PAGE LOAD TIME

ஜல்லிக் கட்டுக்கு ரெடியாகும் கிட்டு மாமா

மாமா இந்த வருஷம் ஜல்லிக் கட்டுக்குப் போவதுன்னு முடிவு பண்ணிட்டார்.

"ஆஹா இத்தனை வருஷமா இல்லாத வீரம் இப்போ எப்படி வந்துச்சி.சுப்ரீம் கோர்ட் தடை போடும்னு தெரிஞ்சு கிளம்புறீரா’’ னு மாமி கிண்டல் பண்ண

‘’யார் தடுத்தாலும் ஜல்லிக் கட்டு நடக்கும்டி.’’

‘’கோர்ட் அனுமதி மறுத்தா’’

‘’என்ன ஓபனா மைதானத்துல மாடு புடிக்கற்துக்கு பதிலு இண்டோர்ல புடிப்போம்’’

‘’நீங்க என்ன எலி புடிக்கவா போறீங்க இண்டோர்ல புடிக்க?பேசாம இருங்க அப்பால மிருக வதை சட்டத்துல புடிச்சி உள்ள போட்றுவாங்க’

‘’நாங்க குடல் கிழிஞ்சாலும் பரவாயில்லை னு மறத் தமிழன் வீரத்தைக் காட்ட நெனைச்சா எந்த கோர்ட் எங்களைத் தடுக்கும் பார்ப்போம்''

‘'சரி சரி மாடு புடிக்க போங்க உங்க இஷ்டம் முதல்ல வடகம் காய வச்சதை காக்கா கொத்தாம பாத்துங்க .இல்லாட்டி மதியான சாப்பாடு கிடையாது’'

‘'அடியேய் மஞ்சு விரட்டுக்குக் கிளம்பும் மாவீரனை வடாம் காய வைக்கச் சொல்லும் பேதையே’பொறுத்திருந்து பார் என் வீரத்தை’' னு மாமா கொக்கரிக்க

அந்த கேப்ல ஒரு காக்கா வடகத்தை கொத்திக் கொண்டு போனது.

ஏதோ தமாசு பண்றாருன்னு நெனைச்சா மாமா நெஜமாவே அப்ளிகேஷன் குடுத்துட்டார்.

அடுத்த கட்டமா காத்துல சும்மா கையை காலை ஆட்டி மாடு அடக்குறாப்பல ஒத்திகை பார்க்கத் தொடங்கினார்.

வேடிக்கை பார்க்க வந்த கிச்சுமணிக்கும் பிச்சுமணிக்கும் நல்ல பொழுது போக்கா இருக்க முழு நேரமும் மாமாவுக்கு ஐடியா குடுத்த படியே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் பிச்சுமணி குனிந்தபடியே துள்ளித் துள்ளி ஓட மாமா மாடு பிடிப்பது போல அவனை மடக்க அவன் படாரென்று காலைத் தூக்க மாமா முகத்துல பட்டு ஆடிக்கிட்டிருந்த முன் பல்லு தெறிச்சி விழுந்திடுச்சி.

‘'தாத்தா வெரி சாரி தாத்தா தெரியாம பட்டுச்சி’'

'‘ஓகே கண்ணா வீரனுக்கு இதெல்லாம் சகஜம்.நிஜமா காளை அடக்கும் போது இன்னும் அதிகமா அடிபடும் அதுக்கு டிரையல்னு நெனச்சுக்குவோம்.அதுக்காக அடிக்கடி காலைத் தூக்கி எல்லா பல்லையும் ஒடச்சிடாதேடா’’

வேலைக்காரி முனியம்மா இந்தக் கூத்தைப் பார்த்து மோவாய்க் கட்டையில் இடிச்சிக்கிட்டாள்.

‘'அட இன்னா சார் நீயி! பச்ச புள்ளய குனிய வுட்டு மாடு வெரட்டுற நா வேணா எங்கூட்டு மாட்டை நாலு நாள் கொண்டாந்து கட்டறேன்.வாடகை மட்டும் குடுத்துடு.அப்பால மூணு வேளையும் புண்ணாக்கும் கழனியும் வச்சிடு.காலையில் ஒரு தபா சாயங்காலம் ஒரு தபா குளிக்க வச்சிடு.இன்னா சரியா?’'

