PAGE LOAD TIME

எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?பகுதி-1

வலைமுகம் னு புதுசா ஒரு வலைப்பூ அறிமுகமாகி இருக்கிறதுங்க.பேட்டி எடுப்பதுதான் அவங்க வேலையாம்.அதுல இருந்து ஒரு குழு கிளமபி பிரபலமான சில வலைப் பதிவர்களைப் பேட்டி காணப் போகிறதாம்.

புத்தாண்டு பிறக்கப் போகுது.புது வருஷத்துல உங்க பழைய பாணியை மாத்தி புதுசா என்ன பண்ணப் போறீங்கன்னு கேட்டாங்கப்பூ.
அதுக்கு நம்மாளுங்க சொன்ன பதிலைப் பாருங்க.

அபி அப்பா:

போன வருஷம் முழுக்க அபி பாப்பாவை வச்சி காலத்தை ஓட்டிட்டேன்.இனி எல்லாம் நட்டு தம்பிய வச்சி எழுதப் போறேன்.
குரங்கு ராதா கதையே எத்தனை நாள் சொல்வீங்கன்னு கேக்குறாங்க.
இனி மேல் கழுத கணேசனைப் பத்தி எழுதப் போறேன். அபி அப்பான்னா சும்மா காமெடி பண்ணத்தான் லாயக்குன்னு மக்க நெனைச்சிட்டாங்க. நானும் இனிமே கதை,கவுஜ ன்னு எழுதப் போறேன்.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா? [ஆமாப்பூ மண்டபத்துக்கு எப்படி போகனும்?]

குசும்பன்:

இதுவரை எதிர் கவுஜ,அடுத்தவங்களைக் கலாய்க்கிறதுன்னு எழுதியே விகடன் வரவேற்பரை வந்துட்டேன். இனி நானும் அய்யனார் மாதிரி புனைவுகளில் பின்னியெடுத்து பின்நவீனத்துவ எழுத்தாளனா மாறப்போறேன் .கூடப் படிச்ச காலத்தில் கனவிலும் வராத கனகாவையும்,திரும்பிக்கூட பார்க்காத தாட்சாயணீயையும் பத்தி எழுதி பில்டப் குடுத்தாலாவது கோட்டு சூட்டு போட்டு போஸ் குடுத்தாலும் சிக்காத பொண்ணுங்க இந்த புது வருஷத்திலாவது சிக்குமான்னு பாக்கனும்.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா? [தினமலர் ராசி பலன் சரியாயிருக்குமா?இல்லை தினகரனா?சொல்லுங்கப்பா]


தம்பி:

சின்ன வயசுலேயே அபிநயசரஸ்வதி சரோஜாதேவியைப் பிடிச்சது.வயசுல பெரியவங்களாச்சேன்னு விட்டுட்டேன்.அப்பால விஜயசாந்தியைப் பிடிச்சது.அவங்க அடிக்கிற அடிக்கு பயந்து ஜகா வாங்கிட்டேன்.நதியா ன்னா உயிரா இருந்தேன்.எனக்கு பயந்து அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகி இப்ப குமரனுக்கு அம்மாவா வ்ந்தாங்க அந்த மகாலஷ்மி.பாவனா மேல பைத்தியமா இருக்கேன் இப்போதைக்கு.ஒருவேளை அவங்களுக்கும் கல்யாணம் ஆயிட்டா...எங்கிருந்தாலும் வாழ்க ன்னு பாடுவேன்.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?
[ஆமா பாவனாக்குப் பின்ன இப்ப பீல்டுல அழகான நடிகை யாருன்னு பார்க்கனும்]


அய்யனார்:

ஆரம்ப காலத்துல ஏதோ புரியற மாதிரி கவிதை எழுதினேன்.அப்பால கும்மி கூட்டத்தோட்டு சேர்ந்து கும்மியடிச்சேன்.பிறகு பின் நவீனத்துவ வாதியாகி மூடப்படாத ஆடைகளினூடே**** ன்னுல்லாம் எழுதி ஹேமா சங்கமித்திரைன்னு புனையத் தொடங்கிய பிறகு இன்னமும் என் எழுத்தின் கனம் கூடிப் போச்சு.அத்தோடு மண்டைக் கனமும் கூடிப் போச்சு என பொருமும் கூட்டமும் இருக்கு.என்னைப் போல் முத்தக் கவிதையை சத்தமாக எழுதத் துணிவிருக்கா?மொக்கை போடவும் கும்மியடிக்கவும் நான் தயார்.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா? [மக்கா சவாலுக்கு ரெடியா?]

