PAGE LOAD TIME

அ**க**கா**.கீ**பொ**தீ......பாபச.... பதிவர்கள் 2007

முன் பதிவில் சொன்னது போல பதிவின் நீளம் கருதி பலரைக் குறிப்பிட வில்லை.இது என்னுடைய தனிப்பட்டக் கருத்து மட்டுமே.பதிவெழுத ஆரம்பித்த பிறகு எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமானவர்கள் என்ற வகையில் என் கண்ணோட்டத்தில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்னும் எனக்கு பரிச்சயப் படாத மிகச் சிறந்த பெண் பதிவர்கள் இருந்த போதிலும் பதிவின் அடிப்படையில் இல்லாமல் நான் அறிந்த அளவுகோலில் இவர்களைப் பற்றி பதிவிடுகிறேன்.

மாசு கண்டு பிடிப்பவர்களும் தலைகீழாகத் தொங்குபவர்களும் அடித்துக் கொள்ள வேண்டாம்.

அஞ்சலி:

என்னைப் பிரமிக்க வைத்த குட்டிப் பெண்.நானறிந்த முதல் பதிவர்.மழலை மாறாமல் அழகிய ஈழத்து தமிழ் நடையில் இவர் எழுதும் பதிவுகள் அருமை.தன் பள்ளிக்கூட,சொந்த அனுபவங்களை அழகாக பதிவிடுவார். சின்னப் பூவே மெல்லப் பேசு


கலை:

என் முதல் ஆசான்.அத்தி பூத்தாற்போல் எப்போதாவது பதிவெழுதினாலும் ஆழமான சிந்தனைகளும் அனுபவங்களும் இவர் பதிவில் இருக்கும். சிநேகிதியே


காட்டாறு: சுனாமி என்ன சொல்லிக் கொண்டா வருகிறது.அப்படித்தான் திடீரென்று புறப்பட்டு தன் கவிதைகளால் பதிவுலகைக் கலக்குபவர்.பின்னூட்டங்களில் சிநேக பாவம் காட்டி செல்லம் கொஞ்சுவார்.பொங்கும் புது வெள்ளம்

கீதா சாம்பசிவம்:

ஆன்மீக பதிவர். கும்மியிலும் மொக்கையிலும் இன்னொரு கண்மணி.அதிகம் பரிச்சயமில்லையென்றாலும் ஒரே ஊர்க்காரர் என்பதால் பிடித்துப் போனவர்.முதுமை என்பது உடம்புக்குத்தான் மனசுக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.இல்லையென்றால் ஒரு மிகப் பெரிய இளைஞர் பட்டாளத்திற்கே 'தலைவி' யாக இருக்க முடியுமா?சிதம்பர இரகசியம்

பொன்ஸ்:

பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.'பொன்ஸ்' பற்றி நான் சொன்னால் திருநெல்வேலியில் அல்வாவும்,பழனியில் பஞ்சாமிர்தமும்,திருப்பதியில் லட்டும் விற்பது போலிருக்கும்.அதனால் 'அப்பீட்டு'ஆகிடுறேன்.அம்பாரி யானை

தீபாகோவிந்த்:

கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி மற்ற விஷயங்களில் திசை திரும்பாமல் வலைப் பதிவு பற்றிய குறிப்புகள் உதவிகள் ஆலோசனைகள் தரும் பதிவுகள் போடுபவர்.எந்தச் சந்ததேகத்தையும் அழகாக தீர்த்து வைப்பார்.உதவும் கரங்கள்

பாபச மங்கையர்:

பயமறியா பாவையர் சங்கம் மூலம் அறிமுகமான G3 எனப்படும் காயத்ரி,அனுசுயா இவர்களின் பதிவுகள் அதிகம் தமிழ் மணத்தில் இல்லையென்றாலும் இவர்களின் நட்புவட்டத்தில் பிரசித்தம்.சிஸ்டம் ஹேங்க் ஆகும் அளவுக்கு பின்னூட்டம் அள்ளுபவர்கள்.
துள்ளுவதோ இளமை

14 மறுமொழிகள்::

ஆயில்யன் said...