பலத்த யோசனைக்குப் பின் கிச்சு,பிச்சுவுடன் ஆலோசனை செய்த பின் மாமா ஒப்புக் கொள்ள முனியம்மா வீட்டு காளை மாடு வந்து சேர்ந்தது.

ஜல்லிக் கட்டுக்கு போவதால் மாமாவுக்கு ஸ்பெஷல் சாப்பாட்டு மெனு பாதாம் பிஸ்தா னு பருப்பு வகைகள் இதுல மாட்டுக்கு பருத்திக் கொட்டை வேறான்னு எரிச்சலில்,
‘உங்களுக்கே வெட்டிச் செலவு இதுல இதுக்கும் சேர்த்துக் கொட்டணுமா’மாமி அங்கலாய்த்தாள்.

முனியம்மா வீட்டு மாடு ஒன்னும் அத்தனை முரடு இல்லை.
பின்னூட்டம் எகிறாத பதிவர் மாதிரி எந்நேரமும் சோகத்தோடயே காணப் பட்டது.

முதல் நாள் படுத்திருந்த அதை எழுப்பவே 2 மணி நேரம் ஆனது.
.
கிச்சுவும் பிச்சுவும் வாலைப் பிடித்து இழுத்தும் சோம்பேறியாக நகராமல் இருந்தது.

மாமா தீபாவளிக்கு வாங்கி வெடிக்காமல் மிச்சமிருந்த 1000 வாலா ஒன்னை மாட்டு வாலில் கட்டி திரியை வைக்க ஏதோ தூக்கத்துல முழிச்ச குழந்தை மாதிரி மாடு ‘உச்சா’ போக வெடி பிசுத்துப் போனதுடன் மாமா டிரஸ்ஸெல்லாம் ‘கோமியத்தில்’ நனைந்ததுதான் மிச்சம்.

ஒரு வழியாக பிச்சு மாட்டு வாலைப் பிடித்து இழுக்க மாடு மிரண்டு ஓட மாமா அடக்க முயற்சிக்க கன ஜோரா ஜல்லிக் கட்டு பயிற்சி எடுக்க ஆரம்பித்தார்.

சாயங்காலம் முனியம்மா வந்ததும்’என்ன சொங்கி மாட்டைக் குடுத்து ஏமாத்துற.சுறு சுறுப்பா ஓட மாட்டேங்குது’னு மாமா கேக்க

‘நாந்தான் சொன்னேனில்லை சாரே அது கரீட்டா ரெண்டு வேளையும் குளிக்கும் அதுக்கப்பாலதான் சுறுசுறுப்பாயிருக்கும் மாட்டை ஏன் குளிக்க வைக்கலைனு’ சொல்ல

மறுநாள் பயிற்சிக்கு முன் பிச்சு கிச்சு புடை சூழ மாட்டை குளத்தங்கரைக்கு ஓட்டிப் போய் நல்லாத் தேய்ச்சிக் குளிப்பாட்டி கொண்டு வந்தார்.

இப்படியாக மாட்டுக்கு குளியல் பருத்திக் கொட்டை, கழனி கரைசல்,அப்பால பயிற்சி னு போய் ஜெயிக்கிற வெறியில மாமா நாலு நாளா குளிக்க சாப்பிடக் கூட மறந்துட்டார்.

ரெண்டு நாள்லயே மாடு ஒரு சுத்து பெருத்துப் போக மாமாதான் பாவம் ரெண்டு சுத்து இளைச்சி போயிட்டார்.

ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைக்குமா மாமா கலந்துக்குவாரா கலந்துகிட்டாலும் ஜெயிப்பாரா னு பொறுத்திருந்து பாருங்க அடுத்த எபிஸோட்ல.......

17 மறுமொழிகள்::

காட்டாறு said...