சென்ஷி:

எனக்கு சங்கம் வச்சித் தான் பதிவு போடத்தெரியும்.பாலபாரதி கலாய்ப்பு சங்கத்துக்குப் பிறகு பாசக்கார குடும்பத்த வச்சி கும்மிப் பாட்டு குத்துப் பாட்டுன்னு எப்படியோ பதிவு தேத்திப் போட்டுடுரேன்.இனிமே வவாசங்கம்,பாப்பா சங்கம் , குட்டீஸ்கார்னர் னு குரூப்பா இருக்கிற மக்களை வச்சி தாலாட்டு தெம்மாங்குனு பதிவு போட்டுட வேண்டியதுதான்.
எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?

கோபி:

நான் பாட்டுக்கு கூட்டாஞ்சோறு ,குட்டி இந்தியன் னு மாசம் ஒரு கொசுவர்த்தி சுத்திக்கிட்டிருக்கேன்.நம்மள வச்சி ஒன்னாந்தேதி வந்தாத்தான் கோபி பதிவுன்னு காமெடி பண்ணுதுங்க.இனி எப்படியாச்சும் வாரம் ஒரு பதிவாச்சும் போட்டுடனும்.இருக்கவே இருக்கு ஃபார்வேர்டு மெயிலும்,யூ டியூபும்.வச்சி ஃபிலிம் காட்டிட வேண்டியதுதான்.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?

டெல்பின்:

ஆஸ்பத்திரி வாசனையும் மருத்துவக் கட்டுரையும் போரடிச்சுப் போச்சு.ஹாயாக டூர் போயிட்டம்ல. திரும்பி வந்ததும் அனுபவங்களை துளசி கோபால் மாதிரி பயணக் கட்டுரையாப் போட்டுத் தாக்குவோம்ல.எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?[மீதி பேட்டி அடுத்த பதிவுல]

20 மறுமொழிகள்::

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அருமையான நேர்காணல் நிகழ்ச்சிகள் - இன்னும் நெரெய இருக்காங்க - பேட்டி எடுக்க ( நான் எல்லாம் இப்போ பேட்டி எல்லாம் கொடுக்கறது இல்ல)

குசும்பன் said...

//நான் எல்லாம் இப்போ பேட்டி எல்லாம் கொடுக்கறது இல்ல///

அட பொட்டியாவது கொடுங்க:)))

குசும்பன் said...

///முத்தக் கவிதையை சத்தமாக எழுதத் துணிவிருக்கா?///

முத்தகவிதை என்றால் என்னா? சிலர் போனில் பேசும் பொழுது மூஞ்சுறு விடும் சத்தம் போல வரும் அதுதான் முத்த சத்தமா அதை வைத்து எப்படி கவிதை எழுதுவது:))))

குசும்பன் said...

///போட்டுடுரேன்.இனிமே வவாசங்கம்,பாப்பா சங்கம் , குட்டீஸ்கார்னர் னு குரூப்பா இருக்கிற மக்களை ///

என் பிளட்டும் கூட B+ குரூப்பாம் அதை வைத்து கூட பதிவு போடலாம் சென்ஷி

குசும்பன் said...

/// அபி அப்பான்னா சும்மா காமெடி பண்ணத்தான் லாயக்குன்னு மக்க நெனைச்சிட்டாங்க.///

அப்படி எல்லாம் இல்லை விருமாண்டி பதிவு படிச்சு அபி அப்பா எம்புட்டு கோவ காரர் என்று எல்லா பயந்து போய் இருக்கிறார்கள்:)))

அபி அப்பா said...

டீச்சர் ரொம்ப நாள் பிறகு வாய் விட்டு சிரிச்ச பதிவு இது! அக் மார்க் டீச்சர் பதிவு!அதுவும் தம்பி, அய்ஸ் கமெண்ட் சூப்பரோ சூப்பர்!:-)))

ஆயில்யன் said...

