PAGE LOAD TIME

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்*****

முதன் முறையாக தொலைக் காட்சியில் மனம் கவர்ந்த நெகிழ வைத்த ஒரு நிகழ்ச்சி.
சினிமா நடிகர் பங்கேற்று இருந்தாலும் கொஞ்சம் கூட சினிமாத் தனம் இல்லாத நிகழ்ச்சி.
விஜய் டி.வியில ஆயுத பூஜையன்னிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி.
நடிகர் சிவக்குமார் சூலூரில் இருக்கும் அவர் படித்த பள்ளிக்குச் சென்று தன்னுடைய
அம்பது வருடத்துக்கு முந்தைய பள்ளிக்கூட நினைவுகளை அசை போட்டதோடு
தன் பள்ளித் தோழர்களையும் தோழிகளையும் சந்தித்து மகிழ்ந்தார்.
சரோஜா இலக்குமி என்ற அந்த பால்ய காலத்து தோழிகளுடன் அந்நாளில் பேசக் கூட தடை
இருந்ததாம்.
படிப்பு முடிந்து பிரியும் நேரத்தில் ஆண் மாணவர்கள் டேபிள் மீது வைத்த ஆட்டோகிராப் நோட்டில் பெண்களும் அவர்கள் டேபிள் மீது வைத்த நோட்டுக்களை எடுத்து மாணவர்களும்
எழுதிக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.
'உங்கள் ஆட்டோகிராப் புத்தகங்கள் எங்கே வைத்திருக்கிறீகளா' என்று சிவக்குமார் கேட்க
'கல்யாணமயிடுச்சில்லே அதான் எங்கயோ போயிட்டுது 'ன்னு அவர்கள் சொல்ல
'கல்யாணம் ஆனால் என்ன வச்சிருக்க வேண்டியதுதானே' என்றபடி
தன் பத்திரமாகக் கொண்டு போயிருந்த ஆட்டோகிராபில் இருந்தவற்றைப் படித்துக் காட்டினார்.
அந்த தோழிகள் நெகிழ்ச்சியோடு பழையதை அசை போட்டதோடு சிவக்குமாருக்கு அவர்கள் வைத்த 'சின்னத் தம்பி' என்ற பட்டப் பெயரையும் கூற
தன் அப்படி அழைக்கப்பட்டதற்காக ஒரு நாள் முழுக்க அழுததையும் சிவக்குமார் கூறினார்.
'காம்போஸிட் மேத்ஸ்' எடுத்துப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் பாஸான போதும்
ஓவியக் கலையில் இருந்த ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்தராம்.பிறகுதான் சினிமா வாய்ப்பு வந்ததாம்.
அன்று தன்னுடைய நெருங்கிய நண்பர்களோடு குரூப் போட்டோ எடுக்கக் கூட காசில்லாமல் போனது பற்றி தன் பால்ய சிநேகிதனிடம் பகிர்ந்து கொண்டார்.
தான் படித்த பள்ளியைத் தத்தெடுப்பதாகக் கூறியதோடு அச்சாரமாக 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
விஜய் தொலைக் காட்சியினரும் தங்கள் சார்பாக கணிணி வழங்கினர்.
வெகு சிலரே சினிமத் துறையில் இருந்தாலும் இவரைப் போல இயல்பு மாறாமல் போலித்தனம் இல்லாமல் இருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு அப்புறம் நானும் கொசுவர்த்தி சுத்த பழைய பள்ளிக்கூட நினைவுகள் வந்து போனது.


அஞ்சாப்புவரை வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளியில் படித்தது***
மூனாப்பு படிக்கும் போது எங்க வீட்டைத் தாண்டி வாத்தியார் போகும் நேரம் பார்த்து
'ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் 'என்பதையே திரும்பத் திரும்ப உருப்போட்டது***
அஞ்சாம்ப்பு படிக்கும் போது அழகான சந்திரா டீச்சருக்கும் சண்முகம் வாத்தியாருக்கும் 'இது' ன்னு பசங்க கிசுகிசுக்க 'இது' ன்னா என்னன்னு தெரியாமயே அவங்களை நோட்டம் விட்டது***
எதிர்த்த வீட்டு டீச்சர் ஒருவர் மாரடைப்புல இறந்தப்ப நெஞ்சு வெடிச்சி செத்துட்டாங்கன்னு சொன்னதக் கேட்டு எப்படி வெடிக்கும்னு ஆராய்ச்சி பண்ணியது***

