PAGE LOAD TIME

வந்துட்டாங்கய்யா...வந்துட்டாங்க

இது ஒரு கிசு கிசு மாதிரி பதிவுன்னு வச்சிக்கிங்களேன்.
காதுகடி கந்த சாமியும் ஓட்டைவாய் உலகநாதனும் ஆணி புடுங்கற வேலை அதிகமிருப்பதால்
நை காசிப் ன்னு சொல்லி கையை விரிச்சிட்டாங்க.
அதனால எனக்கு தெரிஞ்ச மேட்டரை கிசுகிசு பாணியில சொல்றேன்.

தமிழ்மணத்துல கொஞ்சம் பேர் பண்ற லந்து தாங்க முடியலைங்க.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம்.அவங்க பதிவையோ,பின்னூட்டத்தையோ பார்த்தாலே வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கன்னு தோணும்.

1.ஒரு புதிய பதிவர்.பறவை மாதிரி பறந்து பறந்து போய் பின்னூட்டம் போடுவார்.ஆனால் கொஞ்சம் கூட மனப் பக்குவம் இல்லாமல் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரன் பாணியில் குறை கண்டுபிடிப்பார்.விஷயம் தெரிந்தவர்தான் நல்ல பதிவுகளைக் கொடுப்பவர்தான்.அதே நேரம் அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பெருந்தன்மை இருக்கனும்.எடுத்தோம் கவிழ்த்தோம் னு வார்த்தையாடக் கூடாது.

ஏற்றத்தில் பணிவும் தாழ்ச்சியில் பெருமையும்
சான்றோர்க்கு அழகாம்.


2.இவர் ஒரு பாப்புலரான பழைய வயதான [இளமைன்னு சொல்லிக்குவார்]பதிவர்.ஆனால் மெல்லின இடையின விவகாரங்களில் வீக்.கொஞ்சம் இல்லீங்கோ ரொம்பவே வீக்.இன்னும் தன் வீட்டு அம்மாவுக்கே வல்லினமா மெல்லினமா ன்னு டவுட் ஆயிடுவாரு இந்த அப்பாவி பதிவர்.

அய்ந்தில் வளையாதது
அம்பதில் வளையுமா?


3.இவர் ஒரு உண்மையிலேயே இளைய பதிவர்.சும்மா சுத்திக்கிட்டிருந்தவர் மத்தவங்க பிலாக்கை எட்டிப் பார்க்க அனுமதி வேணுமின்னே தனி பிலாக்கு தொடங்கியவர்.ஆனால் கும்மியடிக்கும்போது அந்நியனாகத் தான் வந்து கும்முவார்.ஆணி அதிகமோ இல்லை அலுப்புத் தட்டிப் போச்சோ இப்பெல்லாம் கும்மாங்குத்து குறைஞ்சு போச்சு.

அளவுக்கு மிஞ்சின அமுதமும்
பதிவுக்கு மிஞ்சின கும்மியும் கசக்குமாம்


4.இந்த பதிவர் நல்லவர்தான்.இருந்தாலும் மத்தவங்க பதிவுன்னா எள்ளுவார்.அதிலும் கவிதைன்னா இவருக்கு பிடிக்காது.சிரிப்பு வருமாம்.யாரு வம்புக்கும் போக மாட்டார்.ஆனாலும் பக்கத்துல இருக்கிறவங்க தும்மினாலும் அனுபவப் பதிவா போட்டுடுவார்.
ய்தார்த்தமான இவர் ஒரே விஷயத்தில் பானா நானா ன்னு ஆகாச கோட்டை கட்டுகிறார்.

கூறை ஏறி கோழி பிடிக்காதவன்
வானம் ஏறி கோடம்பாக்கம் போனானாம்.


5.இந்த பதிவர் ரொம்பவே வித்தியாசமானவர்.தனக்ககுத் தெரிந்த டெக்னிகள் விஷயங்களைப் பதிவிட்டால் ஈ ஓட்டும் எனத் தெரிந்து கொண்டு எந்நேரமும் எதிர்மறை கருத்து சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர். பதிவின் தலைப்புகளைப் பார்த்தாலே தீப் பிடிக்கும்.ஆனா உள்ளே போனா சப்பை மேட்டரு.

