PAGE LOAD TIME

புது வருட விரதம்

நியூ இயர் கொண்டாட்டத்தை முதல் நாள் இரவு கோலாகலமாக முடித்த பிறகு சின்னதா ஒரு கோழித் தூக்கம் போட்டு காலை எழுந்து வாக்கிங் போய் விட்டு வந்த கிட்டுமாமா தான் வாங்கி வந்த கீரைக் கட்டைடைனிங் டேபிள் மீது வைத்து விட்டு

''அம்புஜம் ஒரு காபி குடேன்'' என்றார்.

மாமி ஏதும் பேசாமல் காபியைக் கொண்டு வந்து வைத்தாள்.

''இன்னைக்கு என்னடி ஸ்பெஷல்'
மாமி பதில் ஏதும் சொல்லாமல் இருந்தாள்.

'யாரெல்லாம் ஃபோன் பண்ணாங்க?'

பதில் வரலைன்னதும் மாமாவுக்கு லேசா டவுட்டாச்சு.

'உங்கிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே பார்ட்டிக்குப் போனேன்.இப்ப என்ன கோபம்?'
மாமி ஒன்னும் சொல்லாமல் கீரையை எடுக்க

ஓ கடைசி வீட்டு கனகாவுக்கு கீரைக் கட்டு வாங்கினதை பக்கத்து வீட்டு ருக்கு சொல்லிட்டாளா?

''அம்புஜம் ஒரு நாள் பக்கத்து வீட்டு ருக்கு ஏதோ வாங்கச் சொன்னா முடியாது ன்னு சொல்லிட்டேன்.ஆனா கனகா பாவம் ஒத்தையில இருக்கா உதவிக்கு மனுஷா இல்லை.அதான் தினமும் வாக்கிங் போய்ட்டு வரும்போது அப்படியே...காய்கறி வாங்கி.தந்து.''

மாமி ஏதும் பேசாமல் முறைத்த வேகத்தில் கிட்டு மாமாவுக்கு கைகால் உதறியது.
ச்சே..என்னன்னு தெரியாம அவசரப் பட்டு சொல்லிட்டோமோ?நியூ இயர் அன்னைக்கே ஆரம்பிச்சிட்டாளே..

அதுக்குப் பிறகு டிபன் வைச்ச போதும் மாமி வாயேத் திறக்கலை.

மும்பையிலிருந்து மாமியோட பொண்ணும் மருமகனும் போன் பண்ணி நியூ இயர் வாழ்த்துச் சொல்ல 'அம்மா ஹாப்பி நியூ இயர்மா' னு மகள் சொல்லியும் மாமி பதிலுக்கு சொல்லலை.

'ஏம்மா பேசலை கோபமா போன தடவை வநது வாங்கிப் போன உன் வைர அட்டிகையை நான் வித்துட்டேன் னு உன் மாப்பிள்ளை போட்டுக் குடுத்துட்டாரா?

அடிப்பாவி நாலு தலைமுறையா ராசியானது ன்னு வச்சிருந்ததை இப்படி பண்ணிட்டாளே னு மாமிக்கு திக்குனு ஆயிடுச்சி.

'அது ஓல்டு ஃபேஷன் மா நான் மாத்திட்டு புதுசா வாங்கிட்டேன்'

மாமி பேசாமல் இருக்க , மாமா மட்டும் மகளுக்கு வாழ்த்துச் சொல்லி ,அம்மாவை நான் சமாதானப் படுத்துரேன்.அப்புறம் பேசும்மா' னு போனை வைத்தார்.

காலை வேலைக்கு முனியம்மா வந்து பாத்திரம் தேய்ச்சுட்டு,''அம்மா ஒரு நூறு ரூபாய் குடும்மா அடுத்த மாசம் கழிச்சிடரேன் னு கேட்டபோதும் மாமி பேசவேயில்லை.

