PAGE LOAD TIME

அசினுக்கு அப்பாவாக...

அசினுக்கு அப்பான்னா சும்மாவா?ஸ்ரேயாவுக்கு பட்டிமன்ற ராஜா அப்பாவா வந்த பிறகு சினிமாவுல அப்பா வேஷத்துக்கு செம கிராக்கியாம்.

[அப்படியாச்சும் அந்தப் புள்ளைங்கள கிட்டக்க நின்னு பாக்கலாம்.ஆறுதல் சொல்ற மாதிரி தொட்டுப் பேசலாம்.இதெல்லாம் வேனுமின்னா அப்பாவா இருக்க கசக்குமா?]

என்னங்க ஒன்னும் புரியலையா?
இப்படி அம்புஜம் மாமி சொன்னபோது முதல்ல எனக்குந்தான் புரியலை.பின்னதான் தெரிந்தது கிட்டுமாமாவுக்கு ஒரு படத்துல அசினுக்கு அப்பாவா நடிக்க சான்ஸ் கிடைச்சிருக்காம்.

பிரமிட் நட்ராஜன் கம்பெனியின் படமாம்.அவரே பெரும்பாலும் அப்பாவா நடிச்சுடுவாரு.என்னமோ தெரியலை புரோடக்ஷன் மேனேஜர்கிட்ட சொல்லி அப்பாவுக்கு நல்ல மூஞ்சியா தேடுன்னாராம்.

அவரு நம்ம கிட்டு மாமாவோட நண்பர் என்பதால் மாமாவுக்கு அடிச்சது சான்ஸ்.

ரெண்டு நாள் கழித்து ஸ்டுடியோவுல இருந்து கார் அனுப்பியிருந்தாங்க.

'தங்கமணி அப்பா வேஷத்துக்கு கம்பெனி காருடி அப்ப நல்ல வெயிட்டான ரோல்தான் மாமாவுக்கு' ன்னு மாமிக்கு சந்தோஷம்.

அசின்,விக்ரம் எல்லாம் நடிக்கிறாங்க படத்து பேரு இன்னும் முடிவாகலையாம் னு கொசுறு செய்தி சொன்னாள்.

'யம்மா நம்ம மாமா நல்ல உசரம் செவப்பு அதான் அஜினுக்கு அப்பா காரிக்டர்ல போட்டாங்க போல.ஆமாம் படம் எப்பம்மா ரிலீஸு' என்ற முனியம்மா இன்னேரம் மேட்டரை ஆனந்தம் காலனியத் தாண்டியும் பரப்பி இருப்பாள்.

'படம் ரிலீஸுக்கு பின்ன உங்க எல்லாரையும் நானே அழைச்சிப் போய் காட்டறேன்' னு மாமி உத்திரவாதம் தந்தாள்.

அதற்குப் பிறகு நானும் பசங்களுக்கு எக்ஸாம் என்பதால் ரொம்ப பிஸியா இருந்துட்டேன்.

முந்தா நாள் மார்கெட்டுக்குப் போயி திரும்பும் போது முனியம்மா கேட்டாள்,'எம்மா அசினு படம் விக்ரம் படம்லாம் போஸ்டர்ல இருக்கு நம்ம மாமாவைக் காணோமே'

'அடியே இவளே சிவாஜி போஸ்டர் பாத்தியே எங்கியாச்சும் ராஜா ,சாலமன் பாப்பையா மூஞ்சி போட்டிருந்ததா? என்னதான் நல்ல ரோல்னாலும் ஹீரோ ஹீரோயின் மட்டும்தான் போடுவாங்க' ன்னனேன்.

பத்து நாள் கழித்து மாமி அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.

'தங்கமணி குழந்தைங்களை கூட்டிக் கிட்டு கெளம்பு இன்னைக்குத்தான் படம் ரிலீஸாம்.முத ஷோவே போயிடுவோம்.'

'மாமி ரங்கமணி ஊர்ல இல்லை வந்துடட்டுமே'

'போடி மறுபடியும் ரங்கமணி வந்த பின்ன மறுபடி பாப்போம்'

குழந்தைகளோடு கிளம்பியாச்சு.முனியம்மாவா?அவ முன்னாலேயே தியேட்டர்ல வெயிட்டிங்.

தியேட்டர்ல போயி வசதியா உக்கார்ந்தாச்சு.படம் ஆரம்பிச்சு ஓட எந்த சீன்ல மாமா வருவாருன்னு ஆளாளுக்கு பாத்துக் கொண்டிருந்தோம்.

