PAGE LOAD TIME

மானாட....மயிலாட....

அன்புச் சகோதரன் மின்னலுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்களுடன் இந்தப் பதிவு பரிசளிக்கப் படுகிறது.

வேலையெல்லாம் முடிச்சிட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்ப 'லக...லக...லக...லக...'ன்னு சத்தம் வரவும் எங்கிருந்து வருதுன்னு பார்த்தேன்.
சந்திரமுகி வந்தப்ப லக லக ன்னவங்க எல்லாம்தான் சிவாஜிக்கு பிறகு கூல்..கூல் ஆயிட்டாங்களேன்னு யோசிசேன்.

திடீரென்று 'தொம்' தொம்' னு சத்தம்.டி.வி லேசா ஆடற மாதிரி இருந்தது.
என்ன ஏதாவது 5.5 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நில நடுக்கம் வந்துடுசோன்னு சந்தேகம்.

சரி அம்புஜம் மாமி வீட்டுல எப்படின்னு பாப்போம்னு போனவள் உள்ளே போனதும்
'வீல்' னு பயத்துல கத்திட்டேங்க.

கலைத்துப் போட்ட தலை முடியும்,ரெண்டு விரக்கடை அளவுக்கு கண்ணைச் சுத்தி வழிச்சு விடப்பட்ட மையுமாய் துணியொரு கோலம் மணியொரு கோலமுமாய்....

அட நீங்க நெனைக்கிற மாதிரி நிலநடுக்கத்துல மாமி ஒன்னும் ஆடிப் போகலை.
'ரா...ராஆ....ராரா...எந்துக்கு சேரா....ன்னு மாமியும் மாமாவும் சந்திரமுகி பாட்டுக்கு அபிநயம் புடிச்சிக்கிட்டிருந்தாங்க.

எதிரே ஒரு கையில் தலை முடியைக் கோதியபடி...இன்னொரு கையில் ஜூலி[அவந்தி வீட்டுது] சோனி[கோபியோடது] ச்சுப்பிரமணி[எங்களுடையது] டைகர் [அபி அப்பாவோடது] னு நாலு நாய்களைக் கட்டிய சங்கிலிகளை மொத்தமாகப் பிடித்தபடி வேட்டையபுரம் மகாராஜா...வாக

அட...நம்ம குசும்பன்....

'என்ன கொடுமையிது சரவணான்னு' நான் அலற
'மேடம் எம் பேரு சரவணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்' னு அவர் கேட்க பக்கத்தில் போய்ப் பார்த்தா குசும்பன் இல்லீங்கோ ...குசும்பன் மாதிரிங்கோ...

என் கேமிராவின் முதல் கவிதைன்னு குசும்பன் தன் மூஞ்சியப் புடிச்சிப் போட்டதிலிருந்து பயம் காட்டுற எதைப் பார்த்தாலும் எனக்கு அந்தக் கவிதைதாங்க ஞாபகம் வருது.

'என்ன மாமி இது கூத்து'ன்னு கேட்டா

'கலைஞர் டிவியில 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு ரிகர்ஸல்டி' ன்னாள்.
'அது சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியாச்சே நீங்க எப்படி?'

'மாமா யரையோ புடிச்சி சான்ஸ் வாங்கிட்டார்.பின்னால வெளி ஆட்களும் கலந்துக்கலாமாம்'.
'சரி அதுக்கு ஏன் குசும்பன்...சாரி இந்த சரவணன் நாய்க்கூட்டம் எல்லாம்'?

நீ போன வாரம் பாக்கலையா ப்ராப்ஸ் ரவுண்டு ன்னு பிராப்பர்டி [property]எல்லாம் வச்சி என்னமா ஆடினாங்க. அப்படியே சினிமவுல பார்க்கிற மாதிரி இருந்தது.
அதான் ரா ...ரா பாடலுக்கு ராஜாவும் நாய்களும் பிராப்ஸ் செட் பண்ணோம்'

என்னமோ செய்யுங்கனு கிளம்பியவளை மாமி தடுத்து 'தங்கமணி நீ பார்த்து ஏதானும் ஐடியா குடுடி' ன்னு கேட்க

நானும் மனசுக்குள்ள பெரிய்ய கலா மாஸ்டர்னு நெனசுக்கிட்டு 'கைய குட்டி குட்டியா வைக்காம நல்லா வீசி அபிநயம் புடிங்க தலையை நல்லா சைடுலத் திருப்பி அபிநயம் புடிங்கன்னு 'சொல்ல

சாணி மிதிக்கிற மாதிரி மாமியும் சுளுக்கு எடுக்கிறவரு மாதிரி மாமாவும் குதிக்க
அப்பப்ப சரவண வேட்டையபுரம் ராஜா லக..லக..சொல்ல ஒத்திகை களை கட்டியது.