'இன்னாம்மா இன்னைக்கு எம்மேல கோவம்?நாலு நாளைக்கு முன்ன நீ கோயிலுக்கு போயிருந்த போது அய்யாகிட்ட கேட்டு 50 ரூபாய் வாங்குனதுக்கா?'

மாமி அப்பவும் மௌனமாய் இருக்க,'நீலகலரு புடவை ஒன்னு லேசா கிழிஞ்சத நானே கொஞ்சம் பெரிசா கிழிச்சதப் பாத்துட்டியா?அப்பதான் அதை எனக்ககு குடுப்பேன்னு தெரியாம செஞ்சிட்டேன்மா.இனிமே அப்பிடி பண்ண மாட்டேன்.'

'பின்ன அய்யாவும் நீயும் முந்தா நாள் சண்டை போட்டதை எதிர் வீட்ல சொல்லிட்டேன்னு கோபமாம்மா? இனிமே சொல்ல மாட்டேன்'.

முனியம்மாவின் எந்த தன்னிலை விளக்கமும் காதில் வாங்காமல் பக்கத்து தெரு பிள்ளையார் கோயிலுக்கு மாமி கிளம்பிப் போனாள்.

கோயில்ல மாமியைப் பார்த்த கோடி வீட்டு கோகிலாவும் எதிர் வீட்டு சுமதியும் 'ஹாய் அம்புஜம் ஹாப்பி நியூ இயர்னு' சொல்ல

மாமி திரும்பி லேசாக புன்னகைத்ததோடு நிறுத்திக் கொண்டாள்.

'ரொம்ப ஏத்தம்டி அம்புஜத்துக்கு.இந்த கண்மணி அவளைப் பத்தி தமிழ் மணத்துல ஏதோ எழுதப் போக என்னமோ பெரிய சினிமா நடிகை  ஐஸ்வர்யா       ரே பிகு பண்றா பாருடி'

ஆமாமாம் இவ செய்யிற லட்டும், கோந்து மாதிரி அல்வா செய்யிற கதையையும் சொல்றதுக்கே இப்படி பில்டப் பண்றா.ஏதோ இவ பெருமை ஒலகம் பூரா பரவின மாதிரி அலட்டுறா'இன்னும் நல்லபடியா அல்வா கிண்டுனா கையால் புடிக்க முடியாது இவளை'


'அம்புஜம் எம் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சி.கொஞ்சம் சமைக்கவும் முக்கியமா அல்வா செய்யவும் சொல்லிக் குடேன்.உன் கைப் பக்குவம் யாருக்கும் வராது' ன்னு சொன்னவ இன்னைக்கு கேலி பேசுறாள்.
சுமதி்யும் கோகிலாவும் பேசுவது காதில் விழுந்தாலும் மாமி பேசாமல் கோயிலை விட்டுக் கிளம்பினாள்.

சாயந்திரம் பிச்சுமணி வந்து ,'பாட்டி அம்மா இதைக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க'என்றபடி ஒரு கவரைக் குடுக்க மாமி பேசாமல் வாங்கி வைத்தாள்.

இதுவே மத்த நேரமா இருந்தா 'பிச்சு கண்ணா உனக்கு சாக்லேட் வேணுமா?பிஸ்கட் வேணுமா?ன்னு' கேப்பாள்.தூக்கி வச்சு கொஞ்சுவாள்.இன்னைக்கு பேசக்கூட இல்லையேன்னு பிச்சுமணிக்கு சந்தேகம்.ஒருவேளை பாட்டிக்கு தெரிஞ்சிடுச்சோ?

'சாரி பாட்டி நேத்து கிரிக்கெட் விளையாடும் போது நான்தான் தெரியாம உங்க வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைச்சுட்டேன்.வெரி சாரி பாட்டி'

எப்படி ஜன்னல் உடைஞ்சதுன்னு நேத்து பூரா கவலைப் பட்டுக்கிட்டிருந்த மாமி திகைத்துப் போய் பார்த்தாளே தவிர வாய் திறந்து ஏதும் சொல்லலை.

