PAGE LOAD TIME

*மகளிர் மட்டும்*....2007 வருடத்தில் என்னைக் கவர்ந்தவர்கள்

துளசி கோபால்:
பயணக் கட்டுரையில் மன்னி!தொடர்களை சலிக்காமல் எழுதும் திறம்.இளையவர்களை ஊக்குவிக்கும் பெருந்தன்மை.பதிவுலக டீச்சர் அக்கா

வல்லிசிம்ஹன்:
அன்பையே எழுத்துக்களாக வடிக்கும் ஒரு பக்குவம்.பதிவில் மட்டுமல்ல பின்னூட்டமும் நமக்கு வரவேற்பளிக்கும்.அனுபவ நிகழ்வுகளை அழகாகத் தரும் எளிமை.பதிவுலக பண்டரிபாய்

நானானி:
லேட்டாக பதிவெழுத வந்தாலும் லேட்டஸ்டாக பலரை தன் கை மணத்தாலும் ஊர்ப் பெருமையாலும் கவர்ந்த விதம்.சின்ன விஷயத்தையும் பதிவாக்கிப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம்.பதிவுலக சௌகார் ஜானகி

ராமச்சந்திரன்உஷா:
புதியவர்களைக் குழப்பும் பெயர்.ஆனால் தெளிவான சிந்தனைகள் பதிவாகும்.இவரின் பதிவுகள் மட்டும் எப்படி 'பின்னூட்டக் களமாகிறது'என்பது இதுவரை புரியாத புதிர்.பதிவுலக அனுராதா ரமணன்

ஜெஸிலா:
என்னளவில் நான் வியக்கும் மிகத் தைர்யமான பெண்.பதிவோ,பின்னூட்டமோ மனதில் தோன்றும் கருத்துக்களை ஆணி அடித்தாற்போல் சொல்லும் நேர்மை.பதிவுலக விஜய சாந்தி

மங்கை:
சமூகப் பிரக்ஞையுள்ள பதிவுகள் இவரின் சிறப்பு.பக்குவப் பட்ட வாழ்வியல் கருத்துக்களைச் சொல்லும் பாங்கு.பொழுது போக்கையும் சமூக சேவையாக மாற்றும் தொண்டு மனம்.பதிவுலக அன்னை தெரசா

டெல்பின்:
தயக்கத்தோடு பதிவெழுத வந்தவர்.மருத்துவம் சார்ந்த பதிவுகள் தனித் தன்மையானது.அனுபவங்களை மிக எளிமையாக சொல்லக் கூடியவர்.பதிவுலக டாக்டரம்மா


முத்துலஷ்மி:
இளையவரானாலும் ஆல்-ரவுண்டர்.எந்த வகையான பதிவானாலும் நேர்த்தியாகப் போடும் திறமை.காம்ப்ரமைஸ் பண்ணிக்காமல் தன் வழியில் உறுதியாக இருக்கும் தனித்துவம். பதிவுலக ஊர்வசி

லஷ்மி:
இளையவரானாலும் பதிவுகளில் சமூக அவலங்கள் பொறிபறக்கும்.வாதப் பிரதி வாதங்களில் அனல் வீசும்.பதிவுலக ஜான்சி ராணி

மை பிரண்ட் அனு:
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. தரமான பதிவுகள் தந்து அசத்தியவர்.இப்போது சினிமா பொழுது போக்கு என மாறினாலும் இளைய பதிவர்களுக்குப் பிடித்தவர்.பின்னூட்டங்களால் இவருக்குப் பெருமையா இவரால் பின்னூட்டங்களுக்குப் பெருமையா ன்னு மலைக்க வைப்பவர்.பதிவுலக பின்னூட்ட நாயகி

சின்ன அம்மிணி:
அதிகம் எழுதாமலே எழுதுபவர்களுக்கு சிநேகமானவர்.பின்னூட்டங்களில் நட்பை வளர்ப்பவர்.பதிவுலக மாயாவி[பின்னூட்டங்களில் மட்டுமே பார்க்க முடிவதால்]

இம்சையரசி:
கதைகளும் எழுதுவார்.கவிதைகளும் நன்றாக இருக்கும்.திடீரென்று காணாமல் போய் ,திடீரென்று வந்து சரமாரியாக பதிவுகள் வரும்.பதிவுலக கதையரசி

காயத்ரி:
சின்னத் திரையில் மட்டுமா அழுகாச்சி என் கவிதைகளிலும்தான்னு அழுகாச்சி காவியம் படைப்பவர்.ஆனாலும் கவிதைகளில் ஆழமும் நயமும்,நிதர்சனமும் இருப்பது சிறப்பு.பதிவுலக கவிதாயினி

அவந்திகா
சுட்டியான குட்டிப் பொண்ணு.கதையோ,படமோ,விளையாட்டோ எதுவானாலும் சிறப்பாக இருக்கும். நீதிக் கதைகள் பெரியவர்களையே சிந்திக்க வைக்கும்.பதிவுலக பூந்தளிர்

வித்யாகலைவாணி:
புது வரவு.ஆனாலும் அமெரிக்க பொருளாதாரம்,வளைகுடாப் போர்,ஏர்-கண்டிஷனிங்,கிரிக்கெட் னு பன்முகமாக அகலக் கால் பதித்தாலும் தெளிவான பதிவுகள். பதிவுலக புது வரவுடிஸ்கி: பதிவு நீளம் கருதி விடுபட்டவர்களும் உண்டு.பட்டப் பெயர்களுக்கு சம்மந்தப் பட்டவர்கள் தவறாக எண்ண வேண்டாம் ப்ளீஸ்.......]

