PAGE LOAD TIME

சி.தா.அ.பா.பெ?ஆ?.வலையுலகப் பட்டிமன்றத்தின் [முடிவுப்] பகுதி..3.தீர்ப்புங்கோ

தருமி: பட்டி மன்றத்தின் இறுதி அமர்கைக்கு வந்து உட்கார வந்தவர் எட்டி அந்த வெள்ளிச்சொம்பை எடுத்து, coffee with anu-ல் அனு கப்பில் இல்லாத காப்பியைக் குடிக்கிறது மாதிரி அவரும் காலிச்சொம்பில் தண்ணீர் குடிக்கிறார்.
நல்லா வெய்ட்டாதான் இருக்கு; முடிஞ்சா லவட்டிடணும்னு மனசுக்குள்ள நினச்சிக்கிறார். இந்தப் பையன் கோபிய எப்படியாவது இடத்தைவிட்டுக் கிளப்பிடணும். அமைப்பாளர் கண்மணி ஏதோ விடீயோ எடுக்கப் போறாங்கன்னு சும்மானாச்சுக்கும் சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா இங்க ஒரு போட்டோ கூட யாரும் எடுக்கலை. –இப்படியெல்லாம் மனசுக்குள் தருமி ரீல் விட்டுக்கிட்டு இருக்கும்போது
சைடுல இருந்து கண்மணி ‘ம்ம்… ம்.. ஆரம்பிங்கன்னு’ சைன் காமிக்கவே, வேறு வழியில்லாம செருமிக்கிட்டு ஆரம்பிக்கிறார்.

மக்கள்ஸ்,
டாக்டரம்மா நேரே தியேட்டர்ல இருந்துவந்தவங்க ஆண்கள்தான் ரொம்ப பாதிக்கப் படுறாங்கன்னு சொல்லிட்டார். குரூப் டான்ஸ், குத்தாடம் எல்லாத்தையும் தாக்கிட்டார். ஆனால் அவர் சொன்னதில மொதல்ல சொன்னாரே, ‘சினிமாவினால் சமுதாயத்திற்கு மொத்தமும் பாதிப்புத்தான்.' அத நான் முழுமையா ஒத்துக்கிறேன்.
அடுத்து, நம்ம கதிர் தம்பி பேசப்போறார். என்னதான் தம்பி சொல்லுதுன்னு மொதல்ல கேட்டுக்குவோம். வாங்க தம்பி...

