PAGE LOAD TIME

அம்புஜம் மாமியின் அல்வா மகாத்மியம்

தமிழும் இனிமையும் போல........மல்லிகையும் மணமும் போல நம்ம அம்புஜம் மாமியும் அல்வாவும் பிரிக்க முடியாத கலவைங்க.

ஒட்டிப் பிறந்த இரட்டைங்களக் கூட லாவகமாப் பிரிச்சிடலாம் ஆனா அல்வாவையும் மாமியையும் பிரிக்கவே முடியாது.

அம்புஜம் மாமியின் அல்வா பெருமை பத்ததி அப்பப்பப் பதிவுகள்ல சொல்லியிருந்தாலும் ஒரு தனிப் பதிவாப் போட்டுடனும்னு தோணிச்சிங்க. [அப்பத்தானே படிக்கிறவங்களுக்கு அல்வா குடுக்க முடியும்]

தெனமும் காலைல காபி போட்ற மாதிரி,டிபன் செய்யறது மாதிரி மாமி தினமும் ....அட ஆமாங்க......தினமும் அல்வா கிண்டுவாள்.

பொழுது விடிஞ்சதும் பல்லு வெளக்க மறந்தாலும் மறப்பாள் அல்வா கிண்ட மறக்க மாட்டாள்.
ரிலையன்ஸ் பிரஷ் காய்கறி மாதிரி டெய்லி பிரஷ் அல்வாதான்.

ஏன் மாமி இப்படி ஏதோ வேண்டுதலைப் போல தினமும் செய்யறீங்கன்னு கூட கேட்டேன்.

சின்ன புள்ளையிலேர்ந்தே பழகிட்டேண்டி விடமுடியலைன்னு சொன்னாள்.

இதென்ன விரல் சூப்பும் பழக்கமா இல்லை ராத்திரியில படுக்கையை நனைக்கும் வழக்கமா சின்னப் புள்ளையிலேர்ந்து ஆரம்பிக்க?

மாமிக்கு விருந்தோம்பல் பண்பு அதிகமோ அதிகம் ங்க..யார் வீட்டுக்குப் போனாலும் அல்வா குடுக்காம அனுப்ப மாட்டாள். இதனாலலேயே மாமி வீட்டுக்கு கல்யாணம்,காது குத்துன்னு கூப்பிட நேராப் போகாம முடிஞ்சவரை போஸ்டல் மூலமோ இல்லை போன் மூலமோ சொல்லிடுவாங்க.

அதிலும் ஆனந்தம் காலனிப் பொம்பளைங்க வருஷத்துக்கு ஒருமுறை நவராத்திரி கொலுவுக்குத் தான் மாமி வீட்டுப் படியவே மிதிப்பாங்க.

நவராத்திரி ஒன்பது நாளும் ஏதாவது சுண்டல் பண்ணியே ஆகனும்ங்கிறதால சுண்டல் மட்டும்தான் குடுப்பான்னு அல்வா பயம் இல்லாம காலனிப் பொம்பளைங்க போவாங்க.

அப்படியும் விதி யாரை விட்டது.கடைசி வீட்டு கோமதியைப் பாடான்னாப் படுத்தியது.

போன நவராத்திரிக்கு கோமதி வெத்திலைப் பாக்கு வாங்கிக்க அம்புஜம் மாமி வீட்டுக்குப் போனாள்.

கோமதி கொள்ளு சுண்டலோடு சொல்லிக்காம வந்திருக்கலாம்.கோலங்கள் சீரியல் அடுத்த நவராத்திரிக்காவது முடிஞ்சிடுமா இல்லை தொல்காப்பியன் தொல்லை [அபி அப்பா இல்லீங்க டைரடக்கரு]தொடருமான்னு காரசாரமா விவாதிக்க நேரம் போனதே தெரியலை.

அதுக்குள்ள அம்புஜம் சூடா காபியும் 'டெய்லி பிரஷ்' அல்வாவும் குடுக்க பேச்சு சுவாரஸ்யத்துல கோமதியும் மறந்தாப்புல[??!!!சாப்பிட்டுத் தொலக்கனுமா?

மறுநாள் கடைவாய்ப் பல்லுகிட்ட ஏதோ மாட்டியிருக்கேன்னு பார்க்க அல்வா அப்படியே செட்டான சிமெண்ட் மாதிரி இறுகிப் போயிருந்தது.