அசின் வெளிநாட்டுல இருக்கிற மாதிரி கதை.அவங்க திரும்ப ஊருக்கு வந்த பிறகுதான் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு வருவாங்க ன்னு மாமி சொல்ல கொஞ்சம் ரிலாக்ஸ்டாக பார்க்கத் துவங்கினோம்.

'அம்மா பசிக்குது' ன்னு பிச்சு அழ கையோடு மாமி கொண்டு வந்திருந்த 'அல்வாவை' கொடுக்க அதுக்கப்புறம் புள்ளை வாயே திறக்கலை.:(

படம் செம போர்.யூஷுவல் கதை.ஹீரோ ஹஹீரோயின் மோதல் அப்புறம் திடீரென்று ஒரே சீனில் காதல்.... மரத்தைச் சுத்தி டூயட் வில்லன் களோடு ஒத்தை ஆளா பைட்.....சரி நமக்கென்ன மாமா எப்படி நடிக்கிறார்னு பாப்போம் னு ஆவலாக பார்க்கத் தொடங்கினேன்.

இன்னும் மாமாவோட எண்ட்ரி வரலை.இண்டர் மிஷனும் போட்டுட்டான்.

மறுபடி படம் போட்டபோது அசின் இந்தியா வர்ரதா கதை.மாமி சீட்டு நுனிக்கே வந்துட்டா.

'அம்மா மூச்சா....அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...மூச்...'சின்னவன் கிச்சு ஆரம்பிக்க உஷ்....கொஞ்சம் இருடி செல்லம் இதோ கூட்டிப் போறேன்னுட்டு..

...மாமா வராரான்னுட்டு ...ஸ்கிரீனையே பார்த்தேன்.
முனியம்மா எழுந்து நிக்காத குறைதான்.

'யோவ் யாரும்மா அது ஒக்காரு மறைக்குதுன்னு'பின்னாலிருந்து குரல் வர அடங்கினாள்.

'ஆஅம்மா..ஆஅ.உச்சா....மூச்சா....'சின்னவனை ஒரு கையால் அணைத்தபடி
'செல்லம் இதோ கிட்டு தாத்தா பாத்துட்டு போலாம்'..னுட்டு பெரியவன் பிச்சுவைப் பார்க்க அவன் வாயில் அல்வாவோடு ஜொள்ளு விட்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

ஒருவழியா அசின் சென்னைக்கு வந்திறங்கி அங்கிருந்து காரில் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பிட்டாங்க.பச்சை பசேல்னு வயல் வெளிகளும் ஆடு மாடுகளும் கோவணம் கட்டிய சிறுவர்களும் மரத்தடியில் ஆடு புலி ஆட்டம் போடும் பெரிசுகளும்....
ச்சே கிராமம் னா இது மட்டும்தான் சினிமாக்காரங்களுக்கு தெரியுது...

அடுத்து நான் பயந்த படியே அசின் காரை விட்டு வயல் வெளியில் டூயட்டும் பாட சென்னையிலிருந்த [கதைப்படி] விகரம் கூட வந்து ஆடினார்.[டூயட்ல லாஜிக் பாக்காதீங்க]

சட்டென்று மூச்சா போகனும்னு சொன்ன கிச்சு ஞாபகம் வரப் பார்த்தால் பாவம் குழந்தை டிரஸ்ஸிலேயே போய்விட்டிருந்தது.

ஒரு வழியா அசின் ஆடி முடிச்சி வீட்டுக்கு வராங்க.

மாமியோடு நானும் சீட் நுனிக்கு வந்துட்டேன்.

அப்பா...அப்பா...ன்னு உள்ளே போக

கூடத்தில் ரோஜாப் பூ மாலையோடு...சந்தனப் பொட்டோடு மாமா சிரித்துக் கொண்டிருந்தார் போட்டோவில்.
திக்கென்று இருந்தாலும் பிளாஷ் பேக் வரும் வரும் னு பார்த்து கடைசியில் படமே முடிஞ்சி போச்சு.

ஏதோ செத்துப் போன அப்பா ரோலில் படமாக மாட்டத்தான் மாமாவுக்கு சான்ஸுன்னு புரிந்தது.[அதான் பிரமிட் நட்ராஜன் நடிக்கலையோ]

மாமி முகம் சிறுத்துப் போனாள்.மாமாவுக்கே தெரியாதுடி ன்னாள்.முனியம்மாவுக்கு மட்டும் ஓசியில ஒரு சினிமா பாத்த சந்தோஷமாவது மிச்சம்.

தூங்கிவிழுந்த பிள்ளைகளோடு வீடு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் பிச்சுவும் கிச்சுவும் கேட்டதுங்க,'அம்மா தாத்தா பாக்காமயே தூங்கிட்டோம் மறுபடியும் போலாமா' ன்னு.

