PAGE LOAD TIME

மொக்கை மாமி -குத்தகைக்காரர்

சகோதரி பாசமலர்[அக்கான்னு சொன்னா அவங்களுக்கு பிடிக்காது தங்கைன்னு சொன்னா எனக்க பிடிக்காது[எனக்கென்ன அவ்ளோ வயசா] வந்து பாசமா மொக்ககை போடுன்னு சொன்னா சிரிப்பு வருதுங்க!

இதுவரைக்கும் அதைத்தானே செஞ்சிகிட்டிருக்கேன்.இந்திய பொருளாதாரம்,இலங்கைத் தமிழர் பிராச்சினை,பங்கு வணிகம்,விலைவாசி உயர்வு அட குறைந்த பட்சம் தமிழை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சி இப்படி ஏதாவது உருப்படியாப் போட்டிர்ருந்தேன்னா புதுசா மொக்கை போட கூப்பிடலாம்.வித்தியாசமா இருந்திருக்கும்[நான் கூப்பிடப் போறேன் பாருங்க]

சரி கூப்பிட்ட மரியாதைக்கு ஏதாச்சும் சொல்லுவோம்.

ரொம்ப நாளாவே மொக்கை ன்னா என்னன்னு எனக்கு சந்தேகம்.ஒவ்வொன்றுக்கும் சம்மந்தமில்லாம போட்டா மொக்கையா? இல்லை நிறைய பேர் வந்து படிச்சு கும்மியடிச்சா மொக்கையா??
இதுதான் 'மொக்கையிலக்கணம்' னா நான் பி.எச்டி வாங்கிட்டேங்க.
என் பதிவுகள் படிச்சா இந்தம்மா காமெடியா,சீரியஸா ன்னு புரியாத படி எதுனாலும் எப்ப வேணாலும் எழுதுவேன்.அப்பால என் அருமைத் தங்கை அனுகிட்ட ஒரு வார்ததை சொல்லிட்டா சும்மா 'கும்முகும்முனு' கும்மியடிப்பா.
*******************************************************
நான் ஒம்பதாப்பு படிக்கிற போது மிஸஸ்.தேவாசகாயம் னு ஒரு மிஸ்.அவங்க வீடு காந்திநகர்ல இருந்தது.தினமும் மதியம் 12.30 மணிக்குப் போயி சாப்பாடு வாங்கி வரணும்.அவங்க வீட்டு சமையல் காரம்மா சாப்பாடு வாங்கவரும் பிள்ளைங்களுக்கு திங்க ஏதாச்சும் குடுப்பாங்கனு அங்க போக எல்லோரும் போட்டி போடுவாங்க.சுமாரா படிக்கிறவங்க பாதி கிளாஸ்ல போன படிப்பு பாதிக்கும் னு என்னை மாதிரி அறிவாளிங்க [பாடம் கவனிக்காமலே தேறிடுவவோம்ல] மட்டும்தான் ஜெயிப்போம்.