அடுத்தவர் முதுகில் உப்பு மூட்டை ஏறுவதைவிட
ஒத்தக் காலுன்னாலும் சொந்தக் காலு மேலுங்கோ


6.இந்த பதிவர் ஒரு மாற்று முகாமைச் சேர்ந்தவர்.அட மகளிரணி என்பதற்குத் தான் இந்த பில்டப்..சீரியஸா சிரியஸா ன்னு சொல்ல முடியாதபடி வயது வரம்பில்லாம கும்மியடிப்பதோடு அப்பப்ப ஏதாச்சும் எழுதவும் செய்வாங்க.
பெரியாரு படத்துல நடிச்ச கையோட அடிதடி ல நடிக்கிற சத்யராஜ் மாதிரி இவங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலை.


பாம்புன்னு நெனைச்சு தாண்டவும் முடியல
பழுதுன்னு நெனைச்சு மிதிக்கவும் முடியலயாம்.


7.அடுத்து சொல்லப் போறது தனி ஆள் இல்லீங்கோ.இவிங்க ஒரு குரூப்பாத்தான் திரியிராங்கோ.யாரையாவது பழி வாங்கனுமின்னா இவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.முன்னாலயிருந்து ஒரே தூக்காத் தூக்கி கடாசிடுவாங்க பின்னால.
அண்டை நாட்டு பாப்பாவும், எண்ணை ராசிக் காரரும் ,அகிம்சைக்கு எதிரானவரும் இதுல கூட்டணி.அப்பப்ப மத்தவங்களும் சேந்துப்பாங்க.

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும்
பாடுற மாட்டை பாடிக் கறக்கனும்

42 மறுமொழிகள்::

கோபிநாத் said...

ம்ம்ம்...கடமை ;)

இலவசக்கொத்தனார் said...

இம்புட்டு நாள் இங்க இருந்து என்னங்க லாபம் நீங்க சொன்னதில் ஒருத்தரைக் கூட கண்டுபிடிக்கத் தெரியலை! :-(

கண்மணி said...

கோபின்னா கடமை தவறாத தம்பி ன்னு டிக்க்ஷனரியில் போட்டிருக்கே;)

கண்மணி said...

வாங்க கொத்ஸ் கொஞ்சம் முயற்சித்தால் முடியும்.
எல்லோருமே ஓரளவுக்கு ஃபெமிலியர் ஆளுங்க தான்.

ஆயில்யன் said...

அய்யோய்யோ....!!!

இன்னும் ஒரு கும்மியா

வீட்டுக்கு போனபிறகுதான் :))))

நிலா said...

பாப்பான்னா நானா? ஆனா அண்டை நாட்டுப்பாப்பா இல்லையே நான்?

Baby Pavan said...

நிலா said...
பாப்பான்னா நானா? ஆனா அண்டை நாட்டுப்பாப்பா இல்லையே நான்?

நிலா அக்காவுக்கு ஆப்பு கொஞ்சம் ஷ்பெசலா ரெடி பண்ணனும் போல இருக்கு...

Baby Pavan said...

இம்சைக்கு நான் நேத்து வெச்ச ஆப்புல நடுங்கி போய் இருக்காரு...

Baby Pavan said...

Baby Pavan said...
நிலா said...
பாப்பான்னா நானா? ஆனா அண்டை நாட்டுப்பாப்பா இல்லையே நான்?

நிலா அக்காவுக்கு ஆப்பு கொஞ்சம் ஷ்பெசலா ரெடி பண்ணனும் போல இருக்கு...

ஆகா , தப்பா போச்சி, கமா மிஸ் ஆயிடிச்சி...

நிலா பிரண்டு, நம்ம அக்காக்கு ஷ்பெசலா ஆப்பு ரெடி பண்ணனும் போல இருக்கு

அபி அப்பா said...

டீச்சர் 2வது கிசு கிசு யாரு டீச்சர்! அகராதி புடிச்சவனா இருப்பான் போல இருக்கே!:-))

cheena (சீனா) said...

ஆகா ஆகா - ஒரு மண்ணும் புரிலெயே - இன்னும் வலைப் பதிவர்களைப் புரிஞ்சுக்கலெயே நானு - யார் யார் னு சொல்லிடுங்க சீக்கிரமா

ஆயில்யன் said...

//அபி அப்பா said...
டீச்சர் 2வது கிசு கிசு யாரு டீச்சர்! அகராதி புடிச்சவனா இருப்பான் போல இருக்கே!:-))
//

அபி அப்பா..!
அபி அப்பா...!

