PAGE LOAD TIME

லூசாப்பா..நீ?

கதிர் ஒருதீர்மானத்துக்கு வந்திருந்தான்.எப்படியும் இதை செயல்படுத்தியே ஆக வேண்டும்.
சும்மா வாய்வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பதில் என்ன நன்மை.கொஞ்சம் கொஞ்சமாக முயன்றால்தானே வழமையாகும்.

முதலில் தன் மனைவியிடமிருந்தே ஆரம்பிப்போம்னு முடிவு செய்தான்.
காலை எழுந்தவுடன் மனையிடம் சென்று,'காலை நல் வணக்கம் கனிமொழி' என்றான்.

'ம்ம்'என்றவள் திடுக்கிட்டு கணவனைப் பார்த்து விட்டு என்ன என்றாள்.

'அருந்துவதற்கு சூடாக சிறிது கொட்டை வடிநீர் கிடைக்குமா?'

'என்ன்னங்க உளர்றீங்க உடம்புக்கு ஒன்னுமில்லையே'

'பைத்தியக்காரி தமிழ் தமிழ் னு முழங்கினனால் போதுமா பேசிப் பழக வேண்டாமா'?

'அடச் சே இதானா நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.சரி சரி காபியக் குடிச்சிட்டு மார்கெட் வரைக்கும் போயிட்டு வாங்க'

மார்க்கெட்டில்
''ஏனப்பா இந்த கத்தரிக்காய் கால் கிலோவும்,பிஞ்சு வெண்டைக்காய் ஒரு கால்கிலோவும் நிறுத்துத் தருகிறாயா?''

''இருய்யா ஒனக்கு மின்னாடியே இந்தம்மா வந்துடுச்சில்ல கொஞ்சம் கம்னு இரு''

''எனக்கு அலுவலகம் செல்ல கால தாமதாகிறது.விரைந்து தந்தாயென்றால் நன்றாக இருக்கும்''
''அட இன்னாடா பேஜாரா கீது ஒங்கூட யோவ் நீயி இன்னா தமில் வாத்யாரா?இல்லாங்காட்டி கவிஞ்சரா'' என்றபடியே காய்கறியை எடை போட்டான்.

வீட்டுக்கு வந்து குளித்து,சாப்பிட்டுக் கிளம்பும்போது மனைவியிடம் சொன்னான்.
''இன்று மேலாளர் பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதால் ஒரு சிறுவிருந்து தருகிறார்.ஆகையால் மதிய உணவுக்கு வர இயலாதும்மா.எனக்காக காத்திராதே''

முதுகுக்குப் பின்னால் மனைவியின் முகச் சுழிப்பைப் பொருட்படுத்தாது கிளம்பினான்.

டவுன் பஸ்ஸில்
''நடத்துனரே அண்ணாசாலைக்கு ஒரு பயணச் சீட்டு தாருங்கள்''

கண்டக்டர் கூட்ட நெரிசலில் காதில் வாங்கவில்லை.மீண்டும் இவன் நடத்துனரே என ஆரம்பிக்க ''யோவ் கூவாத இரு வாரேன்.இல்லை காஸை பாஸ் பண்ணு''

டிக்கெட்டுக்கு ஒரு நூறு ரூபாய் நோட்டைக் குடுக்க ,"பேசும் போது நல்லா எகனை மொகனையா பேசுற,சில்ற குடுக்க மாட்டியா ''

''மன்னித்துக் கொள்ளுங்கள் என்னிடம் இந்த தாள் மட்டுமே இருக்கிறது''

காலங்காத்தால தாவறுக்கிறாங்கன்னு முனங்கிய படியே டிக்கெட் குடுத்தார்.

அலுவலகத்தில்
''முனுசாமி இந்தக் கோப்பை மேலாளர் அறையில் வைத்து விட்டு ஒரு இலை வடி நீர் வாங்கி வா'' னு பியூன் முனுசாமியிடம் சொல்ல
''காலையிலேந்து ஏன் சாரு இப்படி லந்து பண்ற இன்னா சாரு ஒடம்பு சரியில்லையா டீ வாங்கியா இல்லை சாயா ன்னு சொல்லு இன்னாமோ எல தழை ன்னு கூவற''

அன்று முழுக்க அலுவலகத்தில் கதிர் தான் செண்டர் ஆப் அட்ராக்ஷன்.முதுகுக்கு பின்னாடி சிரிச்சபடி நேராகவும் கிண்டலடித்தபடி இருந்தனர்.

மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் கொச்சைப் படாமல் அட்சர சுத்தமாக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாகவே இருந்தான்.

மாலை வீடு திரும்பிய போது குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

'' விளையாடியது போதும் உள்ளே வாருங்கள்.அம்மா தரும் சிற்றுண்டியை உண்டு விட்டு பால் அருந்திவிட்டு உங்கள் வீட்டுப்பாடங்களை செய்ய ஆரம்பியுங்கள்''

''போதுங்க உங்க பாஷையை புள்ளங்க கிட்ட பேசி பயமுறுத்தாதீங்க''

''என்ன சொல்கிறாய் நீ ?பாஷையா? பயமுறுத்துகிறேனா?இப்படி அலட்சியப் படுத்துவதால்தான் தமிழ் தமிங்கிலமாய் தள்ளாடுகிறது''

கான்வெண்ட்ல படிக்க வச்சிட்டு இப்படி தமிழ்ல பேசுன்னு சொன்னா எப்படி என்னம்மோ செய்ங்க என்று மனைவி போக

பெரியப் பையன் கிட்ட வந்ந்து,''டாடி! வாட் ஹேப்பண்ட் டாடி?ஆர் யூ ஆல் ரைட் ''என

சின்னப் பையன் மெதுவாக கிட்டே வந்து,''லூசாப்பா...நீ?'' என்றான்.

43 மறுமொழிகள்::

ALIF AHAMED said...

:)

ஆயில்யன் said...

நன்று!

நான் இங்கு கும்மி விளையாட இயலுமா?

தங்களின் அனுமதிக்கு காத்திருக்கிறேன் :)

தருமி said...

:))

கண்மணி/kanmani said...

ஆயில்யா இன்னாபா இப்டி கேட்டுகினு கீறே கும்மிக்கு பர்மிசனா?
ஆனாங்காட்டி பாரு இந்த வவ்வாலு கீறாரே ரொம்பத்தான் கும்மின்னா ரவுசா காட்டுதுபா

ஆயில்யன் said...

//கண்மணி said...
ஆயில்யா இன்னாபா இப்டி கேட்டுகினு கீறே கும்மிக்கு பர்மிசனா?
ஆனாங்காட்டி பாரு இந்த வவ்வாலு கீறாரே ரொம்பத்தான் கும்மின்னா ரவுசா காட்டுதுபா
//

ஆமாம் டீச்சர் அதுக்குத்தான் பர்மிஷன் :)))))))

ஆயில்யன் said...

//கதிர் ஒருதீர்மானத்துக்கு வந்திருந்தான்.எப்படியும் இதை செயல்படுத்தியே ஆக வேண்டும்.//

டீச்சர் நீங்க எந்த கதிர சொல்றீங்க
அந்த "கதிர்" ஐ யாஆஆஆ

MyFriend said...

டீச்சர்,

படம் சூப்பர்..:))

MyFriend said...

ஹீரோ டயலோக் சூப்பரோ சூப்பர்.. ;-)

MyFriend said...

ஹீரோயின் டயலோக் அதை விட சூப்பர். ;-)

MyFriend said...

ஹீரோயின் டயலோக் அதை விட சூப்பர். ;-)

MyFriend said...

anybody home?

Anonymous said...

"லூசாப்பா..நீ?"

ஆயில்யன் said...

//ஹீரோயின் டயலோக் அதை விட சூப்பர். //


எப்பவுமே ஹீரேயின்ஸ் டயலாக்குத்தான் சூப்பரா இருக்கும்!

வாழ்க்கையில அவங்கதானே அதிகம் பேசறதே :))))))))

MyFriend said...

//வாழ்க்கையில அவங்கதானே அதிகம் பேசறதே :))))))))//

:-P

ஆயில்யன் said...

//மை ஃபிரண்ட் ::. said...
anybody home?
//
ஹோம் மை கூப்பிடுறீங்களா இல்ல ஹோம் மினிஸ்ட்ரிய கூப்பிடுறீங்களா
பிரெண்ட்?