27 மறுமொழிகள்::

delphine said...

நன்றி கண்மணி...

குட்டிபிசாசு said...

எல்லாருக்கும் போட்டுவிட்டு, உங்க இடத்தை வெறுமனே விட்டுடிங்களே!

கண்மணி:

பொழுதுபோக்கிற்காக இடுகை போடுபவர்.துணுக்கு, மொக்கை இடுகைகள் போடுவதில் கில்லாடி. பின்னூட்டங்கள் அள்ளிக்கொள்பவர். சில சமயம் கவுஜைகளையும் எழுதுவதுண்டு. இவங்க பதிவில் பின்னூட்டம் போடுவதற்காகத் தான் நான் பதிவு ஆரம்பித்தேன். எனக்கு மட்டுமல்ல, பதிவுலகிற்கும் "கண்மணி அக்கா" தான்.

குட்டிபிசாசு said...

லிஸ்ட்-ல இருக்கும்... அம்மா, அக்கா, தங்கை, காயத்ரி பாட்டி :) எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

பதிவில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அபி அப்பா said...

என்னை கவர்ந்தவர்கள் அஃப்கோர்ஸ் என் தங்கச்சிக ஜெயந்தி,அனு,காயத்ரி!!! அதுக்கும் மேலே சொன்னா சிதம்பர ரகசியம் சொன்ன கீதாம்மா,அம்பி சொன்ன மாதிரி அன்பான சவுக்கார் ஜானகியம்மா, நீங்க, உஷா அண்ணியார் .......காட்டாறு, இப்படியே போகும் பட்டியல்.

முத்து லெஷ்மிக்கும் மங்கை\டாக்டருக்கும் என் இதயத்தில் இடம் உண்டு!!!

சென்ஷி said...

//பின்னூட்டங்களால் இவருக்குப் பெருமையா இவரால் பின்னூட்டங்களுக்குப் பெருமையா ன்னு மலைக்க வைப்பவர்.பதிவுலக பின்னூட்ட நாயகி//

ரிப்பீட்டே :))

ஆனாலும் அவங்க ஃபேவரைட், மீ த பஸ்ர்ட்டு பாக்க மறுபடி ஆசை :))

வவ்வால் said...

முதுகு சொறிதலில் இது புது வகையாக இருக்கே! என்ன கொடுமை இது!:-))
(உண்மைய சொன்னா எல்லாரும் என்னைத்தான் கெட்டவன் சொல்வாங்க,பரவாயில்லை நான் கெட்டவனாகவே இருந்துட்டுப்போறேன் என்ன நஷ்டம்)

துளசி கோபால் said...

நன்றி 'என்' கண்மணி.

மகனர் மட்டும் என்று இன்னொரு பதிவைச் சீக்கிரம் போட்டுருங்க.

நம்ம அண்ணந்தம்பிகளுக்கு முதுகெல்லாம் அரிக்குதாமே:-))))))))

நாமெல்லாம் ஒர்ர்ர்ரே குடும்பமப்பா.

கோபிநாத் said...

\\"*மகளிர் மட்டும்*....2007 வருடத்தில் என்னைக் கவர்ந்தவர்கள்"\\

உங்களை மட்டும் அல்ல என்னையும் கவர்ந்தவர்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))


\எனக்கு மட்டுமல்ல, பதிவுலகிற்கும் "கண்மணி அக்கா" தான்.
\\

வழிமொழிகிறேன்..;))

குட்டிபிசாசு said...

//முதுகு சொறிதலில் இது புது வகையாக இருக்கே! என்ன கொடுமை இது!:-))//

தெளிவாகத்தான் போட்டு இருக்காங்களே! இது 'மகளிர்மட்டும்' பக்கம், உங்க பேரெல்லாம் இங்கன வராது!!

தம்பி said...

ஒற்றுமை ஓங்குக

தம்பி said...

புரட்சி என்கிற வார்த்தை எங்கயும் காணவில்லை, அட்லீஸ்ட் புரட்சி பதிவர், புரட்சி புதுமை இதுமாதிரி இல்லாமல் பட்டமே அளிக்க முடியாது.
நீங்க எப்படி டீச்சர்???
கலக்கிட்டிங்க.

லக்ஷ்மி said...

