PAGE LOAD TIME

பூக்களில் உறங்கும் மௌனங்கள் [தனிமை--]

பென்சில் கிறுக்கல் இல்லாத
புது வெள்ளைச் சுவர்கள்

கிழித்துப் போடப்படாத
நோட்டின் பக்கங்கள்

சிதறிக் கிடக்காத
விளையாட்டுப் பொருட்கள்

கலைத்துப் போடப்படாத
அலமாரி புத்தகங்கள்

கசக்கி எறியப்படாத
காகிதக் கப்பல்கள்

கால் உடையாத
பிளாஸ்டிக் நாற்காலி

மூக்கு நசுங்காத
கரடி பொம்மை

ரிப்பேர் ஆகாத
டி.வி.ரிமோட்

சொல்லாமல் சொல்லியது
பகிரப்படாத தனிமையின் வேதனையை !
புதிரான வாழ்வின் நிஜங்களை !!
பூக்களில் உறங்கும் மௌனங்களை !!!
36 மறுமொழிகள்::

ஆடுமாடு said...

//சிதறிக் கிடக்காத

விளையாட்டுப் பொருட்கள்

கலைத்துப் போடப்படாத
அலமாரி புத்தகங்கள்//

இதே சாயலில் போய், கடைசியில்
'குழந்தைகள் இல்லாத வீடு' என
நச்சென்று கவிதையை முடித்திரூப்பார் கவிஞர் கரிகாலன்.

அதையே ஞாபகப்ப்படுத்தின உங்கள் கவிதை.
நன்றி. வாழ்த்துகள்.

கண்மணி said...

நன்றி ஆடுமாடு
நான் யாருடைய கவிதைப் புத்தகமும் படித்ததில்லை.என் கவிதை அனுபவமே படிக்க சில பேர் இருப்பாங்க என்கிற தமிழ்மணம் தந்த தைரியம் தான்.
காப்பி...சாயல் னு சொல்லி பயம் காட்டாதீங்க;(

மங்கை said...

//பகிரப்படாத தனிமையின் வேதனையை !
புதிரான வாழ்வின் நிஜங்களை !!//

ம்ம்ம்ம்

குசும்பன் said...

:)))))))))

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
ஆயில்யன் said...

யாரு கண்ணு பட்டுச்சோ....!
:(

கோபிநாத் said...

:(

குட்டிபிசாசு said...

என்ன நேத்துல இருந்து ஒரு கவிதை அடைமழை!

போட்டிக்கு வாழ்த்துக்கள்!!

சென்ஷி said...

கவிதை சூப்பர்.. ம்ம்ம்.. வெற்றிபெற வாழ்த்துக்கள் :))

சென்ஷி said...

:((

எல்லோருமே சோக ஸ்மைலி போட்டிருக்காங்க. நான் மட்டும் போடாட்டி நல்லாருக்காதுல்ல.. அதான்.. :((

குசும்பன் said...

///சென்ஷி said...
கவிதை சூப்பர்.. ம்ம்ம்.. வெற்றிபெற வாழ்த்துக்கள் :))///

யோவ் சென்ஷி சும்மா காலையில் ஜாக்கிங் போய்கிட்டு இருக்கிறவனை புடிச்சு ஓட்டபந்தயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்வபோலயே!!! அவுங்க ஏதோ சும்மா ஒரு கவிதை எழுதுனா உடனே வாழ்த்து சொல்ல ஆரம்பிச்சுடுவீங்களா? அவுங்களும் ஏதோ போட்டி நடக்கிறது போல என்று திரும்ப இதுபோல கவிதை எழுத ஆரம்பிச்சா என்னா செய்வது?

ஆமாம் என்னா எல்லாரும் சோக ஸ்மைலி போட்டு இருக்காங்கன்னு சொல்றீங்க, நல்லா கண்ணை தொடைச்சிட்டு பாரும் நான் எப்படி சிரிக்கிறேன் என்று.

ஆயில்யன் said...

ஆமாம் ஏன் எல்லாரும் இப்ப சோகமா இருக்கீங்க :(

கண்மணி said...

அடப் பாவிகளா சோக ஸ்ஸ்மைலி போட்டு பரிசு வாங்கிடக் கூடாதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?

யு டூ மங்கை.?

நோ ஃபீலிங்க்ஸ் ஆப் இந்தியா மக்கா...

கவிதை எழுதுவேன்....எழுதி கிட்டேயிருப்பேன்.குசும்பா..ஹாஹாஹா

சீனா சார் குழந்தைகள் படம் பார்த்தே புரிஞ்சிக்கனும்....
இது எந்தத் தனிமைன்னு...இதுதான் மலர்ந்த பூக்களின் உள்ளிருக்கும் சோகம்..[பரிசு கிடைக்குமா?]

மங்கை said...

தங்கமே ரசிச்சிருக்கேன் கண்மணி..

கிண்டல் இல்லை...நிஜமாவே சொல்றேன்.. அந்த வரிகள் நல்லா இருக்கு

சக்தி said...

போட்டிக்கு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

ஓட்டைவாய் உலகநாதன் ஏதாச்சும் சொல்லியிருப்பாரோன்னு நெனைச்சேன் மங்கை.

ம்ம்ம் ன்னாலே பயமாயிருக்கு;)

யூ டூ ன்னு சொன்னது நீங்களும் ஃபீல் ஆயிட்டீங்களான்னு கேக்கத்தான்.

கண்மணி

ஆயில்யன் said...