எப்படி அபி அப்பா உங்களால மட்டும் இப்படி ஃபீல் பண்ண முடிய்து எனக்கும் அந்த கலையை கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்...:)

ஆயில்யன் said...

//நிலா said...
பாப்பான்னா நானா? ஆனா அண்டை நாட்டுப்பாப்பா இல்லையே நான்?
//

ஹய்யோ..! ஹய்யோ...! நிலா குட்டி உங்களுக்கெல்லாம் தனியா பதிவு ரெடி ஆகி கெடக்குதாம் நியூ இயர் ரீலிஸாம் :)

ஆயில்யன் said...

//Baby Pavan said...
நிலா பிரண்டு, நம்ம அக்காக்கு ஷ்பெசலா ஆப்பு ரெடி பண்ணனும் போல இருக்கு//

டேய் பவன் குட்டி இப்பவும் கமா மட்டுமில்ல சில வார்த்தைகளும் மாறிப்போச்சு அக்கா இல்லட்டாப்பா அது
அத்தை
டீச்சர் அத்தை

குட்டிபிசாசு said...

ஏன் இந்த கொலவெறி!!

இதில் சில கிசுகிசு எனக்கு எழுதி இருப்பிங்களோனு தோணுது! இருந்தாலும் அக்கா சொன்னால் என்ன செய்ய முடியும்.

"மெட்டாஸுக்கு மேயரானுலும், அக்காவுக்கு தம்பிதான்"

Anonymous said...

ரெண்டு = டோண்டு என்ன சரியா?

குட்டிபிசாசு said...

5வது யாருங்க? மத்தவங்க எல்லாம் தெரிஞ்சி போச்சி...!!

குட்டிபிசாசு said...

பெயரை யாரும் சொல்லாதிங்க... அக்கா மாட்டிப்பாங்க!

Baby Pavan said...

2.இவர் ஒரு பாப்புலரான பழைய வயதான [இளமைன்னு சொல்லிக்குவார்]பதிவர்.ஆனால் மெல்லின இடையின விவகாரங்களில் வீக்.கொஞ்சம் இல்லீங்கோ ரொம்பவே வீக்.இன்னும் தன் வீட்டு அம்மாவுக்கே வல்லினமா மெல்லினமா ன்னு டவுட் ஆயிடுவாரு இந்த அப்பாவி பதிவர்.

அய்ந்தில் வளையாதது
அம்பதில் வளையுமா?

இவருக்கு பொங்கள் பிடிக்குமா பிடிக்காதா ?

குட்டிபிசாசு said...

1. வவ்வால்

2. டோண்டு

3. மின்னுதுமின்னல்

4. தம்பி (டீ மாஸ்டர்ர்ர்ர்ர்ர்)

5. குசும்பன் (?)

6. மைபிரண்ட்

7. ஆயில்யன் அண்ட்் கோ

எனக்கு எத்தனை மார்க்....பாஸ் ஆனால் போதும்!!

குசும்பன் said...

1) வவ்வால்
2)ஆபி ஆப்பா (ஸ்பெலிங் மிஸ்டேக் இல்லை:))
3)மின்னல்
4)தம்பி உமா கதிர்
5)செந்தழல் ரவி( டெக்னிக் விசயம் எதுவும் எனக்கு தெரியாது என்பதால் நான் இல்லை குட்டி பிசாசு:)))) எப்படி எஸ்கேப் பார்த்தீங்களா?
6)மை பிரண்ட்
7)குட்டீஸ்

கண்மணி said...

குட்டி பிசாசு...சென்னாகிதாரா?
நீயும் குசும்பனும் எழுதியது சரியா தப்பா ன்னு சொன்னா மத்தவங்க காபி அடிச்சிடுவாங்க.....
[குட்டி பிசாசு டோண்ட் ஒர்ரி உன்னை மட்டும் பாஸா க்கிடுரேன்]

ஆயில்யன் said...

//குட்டி பிசாசு டோண்ட் ஒர்ரி உன்னை மட்டும் பாஸா க்கிடுரேன்///

குட்டி பிசாசு

டீச்சரக்கா மனசுல இல்லாதது ஒண்ணு இதுல இருக்கு பாரேன் :)

தெரிய்லையேன்னு டோண்ட் ஓர்ரி ஆகவேணாம் :)

மின்னுது மின்னல் said...