கண்மணி - முதலில் புத்தாண்டு வாழ்த்துகள். அடுத்தது எனக்கும் ஒரு பட்டம் கொடுத்ததுக்கு நன்றி. அந்த ஜான்சி ராணிக்கும் எனக்கும் பெயரைத் தவிர வேறு எதுவும் ஒற்றுமை இருக்கறதா நீங்க நினைக்கறீங்க பாருங்க, யக்கா... நீங்க ரொம்ப நல்லவங்க....

மங்கை said...

நன்றி கண்மணி
ஆனா..தெரசா எல்லாம் ம்ம்ம். அந்த அளவுக்கு நான் நினச்சு கூட பார்க்க முடியாது..நம்பிக்கை வைத்தற்கு நன்றி...

ramachandranusha(உஷா) said...

கண்மணி, நான் ஒரு தடவை இப்படி எழுதி மாட்டினது மறந்துட்டீங்களா? இதோ ஞாபகப்படுத்துகிறேன்
http://nunippul.blogspot.com/2007/03/blog-post_07.html

அனுராதா ரமணனா? சரி சரி :-)

முத்துலெட்சுமி said...

ஹய் ஊர்வசியா .. நல்லா இருக்கே பேரு..

முதுகெல்லாம் ஒரே வலி குளிர்ல .. நீங்க வேற :)

உஷா எல்லாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் தானே உங்க பழய இடுகை எல்லாம் அப்பப்ப இப்படி ரெபரன்ஸ்க்கு கிடைக்குது பாருங்க :) இவங்க போடலன்னா எங்களுக்கு நியாபகப்படுத்திவீங்களா ?

காட்டாறு said...

ஓ.. நல்லாயிருக்குதே இந்த பதிவு. எல்லாருக்கும் பெயரிடும் விழா இல்லையே இது? ;-)

சின்ன அம்மிணி said...

சூப்பரக்கா நீங்க எனக்கு வச்ச பேரு. சின்ன அம்மிணிங்கற பேரை மாத்தி மாயாவின்னு வைக்கப்போறேன். :):)
புது வருட நல்வாழ்த்துக்கள்

நானானி said...

கண்மணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

கடோசி பெஞ்சில் இருந்தவளை ரெண்டு ஜாம்பாவள்களுக்கு அடுத்து ஒக்கார வெச்சுட்டீங்க!!புல்லரிக்குது...புது வருட ஆரம்பத்திலேயே!!!
சந்தோசம் கண்மணி!!

நானானி said...

கண்மணி!
செளகார் ஜானகியின் கம்பீரம் எனக்குப் பிடிக்கும்.

குசும்பன் said...

தம்பி said...
புரட்சி என்கிற வார்த்தை எங்கயும் காணவில்லை, அட்லீஸ்ட் புரட்சி பதிவர், புரட்சி புதுமை இதுமாதிரி இல்லாமல் பட்டமே அளிக்க முடியாது.
நீங்க எப்படி டீச்சர்???
கலக்கிட்டிங்க.///

ரிப்பீட்டேய்

கண்மணி said...

வாங்க நானானி குறுகிய காலத்துல வலைக்கு வந்து நல்ல அறிமுகமானவங்க நீங்க.
சௌகார் கிட்ட கம்பீரம் மட்டுமில்லை 'கை மணமும்' உண்டு.

பதிவை அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட அனைத்து தோழிகளுக்கும்,சகோதரிகளுக்கும் நன்றி.

@தம்பி & குசும்பன் பெண்கள் னாலே புரட்சியின் வடிவம்தான் .இதுல தனியா அடை மொழி எதுக்குங்கானும்.

கண்மணி said...

கோபி,குட்டி பிசாசு,அபி அப்பா,சென்ஷி,சீனா சார் எல்லோருக்கும் நன்றி.

வவ்வாலுக்குத்தான் தனிப் பதிவு 'கும்மி'யாச்சே

மங்களூர் சிவா said...

இதுல ஆண்கள் பின்னூட்டம் போடலாமா??

மங்களூர் சிவா said...

//
cheena (சீனா) said...
பதிவில் உள்ள அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//
ரிப்பீட்டேய்

ஜெஸிலா said...

அட! பட்டமெல்லாம் கூப்பிட்டு கொடுக்குறீங்க :-). எல்லோரைப் பற்றியும் எழுதின உங்களை கலாய்கிலாம்னு பார்த்தா குட்டிபிசாசு வேற மாதிரி முடிச்சிக்கிட்டாரே! போனா போகுது விட்டுடலாம்.

இங்கும் ஒரு புத்தாண்டு வாழ்த்து எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பதிவுலகப் பெண்மணிகளில்
கண்ணான மணிக்குப்
பண்டரி வல்லிபாய் எழுதும்
பிந்தைய பின்னூட்டம்.

நன்றி நன்றி.
எல்லாரையும் சிரிக்கவைக்கும் கண்மணி
பதிவுலக ஆச்சி மனோரமா.:))

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)