PAGE LOAD TIME

என்றான்....என்றாள்....இனி இப்படி....இதுயெப்படி?.

''காபி''
குரல் கேட்டு பாலா விழித்த போது மணி ஏழாகிவிட்டிருந்தது.
சத்யாவின் கையில் இருந்த காபியை வாங்கிக் கொண்டு பேப்பரைப் புரட்டிய போது,
''என்ன சமையல் செய்யட்டும்''
பாலாவுக்கு சலிப்பாக இருந்தது இதென்ன தினமும் இப்படி மெனு கேட்பது.வேலைக்குப் போகும் அவசரத்தில் எதையோ செய்து வயிற்றை நிரப்பினால் போச்சு.

''இதென்ன ஹோட்டலா மெனு சொல்ல''என்ற பாலாவின் கோபத்தில் சத்யா ஒன்றும் சொல்லாமல் அடுப்படிக்கு செல்வது தெரிந்தது.
எத்தனை முறைத்தாலும் தினமும் இந்த கேள்வி வந்து கொண்டுதானிருக்கும்.

பேப்பரை மடித்து வைத்து விட்டு எழுந்த போது குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்தன.என்ன படிக்கின்றன உதவி செய்வோமா எனத் தோன்றினாலும் இன்னைக்கு ஒருநாள் சொல்லிக் கொடுத்தால் சத்யா இந்த வேலையையும் தன் மீதே சுமத்த நேரும் என்பதால் கண்டு கொள்ளாமல் டி.வியைத் திருப்பி செய்திகளை கவனிப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டியிருந்தது.

காலை டிபன் முடித்த கையோடு பிள்ளைகளை குளிக்க வைத்து ,டிபன் பாக்ஸில் சாப்பாடு கட்டிக் கொடுத்து விட்டு சத்யா அவசர அவசரமாக குளிக்கப் போக,

குழந்தைகளையாவது நாம கவனிச்சிருக்கலாமோ பாவம் னு நெனச்ச நொடியே இல்லை இல்லை இதெல்லாம் செய்ய வேண்டிய கடமைதானே குடும்பம்னா ஒவ்வொருத்தருக்கும் இன்னின்ன கடமைன்னு இருக்கில்லையா என மனசு சமாதானம் ஆகியது.

அலுவலகத்திற்கு கிளம்பும் முன் பக்கத்து வீட்டில் பால் கார்டையும் எதிர் வீட்டில் காலி கேஸ் சிலிண்டரோடு பணத்தையும் தந்து விட்டு வந்து சத்யா ஸ்கூட்டியை கிளப்ப வண்டிக்கு பெட்ரோல் போட மறந்தது ஞாபகம் வந்தது.

பாலாவோடே காரில் போகலாம்னு நினைக்க அவசர வேலையாக தான் செல்ல வேண்டியதால் ஆடோவில் போகச் சொல்ல,
அதை காதில் வாங்கக் கூட நேரமில்லாமல் சத்யா அங்கு வந்த ஆட்டோவில் ஏறியது மனசுக்கு பெரிதாக உறுத்தவில்லை.

மாலை பாலா சீக்கிரமே வீடு திரும்ப சத்யா இன்னும் வரவில்லை என்பது அலுப்பைத் தந்தது.
காலை கிளம்பும் அவசரத்தில் கலைத்துப் போடப் பட்டவை மேலும் எரிச்சலூட்டியது.காபி குடித்தால் தேவலாம் போல் இருந்தது.

அப்படீயே சோபாவில் படுத்ததும் தூங்கிப் போக கண்விழித்த போது எதிரே சுடச் சுட காபியும் போண்டாவும் இருந்தது.

சத்யா எப்போது அலுவலகத்திலிருந்து வந்து இதைச் செய்திருக்கக் கூடும்.பதில் தேடுவதைக் காட்டிலும் காபியின் மணமும் போண்டாவின் சுவையுமே தேவையானதாக இருந்தது.

''ராத்திரிக்கு ரசம் வச்சி புடலங்காய் கூட்டு பண்ணட்டுமா'' ன்னு சத்யா கேட்டபோது
அவரைக்காய் பண்ணுன்னு வாயில் வந்தது.

புரியாமல் சத்யா அடுப்படிக்கு நகர,காலை அலுவலகத்தில் நடந்த விவாதம் ஞாபகம் வந்தது.
பெண்ணீயமும் புடலங்காயும் னு சொல்லும்போது ஆணியமும் அவரைக்காவும் னு சொன்னா என்னன்னு வாக்குவாதம்.அதுதான் புடலங்காய் கூட்டுக்கு மாற்றோன்னு யோசனை வந்தது.

ஒரு வழியாக இரவு உணவு முடித்து பிள்ளைகள் தூங்கி விட்டிருக்க அடுப்படியில் சத்யா ஏதோ உருட்டுவது கேட்டது.நாளைக்கான ஆயத்தங்களோ?

வேலையெல்லாம் முடித்து படுக்கையறைக்கு வந்த சத்ய[சீலன்],
''இடுப்பெல்லாம் வலிக்குது அந்த தைல பாட்டில் எங்கே''ன்னு கேட்டான்.