என்ன செய்ய?


டிஸ்கி: முகம் தெரியாத....என் பதிவுகளையும் இரசிக்கும் ஒரு அன்பான அம்மாவுக்கு இந்த பதிவு பரிசு [பிரேம் உங்க அம்மாவுக்குத்தான் ;)]

31 மறுமொழிகள்::

.:: மை ஃபிரண்ட் ::. said...

கதை ஆரம்பிக்கும்போதெய் இந்த கதாப்பாத்திரம்தான் கிட்டு மாமாவுக்கு கிடைக்கும்ன்னு நெனன்ச்சேன். சரியாதான் இருக்கு! :-)))))

கோபிநாத் said...

என்டா அக்காவை ரொம்ப நாளா ஆளை காணோம்ன்னு பார்த்த இதுதான் விஷயமா!!! ;)))

கோபிநாத் said...

\\கூடத்தில் ரோஜாப் பூ மாலையோடு...சந்தனப் பொட்டோடு மாமா சிரித்துக் கொண்டிருந்தார் போட்டோவில்.\\\

கடைசியில மாமாவுக்கு மாலை போட்டுட்டிங்க...சூப்பர் :))))

Compassion Unlimitted said...

Asinukku appavaga..summa asathhiteenga..nalla post
TC
CU

TBCD said...

அது தமிழ் படமா....அப்ப சரி... ;)

delphine said...

நல்லா எழுதிருக்கீங்க கண்மணி... ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு போஸ்ட்.

தருமி said...

அதென்னவோ, அம்புஜம் மாமி வந்தா உங்க பதிவுக்கு ஒரு தனி களை வந்திருது. மாமியை அடிக்கடி 'கண்டுக்கங்க'.

கண்மணி said...

மை பிரண்ட் யூ மீன் இட்....என பிரியுதா கண்ணு?
அக்காமேல உள்ள பாசத்தை நெனச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

கோபி மாமா அடுத்த கேமுக்கு ரெடி படிக்க நீங்க ரெடியா?

கண்மணி said...

டிபிசிடி அண்ட் கம்பேஷன் நன்றிங்க
அடிக்கடி வாங்க

கண்மணி said...

தருமி சார் மாமா மீண்டும் வர்ரார்
டெல்பின் என் நெட் பிராப்ளம் தீரலை
ஐயம் ஹெல்ப்லெஸ் எபடியோ ஒப்பேத்துகிரேன்

Anonymous said...

kalakkal :)

பாவனா said...

அப்படியாச்சும் அந்தப் புள்ளைங்கள கிட்டக்க நின்னு பாக்கலாம்.ஆறுதல் சொல்ற மாதிரி தொட்டுப் பேசலாம்.இதெல்லாம் வேனுமின்னா அப்பாவா இருக்க கசக்குமா?]
//


:(

அபி அப்பா said...

டீச்சர்! நீங்க ஆடிக்கு ஒருதடவை அமாவாசைக்கு ஒருதடவை பதிவு போடுங்க! நானெல்லாம் பிழைச்சு போறேன்! ஆனாலும் அம்புஜம் மாமி ரவுசு தாங்கலை:-))

அபி அப்பா said...

மாமியின் அல்வா பத்தி தெரிஞ்சும் பிச்சுக்கு அல்வா குடுத்த டீச்சரை என்னான்னு சொல்றது! ஆண்டவா!

குசும்பன் said...

முதலில் பதிவு சூப்பர்:)

குசும்பன் said...

தருமி said...
அதென்னவோ, அம்புஜம் மாமி வந்தா உங்க பதிவுக்கு ஒரு தனி களை வந்திருது. மாமியை அடிக்கடி 'கண்டுக்கங்க'."

அம்புஜம் மாமிக்கு பொண்ணு இருக்கா இல்லையா?:)

PPattian : புபட்டியன் said...

சூப்பர், ரசிச்சு படிச்சேன்.

அந்த காட்சி மட்டும் கொஞ்சம் "பொசுக்குன்னு" இருக்கு. இன்னும் கொஞ்சம் அந்த காட்சியை பில்டப் கொடுத்திருக்கலாம். உதாரணமா

அசின் வீட்டுக்குள்ளே நுழையறாங்க. அவங்க கண்ணில (ஆனந்த) கண்ணீர். வாசலிலேயே ஒரு பெரியம்மா, "வாம்மா! வா, இப்பதான் அப்பாவ பாக்க வந்தியா" ண்னு கேட்டுட்டு போறாங்க. வீட்டு வேலைக்காரம்மா வாங்கம்மான்னு கட்டித் தழுவி கண்ணீர் விடுறாங்க. அப்பாவோட செல்ல நாய்க்குட்டி ஓடி வந்து அசின் மேலே தாவுது. "அப்பாவ பாக்க ஒரு வழியா வந்து சேந்துட்டேன்டா", அப்படீன்னு அசின் வள், வள்ன்னு குரைக்கிற நாய்க்குட்டிகிட்ட சொல்றாங்க..........