போன கிசுகிசு படிவுல சொன்னது உண்மையாயிடுற மாதிரி இருக்கு அதான் கும்மி கொறைஞ்சிடுச்சு

அவ்வ்வ்

குசும்பன் said...

///[குட்டி பிசாசு டோண்ட் ஒர்ரி உன்னை மட்டும் பாஸா க்கிடுரேன்]///

ச்சே இந்த டீச்சருங்க எப்பயுமே இப்படிதான் போல, இது என்னா ஓர வஞ்சனை? நான் என்னா தவறு செய்தேன் உங்க ஆஹா வந்திடுச்சு கவிதை பதிவுக்கு கரெக்ட்டா எதிர் பதிவு எழுத வில்லையா? என்ன தவறு செய்தேன்?

G.Ragavan said...

மூத்த பதிவர்னு சொல்லிக்கிறத்தான் முடியுதே தவிர... ஒரு பேரையும் கண்டுபிடிக்க முடியலையேய்யா!!!!!!

இரண்டாம் சொக்கன் said...

ஹை...

இந்த ஆட்டை நல்லாருக்கே....

ஆமா அந்த ரெண்டாவது இடத்துக்கு ரெண்டுபேர் போட்டி போடறாங்களே...கப்பு யாருக்கு?

உள்நாடா? வெளிநாடா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐயய்யோ.... இவ்வளவு நாள் ப்ளாக்ல இருந்ததே வேஸ்ட்.. ஒன்னுத்துக்கும் எனக்கு பதில் தெரியலையே! :(

ஆயில்யன் said...

//மை ஃபிரண்ட் ::. said...
ஐயய்யோ.... இவ்வளவு நாள் ப்ளாக்ல இருந்ததே வேஸ்ட்.. ஒன்னுத்துக்கும் எனக்கு பதில் தெரியலையே! :(
//

அய்யோடா..!

பிரெண்ட்டுக்கு ஒண்ணும் தெரியலையாம்ல! :((

தருமி said...

அப்பீட்டேய்!

Baby Pavan said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஐயய்யோ.... இவ்வளவு நாள் ப்ளாக்ல இருந்ததே வேஸ்ட்.. ஒன்னுத்துக்கும் எனக்கு பதில் தெரியலையே!

அக்காவுக்கு கணக்கும் தெரியல , ஹிஸ்டிரியும் தெரியல...கும்மிய தவிர வெற என்ன தெரியும்...

Baby Pavan said...

1. வவ்வால் மாம்ஸ்

2. அபி அப்பா அங்கிள்

3. மின்னுதுமின்னல் அண்ணன்

4. தம்பி சித்தப்பு

5. என்னோட குருநாதர் குசும்பன்

6. கணக்குல வீக்கான மைபிரண்ட் அக்கா

7. இது குட்டீஸ் டீம் நான் சொல்லல

Baby Pavan said...

கப்பு எப்ப தர போறிங்க டீச்சர்...

TBCD said...

யாருய்யா இது..புதுப் பதிவர்...

//*1.ஒரு புதிய பதிவர்.பறவை மாதிரி பறந்து பறந்து போய் பின்னூட்டம் போடுவார்.ஆனால் கொஞ்சம் கூட மனப் பக்குவம் இல்லாமல் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரன் பாணியில் குறை கண்டுபிடிப்பார்.விஷயம் தெரிந்தவர்தான் நல்ல பதிவுகளைக் கொடுப்பவர்தான்.அதே நேரம் அடுத்தவர் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பெருந்தன்மை இருக்கனும்.எடுத்தோம் கவிழ்த்தோம் னு வார்த்தையாடக் கூடாது.*//

அபி அப்பா....
//*2.இவர் ஒரு பாப்புலரான பழைய வயதான [இளமைன்னு சொல்லிக்குவார்]பதிவர்.ஆனால் மெல்லின இடையின விவகாரங்களில் வீக்.கொஞ்சம் இல்லீங்கோ ரொம்பவே வீக்.இன்னும் தன் வீட்டு அம்மாவுக்கே வல்லினமா மெல்லினமா ன்னு டவுட் ஆயிடுவாரு இந்த அப்பாவி பதிவர்.*//

டிரிமீஸ்..
//*3.இவர் ஒரு உண்மையிலேயே இளைய பதிவர்.சும்மா சுத்திக்கிட்டிருந்தவர் மத்தவங்க பிலாக்கை எட்டிப் பார்க்க அனுமதி வேணுமின்னே தனி பிலாக்கு தொடங்கியவர்.ஆனால் கும்மியடிக்கும்போது அந்நியனாகத் தான் வந்து கும்முவார்.ஆணி அதிகமோ இல்லை அலுப்புத் தட்டிப் போச்சோ இப்பெல்லாம் கும்மாங்குத்து குறைஞ்சு போச்சு.*//

யாருப்பா இது பாவனா பின்னாடி சுத்துறது...?

