PAGE LOAD TIME

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்...

ஆத்தா எல்லாரும் டேக் போட்டு கூப்பிடறாக நாமும் அப்பிடி ஏதாச்சும் செய்வோமின்னு இருந்தப்ப சர்வேசன்'எழுதியதில் பிடித்தது' னு டேக் போட்டுட்டார்.
அதே கருத்துன்னாலும் நான் மை பெஸ்ட் அல்லது மாஸ்டர் பீஸ் னு பேர் வைக்க நினைத்திருந்தேன்.

சர்வேசன் கோச்சுக்கப் படாது.முந்திகிட்டதால உங்களுத்தான் காபிரைட் இருந்தாலும் நானும் ஒரு ரவுண்டு வரலாம்னு இருக்கேன்.நீங்க ஒருத்தர் ஆரம்பிச்சது எல்லோருக்கும் வரும்வரை காத்திருக்காம என் மூலமும் பலருக்கும் வாய்ப்பு சீக்கிரம் கிடைத்தால் சுவாரஸ்யம் கூடும் தானே? சோ.......ஒரு சின்ன சாரி....எக்ஸ்கியூஸுடன்....ரெடி ஸ்டார்ட் மீஜிக்...

மக்கா!

இதுவரை நாம் ஒவ்வொருவரும் தமிழ்மணத்தில் எத்தனையோ பதிவுகள் போட்டிருந்தாலும் மறுபடியும் இப்ப படிச்சுப் பார்க்கும் போது சே இன்னும் கொஞ்சம் நல்லா எழுததியிருக்கலாம்னோ அல்லது பரவாயில்லைனோ தோனும்.

ஏதாவது ஒன்று அல்லது இரண்டு நமக்கே நமக்கு பிடித்துப் போனதாக இருக்கும்.
அதுக்கு என்ன காரணம் என்பதை சொன்னால் சுவாரஸ்யமாக இருக்கலாம்.இரண்டு பதிவுகள் வரை மட்டுமே சொல்லனும். அதுல ஒன்னே ஒன்னுதான் மை பெஸ்ட் அல்லது மா.பீஸ் ஆக குறிப்பிடனும்.
ஒன்னு வின்னர் னா இன்னொன்னு ரன்னர் மாதிரி சரியா?

என்னுடைய ஆரம்பம் கடி ஜோக்குகளோடு ஆரம்பித்தது.இப்போது மாதிரி தமிழ்மணத்தில் ஒரு நட்பான வட்டம் எனக்கு இல்லாததால் கருவிப் பட்டை சேர்ப்பதிலிருந்து டெம்ப் மாற்றுவது,மறுமொழி மட்டறுப்பது என எதுவே தெரியாமல் எதை எதையோ பதிவுன்னு கிறுக்கிக் கிட்டிருந்தேன்.

தோழி கலையின் அறிமுகம் கிடைத்து ஓரளவு தெரிந்து கொண்டு விட்டேன்.

டிசம்பரில் வலை பதிய வந்தாலும் பிப்ரவரிக்கு பிறகே கொஞ்சம் பிக்கப் ஆனேன்.நெல்லை சிவாவும் [தன் பதிவில்]பொன்ஸும் [வலைச்சரத்தில்]எழுதிய பிறகே என் பதிவுகள் சூடு பிடித்தது.

இன்றுவரை வலைச் சரத்தில் பலராலும் அடையாளம் காட்டப் படும் என் பதிவுகள் ச்சுப்பிரமணிக்கு என்ன இனிஷியல் மற்றும் அம்புஜம் மாமியும் பெரியார் சிலையும்.

நாய்க்கு இனிஷியல் பிரச்சனையான்னு ஒரு வித்யாசமான கதைக் கருவுடன் இருந்ததால் ரசிக்கும்படியாக அமைந்தது.

அடுத்து வந்த பதிவுகளீல் அம்புஜம் மாமியும் கிட்டுமாமாவும் மெயின் கதாபாத்திரங்கள்.
அந்த நேரம் பெரியார் சிலை விவகாரம் ஒன்று இருந்ததால் காந்தி சிலை என்பதை பெரியார் சிலையாக்கி விட்டேன்.அப்பத்தானே ஜூடா இருக்கும்.எப்படியோ மாமியால் என் பொழப்பும் ஓடுது.