தஸ்ஸு புஸ்ஸு ன்னு மூச்சு வாங்கிய மாமியப் பாத்தா பாவமா இருந்தது.

'இன்னைக்கு இதோடு போதும் மீதிய நாளைக்குப் பார்த்துக்கலாம்னு கெளம்பிட்டேன்.
மறுநாள் வேலையெல்லாம் முடிச்சிட்டு மாமி வீட்டுக்குப் போனேன்.

மாமி மாமா கழுத்துல தைலம் தேய்ச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
மாமா கழுத்து 180 டிகிரியிலிருந்து 160 டிகிரிக்குத் திரும்பியிருந்தது.அய்யய்யோ ஒழுங்கா சாணி மிதிச்ச மாமா மாமிய ஆட வைக்கிரேன்னு நாந்தான் கஷ்டப் படுத்திட்டேனோ

இவங்க லொல்லு தாங்காம ஜூலி டெல்லிக்கும் சோனி துபைக்கும் டைகர் மாயவரத்துக்கும் ஓடிப் போக ச்சுபிரமணி மட்டும் இது உங்களுக்குத் தேவையான்னு' என்னைப் பார்த்தது.

ரஜினி மாதிரி தலையைக் கோதி விட்டு கோதி விட்டு இருந்த நாலு முடியும் கையோடு வந்து விட பாதி வழுக்கையான சரவணன் ஆளையேக் காணோம்.

'என்ன மாமி ரிகர்ஸல் இல்லையா'
'மாமாக்கு கழுத்து இப்படி திரும்பிடுச்சி.இன்னும் ரெண்டு நாள் ஆடினா அவர் முதுகை அவரே பார்த்துப்பார் .அப்படியொரு கஷ்டம் கொடுத்து அந்த பத்து லட்சம் ஜெயிக்கனுமா?[மாமிக்கு ஆனாலும் ஓவர் கான்பிடென்ஸ்தான் ஜெயிக்கறதே பெரிசு இதுல மொத பரிசு வேறயா]
வேண்டாண்டி நாங்க விலகிக்கிரோம் போட்டியிலிருந்துன்னு அப்படின்னாள்.
ஜோடி நெம்பர் 1 ல் மனைவி லதா ராவ் வுக்கு காலில் அடிபட்டதால் விலகிய ராஜ்கமல் மாதிரி மாமி விலகிக்கிறேன்னு சொன்னாள்.

மானும் மயிலும் ஆட வேண்டிய ஷோவுல மாமவும் மாமியும் ஆட ஆசைப் பட்டது தப்பாங்க?

20 மறுமொழிகள்::

மின்னுது மின்னல் said...

அன்புச் சகோதரன் மின்னலுக்கு இனிய ரமலான் வாழ்த்துக்களுடன் இந்தப் பதிவு பரிசளிக்கப் படுகிறது.
/

வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா

PPattian : புபட்டியன் said...

லக லக லக - கல கல கல

:)))))))))))

அபி அப்பா said...

மின்னலுக்கு வாழ்த்துக்கள்!

டீச்சர்! குசும்பனை கலாய்க்க நான் பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாம்ன்னு இருந்தேன்! நல்ல சமயத்துல காசை வீணாக்காம காப்பாதிட்டிங்க! அவன் அழும்பு இப்பல்லாம் தாங்கவே முடியலை டீச்சர்!! காப்பாத்துங்க எங்களை!:-)

குசும்பன் said...

"என் கேமிராவின் முதல் கவிதைன்னு குசும்பன் தன் மூஞ்சியப் புடிச்சிப் போட்டதிலிருந்து பயம் காட்டுற எதைப் பார்த்தாலும் எனக்கு அந்தக் கவிதைதாங்க ஞாபகம் வருது."

மஞ்சள் காமாலை இருக்கும் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகதான் தெரியுமாம், அழக ரசிக்க கலை கண் வேண்டும் டீச்சர் கலை கண் வேண்டும்... !!!

குசும்பன் said...

"ரஜினி மாதிரி தலையைக் கோதி விட்டு கோதி விட்டு இருந்த நாலு முடியும் கையோடு வந்து விட பாதி வழுக்கையான சரவணன் ஆளையேக் காணோம்."

அழகே உருவான நிலாவுக்கே லேசா கலங்கம் இருக்கிறது...அப்படிங்கும் பொழுது அழுகின் மறு பிறவியான எனக்கு கொஞ்சம் முடி கம்மியா இருக்குறது தப்பா!!!

ச்சே பொறாமை காரர்கள் நிறைந்த உலகமடா சாமி!!!

மின்னுது மின்னல் said...

மஞ்சள் காமாலை இருக்கும் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளாகதான் தெரியுமாம், அழக ரசிக்க கலை கண் வேண்டும் டீச்சர் கலை கண் வேண்டும்... !!!
///

இப்பவே இப்படி இருக்கு இன்னும் கலை கண்ணோடு பார்த்தால் எல்லாரொம் அவுட்டு தான் :((

குசும்பன் said...