.கதிர்
சினிமாவினால் (தமிழ்) சினிமாவினால் அதிகம் பாதிக்கப்படறது ஆண்களா பெண்களான்னு கேட்டுருக்காங்க.இந்த தலைப்பு ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சு போச்சு. ஆண்கள பத்தி எழுதினா நிறைய விஷயங்களை சொல்லலாம் ஆனா அதிகம் எழுத வாய்ப்பில்லாத இவங்கள பத்தி வேணும்னே வாதாட வேணும்னே எங்ககிட்ட குடுத்துட்டாங்க. இதுலருந்தே தெரிலயா பயங்கரமான ஆளுங்க தலைப்பை தேர்ந்தெடுத்தவங்கன்னு. என்னோட வாதம் என்னன்னா சினிமாவினால பெண்கள் பாதிக்கப்படலன்னுதான் சொல்லுவேன். ஏன்னா பாதிப்ப்போட அறிகுறி எல்லாமே முத்தி போய் இருக்கு இந்த நேரத்துலபோய் அதைபாதிப்புன்னு சொல்லக்கூடாது.என்னைக்கேட்டிங்கன்னா சினிமாவினா அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள்தான் சத்தமா சொல்லுவேன். ஏன் சினிமா ரேஞ்சுக்கு போறிங்க இவங்க சீரியல் பாக்கற மேட்டர எடுத்துகிட்டிங்கன்னாவே சுலபம்மா தெரிஞ்சிக்கலாம். தமிநாட்டுல நாலஞ்சு தொலைக்காட்சிகள் நாளுக்கு பதினாறு மணி நேரம் உலக மகா இ(ழி)ழுவையான சீரியல்கள போட்டு பொழப்பு நடத்திகிட்டு இருக்காங்கன்னா என்ன காரணம்னு நீங்களேபுரிஞ்சிக்கலாம்.வீட்டுக்கு வீடு விளக்கு ஏத்துவாங்களோ இல்லயோ ஆனா குலவிளக்கு பாக்காம இருக்க மாட்டாங்க.சரி அந்த சீரியல்லயாச்சும் பெண்கள ஒழுங்கா காமிக்கறாங்களான்னு கேட்டா அதுவும் இல்ல. கல்யாணம், கள்ளப்புருசன்ல இருந்து கஞ்சா கடத்தறது வரைக்கு பெண்கள் செய்யறதா காட்டுறாங்க.
அங்க கூட ஆம்பளைங்களுக்கு வேலையே கிடையாது. அஞ்சு நிமிசத்துக்கு மேல ஆண்கள் வசனம் பேசற மாதிரி எதாச்சும் ஒரு சீன் பாத்திருந்திங்கன்னா அது ரொம்ப அபூர்வம்.ஒரு ரசிகன் நடிகனுக்கு கட் அவுட் வைக்கிறதும் பாலாபிஷேகம் ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறையும் மூணு வருஷத்துக்கு ஒரு முறையும்தான் நடக்கும் ஆனா இவங்க சீரியல் பாக்காத நாள் உண்டா மூக்கை சிந்தாத நாள் உண்டா? தமிழ்நாட்டுல நூத்துக்கு 90 சதவீதம் பேர் தினமும் அழுவற நோயால பாதிக்கப்பட்டுருக்காங்கன்னு குழந்தைகள கேட்டாகூட சொல்லிடும்.
ஒருத்தருக்கு விட்டு விட்டு வியாதி வரும, வந்து போயிடும். நிரந்தரமா இருக்காது. இன்னொருத்தருக்கு வியாதி இருக்கா இல்லையான்னே தெரியாத அளவுக்கே முழுக்க முத்தி போயிருந்துச்சின்னா அவங்கள பாதிக்கப்பட்டவங்கன்னு சொல்ல முடியுமா நடுவர் அவர்களே
!
தருமி: இப்ப என்னதான் சொல்றாரு… வியாதி அவங்களுக்கு முத்திப் போச்சு .. இனிம அதப் பத்தி பேசுறது வேஸ்ட் அப்டின்றாரோ?

நதியா தொங்கட்டான், ஜிமிக்கி, குஸ்பு பொடவை, சிம்ரன் ஜீன்ஸ்னு சொல்லி வீணாப்போன துணிகள ஈசியா பேர் வச்சி விக்கிறானுங்களே கடைக்காரனுங்க. பெண்கள் கொஞ்சம் விழிப்பா இருந்தாங்கன்னா இவங்களோட கணவர்களின் பர்சாச்சும் மிஞ்சுமில்ல

.தருமி : அட! நீங்ககூட தான் இப்ப கொஞ்ச நாளா முழுக்கை பனியன் போட்டுக்கிட்டு அதுக்கு மேல சட்டை போட்டுக்கிட்டு சூப்பர் மேன் ரேஞ்சில அலைஞ்சீங்க …கேட்டா, தனுஷ் ஸ்டைல் அப்டின்றீங்க .. காப்பியடிக்க வேற ஆளே கிடைக்கலையா, சாமி?
தம்பி:
இந்த சினிமா பாத்து பாத்து பெண்கள் மேக்கப், சிகையலங்காரம், நக அலங்காரம், முக அலங்காரம், உடையலங்காரம், இப்படி இத்தனை அலங்காரம் பண்றதுனால எது உண்மையான அழகுன்னு தெரியாம எத்தனை சிங்காரங்கள் பல்பு வாங்கியிருக்காங்கன்னு கணக்கெடுத்தோம்னா எண்கள் பத்தாது.நீங்க எங்கிட்டாச்சும் ஆண்களுக்குன்னு அலங்காரக்கடைய பாத்து இருக்கிங்களா? இப்ப ஒவ்வொரு நகரத்துலயும் தெருவுக்கு அஞ்சாறு பியூட்டி பார்லர திறந்து வச்சு பெண்கள மேக்கப் போடறேன்னு ஏமாத்திகிட்டு இருக்காங்க. ஏமாந்துகிட்டும் இருக்காங்க. இதுல வேற போர்டுல "பெண்கள் மட்டும்னு" கொட்டையா போட்டுருப்பாங்க. ஏன்னா அவங்கள மட்டும்தான் சினிமா பேர சொல்லி ஏமாத்த முடியும். இதுலயும் யார் ஏமாத்தறாங்கன்னா பெண்கள் ஏமாந்து போறதும் பெண்களும்தான்.