''அங்கதான் இருக்கும் நல்லா தேடவேண்டியதுதானே'' நிர்தாட்சயண்யமாக பாலா[மணி] பதில் சொன்னாள்.

[குழப்பமா மறுபடி படிங்க;)]

''கட்...கட்''

என்றார் மேலே சொன்ன நிகழ்வுகளை காட்சிகளாக படமாக்கிக் கொண்டிருந்த பெண் டைரக்டர் சுப்ரியா.
பெண்களைப் பற்றி புதுமையாக,புரட்சிகரமான கருத்துக்களுடன் படம் தந்து அவார்டு வாங்கியவர்.

இப்பவும் சத்யா என்ற சத்தியசீலன்,பாலா என்ற பாலாமணி காரெக்டரும் வைத்து
பெண்ணை சுதந்திரப் பறவையாகவும் ஆணை 'ஹோம் மேக்கராகவும்'சித்தரித்து படம் எடுத்துக் கொண்டிருப்பவர்.

''மேடம் பொம்பளைங்கன்னா அடிமைங்க,சமையல் கட்டே கதின்னு நெனைக்கிறவங்களுக்கு இந்த படம் ஒரு பாடமாயிருக்கும்.நிச்சயம் 100 நாள் ஓடும்''

''நிச்சயம்.ரொம்ப சந்தோஷம் நன்றினு ''சுப்ரியா சொல்லும் போது கைப் பேசி அழைத்தது.

''எங்க வீட்டுக்காரர்தான் கூப்பிடறார்.ஆபிஸ்லேர்ந்து வந்துட்டார்.நான் வீட்டுக்குப் போய் சமைக்கனும்.போகும் வழியில் பசங்களை ஸ்கூல்லேர்ந்து பிக்கப் செஞ்சி கூட்டிப் போகனும் அப்படியே மார்க்கெட் போய் ககாய்கறியும் வாங்கிப் போகனும்.
''பேக்கப்'' என்றபடியே

உடனே கிளம்பிப் போனார் புரட்சிப் பெண் டைரக்டர் சுப்ரியா.டிஸ்கி:இதையே நஒக போட்டிக்கு அனுப்புனா என்ன?அனுப்பிட்டேனே.....
சோ இது ஒரு நச்சினு ஒரு கதையாக்கும்

17 மறுமொழிகள்::

லக்ஷ்மி said...

kalakkal twist... piniteenga yakkov (sorry for english)

கண்மணி/kanmani said...

ஹாய் லக்ஷ்மி வாழ்த்துக்கள்.அ.வி மேட்டருக்குத் தனிப் பதிவே போட்டேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

aahaa ,, kanmani :)))

TBCD said...

ஐ....இரண்டு திருப்பம்...நல்லா இருக்குதுங்க..

இவன்,

தமிழறிஞர் டிபிசிடி

காட்டாறு said...

அவங்க அவங்க ரூம் போட்டு யோசிக்கிறதை... ரூமுக்குள்ள இருந்து எழுதிட்டீங்களே... :-)

நல்லாயிருக்குது கதை. உங்க டச் மிஸ்ஸாயிடுச்சோ...ஆனாலும் பிடிச்சிருக்குது.

Anonymous said...

ஆணீயமும் அவரைக்காயும் நல்லாத்தான் இருக்கு திருப்பத்தோட. உங்க காமெடி எதிர்பாத்தேன் இதில.

கோபிநாத் said...

சூப்பரே சூப்பர் ;))

கண்மணி/kanmani said...

முத்து இது குட்டா...பாராட்டா?

காட்டாறு, சின்ன அம்ம்ணிங்கோ மாமி ஊர்ல இல்லீங்கோ
வந்துட்டா சும்மா அதிருமில்லே

கோபி....நல்லாருக்கியா ராசா

டிபிசிடி அய்யோ.....அய்யோ....நீரு?தமிழறிஞரு?......ம்ம்ம்

Anonymous said...

ஆஹா இப்படி கூட ஆசைப் படுவீங்களா தாய்க்குலமே

குட்டிபிசாசு said...

சூப்பரப்பு!! வழக்கம் போல கலக்கிட்டிங்க!!

cheena (சீனா) said...

இரண்டு திருப்பங்களுமே அருமை - முதல் திருப்பம் ச்சற்றும் எதிர்பாராதது - நன்று

Anonymous said...

ஓகே பரவாயில்லை ஒன்னுக்கு ரெண்டு டுவிஸ்ட்டு இருக்கு

Unknown said...

நல்லா இருக்குங்க!

கண்மணி/kanmani said...

நன்றி குட்டிபிசாசு ,சீனா சார் ,நாடோடி இலக்கியன்,அனானி

SurveySan said...

சத்யசீலன் ஸ்கூட்டியில் போவது மட்டும்தான் இடிக்குது :)

சென்ஷி said...

:))

கலக்குங்க....

ஷார்ஜாவிலிருந்து

சென்ஷி

Nithi said...

திருப்பம்...நல்லா இருக்குதுங்க..

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)