அபி அப்பா said...
///
டீச்சர்! குசும்பனை கலாய்க்க நான் பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாம்ன்னு இருந்தேன்! நல்ல சமயத்துல காசை வீணாக்காம காப்பாதிட்டிங்க! அவன் அழும்பு இப்பல்லாம் தாங்கவே முடியலை டீச்சர்!! காப்பாத்துங்க எங்களை!:-)////

ஆமா டீச்சர் என்னா கிருஸ்னனின் மறு பிறவியா? இவரு காப்பாத்துங்கன்னு குரல் கொடுத்த உடனே ஓடி வந்து காப்பாத்த போறாங்க,,,எங்க சுத்தினாலூம் இங்க சாப்பாட்டுக்கு கராமாதான் வரனும் அபி அப்பா இரு ஒய் உங்களை கவனிச்சுக்கிறேன்...

டீச்சரோடு கூட்டணியா போடுறீர்... இனி கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்...

குசும்பன் said...

மின்னல் அப்புறம் நீங்க இங்க வேற பெயரில் இங்கு உலவும் ரகசியத்தை போட்டு உடைச்சிடுவேன்..

கண்மணி said...

மின்னல் ரிப்பீட்டேய்
இப்பவே இப்ப்படீதுல கொலைக் கண்ணோட பாக்கனுமாம்.
அந்த சிரிச்சி சிரிச்சி வந்தா 'சீனா' த்தானா மேட்டரும் தெரியும்

குசும்பன் said...

அபி அப்பா said...
///டீச்சர்!! காப்பாத்துங்க எங்களை!:-)///

ஏர் இந்தியா பைளட்: அபி அப்பா வாங்க இந்தியா போகலாம்.


அபி அப்பா : இல்லை என்னை காப்பாத்த டீச்சர் வருவாங்க

ஏர் அரேபியா பைளட்: அபி அப்பா மேல வாங்க மாயவரம் போய்விடலாம்

அபி அப்பா : இல்லை என்னை காப்பாத்த டீச்சர் வருவாங்க

(அபி அப்பாவை கும்முகிறார்கள் அனைவரும்)

டீச்சர் கணவில்: ஏன்யா நான் பிளைட்ட அனுப்பி வர சொன்னா வர வேண்டியதுதானே இதுக்காக நான் நேரிலா வர முடியும்...


அபி அப்பா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கண்மணி said...

ஆமாம் குசும்பா நெஜமாவே உங்களுக்கு மூன்றாம் பிறையா [வழுக்ஸ்] ஆஹா இதுதான் பார்த்திபன் ஸ்டைல் போட்டு வாங்கறது.;)

குசும்பன் said...

"கண்மணி said...
ஆமாம் குசும்பா நெஜமாவே உங்களுக்கு மூன்றாம் பிறையா [வழுக்ஸ்] ஆஹா இதுதான் பார்த்திபன் ஸ்டைல் போட்டு வாங்கறது.;)///

ஹலோ மக்கள் பார்த்துக்குங்க இவுங்க என் போட்டோவை சாரி சாரி கவிதையை பார்த்தாங்களா என்னானே தெரியவில்லை!!! போட்டு வாங்குறாங்கலாம் அய்யோ அய்யோ டீச்சர் கண்ணாடிய போடுங்க முதலில் சொட்டை தெரியும்:)))

புதுசா வந்தவன் said...

ஏனுங்க நான் ஊருக்குப் புதுசுங்க நான் எங்கிட்டு கும்மறது டீச்சரு ரெண்டு நாளுல நாலு பதிவு போட்டுட்டாங்களே
இங்கனயா?

Anonymous said...

குசும்பா உனன ச்சுப்பிரமணி கடிச்சிக் கொதறிடுச்சாமே
தொப்புல சுத்தி 16 ஊசி இருக்குடி

கோபிநாத் said...

\\கண்மணி said...
ஆமாம் குசும்பா நெஜமாவே உங்களுக்கு மூன்றாம் பிறையா [வழுக்ஸ்] ஆஹா இதுதான் பார்த்திபன் ஸ்டைல் போட்டு வாங்கறது.;)\\

யக்கா பதிவும் சூப்பர்....அதைவிட இந்த பின்னூட்டம் சூப்பரே சூப்பர் :)))

delphine said...

கண்மணி!
Enjoyed!
Ramzan greetings to MINNAL>

Anonymous said...

:))))))

காட்டாறு said...

யக்கோவ்..... எப்படி.. எப்படி... சிரிச்சி வயிறு புண்ணு. :-))))))))))

மின்னலுக்கு வாழ்த்துக்கள்!

தேவ் | Dev said...

:))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

யப்பா, கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிரிப்பு, சான்ஸே இல்ல.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)