//*4.இந்த பதிவர் நல்லவர்தான்.இருந்தாலும் மத்தவங்க பதிவுன்னா எள்ளுவார்.அதிலும் கவிதைன்னா இவருக்கு பிடிக்காது.சிரிப்பு வருமாம்.யாரு வம்புக்கும் போக மாட்டார்.ஆனாலும் பக்கத்துல இருக்கிறவங்க தும்மினாலும் அனுபவப் பதிவா போட்டுடுவார்.
ய்தார்த்தமான இவர் ஒரே விஷயத்தில் பானா நானா ன்னு ஆகாச கோட்டை கட்டுகிறார்.*//

ஓசை செல்லா..

//*5.இந்த பதிவர் ரொம்பவே வித்தியாசமானவர்.தனக்ககுத் தெரிந்த டெக்னிகள் விஷயங்களைப் பதிவிட்டால் ஈ ஓட்டும் எனத் தெரிந்து கொண்டு எந்நேரமும் எதிர்மறை கருத்து சொல்லியே பப்ளிசிட்டி தேடிக் கொண்டவர். பதிவின் தலைப்புகளைப் பார்த்தாலே தீப் பிடிக்கும்.ஆனா உள்ளே போனா சப்பை மேட்டரு.*//

மை ஃபிரண்டு

//*6.இந்த பதிவர் ஒரு மாற்று முகாமைச் சேர்ந்தவர்.அட மகளிரணி என்பதற்குத் தான் இந்த பில்டப்..சீரியஸா சிரியஸா ன்னு சொல்ல முடியாதபடி வயது வரம்பில்லாம கும்மியடிப்பதோடு அப்பப்ப ஏதாச்சும் எழுதவும் செய்வாங்க.
பெரியாரு படத்துல நடிச்ச கையோட அடிதடி ல நடிக்கிற சத்யராஜ் மாதிரி இவங்க கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலை.*//


குட்டிஸ் கூட்டணி...ஆயிலயன், மற்றும் மை ஃபிரண்டு..(இரண்டு இடத்திலேயா..எங்கயே இடிக்குதே..)

//*7.அடுத்து சொல்லப் போறது தனி ஆள் இல்லீங்கோ.இவிங்க ஒரு குரூப்பாத்தான் திரியிராங்கோ.யாரையாவது பழி வாங்கனுமின்னா இவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டாப் போதும்.முன்னாலயிருந்து ஒரே தூக்காத் தூக்கி கடாசிடுவாங்க பின்னால.
அண்டை நாட்டு பாப்பாவும், எண்ணை ராசிக் காரரும் ,அகிம்சைக்கு எதிரானவரும் இதுல கூட்டணி.அப்பப்ப மத்தவங்களும் சேந்துப்பாங்க.*//


இவன்
தமிழறிஞர் டிபிசிடி

Baby Pavan said...

நாங்களும் எதிர் பதிவு போடுவோம்ல... எங்க பதிவுக்கும் வந்து யாருன்னு கண்டுபிடியுங்க...

http://kuttiescorner.blogspot.com/2007/12/blog-post_16.html

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. என்னை பத்திதானா? சொல்ல்ல்லவே இல்ல.. இதுகூட தெர்யாமல் இருந்திருக்கேனே...

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆமா.. உங்களுக்கு எல்லாஅம் எப்படி பதில் தெரிஞ்சுச்சு?

ஏற்கனவே அன்ஸ்வர் ஷீட் லீக் அவுட் ஆச்சா?? எங்கிட்டே சொல்லவே இல்லையே.. இல்லன்னா நான் சூப்பரா பாஸ் பண்ணியிருப்பேன்ல. :-P

காட்டாறு said...