//நானும் இனிமே கதை,கவுஜ ன்னு எழுதப் போறேன்//

சும்மா கிடந்த சிங்கத்த,
சிலுப்ப விட்டுட்டீங்க என்னவாகபோகுதோ...:))

ஆயில்யன் said...

// விகடன் வரவேற்பரை வந்துட்டேன்//

வரவேற்பறைக்கு வந்தத சொல்லவேயில்லை :)

ஆயில்யன் said...

//அந்த மகாலஷ்மி.பாவனா மேல பைத்தியமா //

மகாலெஷ்மி - யாரு அந்த டிவியில் எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருப்பாங்களே அவுங்களா..!? அவுங்களும் உங்க லிஸ்ட்ல உண்டா?

ஆயில்யன் said...

//அப்படி எல்லாம் இல்லை விருமாண்டி பதிவு படிச்சு அபி அப்பா எம்புட்டு கோவ காரர் என்று எல்லா பயந்து போய் இருக்கிறார்கள்)//

ஆமாங்க எப்பா எப்படி கோபக்கனல் தெறித்து விழுந்தது பாத்தீங்களா அந்த பதிவுல! அது மாதிரி நிறைய ஸ்டாக்கு இருக்காம் அவர்கிட்ட :)

சும்மா அதிருதுல said...

"எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டோமா?
//

கலக்கல் :)

சும்மா அதிருதுல said...

திரும்பிக்கூட பார்க்காத தாட்சாயணீயையும் பத்தி எழுதி பில்டப் குடுத்தாலாவது கோட்டு சூட்டு போட்டு போஸ் குடுத்தாலும் சிக்காத பொண்ணுங்க இந்த புது வருஷத்திலாவது சிக்குமான்னு பாக்கனும்
//

"எவ்வளவோ பண்ணிடாரு இதைப் பண்ணுனா மட்டும் சிக்கிட போகுதா என்ன..??


குப்புற படு குசும்பா..:)

குட்டிபிசாசு said...

//நான் பாட்டுக்கு கூட்டாஞ்சோறு ,குட்டி இந்தியன் னு மாசம் ஒரு கொசுவர்த்தி சுத்திக்கிட்டிருக்கேன்.//
நல்லா கேளுங்க!

//இனி மேல் கழுத கணேசனைப் பத்தி எழுதப் போறேன்.//

சூப்பரப்பு!! :))

குட்டிபிசாசு said...

//அய்யனார் மாதிரி புனைவுகளில் பின்னியெடுத்து பின்நவீனத்துவ எழுத்தாளனா மாறப்போறேன் .//

குசும்பரை இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லி இருக்கணும்!!

காட்டாறு said...

மொத ரவுண்டே சூப்பரா இருக்குது. கலக்குங்க. அப்படியே நம்ம கண்மணியையும் பேட்டி எடுக்க மறக்க வேண்டாம். :-)

//அதுக்கு நம்மாளுங்க சொன்ன பதிலைப் பாருங்க.
//
இது ஏதோ சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி இருக்குது. :-)

கோபிநாத் said...

\\ காட்டாறு said...
மொத ரவுண்டே சூப்பரா இருக்குது. கலக்குங்க. அப்படியே நம்ம கண்மணியையும் பேட்டி எடுக்க மறக்க வேண்டாம். :-)\\

இதை நான் வழிமொழிகிறேன்...

கோபிநாத் said...

குட்டிபிசாசு said...
//நான் பாட்டுக்கு கூட்டாஞ்சோறு ,குட்டி இந்தியன் னு மாசம் ஒரு கொசுவர்த்தி சுத்திக்கிட்டிருக்கேன்.//
நல்லா கேளுங்க!\\

குட்டி இது பாசமா இல்ல கொலைவெறியா!!?? ;))

குசும்பன் said...

குட்டிபிசாசு said...

///குசும்பரை இன்னும் கொஞ்சம் அதிகமா சொல்லி இருக்கணும்!!///

குட்டியோண்டு பிசாசு எம்மேல அம்புட்டு பாசமா, சகோதரா எங்கப்பா இருக்க????:(((

சுரேகா.. said...

ஆகா... இது வேறயா..?

மொத்தத்துல

லந்தைக்குடுக்குறீங்க..!

சென்ஷி said...

:)))

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)