கோ எஜுகேஷன் வேண்டாம் என்பதால் கேர்ள்ஸ் ஹைஸ்கூலில் சேர்ந்தது***
ஒன்பதாம் வகுப்பூ டீச்சர் வீட்டுக்கு தினமும் போயி மதிய சாப்பாடு கொண்டு வந்து தருவது [கிளாஸ்கட்டடிப்பது+அவங்கவீட்ல குடுக்கும் சாக்லேட்டுக்காக]***

எனக்கேத் தெரியாம நல்லா எக்ஸம் எழுதி ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல் பர்ஸ்ட் வந்து பரிசு வாங்கியது [இது காலேஜ் வரையும் தொடர்ந்ததுன்னா அபி அப்பா நம்புவாரு கோபி நம்பும் குசும்பன் நம்பவா போவுது]***

ஸ்கூல் பைனல் ஆண்டுவிழாவின் போது வழக்கத்தை மாற்றாமல் 'பசுமை நிறைந்த நினைவுகளே பாடி அழுதது***

மாஞ்சு மாஞ்சு ஆட்டோகிராப் வாங்கியது***

ச்சும்மா சொல்லக் கூடாதுங்க பள்ளிக்கூட நினைவுகள் அசை போட சுகமாத்தான் இருக்கு.

27 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா கொசுவத்தி சுத்திட்டீங்க டீச்சர்..

நாங்க பத்தாவதுல பறவைகள் பலவிதம் என்று நினைக்கிறேன் அந்த படத்துல ஒரு பிரிவு பாட்டு வரும் அதை பாடி அழுதுட்டு பெரிய பாத்திரத்துல ரஸ்னா கலந்து குடிச்சிட்டு பிரிஞ்சோம்.. :) அது தான் நினைவுக்கு வருது.

வித்யா கலைவாணி said...

மலரும் நினைவுகளுக்கு என்றுமே ஒரு இனம் புரியாத சந்தோசமும் சோகமும் உண்டு. நல்ல பதிவு.

மங்கை said...

ஆமா கண்மணி..இந்த நிகழ்ச்சிய பற்றி நானே ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..
ஏன்னா எங்க ஊர் இல்லையா..:-))

அந்த தமிழ் கேட்க கேட்க எனக்கு அவ்வளவு ஆனந்தனமா இருந்துச்சு...

நீங்க சொன்ன அந்த ஆட்டோகிராப் பற்றி...ரொம்ப அழகா, ஆதமார்த்தமா சொன்னார்.. எனக்கு ரொம்ப பிடிச்சது...ரொம்ப நாளைக்கு அப்புறம் முழுவதும் பார்த்த நிகழ்ச்சி..

cheena (சீனா) said...

பதிவு அருமை. நடிகர் சிவக்குமார் என்றுமே நடிகர்களிலே தனித்து நிற்பவர்.

அசை போடுவது என்பது ஒரு இனிய அனுபவம். நான் என் பதிவில் அசை போட்டிருக்கிறேன். இன்னும் பள்ளிப் பருவங்களைப் பற்றி எழுத வில்லை. எழுத வேண்டும். எழுதுகிறேன்.

விருப்பமுள்ளவர்கள் சென்று பார்த்து கருத்து சொல்லலாமே

http://cheenakay.blogspot.com

cheena (சீனா) said...

வித்யா கலைவாணி
எல்லோரும் படிக்கக்கூடியதாக இருந்த தங்களின் அருமையான வலைப்பூ இப்போது அழைப்பின் பெயரில் படிக்கக்கூடிய வலைப்பூவாக மாறிவிட்டதேன் ? படிக்கப் படிக்க சுவாரசியாமாக இருந்த வலைப் பதிவு மாற்றப்பட்டதன் பிண்ணணி என்ன ? புரியவில்லை. பழைய நிலைக்கு திரும்புங்களேன்.

cheena (சீனா) said...

கண்மணி, இப்பின்னூட்டப் பெட்டியை வித்யா கலைவாணிக்கு ஒரு மடல் எழுதப் பயன் படுத்தியதற்கு வருந்துகிறேன். தங்கள் பதிவென்றாலும், அதில் வித்யாவின் பின்னூட்டத்தைக் கண்டேன். அதனால் நானும் அவருக்கு ஒரு கருத்து தெரிவித்தேன். வேறு ஒன்றுமில்லை

குசும்பன் said...

இது காலேஜ் வரையும் தொடர்ந்ததுன்னா அபி அப்பா நம்புவாரு கோபி நம்பும் குசும்பன் நம்பவா போவுது]***


அட ராமா உண்மைய சொன்னா நம்பலாம் ராணி எலிசபெத் குற்றால குறவஞ்சி படிச்சுதுன்னு சொன்னா யாரும் நம்புவாங்களா? அது போலதான். எல்லோரும்

என்ன கோபியும் அபி அப்பாவும் , குசும்பா டீச்சர் சொல்லும் பொழுது நம்புவது போல் ஆக்டிங் கொடு இல்ல அது உண்மைதான் என்று சொல்லி உன்னை நம்ப வைக்க டீச்சர் பல கதைகளை சொல்லுவாங்க...அப்புறம் நீ தப்பிக்கவே முடியாதுன்னு என்னை எச்சரிச்சாங்க!!!