மை பெஸ்ட்:

ச்சுப்பிரமணிக்க்கு என்ன இனிஷியல்

ரன்னர் அப்

அம்புஜம் மாமியும் பெரியார் சிலையும்

அடுத்து நான் அழைக்க இருப்பது:1.சீனாசார்
2.அபி அப்பா
3.சென்ஷி
4.முத்துலஷ்மி
5.மங்கை[தமிழ்]
6.துளசி கோபால்
7.வல்லிசிம்ஹன்
8.மை பிரண்ட்
9.காட்டாறு
10.குட்டிபிசாசு

விதி:அதிக பட்சம் 2 பதிவுகள் பற்றிச் சொல்லலாம்.
ஒன்று மட்டுமே மை பெஸ்ட்
எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.


டிஸ்கி:இது டூ மச்சோ த்ரீ மச்சோ இல்லைங்க.காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு மாதிரி.

26 மறுமொழிகள்::

SanJai said...

அக்கா கண்மணி அக்கா.. தயவு செய்து இந்த Font Arrangementஐ தவிர்க்கவும். எனக்கு ஜிலேபி மொழி எல்லாம் சத்தியமா தெரியாதுக்கா. :(

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஏற்கானவ் பல பேர் டேக் பண்ணி எழுதாமல் இருக்கு. இதுல அடுத்த வீட்டுப்பாடம்ம் ரெடியா? ஹீஹீஹீ..

.:: மை ஃபிரண்ட் ::. said...

எனி கும்மி ஹியர்???? :-P

SanJai said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

எனி கும்மி ஹியர்???? :-P//

ஹிஹி.. அதுகென்ன? கும்மிட்டா போச்சி :P

கண்மணி said...

மை பிரண்ட் கண்ணு மத்த ஹோம்வொர்க் செய்யலைனாலும் இந்த டீச்சரோடது செஞ்சே தீரனும் இல்லாட்டி பெஞ்சு மேல நிக்க வச்சிடுவேன்.

சஞ்சய் பாண்ட் அரேஞ்மெண்ட் அப்படின்னா??நீங்க தீ நரியில பாக்கறீங்களா?

மங்கை said...

ahaa..eanppaa...mokkainnu othutta appurumum makkala kashtapada vaikanuma.....

SanJai said...

//சஞ்சய் பாண்ட் அரேஞ்மெண்ட் அப்படின்னா??நீங்க தீ நரியில பாக்கறீங்களா?//

ஆமாங்க்கா.. ஆனா இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் புது பதிப்புல சும்மா முத்து முத்தா தெரியுது போங்க. இனி அதுக்கு மாறிடலாம்னு இருக்கேன்.

பதிவு எழுதும் போது வரிகள் குட்டை நெட்டையா இல்லாம ஒரே சீரா இருக்கனும்னு Justify Full என்பதை உபயோகிப்போம். அது நெருப்பு நரில சமயத்துல வேலை செய்யாது. ஜிலேபி வியாபாரத்தை செய்ய ஆரம்பிச்சிடும். :)

வல்லிசிம்ஹன் said...

அழைத்ததற்கு நன்றீ.... கண்மணி.
எழுதிடலாமே.
ஒரு பெஸ்ட் பதிவு கூடவா கிடைக்காது:))
பதிவு போட்டு விட்டு உங்களுக்கு பின்னூட்டறேன்..

cheena (சீனா) said...

ம்ம்ம்- எல்லோரும் எழுதட்டும் - சுட்டி தரட்டும் - படிப்போம் - மறு மொழி இடுவோம் - வேற என்ன செய்யுறது

கண்மணி said...

கோச்சுக்காதீங்க சீனா சார் உங்க பேரை எழுதி அடித்து விட்டேன்.ஏன்னா மதுரக் காரங்க உங்களை அழ்ழைப்பாங்கன்னு நெனச்சி.தருமி சாரைக் கூப்பிட்டாச்சு.
சரி எத்தனை பேர் கூப்பிட்டா என்ன என் அழைப்பும் உண்டு.

cheena (சீனா) said...