தருமி: உங்களுக்குத் தெரியுமா .. இப்போ ஆண்களுக்கும் அழகு பார்லர் வச்சாச்சு … அதான் கலர் கலரா தலைமுடிய மாத்திக்கிறீங்களே .. கண்ணாடி வீட்ல இருந்துகிட்டு கல்லெறியாதீங்க,
தம்பி
உங்களுக்கு தெரியுமா நடுவர் அவர்களே!வாரத்துக்கு ஒருமுறை நகத்தை சுத்தப்படுத்தி "அழகா" வெட்டி விடுறதுக்கு 200 ரூபாயாம். கேட்டா நகம் வளர்க்கறதுல கலை இருக்காம். விட்டா வாஸ்துபடி வெட்டுவாங்க போலருக்கு. நானும் யோசிச்சிருக்கேன் நகம் வளர்க்கறதுல என்னடா கலை இருக்கும்னு, இன்னிவரைக்கும் யோசிச்சிகிட்டுதான் இருக்கேன். விலைதான் கண்ணுக்கு தெரிஞ்சிது.இந்த காலத்துல சினிமால கூட பெண்கள அலங்காரத்துக்குதான் வச்சிருக்காங்களே தவிர நடிக்கறதுக்காக இல்ல. அபூர்வமா எப்பவாச்சும் "நடிச்சி" வந்திருக்காங்கன்னா அது இயக்குனரோட படமா இருக்கும்.இப்பக்கூட ரெண்டு அப்பாவி நடிகர்கள் பாதிக்கப்பட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் சுத்திகிட்டு இருக்காங்களாம்.
தருமி: இல்லியே .. லேட்டஸ்ட் தகவல் படி அதுல ஒருத்தர் ஹனிமூன் போய்ட்டாருங்க … தெரியாதா?

அதுல ஒருத்தருக்கு சினிமால கூட நடிக்க தெரியாது. நிஜத்துல நாடகமாடறார்னு சொல்றது நம்பற மாதிரியா இருக்கு?

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. வாழ்க்கையில ஒரே ஒரு பொய் சொல்லணும்னு ஆசைப்பட்டிங்கன்னா ஆண்கள்தான் பாதிக்கப்படறாங்கன்னு தீர்ப்ப சொல்லுங்க. இல்ல, என்னால சாகற வரைக்கும் பொய்யே சொல்லமுடியாதுன்னு கொள்கைல உறுதியா இருந்திங்கன்னா உண்மைய சொல்லிருங்க.இந்த உண்மைய சொல்றதுனால உங்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள் வரலாம்.சத்தியவானுக்கு உண்மைதான் முக்கியம்முக்கியம்முக்கியம்னு மூணுமுறை "உண்மைய சொல்லி" விடைபெறுகிறேன்.

