PAGE LOAD TIME

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

இப்பல்லாம் எதுக்குத்தான் போட்டி போடுவாங்கன்னு தெரியலை மக்கா
நம்ப ஓட்டைவாய் உலகநாதனுக்கும் காதுகடி கந்த சாமிக்கும் போட்டியா ஒருத்தரு கெளம்பிட்டாரு பாருங்க.

பேரு எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாம்.

அவிக மட்டும்தான் கிசு கிசு சொல்வாங்களா நான் அதைவிட நெறையச் சொல்லுவேன்னு நேரா என்னையத் தேடி வந்துட்டாருன்னா பாருங்க.
அவரைப் பத்திச் சொல்லி வலையில அவரு புகழப் பரப்புனமாம்.

நமக்க இந்த மாதிரி மேட்டரெல்லாம் புடிக்காதுன்னாலும் ஏதோ மக்கா உங்களுக்குப் புடிக்குமேன்னு கேட்டு வச்சதச் சொல்லுறேன்.

1.'மந்திரம்' சொல்லும் பேரு கொண்ட பதிவர் கூடிய சீக்கிரமே மின்னலாம்னு பட்சி சொல்லுதாம்.அப்பவாச்சும் அழுகாச்சியை உட்டுட்டு நல்லா சிரிக்கிறா மாதிரி செய்வாரான்னு கேக்குறாங்கப்பூ

2.சும்மா தைரியமா ஆம்பளை கணக்கா துணிச்சலான கதை கட்டுரையை நிஜ சம்பவம் போலவே எழுதும் அமீரகப்பதிவர் ஒரு வாரப் பத்திரிக்கையில் பாராட்டப் பட்டிருக்கிறாராம். நாமளும் வாழ்த்துச் சொல்லிக்குவோம்.

3.சரம் தொடுக்கும் அக்கா பதிவர் வெளிநாடு போயிருக்காராமில்ல.அங்கிருந்து வெட்டியா நிறையச் சுட்டுக் கிட்டு வந்து படம் காட்டுவாருன்னு பேச்சு அடிபடுது.அப்பால சரம் இப்பல்லாம் தொய்வா இருக்கு நிறையப் பேருக்கு சரியான முகவரி கிடைக்கலைன்னும் பேச்சு.

4.நாலு ஆங்கில எழுத்துக்களைப் பேராக் கொண்ட பதிவர் வலைக்குப் புதுசுன்னாலும் எல்லோரையும் கலாய்ச்சி வம்புக்கு இழுத்து கவனம் பெறுகிறாராம் .ஏதோ நாரதர் கலகம் நன்மையில் முடிஞ்சா சரிதான்.

5.மழைக்காத்தோடு சம்மந்தமுள்ள பதிவர் இப்பல்லாம் இடிக்கிறதேயில்லையாம்.அனானியா வந்தா கும்முறவரு ஏனோ ரொம்ப அடக்கி வாசிக்கிறாராம். பதிவும் போட்றதில்லையாம்.அடுத்த மழைக்காவது மின்னுவாரா?

6. அடிக்கடி காணாமப் போறவங்க பட்டியல் ஒன்னு தமிழ்மண காவல்துறை வெளியிட்டிருக்காம்.அதுல வகுப்பறைக்காரரும்,வைகையிலிருந்து வரும் இன்னொரு பதிவரும்,கச்சேரி வச்சிகளை கட்டுபவரும் ,வெய்யிலடிச்சி மழை பெய்ய வைக்கிறவரும் இருக்காங்களாம்.பாவம் ஆணி நிறையப் போல.

ஓகே நான் கெளம்பட்டுமா மக்கள்ஸ்.அடுத்த AIR மாட்டுன பின்னால வரேன்.

14 மறுமொழிகள்::

அபி அப்பா said...

ஒரு மணியான பதிவர் ராத்திரி 12.00க்கு பதிவு போட்டாலும் அவங்க பாசகார குடும்பம் முழிச்சுகிட்டே இருந்து கும்மி அடிக்குமாம்:-))

மைபிரண்ட் said...

மீ த செகண்டு!

காயத்ரி said...

என்னய பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?

ஜஸீலா said...

நானும் ஆட்டைல இருக்கனா?

மின்னுதுமின்னல் said...

எச்சூச்மீ, என்னய வச்சு காமடி கீமடி பண்ண்னலையே:-))

TBCD said...

நான் வர்ட்டா.....என் பேரை மாத்திக்க போறேன்:-))

பொன்ஸ் said...

யார் அங்கே ஏகாம்பரத்தின் வாயை தைத்துவிடுங்கள்:-))

சின்ன அம்மிணி said...

என்னய பத்தி ஏதும் நியூஸ் இருக்கா

கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி said...
என்னய பத்தி ஏதும் நியூஸ் இருக்கா\\

விரைவில் எதிர்பாருங்கள்.... :)

சின்ன அம்மிணி said...
This comment has been removed by the author.
சின்ன அம்மிணி said...

கோபிக்கண்ணு ,கோபிக்கண்ணு , நல்ல சேதியாப்பாத்து போடுங்க‌

TBCD said...

இந்த பதிவுக்கு சம்பந்தமே இல்லாத என் பேரில், பின்னுட்டம் இட்ட நபருக்கு..(பதிவு எழுதுனவங்களா இருப்பாங்களோ..??) என் கண்டனங்கள்...
இதில் பின்னுட்ட கயமைத்தனம் இருப்பதாக அ.மு.கவில் புகார் கொடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்...

delphine said...

ஒண்னுமே புரியலை கண்மணி... விடையும் கொடுத்திருக்கலாமோ?

காட்டாறு said...

இந்த கிசுகிசு பதிவு நல்லாயிருக்குது அக்கோவ்... ஆனா ராஜேந்திரக்குமார் சொல்லுற மாதிரி 'ங்ஏ' ன்னு முழிக்கிறேன். புதிர் கண்டுபிடிக்க ரெகுலரா தமிழ்மணம் வரணும் போலவே. ;-)

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)