கண்மணி, சேச்சே - கோபம் எல்லா, இல்ல - என்ன சொல்றது அதுக்குப் பேரு - தெரில - நன்றி அழைப்பிற்கு

கோபிநாத் said...

பெஸ்ட் கண்ணா பெஸ்ட் - உண்மையில் பெஸ்ட் தான்..;))

துளசி கோபால் said...

யோசிக்கத்தான் வேணும்.

ஐய்யோ....சொக்கா...நல்லதைச் சொல்லித்தா.......:-)))))

முத்துலெட்சுமி said...

intha varusam taga vanthu kuviyuthe... kaNmani ippathan system repair kku poittu vanthathu ekalappai lernthu ovvonna download pannanum methuva elutharenpa sariya..?

பொன்வண்டு said...

டீச்சர் தங்கள் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா? தங்களைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன். பதிவை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அனுமதித்தால் வெளியிடுகிறேன். மின்னஞ்சல் யாருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது. :)

கண்மணி said...

தவறான அல்லது மிகைப் படுத்தலான எந்த விஷயமும் இல்லாத வரை என்னைப் பற்றி எழுத அனுமதி உண்டு.[அவ்வ்வ்வ்வ்வ் நான் இன்னா செஞ்சுட்டென் எழுத...?]
குசும்பன் என் கவிதைகளுக்கு எதிர் கவிதை போடுவார்.
அக்காவை மதிக்கும் தம்பிகளுக்கு அனுமதி என்றும் உண்டு.

காட்டாறு said...

2008ல என்ன ஒரே டேக் மயம்? நீங்க எழுதியதுல காமெடி மட்டும் தேர்ந்தெடுத்துட்டீங்களா? எனக்கும் ச்சுப்ரமணி இனிஷியல் கதை ரொம்ப பிடிச்சது. உங்களை எனக்கு முதல் அறிமுகப் படுத்துன கதையாச்சே. :-) கவிதை ஒன்னையும் சேர்த்துக்கலாமே.

என்னையும் ஆட்டைல சேர்த்துட்டீங்க போல.

காட்டாறு said...
This comment has been removed by the author.
காட்டாறு said...

எந்த கவிதைன்னு சொல்ல மறந்துட்டேன். மெல்லினமா வல்லினமா...
http://kouthami.blogspot.com/2006/12/blog-post_3180.html

மனதை கலைத்த கவிதை.

SurveySan said...

கலக்குங்க. :)

உங்க விளையாட்டு மூலமா கிடைக்கப் பெறும் பதிவுகளையும் எனக்கு அப்பப்ப சொன்னீங்கன்னா, இங்கண ஏத்திடுவேன்

http://surveysan.blogspot.com/2008/01/2007.html

:)

காட்டாறு said...

ஐக்கியமாயிட்டோமில்ல.. இங்கே இங்கே இங்கே...
http://kaattaaru.blogspot.com/2008/01/blog-post_14.html

முத்துலெட்சுமி said...

http://sirumuyarchi.blogspot.com/2008/01/blog-post_14.html கண்மணி போஸ்ட் போட்டாச்சு நன்றிப்பா..

மங்கை said...

நன்றி கண்மணி...போட்டாச்சு
http://manggai.blogspot.com/2008/01/blog-post_16.html

cheena (சீனா) said...

அய்யோ - எல்லோரும் போட்டுட்டாங்களே - நான் இன்னும் போடலியே = சீக்கிரம் போடனும்

cheena (சீனா) said...

அப்பாடா ... போட்ட்டாச்ச்ச்ச்சு = நன்றி கண்மணி

http://cheenakay.blogspot.com/2008/01/blog-post_17.html

சர்வேசனுக்கும் சொல்லியாச்சு

மங்களூர் சிவா said...

Live traffic feed
Mangalore, Karnataka arrived from thendral2007.blogspot.com on "கண்மணி பக்கம்: பெஸ்ட் கண்ணா பெஸ்ட்..."

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)