தருமி:எப்படியோ அவர் அடிச்ச சில கோல் சேம் ஸைடு கோல்களா ஆகிப் போச்சு. கடைசியா மூணுதடவைன்னு ஏலம் வேற விட்டுட்டு போயிருக்காரு …அடுத்து நம்ம குசும்பன் வர்ராரு .. என்ன குசும்பு பண்ண இருக்காரோ .. வாங்கய்யா, குசும்பரே
குசும்பன்:குசும்பன்:
வணக்கம் வணக்கம்பசங்க இருக்கானுங்களே அவனுங்க விவரமானவங்க அவ்வளோ சீக்கிரம் கெட்டு போக மாட்டானுங்க, ஆனா இந்த பொண்ணுங்க அனைத்திலும் வீக், கொஞ்சம் கூட யோசிக்காதுங்க பழமொழி கூட இருக்கு பெண் புத்தி பின் புத்தின்னு. பசங்க சினிமா பார்த்து எல்லாம் கெட்டு போக மாட்டானுங்க இந்த பொண்ணுங்கள பார்த்துதான் கெட்டு போவானுங்க.ஒரு படத்துக்கு போனோம் என்றால் வெளியே வரும் பொழுதே அந்த படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துடுவானுங்க பசங்க, ஆனா பொண்ணுங்க ஏங்க அந்த ஹீரோயின் பஸ் ஸ்டாப்பில் நிற்க்கும் போட்டு இருந்த சுடிதார் நல்லா இருந்துச்சு, ஹீரோயின் அண்ணி கட்டி இருந்த புடவை சூப்பர் அதுபோல ஒன்னு வேண்டும் அது இதுன்னு கேட்பது பெண்கள் தான்.
"சொல் பேச்சு கேளாமைக்கு" "விதண்ட வாதத்துக்கு" எல்லாம் மறு பெயர் பெண்கள்.
ஆதாம் ஏவாள் கதைய எடுத்துக்குங்க ஆதாம் சிவனேன்னு ஜாலியா ஷேம் ஷேம் பப்பி ஷேம்ன்னு சுத்திக்கிட்டு இருந்தான் ஆனா பாருங்க அவன கூப்பிட்டு அந்த ஆப்பிள பறி, பலா பழத்த பறின்னு கடவுள் பேச்ச மீற வச்சது யாரு ஏவாள்தானே!!! இப்படி ஈசியா சபல படுவது , கெட்டுபோவது எல்லாம் இந்த பெண்கள்தான்.பெண்கள் கெட்டு போகாம இருக்கனும் என்றால் பெரிய பிரிஜில் தூக்கி உள்ள வச்சிட வேண்டியதுதான் என்று தீர்பு சொல்லாமல், நல்லா தலையில் நங்குன்னு குட்டி பொண்ணுங்களுக்கு புத்தி சொல்லும் படிஆம்பிள்ளை சிங்கம் தருமி அய்யாவை கேட்டுக்கிறேன்.

தருமி:
நல்ல வேளை .. இந்த பட்டிமன்றம் நிஜமாவே ஒரு மண்டபத்தில நடந்திருந்தா குசும்பன் பேச்சுக்கு மக்கள் அவரு முதுகில டின் கட்டியிருப்பாங்க .. பெண்புத்தி பின்புத்தி அப்டின்றாரு .. விதண்டாவாதக்காரங்க அப்டின்றாரு .. நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு .. தங்கமணி வேற இங்க உக்காந்துகிட்டு இருக்காங்க .. நீங்க சொன்னது சரின்னு வீட்டுக்குப் போனா அங்க சாப்பாடு கிடைக்குமோ .. என்னவோ … வேண்டாங்க இந்த விளளயாட்டுக்கு நான் வரலை ..

கடைசியா .. லேட்டா ஆனா லேட்டஸ்டா வரப் போறாங்க நம்ம பதிவுப் புயல் கண்மணி … அவங்க சைடு கேப்போம்.வாங்க’ம்மா, வாங்க
கண்மணி:

அய்யாவுக்கு வணக்கம் சொல்லிகிறேங்க.இப்ப பேசுன குசும்பனும் தம்பியும் அறியாப் புள்ளைங்க.அதான்சினிமா மோகத்துல கெட்டுப் போயி பாவனா நமீதா ன்னு ஜொள்ளு விடறாங்க.எங்க பாவனாவோ நமீதாவோ கட்டிக்கிட்டு ஒரு மாசம் குடும்பம் நடத்தச் சொல்லுங்க பார்ப்பம்.இதே மூக்காயி முனியம்மா ன்னா கல்லானாலும் கணவன் ஃபுல் பகார்டி அடிச்சாலும் புருஷன்னு பொறுத்துகிட்டு வாழும்.
தருமி: அது ஏங்க பக்கார்டியா இப்ப வம்புக்கு இழுக்குறீங்க … அதோடு ஒரு பாய்ண்ட் கிளியர் பண்ணிருங்க .. மூக்காயியும் முனியம்மாவும் பக்கார்டி அடிச்சிட்டு புருஷனை அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்கன்னு தானே சொல்றீங்க ?

