக்கு.
காமெடிக்கு நடுவில கவிதை வாசிக்கறதுனால உங்க கவிதைய படிச்சா கூட சிரிப்பு வந்திடுது.

mglrssr said...

குசும்பன் பதிவை படிச்சாதான் உங்க கவிதையே புரியுது

மங்களூர் சிவா

Anonymous said...

A [MMA] kavuja superunga

மஞ்சூர் ராசா said...

அப்ப A ன்னு போட்டா நிறைய பேர் வந்து பாப்பாங்கங்கற உங்க யுக்தியை பாராட்டுகிறேன்.

ஓ.. கவிதையை பற்றி ஒண்ணும் சொல்லலேங்கறீங்களா? அது அப்புறம்....

சுல்தான் said...

டீச்சர் கவிதை அருமை.
இதை "கணவருக்கும்/மனைவிக்கும் குழந்தைக்கும்" சிலேடைக் கவிதைன்னு சொல்லலாம்.
விகாரமில்லாத வார்த்தைகள் படிப்பதற்கும் இதமாக இருக்கின்றது.

Raja said...
This comment has been removed by the author.
Raja said...

கவிதை அருமை, அதிலும் தலைப்பில் ஒரு பொடி வைத்திருப்பது நல்ல ரசனை

காட்டாறு said...

//எதிர்பார்ப்பின் ரணங்களும்
காயப் பட்டுப் போன நிஜங்களும்
உன் ஒரு புன்னகையில் சரி செய்யப் படுமென்று
அப்போது நான் அறிந்திராமல் போனேன்
//
சத்தியமான வார்த்தைகள். மழலையின் சிரிப்பில்... சும்மாவா சொன்னாங்க.

chokkanna said...

அட்டகாசமான Aம்மா கவிதை

'மென்மையான உன் ஸ்பரிசத்தின் இதத்தில் கரைந்த போது
என் அரவணைப்பை மேலும் உனக்காக்கி மகிழ்கிறேன்'

'வாழ்ந்ததற்கான அடையாளமும் வாழ்வதற்கான அர்த்தங்களும்
உன்னைக் கண்ட பிறகுதான் புரிந்தது எனக்கு'

cheena (சீனா) said...

அருமையான கவிதை. எளிமையான வரிகள். கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)