நல்லா இருக்கு :-)

உங்களின் அளவுகோலில்,இந்த முறை அடை மொழிகள் மிஸ்ஸாகிவிட்டதே :)

இதுதானே மாஸு கண்டுபிடிக்கும் செயல் :))))))

குட்டிபிசாசு said...

அக்கா,
எல்லாரோட பேருக்கும் அவங்க பதிவோட லின்க் கொடுத்தால் நல்லா இருக்கும்.

மஞ்சூர் ராசா said...

நீங்களும் இவர்களின் பதிவுகளை படிக்கிறீர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என சொல்கிறார்கள்.

கலை said...

முதலில் எனது அன்பான புது வருட வாழ்த்துக்கள்.

உங்களைக் கவர்ந்த பெண்பதிவர்கள் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி. :)

என்னை ஆசான் நிலையில் வைத்ததற்கு மேலும் ஒரு நன்றி. ஆனா இதை இப்படி public ல சொன்னதுனால எல்லாரும், (இல்லையில்லை என்னை அறிந்தவர்கள் மட்டும்) ஆச்சரியப்படப் போறாங்க. கலையா? ஆசானா? அப்படின்னுதான். :))

அதுசரி, இந்தப் பதிவின் தலைப்பு கொஞ்சம் கூட எனக்கு புரிய மாட்டேங்குது. :(

அனுசுயா said...

ஆகா என்னயும் ஒரு பதிவர்னு சொல்லியிருக்கீங்களே ரொம்ப நன்றிங்க. பதிவர்னு சொல்லிக்கற மாதிரி இந்த வருசமாவது ஏதாவது எழுத முயற்சி பண்றேன். :)

காட்டாறு said...

அட... நாமளும் இந்த லிஸ்ட்லயா? அடடே...

நன்றியக்கோவ்... புதுவெள்ளம் பழசாகம காப்பாத்திக்கிறேன். :-)

கோபிநாத் said...

நல்லா இருக்கு...

இன்னும் கூட அவர்களை பற்றி சொல்லியிருக்கலாம்..

குட்டிபிசாசு சொல்லுவதை போல லின்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்

கோபிநாத் said...

புதிய புதிய பதிவுகள் போடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...;)

மனமார்ந்த பாராட்டுக்கள் ;)

கண்மணி said...

எல்லோருமே பிரபலமானவங்கதான் அதான் லிங்க் குடுக்கலை

பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

Boston Bala said...

பதிவுக்கு நன்றி.

'குட்டிபிசாசு'வை வழிமொழிகிறேன். சுட்டிகளை சேர்க்கலாமே...

கீதா சாம்பசிவம் said...

முதுமை என்பது உடம்புக்குத்தான் மனசுக்கு இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.இல்லையென்றால் ஒரு மிகப் பெரிய இளைஞர் பட்டாளத்திற்கே 'தலைவி' யாக இருக்க முடியுமா?சிதம்பர இரகசியம்

வன்மையாகக் கண்டிக்கிறேன். :P

cheena (சீனா) said...

உண்மை உண்மை. அனைவருமே பதிவுலகில் கொடி கட்டிப் பறப்பவர்கள் தான். நேரமிருப்பின் பாருங்களேன்.

http://cheenakay.blogspot.com
http://padiththathilpidiththathu.blogspot.com

http://pattarivumpaadamum.blogspot.com
http://ennassiraku.blogspot.com
http://keettathilpidiththathu.blogspot.com

Dreamzz said...

G3 வாழ்க! எங்கள் அக்கா G3 வாழ்க :)
ஹிஹி!

Dreamzz said...

//எல்லாரோட பேருக்கும் அவங்க பதிவோட லின்க் கொடுத்தால் நல்லா இருக்கும்.//
ரிப்ப்பீட்டு!

Click on the Hyperlink it will open a scripted window and You can paste the URL there.

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)