நாங்க பெண்கள் சினிமா பாத்து புடவை,நகைன்னு அந்த மாடல்ல வாங்கினாலும் பொறுப்பா பொருளைச் சேர்த்து குடும்பம் நடத்துவோம்.
ஆனா இந்த ஆண்கள் தங்களோட தலைவர் பிறந்த நாள் வந்தா கையில காசு இல்லைன்னாலும் நகை நட்டை வித்து பாலாபிஷேகம் பண்ணுவாங்க. பிரியாணி போடுவாங்க.
தருமி: நாலு பேத்துக்கு நல்லது பண்ணினா எதுவும் நல்லதுதானங்க ! அதுவும் பிரியாணி பண்ணினா …?!

இன்னைக்கு எந்த கொலை,கொள்ளை னு பார்த்தாலும் சினிமாவப் பாத்து செஞ்சேன்னுதான் குற்றவாளிங்க சொல்றாங்க.ரிலீஸாகும் எல்லாப் படத்துலயும் வில்லனா வர்ராது ஆம்பளைங்கதான்.அப்படி பொம்பளைய வில்லியாப் போட்டாலும் அவங்க திட்டம்லாம் சும்மா மாமியார் மருமக ரேஞ்சுதான்.
கோயிஞ்சாமியக் கட்டுனாலும் பொண்ணுங்க அஜீத்தையேக் கட்டுன மாதிரி பாசமா இருக்கும்

.தருமி: நீங்க இப்ப யாரை கோயிஞ்சாமின்னு சொல்றீங்கன்னு தெரியலையே …!

ஆனா ஆண்கள் அழகான பொண்ணைக் கட்டினாலும் 'f ' டிவில வர்ர ஆளுங்களைப் பார்த்து ஜொள்ளுவிடுவாங்க.பெண்களால் அதிக பட்சம் புடவை,நகைன்னு பணம் மட்டும் தான் செலவு.ஆண்கள் தான் சினிமாவால் பாதிக்கப் பட்டு அலை பாயுதே மாதிரி திருட்டுக் கல்யாணம்,நூறாவது நாள் மாதிரி கொலைகள் னு வீணாப் போகிறாங்க.பெண்கள் சினிமா ஆசையிருந்தாலும் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளிய வரும்போதே சினிமாவை மறந்துட்டு வீட்டை நினைக்க ஆரம்பிச்சிடுவாங்க.
சீரியல் பாத்து அழுதாலும் மூக்கை சிந்திட்டு அடுத்தா வேளை 'புவ்வா' பொம்பளைங்கதான் சமைச்சிப் போடனும்.பாவனாவா வந்து சமைக்குமா .. .இல்லை நமீதா வந்து ஊட்டிவிடுமா?

தருமி:ஏன் .. எதுக்கெடுத்தாலும் அந்த ரெண்டுபேரையே வம்புக்கு இழுக்குறீங்க ? பாவங்க … சின்னப் புள்ளைக அதுக ..!

ஆனால் ஆண்கள் ரசிகர் மன்றம்,தலைவர் பட ரிலீஸ் அது இதுன்னு அந்த மாயையிலேயே இருப்பாங்க.முக்கால்வாசி ஆண்கள் தன் ஆதர்ச நடிகர் பேரோட தன் பேரை இணைச்சு வச்சிக்கிற மாதிரி எந்த பெண்ணாவது நடிகை பேரோட தன் பேரை சேத்து வச்சிக்கிறாளா?

தருமி: நல்ல கேள்விதான் இது .

முடிவாக,பெண்களுக்கு சினிமா ஒருபொழுது போக்கு சாதனம் மட்டுமே.ஆனால் ஆண்களுக்கு அவர்கள் வாழ்க்கையையே திசை திருப்பும் ஊடகமாகவும் பெரும்பாலும் அமைந்துவிடுகிறது.இதுக்கு மேல பாதிப்பு யாருக்குன்னு நடுவருக்கு புரியலைன்னா நான் எங்கன போய்ச் சொல்ல?