புது வருஷம் அன்னைக்கு ஒரு நாள் மௌனவிரதம் இருந்தா நல்லதுன்னு ஏதோ ஒரு டி.வி.யில ஜோதிட கலாபூஷணம் புண்ணாக்கு புண்ணிய கோடி சொன்னாருன்னு வாயை திறக்காம இருந்ததும் நல்லதுதான் போலும்.

ஒவ்வொருத்தர் வாயிலிருந்தும் உண்மை எப்படி வருது பாரு.இனி மாசம் ஒருநாள் மௌன விரதம் இருக்க வேண்டியது தான்னு மாமி முடிவு செஞ்சிட்டாள்.

13 மறுமொழிகள்::

குட்டிபிசாசு said...

மேட்டர் பழசா இருந்தாலும், அம்புஜம் மாமிக்காக படிக்கலாம். புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

நானானி said...

மெளனவிரதத்தின் பலன்கள் என்றே போட்டிருக்கலாம்...
பல வீட்டு வாசம் வீசியது.
கண்மணி..அன்போட புது வருட வாழ்த்துக்கள்!!

கண்மணி/kanmani said...

குட்டி இது ச்சும்மா ...ஸ்டார்ட்டிங் இந்த புது வருஷத்தில்

கண்மணி/kanmani said...

வாங்க நானானி உங்க 'கை' மணம் [வாசம்] இதுல இருக்காது.
மௌன விரதம்னு சொன்னா சஸ்பென்ஸ் [???????????] போயிடும்.ஹாஹா

உங்க மெயில் ஐடி தெரியலை.அதான் இப்ப சொல்லிக்கிரேன்.
வளமான புது வருட வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மௌனவிரதத்தில் பலன் எல்லாம் எங்க அம்மா நிறைய பாத்திருக்காங்க.. அவங்க வாரம்வாரம் ஒரு நாள் பேசமாட்டாங்க.. எனக்கும் ஆசைதான்.. ஆனா இதெல்லாம் பேராசைன்னுதான் எல்லாருக்குமே தெரியுமே ?

ஆனாலும் மாமி சமத்து நமக்கு வராது என்ன கண்மணி?.. மாமிக்கும் உங்களுக்கும் ஹேப்பி நியூஇயர்.

தருமி said...

நானும் இன்னைக்கி "மெளன விரதம்". அதனால பின்னூட்டம் போட மாட்டேன்!

delphine said...

good one Kanmani..
wishing you all the best in the new year 2008

cheena (சீனா) said...

தருமி said...

நானும் இன்னைக்கி "மெளன விரதம்". அதனால பின்னூட்டம் போட மாட்டேன்!

ரிப்பீட்ட்டேய்

சென்ஷி said...

:))

நல்லாயிருந்தது

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)

வழக்கமான மாமி மிக்ஸ் ;))

Unknown said...

அட மாச மாசம் வச்சா தெரிஞ்சுரலீங்களா. அப்பப்ப வச்சாதான் உண்மை வருன்றேன். என்னான்றீங்க.

காட்டாறு said...

ஹா ஹா ஹா....
நெசமாவே புதுவருட புதுப் பலன்கள் தான். :-) உண்மையெல்லாம் நாலா பக்கமுமிருந்து பீறிட்டு வருதே.

Mangai said...

விளையாட்டாக ச் சொல்லி இருந்தாலும் நல்ல விஷயமாகச் சொல்லி இருப்பதால் நன்றாகவே இருந்தது.
நாள் பூரா வேண்டாம். வீட்டில் சண்டை வரும் போது கடை பிடித்தால் பல பிரச்சனைகள் தானாகத் தீரும்.
புரியுது. ஆனா பாருங்க செயல் படுத்தும் போது இந்த வாய் சும்மா இருக்க மாட்டேன் என்று அடம் பிடிக்குது.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)