அப்படி ஒரு நாள் நானும் என் தோழியும் போனோம். சாப்பாடு வாங்கிட்டு வர்ரவழியில ஒரு குதிரை மேஞ்சிகிட்ட்டிருந்தது.தீடீரென்று அது எதுக்கோ மிரண்ட மாதிரி எங்களைத் துரத்த எடுத்தோம் ஓட்டம்.ரொம்ப தூரம் ஓடி மூச்சு வாங்க திரும்பிப் பார்த்தா தோழி சாவகாசமா வந்துகிட்டிருக்கா.குதிரை வேற பக்கம் மேஞ்சிகிட்டிருக்கு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நாம தான் பயந்து மெரண்டு இம்மாம் தூரம் ஓடி வந்துட்டமானு வடிவேலு கணக்கா ஃபீல் ஆயிட்டேன்.
*****************************************************************
ஒரு முறை எதிர்த்த வீட்டு தோழியும் அவங்க சின்னக் குழந்தையும் வந்திருந்தாங்க சும்மா கதை பேச.இந்த வேலைக்குப் போகாத பொம்பளைங்க பாருங்க காலை 10 மணிக்கு வீட்டுக்காரரையும் புள்ளைங்களையும் அனுப்பிட்டு அக்கம் பக்கம் னு ஞாயம் பேசக் கிளம்பிடுவாங்க.[நீயி யோக்யமானு கேக்காதீங்க நான் சனி,ஞாயிறு லீவ்ல மட்டும் போவேனாக்கும்] அன்னைக்கு அவங்க கிச்சனுக்கு வந்து சமைச்சிகிட்டிருந்த என் கிட்ட பேசிக்கிட்டிருந்தாங்க.
குக்கர்ல பருப்பு வச்சிட்டு நானும் பேச,தண்ணீர் போதலையோ என்ன காரணமோ சேப்டி வால்வு கழண்டு 'டமால்'னு சத்தத்தோட குக்கர் மேலே பறக்க,பருப்பெல்லாம் சீலிங்ல ஒட்டிக்க மிரண்டு போன நான் சமயோசிதமா கேஸ் அடுப்பை மூடிட்டு பார்த்தா எதிர் வீட்டு தோழி குழந்தையோடு தெருவுக்கு ஓடிப் போய் நிக்கிறாங்க.கொஞ்சம் பொறுத்து 'கண்மணி என்னாச்சு ஒன்னுமில்லையே'னு விசாரித்தபடி உள்ளேவர
'அடிப்பாவி குக்கர் வெடிச்சி நானென்ன ஆனேன்னு கவலைப் படலை ஓடிப் போயிட்டு இப்ப வந்து பாக்கறியே' னு திட்ட
'நான் மட்டும் இருந்தாப் பரவாயில்லை பாப்பாவுக்காத் தான் ஓடிட்டேன்னு சொன்னாள்.பொழச்சிப் போகட்டும்.
********************************************************************
ஒரு நாள் காலை நேரம் தூங்கி எழுந்து வாசக் கதவைத் திறக்க வந்தேன்.மும்மூர்த்திகள் போல மூனு காவி உடை சாமியார்கள் 'ஜெய ஜெய சங்கர' என்றபடியே கேட் திறந்திருந்ததால் உள்ளே நுழைந்தார்கள். நான் என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள் பூக்களை தலையில் தூவி ஆசிர்வதிக்க திகைத்துப் போய் மெய் சிலிர்த்துப் போனேன்.சங்கர மடத்திலிருந்து வருவதாகவும் ஏதோ ஒரு யாகத்திற்காக உதவி செய்யுங்கள் எனவும் கேட்க சங்கர மடத்தில் இல்லாத சொத்தா ன்னு மனம் நினைத்தாலும் ஆசிர்வாதத்தில் மயங்கி 100 ரூபாயைக் குடுத்தேன்.இரண்டு நாள் கழித்து ஜூனியர் விகடனில் அந்த மூன்று 'கேடி'களின் படம் வந்திருந்தது.அக்கம் பக்கம் எல்லாம் 10,20 னு ஏமாந்திருக்க நான் 100 குடுத்ததை மூச்சு விடலை.முட்டாளானதை வெளியே சொல்ல முடியுமா?
********************************************************************
ஒரு முறை பொங்கலுக்கு வீடு கிளீன் பண்ண நானும் உதவி செய்யும் அம்மாவோடு வேலை செஞ்சுகிட்டிருந்தேன்.நாற்காலியில் ஏறி அலமாரியிலிருந்த கரப்பான் களைத் துரத்தும் முயற்சியிலிருந்தேன்.யாரோ சொன்னாங்கன்னு சோப்புத் தண்ணியை வச்சி கரப்பான் களை மிரட்டினேன்.அதுங்க 'சொய்னு' பறந்து வந்து மேல விழ அலறியபடியே நான் துள்ள [ஆக்சுவலி எனக்கு கரப்பான் னா பயமில்லை.ஆனா கரப்பானுக்கு பயந்தாதான் வீரங்கனையா ஏத்துப்பாங்க என்பது எழுதப் படாத சட்டமாச்சே] தொபுகடீர்னு விழுந்தது கூட வலிக்கலிங்க.
ஆனா,'அம்மா பரங்கிப் பழம் மாதிரி விழுந்துடிச்சினு'உதவிக்கு வந்த பெண்மணி நகர் முழுக்க தண்டோரா போட்ட வலி தாங்க அதிகம்.
************************************************************
எனக்கு சிவாஜின்னா புடிக்கும்[எம்.ஜியாரும் தான்].
எதிர்பாராதது னு ஒரு படத்துல அவர் காதலித்த பத்மினியை அவர் தந்தை நாகையா கல்யாணம் பண்ணிக்குவார்.ஒரு சீனில் சித்தி பத்மினி சிவாஜியை கன்னத்தில் அறைய அழுதேன் அழுதேன் அப்படி அழுதேன் ஏன்னு இன்னை வரைக்கும் புரியலை.
இதுல யார் அதிகமா அழறாங்கன்னு எனக்கும் என் தோழிக்கும் மறைமுக போட்டி.
வசந்த மாளிகையில்,முத்து ராமன் நடித்த தீர்க்க சுமங்கலியில் இப்படி எல்லா கிளை மேக்ஸ் சீனுக்கும் அழுதுட்டுதான் இப்ப காமெடி பண்றேனாக்கும்.
***************************************************************

ஒரு நாள் பிச்சுமணி ஸ்கூல்லயிருந்து வரும்போது தெருவில் யாரோ சண்டை போடுவதைப் பார்த்துட்டு வந்து 'மம்மி நெஞ்சில இருக்குற மஞ்சா சோறுன்னா என்ன' னு கேட்டான்.
லெமன் ரைஸா மம்மி .இவர் சாப்பிட்டது அவருக்கு எப்படித் தெரியும்னான்.

