PAGE LOAD TIME

அந்த நொடிகளில்....

கொஞ்சம் முன்புவரைகூட
எதிர்பார்த்திருக்க வில்லை.
ஜில்லென்ற காற்றின் ஈரத்துடன்
மெலிதாக வந்த மண்வாசனை
கட்டியம் கூறியது மழையின் வரவுக்கு.
என்றைக்கும் போலவே உணர்ந்தேன்
உன் புன்னகையின் சிநேகத்தை
ஒரு நொடிக்குள் எல்லாம் மாறுமென்று
சொல்லியிருந்தாலும் நம்பியிருக்கப் போவதில்லை
வெறுமையாய்த் தகித்த தனிமை
அவசியமாகிப் போனது
உன் நினைவுகள் தவிர்த்து
மற்றெல்லாம் மறந்து போய்விட்டது
என்னையே எனக்குப் பிடித்திருக்கிறது
உன் காதலைச் சொன்னபிறகு
சட்டென்று முளைத்த சிறகுகளால்
வானமும் வசப்படுகிறது
பொய்யென்று மட்டும் சொல்லிவிடாதே
நொறுங்கிப் போகலாம் தடயமின்றி.

11 மறுமொழிகள்::

delphine said...

உன் நினைவுகள் தவிர்த்து
மற்றெல்லாம் மறந்து போய்விட்டது//

சூப்பர்!

Anonymous said...

:(

அபி அப்பா said...

டாக்டர் நான் சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா, ஓக்கே, டீச்சர் வர்ர வாரம் பங்ஷனுக்கு ஏற்பாடு ஆச்சாஅ!! தம்பி என்ன பண்ண்னிகிட்டு இருக்க அங்க............................................. நான் எங்க இருக்கேன்!!!! கவிதன்னா எனக்கு அலர்ஜி......

Anonymous said...

கொஞ்சமாப்புரிஞ்சுடுச்சு. ஒரே பீலிங்க்ஸ் ஆப் இண்டியாவா இருக்கு

கோபிநாத் said...

இது உங்களுக்கு :)

இது கவிதைக்கு :(

TBCD said...

உங்க கவிதையிலே சொற்குற்றம்..இருக்கிறது...
கவிதையின் வரைவிலே, இது அனுமதிக்கப்படாது..
அது என்னான்னு கேக்குறீங்களா..
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,

மழையின் வரவுக்கு. என்ற வரியின் கடைசியில், முற்றுப்புள்ளி வந்து ஒரு வரி இடைவெளிவிடவில்லை...அதனால், இந்த எழுத்தை, கவிஜையிலும் சேர்க்க முடியாது என்பதை, பணிவுடன் சொல்லுகிறேன்...

Anonymous said...

இது கவுஜயா?மாதிரியா கோச்சுக்காதீங்க டீச்சர்

Anonymous said...

நாளைக்கு என்ன மாதிரி டெம்ப்ளேட்டுங்க

Anonymous said...

குசும்பா எதிர் கவுஜ ரெடியா

நிலா said...

எனக்கு கவிதைல்லாம் புரியாது. கண்மனி அத்தை வீடு எப்டி இருக்குன்னு பாக்க வந்தேன்.

நல்லா இருக்கு அத்தை,

கண்மணி/kanmani said...

நிலாக் குட்டி ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மாதிரி 1000 வீடு மாத்திய [லூசு] கண்மணி நான் ஹாஹா
போகட்டும் அத்தை குட்டீஸ் க்காக ஒரு பிலாக் வச்சிருக்கேன் போய்ப்பாரு

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)