தருமி: ஆக எனக்குப் புரியலைன்னு நீங்க தீர்ப்பு சொல்லிட்டீங்க .. இல்ல ?அப்பா! மழை பெஞ்சி ஓய்ஞ்சது மாதிரி இருக்கு.இவ்வளவு பெரிய மழை பெஞ்சதுக்குப் பிறகு நானென்ன பெருசா சொல்லிறப் போறேன். அப்படியே ஏதும் சொன்னாலும் ஒரு வெள்ளி சொம்புக்குப் பக்கத்தில ஒரு நெளிஞ்ச பித்தளைப் சொம்ப வச்சது மாதிரு இருக்கப் போகுது. இருந்தாலும் நடுவர்னு உக்காந்துட்டு ஏதாவது சொல்லணும்லா ..


பேசினவங்க பாய்ண்டுகளில எனக்கு ஸ்ட்ராங்கா தெரிஞ்ச ரெண்டு மூணு பாய்ண்ட் மட்டும் பார்ப்போமா .?
ஜெஸிலா: எல்லாப் படத்திலும் ஒரு கவர்ச்சி ஆட்டமிருக்கும் அதை யாருக்காக வைக்கிறாங்க?ஆண்களுக்குப் பிடிக்கிற மாதிரிதானே படத்தையே அமைக்கிறாங்க.
இது ரொம்ப நியாயமான விஷயமா தோணுது .. தாய்க்குலத்துக்காக செண்டிமெண்ட் வச்சிருக்கோம் அப்டின்னு டைரடக்டர்கள் சொல்றதுண்டு. இருந்தாலும் நம்ம படங்களின் கதைகள் ஆணாதிக்க விஷயமா இருக்கிறதோட, எடுக்குற படம் மொத்தமும் ஆண்களைத்தான் முதன்மையா குறிவச்சி எடுக்கப் படுதுன்றது உண்மை. அப்டின்னா, பாதிக்கப்படுறதும் அவங்களாத்தானே இருக்கணும்.
பெண்கள் சினிமா பார்க்கும்போது ஆண்களை விடவும் படத்தோடு ஒன்றி உணர்ச்சி வசப்படலாம். ஆனா அதுக்குப் பிறகும் அத மனசுல சுமந்துகிட்டு இருக்கிறது ஆண்கள்தான் அப்டின்னு கண்மணி சொன்னது மாதிரிதான் நடப்புல இருக்கு; இல்லீங்களா?
ஆனால் பாருங்க, நம்ம கோபி ஒரு பாய்ண்ட் சொன்னாரு.
கோபிநாத்: எம் ஜி ஆரை திரையில் பார்த்தே எத்தனை பெண்கள் ஓட்டு போட்டுருப்பார்கள்.
எம்.ஜி.ஆர். மாயை எல்லாத்துக்கும் இருந்தாலும் தாய்க்குலத்துக்கு அந்த மாயை கொஞ்சம் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை வச்சிப் பார்த்தா பெண்கள் மேல சினிமாவின் தாக்கம் அதிகம் அப்டின்றது சரியாயிடுது.
அப்போ டாக்டர் சொன்னது மாதிரி சினிமாவினால் சமுதாயத்திற்கு மொத்தமும் பாதிப்புத்தான் அப்டின்றதுதான் சரியோன்னு தோணுது. சரி, அப்படித்தான் ஆணென்ன, பெண்ணென்ன இந்த விஷயத்தில ... நம்ம ஊர்ல சினிமாவின் தாக்கம் அப்டின்றது ரெண்டுபேருக்குமே பொதுதான் அப்டிங்கிற முடிவுக்கு வந்தேன். ஆனா, பாருங்க, அந்த நேரத்தில கண்மணி ஒண்ணு சொன்னாங்க ...கண்மணி:ஆண்கள் தன் ஆதர்ச நடிகர் பேரோட தன் பேரை இணைச்சு வச்சிக்கிற மாதிரி எந்த பெண்ணாவது நடிகை பேரோட தன் பேரை சேத்து வச்சிக்கிறாளா?இதுக்குப் பதில் என்னன்னு யார்தான் சொல்ல முடியும்? அப்படியெல்லாம் இல்லைன்னு யாராலும் சொல்ல முடியாதில்லையா?
இப்போ நாந்தான் இருக்கேன். இந்த வெள்ளி சொம்பு வழக்கமா நான் தீர்ப்பு சொல்றப்போவெல்லாம் எங்கிட்ட இருக்குன்னு வச்சுக்கங்க ..
கண்மணி (சைடு ஸ்க்ரீன்ல இருந்து): ஹலோ! இந்த விளையாட்டெல்லாம் வேணாம். அப்ப இருந்தே பாத்துக்கிட்டுதான் இருக்கேன். கண்ணு சொம்பவிட்டு அகல மாட்டேங்குது .. விட்டால் சொம்ப லவட்டிக்கிட்டே போயிடுவீங்க போல … நானே கஷ்டப்பட்டு எங்க அம்புஜம் மாமிகிட்ட தலைகீழா நின்னு ஓசி வாங்கிட்டு வந்திருக்கேன் ஒரு பந்தாவுக்காக .. பொழப்ப கெடுத்துருவீங்க போல ..
தருமி: இல்லீங்க .. நான் என்ன சொல்ல வந்தேன்னா .. சொம்பு…
கண்மணி: சொம்ப விட்டுட்டு வேற பேச்சு பேசுறீங்களா ..
தருமி(இப்போ கூட்டத்தைப் பார்த்து): சினிமாவின் அகலமான தாக்கம் பெண்களிடம்தான்; (கோபி, அபி அப்பா, குசும்பன் விசில் சத்தம் காதைத் துளைக்குது)
ஆனால், ஆழமான தாக்கம் ஆண்களிடம்தான். ஆண்களில் சிலரிடமே அதன் தாக்கம் இருந்தாலும் அவர்களிடம் அது மிக மிக அதிக அளவு இருக்கிறது.
அதனாலே, மக்களே ..