இதை எல்லாம் நான் வெளியில் சொல்ல முடியுமா?

குசும்பன் said...

"அஞ்சாப்புவரை வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளியில் படித்தது***
மூனாப்பு படிக்கும் போது எங்க வீட்டைத் தாண்டி வாத்தியார் போகும் நேரம் பார்த்து
'ஆகாய விமானத்தைக் கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் 'என்பதையே திரும்பத் திரும்ப உருப்போட்டது***
அஞ்சாம்ப்பு படிக்கும் போது அழகான சந்திரா டீச்சருக்கும் "/////மக்களே இங்க பாருங்க 5 க்கு அடுத்து ஆறாவதுதான் இவுங்க படிச்ச படிப்புக்கு இரண்டு கிளாஸ் டி-பார் செஞ்சு திரும்ப 3 வது வந்துட்டாங்க:)))
அப்புறம் திரும்ப காப்பி அடிச்சு 5 வது.

என்ன கொடுமைங்க இது.

அபி அப்பா said...

நான் நம்பரேன் டீச்சர்((பதிலுக்கு நீங்களும் நம்பனும் நான் யுனிவர்சிட்டி முடிந்து வரும் போது ராஜாவும் , விசியும் என்னை பார்த்துதேம்பி தேம்பி "மறு முறை எப்போ பார்ப்போமான்னு மாணிக்க வீனாயகம் குரலில் எம்.எஸ்.வி ஹம்மிங்கில் பாடியதையும் நீங்க நம்பனும்:-))

அபி அப்பா said...

டீச்சர்! எனக்கும் அந்த அனுபவம் இருக்கு 15 தடவை!!பதிவா போடவா???

ALIF AHAMED said...

patikkalai

iruwthaalum

varukai pathivu !!!

Anonymous said...

சிவக்குமாரோட படிச்சவங்க எல்லாரும் அவர விட வயசானவங்க மாதிரி தெரிஞ்சாங்க. இன்னொரு விஷயம் பாத்தீங்களா. அந்தக்காலத்தில பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க மாட்டாங்களாம். ஆனா ஆட்டோகிராப் மட்டும் வாங்குவாங்களாம். சிவகுமார் அத சொன்னப்ப அவங்களுக்கே சிரிப்பு தாங்கல‌

அபி அப்பா said...

நல்ல வேலை, காலேஜோட அந்த செண்டிய நிப்பாட்டினீங்க , நம்ம்ம யுனிவர்சிட்டிலன்னு சொல்லி மல்லிகை, தென்றல்ன்னு சொல்லியிருந்தீங்கன்னா கதை புஸ்வானமாகியிருக்கும், வாழ்க்கையை கற்ற்ய் தந்த இடமாச்சே, அங்கே செண்ட்டிமெண்ட்க்கு இடம் ஏது???

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

குசும்பன் said...
அபி அப்பா said...
///"மறு முறை எப்போ பார்ப்போமான்னு மாணிக்க வீனாயகம் குரலில் எம்.எஸ்.வி ஹம்மிங்கில் பாடியதையும் நீங்க நம்பனும்:-))//

மூனு வருடத்தில் படிச்ச 30 பேப்பரில் 28 பேப்பர் அரியர்ஸ் அப்புறம் என்னா ஒவ்வொரு செமஸ்டர்க்கும் கரீட்டா வந்துடுவேன், ஒரு நாள் எழுதினா ஒன் டே, 5 நாள் எழுதினா டெஸ்ட் மேட்ச் சோ நாம அங்க சந்திப்போம் என்று சொல்லி இருப்பீங்களே!!!

கோபிநாத் said...

\\எனக்கேத் தெரியாம நல்லா எக்ஸம் எழுதி ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல் பர்ஸ்ட் வந்து பரிசு வாங்கியது [இது காலேஜ் வரையும் தொடர்ந்ததுன்னா அபி அப்பா நம்புவாரு கோபி நம்பும் குசும்பன் நம்பவா போவுது]***
\\

ம்ம்ம்...இப்படி சொல்லி சொல்லியே எல்லாத்தையும் நம்பவச்சுட்டிங்க...;)))

இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..

கோபிநாத் said...