இன்னொரு நாள் கேட்டான்,'மம்மி மேம் சொல்றாங்க வேலைக்குப் போனா வொர்க்கிங் விமன் வீட்ல இருந்தா ஹவுஸ் வொய்ஃப் னு. நீங்க வொர்கிங் விமண்தானே?
'ஆமாண்டா செல்லம்'
ஆனா டாடிக்கு நீங்க தானே வொய்ஃப் அப்ப ஹவுஸ் வொய்ஃபுனும் சொல்லலாமா?'
'இல்ல கண்ணா வேலைக்குப் போனா வொர்க்கிங் விமன் வீட்ல இருந்தா ஹவுஸ் வொய்ஃப்'
'அதெப்படி நீங்க வேலைக்கும் போறீங்க அப்பபாவோட வொய்ஃபா இந்த ஹவுஸ்லயும் இருக்கீங்க'
இதுக்கு நான் என்ன சொல்ல?
*********************************************************

என்ன மக்கா காதுல பொகை வருதா?இந்த மொக்கை போதுமா?இன்னும் கொஞ்சம் வேனுமா?
இப்ப நான் நாலு பேரைக் கூப்பிடப் போறேன்.
இதுவரை சீரியஸ் பதிவுகள் மட்டுமே எழுதும் அவர்கள் மொக்கை டிரை பண்ணட்டும்.

1.ஜெஸிலா
2.அய்யனார்
3.தென்றல்
4.பொன்வண்டு
5 mangai[இங்கிலீஷ் மங்கை]
6.மலர்வனம் லஷ்மி
7.கோபிநாத்


டிஸ்கி:எத்தனை பேர் வேனும்னாலும் கூப்பிடலாமாம்.எனவே மேலும் 3 பேர்

18 மறுமொழிகள்::

முத்துலெட்சுமி said...

மொக்கையிலக்கணம் எல்லாம் சொல்லி நீங்கஒரு டீச்சர்ன்னு நிரூபிக்கறீங்க.. அதோட மட்டுமில்லாம யாருக்கு எதை டேக் செய்யனும்ன்னு கூட தெளிவா இருக்க்கீங்க.. உங்களைப்பாராட்டாம இருக்கமுடியல... ஆமா மொக்கை போஸ்டை எப்படி பாராட்டனும் இப்படித்தானா ? :))

மங்கை said...

ஒன்னு மட்டும் இப்ப நிச்சயம்... யாரும் நல்ல பதிவு எதிர்பார்த்தா எழுத மாட்டாங்க போல...மொக்க போடுங்கன்னு சொன்னாதான் யோசிச்சு போட்டி போடுட்டு எழுதறாங்க..

குதிரையும் குக்கரும் சூப்பர்...

கண்மணி said...

மங்கை இன்னும் 2 சேர்த்திருக்கேன் பாருங்க.சொன்னாப்ல மொக்கை னு சொன்னாதான் மூளை வேலை செய்யுது.;)
உங்களையும் கூப்பிட இருந்தேன் முத்தக்கா முந்திகிச்சு

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் மொக்க நல்லாவே இருக்கு - 3 கேடிகள் நானும் ஏமாந்துருக்கென். ( வெளியே சொல்லிடாதிங்க) -என்ன செய்யுறது

அப்புறம் வாழ்த்துகள்

காட்டாறு said...

ஹா ஹா ஹா...

யக்கோவ் பின்னி பெடலெடுத்துட்டீங்க...ஹா ஹா ஹா...

யாரையாவது ரொம்ப அட்மயர் பண்ணினா...எங்க ஊர்ல அடிக்கடி இப்படி சொல்லுவாங்க... You are awesome! உங்களுக்கும் You are awesome! மொக்கைன்னு சொல்ல முடியல... ஹா ஹா ஹா

மங்கை said...

கண்மணி..

நீங்க ஆட்டைல இல்லை..
disqualified...

அபி அப்பா said...

:-))

பாச மலர் said...

கண்மணி,

அக்கான்னு கூப்பிடலாம்..
பரவாயில்லை..