ஆயில்யன் said...

//'பைத்தியக்காரி தமிழ் தமிழ் னு முழங்கினனால் போதுமா//

என்னமோ இடிக்குற மாதிரியே இருக்குது :(((

ஆயில்யன் said...

//இந்தம்மா வந்துடுச்சில்ல கொஞ்சம் கம்னு இரு''
//

அப்பன்னா அம்மா வந்துட்டா கம்முன்னுத்தான் இருக்குணுமாஆஆஆஆஆஆஆ!

ஆயில்யன் said...

//மதிய உணவுக்கு வர இயலாதும்மா.//

யோவ்...! அப்பன்னா மதியத்துக்கும் சேர்த்து, சோத்தை வைச்சு குடுத்துட்டு போய்யாஆஆ...!!!

ஆயில்யன் said...

மன்னித்துக் கொள்ளுங்கள் என்னிடம் இந்த கும்மி மட்டுமே இருக்கிறது''

ஆயில்யன் said...

//விளையாடியது போதும் உள்ளே வாருங்கள்//

ஒ.கே நான் இப்ப ரெஸ்ட் :)))

Unknown said...

ஏதோ முயற்சி செய்து பெற்ற அனுபவமாகத் தோன்றுகிறதே டீச்சர்

ரசிகன் said...

ஹா..ஹா..

கண்மணி/kanmani said...

கொஞ்சம் அனுபவமும் சுல்தான் பாய்
என் அக்கம் பக்கம் தோழிகளோடு உரையாடிப் பார்த்தேன்.என்னோடு டூ விட்டுட்டாங்க.

கண்மணி/kanmani said...

மின்னலு இருக்கியாப்பா?நல்லா இருலே

ரசிகன் நன்றி

ஆயில்யா மைபிரண்ட் உடன் சேர்ந்து ஒரேயடியா கும்மாதே.நாளைக்கு ஒரு பதிவுபோட்றேன்.

கோபிநாத் said...

நல்லா கீது கத ;))

கோபிநாத் said...

\\ஆயில்யா மைபிரண்ட் உடன் சேர்ந்து ஒரேயடியா கும்மாதே.நாளைக்கு ஒரு பதிவுபோட்றேன்.\\

ஆரம்பிச்சிட்டிங்களா...! ;))

ஆயில்யன் said...

//கண்மணி said...
ஆயில்யா மைபிரண்ட் உடன் சேர்ந்து ஒரேயடியா கும்மாதே.நாளைக்கு ஒரு பதிவுபோட்றேன்.
/

சொல்லிட்டீங்கள அக்கா!

இன்று போய் நாளை வருகிறேன் :))

ஆயில்யன் said...

//கோபிநாத் said...
\\ஆயில்யா மைபிரண்ட் உடன் சேர்ந்து ஒரேயடியா கும்மாதே.நாளைக்கு ஒரு பதிவுபோட்றேன்.\\

ஆரம்பிச்சிட்டிங்களா...! ;))
//
நிப்பாட்டிட்டோம்! :(((

குசும்பன் said...

டீச்சர் வழக்கம் போல் அருமையான பதிவு!!!

குசும்பன் said...

நல்ல எழுத்து நடை!!!

குசும்பன் said...

எலே மின்னலு இருக்கியாலே, டீச்சர் பதிவுக்கு மட்டும் நிஜபேருல பின்னூட்டம் போடு.:))))

குசும்பன் said...

கண்மணி said...
///ஆயில்யா மைபிரண்ட் உடன் சேர்ந்து ஒரேயடியா கும்மாதே.நாளைக்கு ஒரு பதிவுபோட்றேன்.///

இது என்னா நாள் வீதம் ஒன்று என்று டாக்டர் மருந்து கொடுப்பது போல் ஒரு நாள் ஒரு போஸ்டா?

புரட்சி தமிழன் said...

இந்த கும்மியில நானும் கலந்துகிடலாமா

கண்மணி/kanmani said...

//புரட்சி தமிழன் said...
இந்த கும்மியில நானும் கலந்துகிடலாமா//

கும்மிக்குன்னு தனி பிலாக்கு இருக்குங்கோ இது டீச்சரோட தனித் தன்மை[???????!!!!!!??] வாய்ந்த பதிவுங்கோ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்யன் said...