// கண்மணி said...
கவிதை எழுதுவேன்....எழுதி கிட்டேயிருப்பேன்...ஹாஹாஹா//

யக்கோவ்..! இது எதுக்கு வில்லத்தனமான சிரிப்பு :)

கண்மணி said...

சக்தி நன்றிம்மா!!

ஆயில்யா..சும்மா ஒரு ஃபில்டப்புதான்.

அதிலும் இந்த தம்பி[கதிர்]க்கு என் கவுஜ படிச்சாலே சிரிப்பு வருமாம்.

தம்பி said...

//அதிலும் இந்த தம்பி[கதிர்]க்கு என் கவுஜ படிச்சாலே சிரிப்பு வருமாம்.//

என்ன கொடும டீச்சர் இது?
கவுஜ படிச்சா சிரிப்பு வந்தே ஆகணும் இல்லாட்டி அது கவுஜயே இல்ல!

குட்டிபிசாசு said...

//மங்கை said...

தங்கமே ரசிச்சிருக்கேன் கண்மணி..

கிண்டல் இல்லை...நிஜமாவே சொல்றேன்.. அந்த வரிகள் நல்லா இருக்கு
//

இப்படி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாங்க போல!!! :)

Anonymous said...

//இப்படி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாங்க போல!!! :)//

அப்ப கவிதை நல்லா இல்லை அப்படினூ சொல்றீங்க.

குட்டிபிசாசு said...

// Anonymous said...

//இப்படி உசுப்பேத்தியே ரணகளம் ஆக்கிடுவாங்க போல!!! :)//

அப்ப கவிதை நல்லா இல்லை அப்படினூ சொல்றீங்க.
//
ஐயா,

சிண்டு முடியாட்டி உங்களுக்கு தூக்கம் வரதா?

ஜெஸிலா said...

என்ன தனிமை, வெறுமை, சோகம்? குழந்தையை போர்டிங்கல போட்டுட்டீங்களா என்ன? ஆமா, கவிதைப் போட்டி யாரு வைக்கிறா?

ஆடுமாடு said...

//காப்பி...சாயல் னு சொல்லி பயம் காட்டாதீங்க;(//

கண்மணி தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. சாயல், பாதிப்பு எல்லாருக்கும் ஏற்படலாம்.

ஒன்றை படிக்கும் போது இன்னொரு இருப்பது சகஜம்தான். அதை காப்பி என்று எடுத்துக்கொள்ள கூடாது.
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவுமில்லை.

நன்றி.
//நான் யாருடைய கவிதைப் புத்தகமும் படித்ததில்லை//

எழுத ஆரம்பித்த பிறகு நிறைய படிப்பதே நல்லது.

மீண்டும் நன்றி.

CresceNet said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

காட்டாறு said...

பூக்களில் உறங்கும் மெளனம்... ம்ம்ம்... இதுவே கவிதை தான்.

நல்லாயிருக்கு.

G.Ragavan said...

வாழ்த்துகள் கண்மணி. :) நல்ல கவிதை.

சேவியர் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிகச் சிறப்பான கவிதை.

அருட்பெருங்கோ said...

வாழ்த்துகள் கண்மணி!!!
எளிமையான சொற்களில் அழகான கவிதை.

கண்மணி said...

வெற்றியா ?பாராட்டா?
இப்போதுதான் வந்தேன்.புரியலை.சிறீல் அலெக்ஸ் பக்கம் பார்க்கனும்.
வாழ்க்கையின் தோல்விகள்கூட சிலசமயம் வெற்றியாவதுண்டு.
கவிதையின் அழகு எளிமையான வார்த்தைகளில் இல்லை..உணரப்பட்ட அதன் வலிகளில்.
அனைவருக்கும் நன்றி

cheena (சீனா) said...

//சீனா சார் குழந்தைகள் படம் பார்த்தே புரிஞ்சிக்கனும்....
இது எந்தத் தனிமைன்னு...இதுதான் மலர்ந்த பூக்களின் உள்ளிருக்கும் சோகம்..[பரிசு கிடைக்குமா?]//

கண்மணி - வெற்றிக்கு பாராட்டுகள் நல் வாழ்த்துகள். கவிதை பிறப்பதே ஒரு வலியில் தான். மகிழ்ச்சியில் கவிதைகள் சாதாரணமாக பிறப்பதில்லை. வலியில் பிறந்த கவிதை மகிழ்வைத் தரும். வெற்றியைத் தரும்.

செல்விஷங்கர் said...

உண்மையில் பாராட்டப் பட வேண்டிய கவிதை. சுருக்கமும் தெளிவும் அதில் ஒரு உள்ளுணர்வும் ஓடிக் கொண்டிருப்பது கவிதையின் உயிரோட்டம். நன்றுநன்று !!

வெற்றிக்குப் பாராட்டுகள்

சிறில் அலெக்ஸ் said...
This comment has been removed by the author.
நிலாரசிகன் said...

வாழ்த்துக்கள் கண்மணி.

பாச மலர் said...

வாழ்த்துகள் கண்மணி...

Kavina said...

சொல்லாமல் சொல்லியது
பகிரப்படாத தனிமையின் வேதனையை !
புதிரான வாழ்வின் நிஜங்களை !!
பூக்களில் உறங்கும் மௌனங்களை !!! -

அழகான வரிகளால், இயல்பாக ஒரு வேதனையை எழுதியிருப்பது ஆழமாக மனதைப்பிசைகிறது.... நன்று தோழி...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)