சினிமாவின் தாக்கம் கொஞ்சூண்டு அதிகமா இருப்பது [சொம்பிலதான் ..சாரி..சாரி.]. ஆண்களிடம்தான் என்று சொல்லி தீர்ப்பளிக்கிறேன்.

(தாய்க்குலத்தின் குலவை சத்தம் ஒலிக்க... பட்டிமன்றம் இனிதே முடிவுக்கு வருகிறது...)>

25 மறுமொழிகள்::

Anonymous said...

அப்பாடி ஒரு வழியா முடிச்சாங்களே நாளைக்கு கலைஞர் டி.வி.யில மொழி பாக்கனும்

சென்ஷி said...

:)

பட்டிமன்றம் இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சு போச்சா..

ஆனாலும் தருமி சார் இது ஒருதலைபட்சமான தீர்ப்புன்னு நான் சொன்னா நீங்க கோச்சுப்பீங்களா..

வாதத்துல கோபி, மங்கை அக்கா இவங்க பாயிண்ட்ஸ் அபாரமா இருந்தது.

புதிய முயற்சிக்கும், இனி எடுக்கப்போகும் அனைத்து நல்ல முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்..

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

கண்மணி said...

அடப் பாவி சென்ஷி மங்கை அக்கா வாதம் நல்லாயிருந்ததா?
அவ்வ்வ்வ்வ்வ் அவுங்க பேசவே இல்லை :((

கண்மணி said...

நீ 'ரிப்பீட்டேய்' போடு போதும்
அதான் உனக்கும் உன் கண்ணுக்கும் நல்லது

சென்ஷி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

டைப்பிங் மிஸ்டேக்ல கண்மணி அக்கா மங்கை அக்காவாகிடுச்சு..
இதுக்கு போய் கோச்சுக்கலாமா.....

ஒத்துக்கறேன்.. இப்ப ஒத்துக்கறேன்..

மங்கை அக்கா சாரி,,, கண்மணி அக்கா பேச்சு நல்லாருந்தது...


ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

அபி அப்பா said...

நானும் ஓத்துகறேன் தீர்ப்பை, ஆனாலும் நான் எங்கே தலைப்பை மீறி போனேன் என்பதை தெளிவிக்காமல் போன தருமி அய்யா நீங்க எங்க இருக்கீங்க?? சொல்லுங்க:-))

கோபிநாத் said...