\\ச்சும்மா சொல்லக் கூடாதுங்க பள்ளிக்கூட நினைவுகள் அசை போட சுகமாத்தான் இருக்கு.\\

அதனால் வரும் வேதனையும் சுகம் தான் :) :(

கோபிநாத் said...

\மங்கை said...
ஆமா கண்மணி..இந்த நிகழ்ச்சிய பற்றி நானே ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..
ஏன்னா எங்க ஊர் இல்லையா..:-))

அந்த தமிழ் கேட்க கேட்க எனக்கு அவ்வளவு ஆனந்தனமா இருந்துச்சு...

நீங்க சொன்ன அந்த ஆட்டோகிராப் பற்றி...ரொம்ப அழகா, ஆதமார்த்தமா சொன்னார்.. எனக்கு ரொம்ப பிடிச்சது...ரொம்ப நாளைக்கு அப்புறம் முழுவதும் பார்த்த நிகழ்ச்சி..
\\

மங்கைக்கா சீக்கிரம் எழுதுங்க...நீங்க சொல்றதை பார்த்த உங்க நினைவுகள் கலக்கலாக இருக்கும் போல இருக்கு...

கோபிநாத் said...

அப்பறம் எல்லா அக்காஸ்சும் அவுங்க அவுங்க கொசுவத்தியை சுத்தி சீக்கிரம் பதிவு போடுங்க....:))

பாண்டி-பரணி said...

நச்சின்னு இருக்கு..

கண்மணி/kanmani said...

மங்கை,முத்து,வித்யாகலை வாணி,சின்ன அம்மினி

பரணி சீனா,கோபி.அபி அப்பா ,குசும்பன்,மின்னுது மின்னல் அனைவருக்கும் நன்றி

Compassion Unlimitted said...

As I always say,Gods greatest Gift to us -MEMORY-to think back and enjoy.Nice ,Enjoyed your style
TC
CU

ஜி said...

:))))))


ippa ukkaanthu munnaala nadantha etha nenatchu paathaalum sugamaathaan irukkuthu :)))

MyFriend said...

//ஜி said...
:))))))


ippa ukkaanthu munnaala nadantha etha nenatchu paathaalum sugamaathaan irukkuthu :)))
//

அண்ணாக்கு ஒரு ரிப்பீட்டேய்.. ;-)

ரசிகன் said...

கண்மணி..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

குட்டிபிசாசு said...

அக்கா,

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

C.N.Raj said...

அந்த சிவக்குமார் நிகழ்ச்சிய
நானும் பார்த்தேன். அருமை.
எண்ணங்கள், செயல்கள் எல்லாம் நல்லவையாக இருந்தால் மனசும் வாழ்க்கையும் இனிமை தான் என்பதற்கு சிவக்குமார் ஒரு அருமையான எடுத்துக்காட்டு.

சரி. கண்மணி பாக்கி வைத்த பாக்கெட்டில் இருந்து நானும்
கொஞ்சம் கொசுவர்த்தி
சுத்திக்கிறேன்.
நாங்க எட்டு பேர் சேர்ந்து யுனிவெர்சிட்டி படிக்கும் போது
ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு
நான்கு வருடம் தங்கி
இருந்தோம். நான்கு வருடத்தில் நாற்பதாயிரம் இனிய நினைவுகள் உள்ளன.அதில் கடைசி நாள்
நடந்த ஒன்று.
எல்லோரும் மாலை வீட்டை
காலி செய்து விட்டுக் கிளம்ப வேண்டிய நேரம்.suitcase bag எல்லாம் ரெடி.
8மணிக்கு train. நம்ம dear
friends (என்னையும் சேர்த்து) கிளம்ப மனசில்லாம ஹாலை
சுத்தி சுத்தி வர்ரானுங்க. நாலு
பேர் மொட்டை மாடியில்
போய் உட்கார்ந்துவிட்டனர்.
நெஞ்செல்லாம் கனத்து
அடைக்கிறது.
ஆண் என்பதால் அழுது
தீர்க்கவும்
முடியாது.
நான் உடனே சொன்னேன்:
மச்சான் பெட்டியை வைங்கடா.
இன்னும் நாலு நாள் இருந்துட்டுப் போகலாம்.
"அப்பயும் இதே கதை தானேடா என்றான் சண்முகம்."
பரவாயில்லைடா ஒரு நிமிஷம்
கூடப் பிரியாம இந்த நாலு
நாளும்
இருந்துட்டுப் போவோம்டா!!
வீட்டு ஓனரிடம் சொல்லி விட்டு இருந்த அந்த நாலு நாட்கள்...

இப்போது என் கண்ணில் கண்ணீர் வருகிறது.............................................................................................................................................................................................................................................................................

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)