//புரட்சி தமிழன் said...
இந்த கும்மியில நானும் கலந்துகிடலாமா
//
டீச்சர் பேர பார்த்து பயப்படாதீங்க சும்மா அலவ் பண்ணாலாம்ல ஆசையா கேக்குறாரு:)

ஆயில்யன் said...

//கும்மிக்குன்னு தனி பிலாக்கு இருக்குங்கோ//

வவ்வால்லா வந்து கும்மி அடிக்கலாம் நாங்க வர்படாதா? (இனி நாங்களும் டெக்னிக்கலா வந்து கும்மி அடிக்க ஆயத்தமாக போறேமேஏஏஏஎ)

வவ்வால் said...

ஆயில்யன்,
(ஆயில்யன் என்றால் oil கடை வைத்திருப்பவரா?)

//வவ்வால்லா வந்து கும்மி அடிக்கலாம் நாங்க வர்படாதா? (இனி நாங்களும் டெக்னிக்கலா வந்து கும்மி அடிக்க ஆயத்தமாக போறேமேஏஏஏஎ)//

அப்பனே ஏன் இந்த கொலை வெறி, நான் என்ன கும்மி கூடாதென்றா சொன்னேன், ஆனால் கும்மி அடித்துவிட்டு நாங்கள் அடிப்பதெல்லாம் கும்மி அல்ல என்று சொல்வதேன் என்று தானே கேட்டேன்!

டெக்னிகல்லாக கும்மி அடிப்பதென்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது, வாரும்...வாரும்! :-))(உமக்கு சட்டை கிழியலாம் , சண்டைனு வந்த கிழியாத சட்டை இருக்கானு என்னைப்போல லைட்டா எடுத்துக்கணும்)

புரட்சி தமிழன் said...

என்னைய வச்சி கலவரம் ஏதும் பன்னலயே.
ஏற்க்கணவே நான் இருக்கற இடத்தில தமிழ் பிளாக்குல வர கம்யுனிஸ்ட் கொடியெல்லாம் பார்த்து நீ மவோயிஸ்ட் இல்லையேனு கேக்குறாங்க

cheena (சீனா) said...

38 மறு மொழிகளில், ஆயில்யன், எனது நண்பன் ( என்ன அக்ரிமெண்டு இவங்களோட) மட்டுமே அதிக மறுமொழி இட்டிருக்கின்றனர். மர்மம் என்ன ? இப்படி ஒரு வழி இருப்பது தெரியாமல் போய் விட்டதே

ஆயில்யன் said...

//டெக்னிகல்லாக கும்மி அடிப்பதென்றால் எனக்கு அல்வா சாப்பிடுவது, வாரும்...வாரும்! :-))(உமக்கு சட்டை கிழியலாம் , சண்டைனு வந்த கிழியாத சட்டை இருக்கானு என்னைப்போல லைட்டா எடுத்துக்கணும்)//

என்னாப்பா பீதிய கிள்ப்புறீங்க நான் வர்லப்பா இந்த ஆட்டத்துக்கு :(

வ்வ்வால் உங்களோட அல்வா ஆசைக்கு நான் பலியாக மாட்டேன்பா (அல்வான்னா - மெல்ல கொல்லும் விஷமாம்ல - ஹைய்யா நானும் ஒரு மேட்டர் சொல்லிட்டேனே :)))))

காட்டாறு said...

ஹா ஹா ஹா.....அதிலேயும் அந்த ஆபீஸ் ப்யூன் சொன்னது கலக்கல். :-))

சுப்பிரமணி said...

அம்மணி! என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை! நானும் சில நேரங்களில் இப்படியெல்லாம் பேசினால் என்ன? என்று நினைத்திருக்கிறேன். நல்ல வேளையாக யாரிடமும் இப்படிப் பேசி 'லூசாப்பா நீ' என்ற ஏச்சு வாங்கியதில்லை.

கண்மணி/kanmani said...

நன்றிங்க சுப்பிரமணி
தமிழ் என்னதான் செம்மொழியானாலும் பேச்சு வழக்கில் இன்னும் தமிங்கலம் தானே

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)