\\சினிமாவின் தாக்கம் கொஞ்சூண்டு அதிகமா இருப்பது [சொம்பிலதான் ..சாரி..சாரி.]. ஆண்களிடம்தான் என்று சொல்லி தீர்ப்பளிக்கிறேன். \\

:-(((

கோபிநாத் said...

தமிழ்மணத்தில் புதிய முயற்சியாக இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்திய கண்மணி அக்காவிற்கும் கலந்து கொண்ட அனைத்து பதிவர்களுக்கும் பாரட்டுக்கள் :)

கோபிநாத் said...

\அபி அப்பா said...
நானும் ஓத்துகறேன் தீர்ப்பை, ஆனாலும் நான் எங்கே தலைப்பை மீறி போனேன் என்பதை தெளிவிக்காமல் போன தருமி அய்யா நீங்க எங்க இருக்கீங்க?? சொல்லுங்க:-))\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

யக்கோவ்...முதல்ல அபி அப்பாவுக்கு தனி பட்டிமன்றம் நடத்துங்க

கும்மி டயர்ட் ஆனவன் said...

இப்ப கும்மலாமா..?

delphine said...

அது சரி கண்மணி.. நடுவருக்கு என்ன பரிசு?..இவ்வளவு பொருத்தமா (அபத்தமா) முடிவு சொன்னதுக்கு...

குசும்பன் said...

வெளிநடப்பு செய்கிறேன்,

எக்ஸ் கூயுஸ் மி ஜென்டில் மேன்
இந்த தருமி சார் வூட்டுக்கு போகனும் கொஞ்சம் இந்த அட்ரெஸ் எங்க இருக்குன்னு சொல்றீங்களா பிளீஸ்.
(வடிவேல் ஜோக் மாதிரிதான்)

தருமி said...

//இவ்வளவு பொருத்தமா (அபத்தமா) முடிவு சொன்னதுக்கு...//-டெல்பின்

//தருமி சார் வூட்டுக்கு போகனும் //-குசும்பன்.
அபிஅப்பா வேற கெடு குடுத்திருக்கார்

ஒரு சொம்புக்கு ஆசைப்பட்டு சரின்னேன் . சொம்பு கிடைக்கலை. அதுகூட பரவாயில்லை. இப்போ இப்படி கொலவெறியோடு சுத்துறவங்கள நினச்சா பயமால்ல இருக்கு .. :(

கும்மி said...

இதுக்கு நாங்க ஆடினதே நல்லா இருந்திச்சு...

மஞ்ச சட்டை said...

ஆமாம், தீர்ப்புல என்ன பத்தி சொல்லாத தருமி அவர்களை நான் கண்டிக்கிறேன்..

மை பிரண்டு said...

ஆமாம், சித்துவ சொல்லாத தீர்ப்பும் ஒரு தீர்ப்பா...என் கண்மனி சித்துவை அவாய்ட் செய்த ஐ.பெல்க்கு கண்டனங்கள்..

அபி said...

லுசாப்பா நீ...திருப்பி திருப்பி சொன்னதயே சொல்லுற..

அபி அப்பா said...

அப்படி தான் இப்போ ஆக்கிட்டாங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஸ்பெனர் said...

யாரக்காச்சும் எங்கயாச்சும் டைட் வைக்கனும்மா..

திருப்புளி said...

எங்கயாச்சும் ஸ்க்ரு கழண்டுறுக்கா..

அபி அப்பா said...

ஆளை விடுங்க சாமி நான் வரல ஆட்டதுக்கு...

அட்ரஸ் said...

அட்ரஸ் இல்லாதவன் எல்லாம் அட்ரஸ் கேக்குறான்பா.. :)))))

அட்ரஸ் கேக்காதவன் said...

இருக்கே அவனுக்கு அட்ரஸ்

குசும்பு@ஆல்பிளேசஸ்.காம்

டாம் பூனை said...

ஆமாம்...அடரஸ் இருக்கு..ஆனா முஞ்சி தான் என் முஞ்சி....

குசும்பு பண்ணாதவன் said...

முஞ்சி என்னாவா இருந்தா என்னா ஜொள்ளு வழியிறது வாயிலே தானே..என்ன ஜொள்ளுரீங்க...

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)