கண்மணிக்கா கண்மணிக்கா... எனக்கு மட்டும் காதிலே சொல்லுங்க... நான் என்னாத்த தமிழ்மணத்துல இருந்து என்னாத்த புண்ணியம்? 2 மட்டும் தான் கண்டுபிடிக்க முடிஞ்சது. :(

போல்ட் லெட்டர்ல எழுதியிருக்குறது சூப்பருங்க. ரூம் போட்டு யோசிப்பீங்களோ. ;-)

வவ்வால் said...

கண்மணி,

நீங்கள் பதிவுக்கு வந்ததே டிசம்பர் 2006 தான்,(என் முதல் பதிவு வந்தது ஏப்ரல் 2006, பதிவு ஆனது பிப்ரவரினு நினைக்கிறேன், அதுக்கு முன்ன இருந்து அனானி பின்னூட்டம் வேற போட்டு இருக்கேனாக்கும்) ஆனால் அதுக்கு முன்ன இருக்க என்னைப்புதிய பதிவர்னு சொல்லி ஒரு கிசு கிசு போடுறிங்க, நானா இதைக்கேட்கவில்லை பலரும் வவ்வால்னு சொல்லி இருக்காங்க நீங்களும் அது தவறான விடைனு சொல்லவில்லை அதான் கேட்கிறேன்.

என்னை விட பின்ன வந்த நீங்க என்னை எப்படி புதிய பதிவர்னு சொல்லலாம். அப்போ அது நான் இல்லைனு மறுப்பு சொல்லுங்க , அல்லது வவ்வால்னு சொல்லி வந்த பின்னூட்டத்த நீக்கனும்!
இல்லை நான் தான்னா என்னைப்புதிய பதிவர்னு எப்படி சொல்லலாம்? ஒரு பழைய பதிவர் பறந்து பறந்துனு சொல்லி இருக்கலாம்ல... (எத்தனை நாளைக்கு தான் நானும் சூனியரவே இருப்பேன், நல்லாப்பார்த்துக்கோங்க நானும் சீனியர் ஆகிட்டேன்...அவ்வ்..)

அப்போ என்னை அப்படி சொல்ல என்ன காரணம் , என்னோட கலாய்த்தல் தாங்காம இப்படி பழி வாங்க பார்க்கறிங்கனு தானே அர்த்தம்!

கெக்கே பிக்கேனு உளறினா ... ஆஹா போட நான் என்ன .... உங்க ஜால்ரா கோஷ்டியா.... எங்யேயும் எப்போதும் உண்மைய தான் பேசுவேன்!அது நான் அடிக்கிற 1/4 கார்டினல் மேல சத்தியம்!

நான் கும்மி அடிக்க கூடாதுனு சொல்லவில்லை ஆனா கும்மி அடித்துவிட்டு நாங்க எப்போ கும்மி அடித்தோம்னு கேட்டா கும்மிடுவேன் சொல்லிடேன்!
இது எப்படி இருக்கு!

குட்டிபிசாசு said...

இதோடா!! கெளம்பிட்டாங்க!!

வவ்வால் ரசிகன் said...

வவ்வால் சார் எப்பவும் எடுத்தோம் கவிழ்த்தோம் னு பின்னூட்டம் போடமாட்டார். அப்படி அவர் பின்னூட்ட்டம் போட்ட நேரம் பாருங்க. இரவு நேரமா மட்டும்தான் இருக்கும். அதனால் வவ்வால் சார் 1/4 கார்டினல் அடிச்ச பின்னாடி பின்னூட்டம் போடாதீங்க.

பாருங்க தமிழ்மணத்திலேயே நல்ல விஷயமுள்ள பதிவு போடும் நபர் நீங்கதான். ஆனா எப்படி ஒரு இமேஜ் வருது பாருங்க.

இனி பகலில் மட்டும் பின்னூட்டம் போடுங்க வவ்வால் சார் ப்ளீஸ்

வவ்வால் said...

//இனி பகலில் மட்டும் பின்னூட்டம் போடுங்க வவ்வால் சார் ப்ளீஸ்//

வவ்வாலுக்கு இரவில் தான் கண் நல்லா தெரியும்னு கூட தெரியாத வவ்வால் ரசிகனா அந்தோ பரிதாபம்!(யோவ் அனானி எதுக்குய்யா உனக்கு இந்த வேண்டாத வேலை)

என் அந்தராத்மா விழித்திருக்கும் நேரத்தில் உண்மையை சொன்னா என்ன ஒரு கெட்டப்பேரு பாருங்க மகா ஜனங்களே! :-))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)