நீங்க தூங்குறதே கிடையாதா? இவ்ளோ காலையிலேயா? பொங்கல் வாழ்த்துக்கள்.

Anonymous said...

அப்புசாமி சீதாப்பாட்டி கதை கணக்கா இல்ல இருக்கு. நீங்களும் தொடர்கதை எழுத ஆரம்பிச்சுடீங்களா>???

Ramachandranusha said...

முனியம்மா வீட்டு மாடு ஒன்னும் அத்தனை முரடு இல்லை.
பின்னூட்டம் எகிறாத பதிவர் மாதிரி எந்நேரமும் சோகத்தோடயே காணப் பட்டது// :-)))))))))))))))))))))))

கோபிநாத் said...

:)))

பொங்கல் வாழ்த்துக்கள்.

பாச மலர் / Paasa Malar said...

களைகட்டுகிறது ஜல்லிக்கட்டு..பொங்கல் வாழ்த்துகள் கண்மணி.

அபி அப்பா said...

பின்னூட்டம் எகிறாத பதிவு போலயா, நச்சு நச்சுன்னு தூள் கிளப்புறீங்க டீச்சர்! அடுத்த பார்ட்டா ரெடி நாங்க!!!

அபி அப்பா said...

பின்னூட்டம் எகிறாத பதிவு போலயா, நச்சு நச்சுன்னு தூள் கிளப்புறீங்க டீச்சர்! அடுத்த பார்ட்டா ரெடி நாங்க!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பின்னூட்டம் எகிறாத பதிவர் மாதிரி தான் சூப்பரான இடம்.. அய்யோ அய்யோ கலக்கறீன்க்க கண்மணி.

கண்மணி/kanmani said...

காட்டாறு அன்னைக்கு கொஞ்சம் ஃபிரீ அவ்ளோதான்.ரங்கமணிக்கு தெரிஞ்சா[இவ்ளோ நேரம் முழிச்சேனு]
வீணா தகராறுதான்;)

கண்மணி/kanmani said...

கோபி
பாசமலர்
பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்களும்
ஆமா மாட்டுப் பொங்கலுக்கு யார்கிட்ட வாழ்த்து சொல்றது?
எனிபடி கேன் ஹெல்ப் மீ?

கண்மணி/kanmani said...

பதிவ படிக்கிற பழக்கமில்லை.ஆனா பின்னூட்டம் மட்டும் டபுள்?
அபி அப்பா ஏன் எல்லாம் டபுள் டபுளா தெரியுதா?புஷ் வந்து புண்ணியம் கட்டிக் கிட்டாரா:))

கண்மணி/kanmani said...

//கலக்கறீன்க்க கண்மணி.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் முத்து உங்களுக்குமா 'அந்த வியாதி'?

cheena (சீனா) said...

அப்புசாமி - சீதா - நினைவு வருகிறது - பாக்கியம் ராமசாமியின் அக்கால கதைகளை ஒன்று விடாமல் படித்தது நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது.
இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துகள். ( இன்னைக்கு மணி 4 இப்பொ - பொங்கல் முடிஞ்சி போச்சி - நான் என்ன பண்றது)

cheena (சீனா) said...

மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்து சொன்னது முனீம்மா வூட்டு மாட்டுக்குங்க

கண்மணி/kanmani said...

வாங்க சீனா சார் பால் நல்லா பொங்கிச்சா?

ஜல்லிக் கட்டு தடை நீங்குமா?கிட்டு மாமா ஜெயிப்பாரா?

நானும் அப்பு-சீதா விசிறி.அந்த பாதிப்புதான் இந்த அம்பு-கிட்டு காம்பினேஷன்.

cheena (சீனா) said...

உச்ச நீதி மன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருக்கிறது

கண்மணி/kanmani said...

டூ லேட் சீனா சார்
மாமா கிளம்பி போயாச்சு அலங்கா நல்லூருக்கு;)

வாகை சூடுவாரா?உதை வாங்குவாரா பொறுத்திருந்து பாருங்க.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)