குண்டூசி தொடங்கி சேப்டி பின் ஸ்க்ரூ டிரைவர் முள்ளு வாங்கி ன்னு வச்சி எடுக்கப் பார்த்தும் முடியாம பல் டாக்டர்கிட்ட போனாள்.

அவர் அதை மெதுவா ஒருவழியா வெளியே எடுத்துட்டார்.சும்மா இல்லீங்க கடவாய்ப் பல்லோடு சேர்த்துத் தான்.

கோமதிக்கு சொத்தையே ஆகாத பல்லு போனதை விட அம்பது ரூபாயில் புடுங்க வேண்டிய பல்லுக்கு முந்நூறு ரூபாய் பில்லு குடுத்ததுதான் வருத்தம்.

ஏன் கோமதி அவ்ளோ பீஸ்னு கேக்க சிமெண்ட் கான் கிரீட்க்கூட இவ்ளோ ஸ்ட்ராங் இல்லை டாக்டர் அவ்ளோ கஷ்டப் பட்டு புடுங்கினார்னு சொன்னாள்.

ஒருநாள் அப்படித்தான் பெரியவன் பிச்சுமணியோட ஸ்கூல் மிஸ் வழியில பார்த்துவிட்டு,'என்ன மிஸஸ் தங்கமணி பிச்சு இப்படியிருக்கான்னு 'சொல்ல
'என்னங்க' ன்னு நான் பதற
'சிமெண்ட் செட்டாக ஜிப்சம் சேர்ப்பாங்கன்னு சொன்னா இல்லை மிஸ் அதை விட அம்புஜம் பாட்டி அல்வா சேர்த்தா இன்னும் ஸ்ட்ராங் ஆகும் னு சொல்றான்'
நான் ரிலாக்ஸ் ஆயி சிரித்து மேட்டரை சொல்ல அதுக்குப் பிறகு மிஸ் எங்க தெரு பக்கமே வர்ரதில்லை.
இத்தோடப் போச்சா?எங்க வீட்டு முனியம்மாதான் மாமி வீட்லயும் பத்து பாத்திரம் தேய்ச்சுக் குடுக்கிறாள்.

'யெம்மா மாமியோட படா பேஜாரும்மா அன்னாடம் அல்வா கிண்டி ரோதனை பண்ணுதும்மா
அந்த வாணலும் ஜல்லிக் கரண்டியும் கழுவவே தனிய்யா பேட்டா வாங்கனும்மா.அத்தோட போச்சா என் வூட்டுக்காரு மாமிகிட்ட பணமா வேணா சேத்து வாங்கிக்க அல்வாவ மட்டும் வாங்கி கொண்டாந்த வூட்டுலயே சேர்க்க மாட்டேன்னு சொல்லிட்டாரும்மா' னு தெனம் ஒரு தவை சஷ்டி கவசம் மாதிரி சொல்லுவாள்.

'இதையே எத்தினி நாள் சொல்லுவ முனிம்மா அதான் தெரி்ஞ்ச கதையாச்சேன்னு' சொன்னா
'மாமி மட்டும் தெனம் அல்வா கிண்டுது நான் சொன்னா மட்டும் குத்தம் சொல்றியேன்'னு நொடிப்பாள்.

அத்தனை உஷாரா இருந்தும் அவளும் ஒரு நாள் மாட்டினாள் .ஒருநாள் வேலைக்கு வந்தபோது ஊர்லேர்ந்து வந்திருந்த தம்பி மகளைக் கூட்டிவர மாமி அவ கிட்ட கொஞ்சம் அல்வா குடுத்தது இவளுக்குத் தெரியலை.வீட்டுக்குப் போகும் போதுதான் அந்தப் பொண்ணு சொல்லிச்சாம்.வீட்டுக்காரன் திட்டுவான்னு பயந்து அதை அப்படியே தூக்கிப் போட்டுட்டாள்.

ஆனந்தம் காலனியில் தெரு நாய் ஒன்னு.ச்சுப்புக்கும் பிரண்டுதான்.
ஏதோ பேட்டை ரவுடி கணக்கா மத்த ஏரியா நாய்களை உள்ள வரவிடாம 'தாதா' மாதிரி சுத்திக்கிட்டிருக்கும்.வள் வ்ள் னு குலைச்சா இடி இடிக்கற மாதிரி சிம்மக் குரலோன்.
கொஞ்ச நாளா சோர்ந்து படுக்கறதும் 'ம்ம்ஹ்ஹிய்ங்ங்..ஹிய்ங்க்ங்ங்...னு முனகறதுமா இருக்கு.அப்புறம்தான் தெரிஞ்சது முனியம்மா தூக்கிப் போட்ட மாமியோட அல்வாவை சாப்பிட்ட கொடுமை.