நல்ல பதிவு..மொக்கைன்னும் எடுத்துக்கலாம்..

Tag தொடர்ந்ததற்கு நன்றி..

தென்றல் said...

(வழக்கம் போல) கலக்கல்!

இத அப்படியே 'அவள் விகடன்'க்கு அனுப்புங்க.. பரிசு கிடைச்சா 'எல்லாருக்கும்' ;)

"ஜோதி"யில கலந்துகிட்டா போச்சி :)

கோபிநாத் said...

சுத்தம் நீங்களும் அவுட்டு...;)

ஏன் எல்லா அக்காவும் மொக்கை போடுங்கன்னா இப்படி கொசுவத்தி சுத்துறிங்க..!

கடவுளே இவுங்களுக்கு மொக்கை போட நீ தான் அருள் புரிய வேண்டும் ;))

கோபிநாத் said...

\\தினமும் மதியம் 12.30 மணிக்குப் போயி சாப்பாடு வாங்கி வரணும்.\\

இந்த மேட்டரை ஏற்கனவே பதிவுல பார்த்த ஞாபகம் :)

\\பிச்சுமணி\\ - சூப்பர் ;)

Mangai said...

ரொம்ப நேரம் வாய் விட்டு சிரித்தேன். ஏன் பையன் கொஞ்சம் பயந்து பார்த்தான். எப்போதாவது தான் வாய் விட்டு சிரிக்கும் சந்தர்ப்பம் அமைவாதால் அவன் அவ்வளவாக பார்த்ததில்லை.

இப்படி சிரிக்க வைப்பது ( யார் மனதும் புண்படாமல்) கூடவே சிந்திக்க வைப்பதும் தான் மொக்கை என்றால் மொக்கை வாழ்க.

என் serious முகமே மற்றவர்க்கு comedy -ஆக இருப்பதால் நான அதற்குத் தனியாக எதுவும் செய்வதில்லை ( வராது. நமக்கில்லை என்ற தருமியின் நிலை தான்)

இந்த தொடர் மொக்கையில் அப்பப்போ வந்து கும்மி அடிக்க என்னையும் சேர்த்துக்கோங்க.

- Mangai(பெண்)

பொன்வண்டு said...

என்னை சீரியஸ் பதிவர் லிஸ்ட்டில் சேர்த்த டீச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன் :)))

என் பதிவுகள் பின்னூட்டம் கூட போட முடியாத அளவு மொக்கைகள் என்பதை படித்தவர்கள்(?) சொல்வார்கள். :)))

அழைப்பிற்கு நன்றி டீச்சர். இன்று ஆணி இருப்பதால் நாளை விடுமுறையில் தொடர்கிறேன். :)

கண்மணி said...

காட்டாறு எங்க ஊர்லயும் awesome உண்டு தாயீ! நம்ம 'நம்ஸ்' மானாட மயிலாட ல அப்பப்ப சொல்லுமே

கோபி இது மொக்கையில்லைனா எதுதான் மொக்கை? 12.30 மணி சாப்பாடு மேட்டர் சொல்லி இருக்கேன் ஆனா அதோடு சேர்ந்த 'குதிரை' மேட்டர் சொன்னதில்லை.

தென்றல்,பொன்வண்டு சம்மதத்திற்கு நன்றி

இங்கிலீசு மங்கை உங்களை சிரிக்க வைத்ததுக்கு நான் சந்தோஷப் படுகிறேன்.
உங்களையும் சேர்த்து டேக் போட கூப்பிடப் போறேன்.

அய்யனார் said...

நாம போடுறது எல்லாமே மொக்கைதான்னு நிரூபிக்க இழுத்துவிட்டிருக்கிங்களா? :)
(நன்றி:மங்கை)

மொக்கை போடவும் நாங்க நெறய படிச்சிட்டுதான் போடுவோம் கொஞ்சம் டைம் வேணும் :))

ஜெஸிலா said...

உங்களுக்காக மெகா மொக்கை அப்புறம். இப்போதைக்கு சின்ன மொக்கை போட்டிருக்கிறேன் பாருங்க. தலைப்பு புகைப்பட போட்டிக்குன்னு...

இக்பால் said...

இது என்ன மொக்கை மாதமா? மொக்கை பதிவுகளின் அட்டகாசம் தாங்க முடியலப்பா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆமா..

இது மொக்கையா இல்லையா?

கும்மனுமா இல்லையா?

பதிவா நீட்டா இருக்கிற மாதிரி இருக்கே!

பதிவை படிக்கணுமா இல்லையா?

ஒன்னும் புரியல. தயவு செய்து விளக்கவும். :-P

Post a Comment

Labels

reverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)