PAGE LOAD TIME

ஹெல்மெட் போடலையா?..பிடி ரோஜாவை....

'ஹெல்மெட் போடலையா கட்டு அபராதத்தை' னுதானே கேட்டிருக்கிறோம்...ஆனால்
குஜராத் மாநில போக்குவரத்து காவல்துறையினர் ஒரு நூதனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலைவிதிகளை கடை பிடிக்காதவர்கள்,உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள்,தலைக் கவசம்[ஹெல்மெட்] அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம்.
ஆயினும் தொடர்ந்து இது மாதிரி தவறுகள் தொடர்கதையாகத் தான் இருக்கும்.

குஜராத்,வதோதராவில் போக்குவரத்து விதிகளை மீறுவோர்களைத் தண்டிக்காமல் அழகிய ரோஜாப் பூக்களைக் கொடுத்து அத்துடன் சாலை விதிகள் பற்றிய குறிப்பேட்டையும் கொடுக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது ஹெல்மெட் போட வேண்டியதன் அவசியத்தையும் சாலை விதிகளைக் கடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் அமைதியாக எடுத்துக் கூறுகின்றனர்.

அஹிம்சையின் தந்தை தேசப் பிதா காந்தியடிகளின் மாநிலத்தில் இப்படி அஹிம்சா வழிப்படி விதிகளை மீறுவோரை திருத்துவது வரவேற்கத் தக்கதே.

அத்தோடு மட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு வந்த 'லஹே ரஹோ முன்னாபாய்'
[வசூல் ராஜா M.B.B.S] படமும் ஒரு தூண்டுகோல் என்கின்றனர்.

அதில் தாதாவாக இருக்கும் வில்லனுக்கு ரோஜாக்களை அனுப்புவது போல தாதாகிரி யிலிருந்து காந்திகிரி யாக மாற்றுவதில் ரோஜாக்களின் பங்கு அதிகம்.

கடந்த இரண்டு வாரங்களாக இம்மாதிரி முயற்சி மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும்,ஓரளவிற்கு இது மக்களிடையே விழிப்புணர்வையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது என்றும் கூறும் போக்குவரத்து துறை இணை ஆணையர் சித்தார்த் கத்ரி மேலும் இதுபோல பல புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கை மெய்ப்பிக்கும் விதமாக இருந்தாலும்,இதையும் அவர்களுடைய 'ஸ்டண்ட்' என்று விமர்சிப்போரும் உண்டு.

மலர்கள் அழகின் சின்னமாக மட்டுமல்ல அஹிம்சையின் சின்னமாகவும் பயன்படுவது சந்தோஷமே.

11 மறுமொழிகள்::

மங்களூர் சிவா said...

ரோஜா செல்வமணிய கட்டிகிட்டு ஆந்திராவில எதோ அரசியல் பண்ணிகிட்டிருந்ந்தாங்களே இப்ப குஜராத் போயிட்டாங்களா!!!

அவ்வ்வ்வ்வ்

துரியோதனன் said...

//ரோஜா செல்வமணிய கட்டிகிட்டு ஆந்திராவில எதோ அரசியல் பண்ணிகிட்டிருந்ந்தாங்களே இப்ப குஜராத் போயிட்டாங்களா!!!

அவ்வ்வ்வ்வ்//

அவ்வ்வ்வ்வ்

கண்மணி/kanmani said...

ஒரு நல்ல சேதியச் சொன்னா இப்படி ரோஜா-செல்வமணி ன்னு சினிமாவுல புத்தி போகுதே:( ஹூம் நாடு எப்படி உருப்படும்?

காட்டாறு said...

இது நல்லாயிருக்குதே. ரோஜாவைக் காட்டி, அஹிம்சா வழியில் புத்திமதியா? ம்ம்ம்... எப்படியோ புரிஞ்சி நடந்துகிட்டா சரிதான்.

Anonymous said...

தண்டனை மட்டுமே திருந்த வழிவகுக்கும்னு நினைக்காம இப்படி முயற்சி பண்ணுவது நல்லதுன்னுதான் தோணுது. எப்படி செஞ்சா என்ன!! மக்கள்கிட்ட ஹெல்மெட் போடணும்ங்கற கருத்து போய்சேந்தா சரி.

குட்டிபிசாசு said...

எந்த பாரபட்சமில்லாமல் நல்லபடியா அடுத்த 5 வருடம் ஒழுங்கா ஆட்சிசெய்ய மோடிக்கு என்னோட சார்பில் ஒரு ரோஜாவ கொடுத்துடுங்க!

கோபிநாத் said...

\\சின்ன அம்மிணி said...
தண்டனை மட்டுமே திருந்த வழிவகுக்கும்னு நினைக்காம இப்படி முயற்சி பண்ணுவது நல்லதுன்னுதான் தோணுது. எப்படி செஞ்சா என்ன!! மக்கள்கிட்ட ஹெல்மெட் போடணும்ங்கற கருத்து போய்சேந்தா சரி.
\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்

cheena (சீனா) said...

நல்ல முயற்சி - ஆனா காவல் துறையோட செயல் முறை மாறுவது நல்லதல்ல. அன்பினால் திருத்தலாம் - அன்பு அடக்குமுறையை விட நல்லதுதான். இருப்பினும் யாரிடம் காட்ட வேண்டுமென்பது .... கேள்விக்குறி தான்

பாச மலர் / Paasa Malar said...

நல்ல செய்தி கண்மணி..

http://pettagam.blogspot.com/2008/01/tag.html

இதில் கொஞ்சம் பாருங்கள்..
உங்களை tag இயிருக்கிறேன்.

Jazeela said...

கண்மணி காவல்துறையோட யோசனையே உங்களுக்கு புரியலை. ஹெல்மெட் அணியாத ஆண்களை கட்டாயப்படுத்தி ரோஜாவை தலையில் வைக்கும்படி அராஜகம் நடத்தினாலாவது பயந்து கவசம் போடுவாங்க அதான் :-))

கண்மணி/kanmani said...

சிரிப்பான் போட்டாலும் நீங்க சொன்னதை மறுக்கிறேன் ஜெஸி.
அடாவடியால திருந்தாவங்க கூட அன்பினால் திருந்தலாம்.இது ஒரு வகையான் டிரீட்மெண்ட் தானே.எல்லாத்துக்கும் குத்தம் சொன்னா சரி வருமா?

காதில் வளையம் தொங்கட்டான் மாட்டும் ஆண்கள்/நீண்ட தலை முடி வைத்து குதிரைவால் வைத்திருக்கும் ஆண்கள் பூ வச்சுக்க மட்டும் தயங்குவாங்கன்னா நெனைக்கிறீங்க...;)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)