அப்பா...அப்பா...ன்னு உள்ளே போக

கூடத்தில் ரோஜாப் பூ மாலையோடு...சந்தனப் பொட்டோடு மாமா சிரித்துக் கொண்டிருந்தார் போட்டோவில்.

அது ஆனந்த கண்ணீர் கிடையாதுன்னு அப்புறம் தெரியுது..

Anonymous said...

குசும்பனுக்கு மாமியோட பொண்ணா அய்யோ மாமி சீக்கிரம் அல்வா குடுத்துடுங்க

மின்னுது மின்னல் said...

அம்புஜம் மாமிக்கு பொண்ணு இருக்கா இல்லையா?:)
//

ரெண்டு இருக்கு பழகலாம் நல்லா நீங்களும் தம்பியும் போங்க குசும்பன்

:)
:))

மின்னுது மின்னல் said...

அம்புஜம் மாமியோட வீட்டுகாரரு பப்பையாவா..??

:))

அபி அப்பா said...

அங்கவை, இங்கவைன்னு பேரு குசும்பா! ஏன் கிடந்து அலயுற, அதான் லீவ்ல கண்ணாலம்ன்னு சொல்லிட்டாங்கல்ல வூட்டுல, பின்ன இன்னா:-))

dondu(#11168674346665545885) said...

படத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை. செந்தில் இருந்தார். கூடவே கவுண்டமணி போட்டோவில் மட்டும். போட்டோவை காட்டும்போதெல்லாம் அது செந்திலை ரவுஸ் விடும். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டை வைத்து கவுண்டமணி குரலில் பேச விட்டார்கள்.

நடிகர் கவுண்டமணி நிஜமாகவே மெர்சல் ஆனார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

காட்டாறு said...

//அதற்குப் பிறகு நானும் பசங்களுக்கு எக்ஸாம் என்பதால் ரொம்ப பிஸியா இருந்துட்டேன்.
//
இதெல்லாம் நம்புற மாதிரியாவா இருக்கு? பசங்களுக்கு எக்ஸாம் நேரத்துல நீங்க ஏன் பிஸி?

காட்டாறு said...

சிரிச்சிட்டே வாசிச்சா... மாலைய சாத்திட்டியேம்மா... சாத்திட்டியே... கண்கலங்கி போச்சி ராசாத்தி... அழுகாச்சி படம் பாத்து. இப்படியா? கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்... பின்ன மாமாவுக்காக இல்லின்னாலும்... அல்வா கொடுக்கும் மாமிக்காகவாவது இன்னோரு முறை குழந்தைகளை தம்பதி சகிதமா கூட்டிட்டுப் போங்க.

காட்டாறு said...

ச்சுப்ரமணிய மறந்திட்டீங்களே.... நல்ல வேளை அவனைத் தியேட்டருக்கு கூட்டிட்டுப் போகல... பக்கத்து சீட்டுக்க்காரங்க மேலல்ல மூச்சா போயிருப்பான்.

பின்குறிப்பு:
இந்தப் பதிவை எங்க வீட்டுல.. நான் ஏற்ற இறக்கங்களோடு (காப்பிரைட் இல்லாமலே) வாசிச்சு காமிக்க... கதை வாசிக்க விடாமல்... சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க பெரியவங்க. அவங்களுக்கு ஒரு சின்ன ஏமாத்தாம் என்னான்னா... குசும்பன் சொன்னா மாதிரி மாமிய அடிக்கடி 'கண்டுக்க' மாட்டேன்றிங்கன்னு தான்.

Anonymous said...

ungakitta maami padumpaadu pavanga

மங்கை said...

மாமி வந்தாலே கலக்கல் தான்...

சீட்டு நுனிக்கு வந்து கீழேயே விழுந்துட்டேன்னா பாருங்களேன்..:-))

புதுசா வந்தவன் said...

ஏனுங்க நான் ஊருக்குப் புதுசுங்க நான் எங்கிட்டு கும்மறது டீச்சரு ரெண்டு நாளுல நாலு பதிவு போட்டுட்டாங்களே

cheena (சீனா) said...

நகைச்சுவையின் உச்சம் ( உச்சா இல்லீங்க) இது தான். நச்சென்ற முடிவு வேறு. பாவம் மாமா

அருமையான பதிவு

சுல்தான் said...
This comment has been removed by the author.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)