என்னங்க அல்வா புராணம் போதுமா?

மாமி நல்லவதான் அல்வா மாதிரி குணம்.விருந்தோம்பல்ல மாமியத் தட்டிக்க முடியாது.

ஃபிரீயா இருந்தா வாங்களேன் மாமியப் போயிப் பாத்துட்டு வருவோம்.

டிஸ்கி: மதிப்பிற்குரிய 'தருமி சாருக்குப் ' பரிசாக இந்த 'அல்வா' சாரி...பதிவு பரிசளிக்கப் படுகிறது..

15 மறுமொழிகள்::

Anonymous said...

:))))ROFTL

தருமி said...

தொண்டை அடைச்சிக்கிருச்சி. (மாமி அல்வா அடைக்கலை. டீச்சர் நீங்க கொடுத்த பரிசினால்தான்.)

நன்றி.

மின்னுது மின்னல் said...

மாமிக்கு விருந்தோம்பல் பண்பு அதிகமோ அதிகம் ங்க..யார் வீட்டுக்குப் போனாலும் அல்வா குடுக்காம அனுப்ப மாட்டாள்.
//

பாசகார மாமியை இப்படி பாடாய் படுத்துவது ஏனோ.. :)

கோபிநாத் said...

\\\ஃபிரீயா இருந்தா வாங்களேன் மாமியப் போயிப் பாத்துட்டு வருவோம்.\\


ஏன் எங்க பல்லு எல்லாம் போறதுக்கா ;)

இராம்/Raam said...

ஹாஹா... :)

மங்களூர் சிவா said...

KAVITHAI
SUPERB!!!

மங்களூர் சிவா said...

//
நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா
//
then why are u killing us with like this posts!??!!??!!??!?!?

hi just kidding

அபி அப்பா said...

எனக்கு டவுட்டா இருக்குது! ஒருவேளை எங்க வூடு தங்கமணிய வச்சுதான் இதல்லாம் எழுதறீங்களோ! அப்படி எதுனா இருந்தா அத்தன பின்னூட்டமும் எனக்குத்தான் சொல்லிட்டேன்! அதல்லாம் ராயல்ட்டி மாதிரி!!:-))

அபி அப்பா said...

சந்தடி சாக்குல கோபி தனக்கு பல் இருப்பதா சொல்வதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் ஆமா!!

துளசி கோபால் said...

அதென்னங்க மாமி வீட்டிலே மட்டும்
நவ ராத்திரிக்கு ஏழு நாளும் சுண்டல்:-))))

delphine said...

மங்களூர் சிவா said...
KAVITHAI
SUPERB!!!////

????
Hello Kanamani!
Really enjoyed.
Poor Maami. expecting some more of your comedy posts.!!!

கண்மணி said...

அபி அப்பா இபல்லாம் உண்மைய ஒத்துக்குறீங்க.கிருஷ்னாவும் இப்படித்தான் அல்வா கிண்டுமா?

ராம் ,மின்னல் நன்றீ

மங்களூர் சிவா கவிதையா?எது?
அல்வா சாப்பிடாமலே இபடி ஆயிட்டீங்களே


துளசி டீச்சர் பதிவு படிச்சாலும் தப்பு கண்டு பிடித்த என் இனமே திருத்திக்கிட்டேன்

டெல்பின் இதோ அடுத்து ஒரு போஸ்ட் ரெடியாகிக்கிட்டே இருக்கு.
ரமலான் ஸ்பேஷல்

புதுசா வந்தவன் said...

ஏனுங்க நான் ஊருக்குப் புதுசுங்க நான் எங்கிட்டு கும்மறது டீச்சரு ரெண்டு நாளுல நாலு பதிவு போட்டுட்டாங்களே
அட எங்கிருக்கீங்கப்பா

நானானி said...

கண்மணி!
இந்த அம்புஜம் மாமியைப் பத்தித்தான்
சொன்னீர்களா?நான்அறிமுகப்படுத்துங்கள் என்று வேறு சொல்லியிருக்கிறேன்.....
நல்லவேளை தப்பித்தேண்டா சா..மி!

cheena (சீனா) said...

எல்லோருமே பயப்படும் அந்த அம்புஜம் மாமியை எனக்கு அறிமுகப் படுத்துங்க பிளீஸ் - ஒரு பல்லுலே ஓட்டை இருக்கு

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)