PAGE LOAD TIME

கொழுந்தனைக் கட்டலாமா?....

பாசமலர் மறுமணம் குறித்து ஒரு பதிவெழுதி இருக்கிறார்.

மறுமணம் என்பது சர்ச்சையாவது பெண்களுக்கு மட்டும்தான்.
இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் தனியாகவோ அல்லது சின்னக் குழந்தைகளுடனோ தனித்து விடப் படும் சூழலில் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புக்கு மறுமணம் செய்தல் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

இந்த விஷயம் மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் எதிர்ப்புக்கும் உட்படாமல் பரவலாக அங்கீகரிக்கப்பட்டே வருகிறது.இது அந்தப் பெண்களின் இளம் வயது கருதியும் அவர்களின் எதிர்கால பாதுகாப்புக்காகவும் எனச் சொல்லப் பட்டாலும் இன்னொரு காரணம் அதன் அடி நாதமாக இருப்பது புரியும்.எதிர்காலத்தில் அப்பெண் தங்களுக்கு பாரமாக இருந்துவிடக்கூடாது என்ற மற்ற உறவுகளின் சுயநலமே அது.காரணம் எதுவாயினும் இது வ்ரவேற்கத் தக்க மாற்றமே.

இந்த விஷயத்திலும் ஓரு வெட்கக் கேடான விஷயம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
இளம்வயதில் இப்படியான பெண்கள் பின்னாளில் தறி கெட்டுப் போகக் கூடும் என்பதும் நல்லவளாகவே இருந்தாலும் அவளின் நடத்தை ஊராரின் அவச் சொல்லுக்கு ஆளாகக் கூடும் என்ற காரணமு கற்பிக்கப் படுகிறது.

ஓரளவுக்கு வயதும் முதிர்ச்சியும் படிப்பும் இருக்கக் கூடிய பெண்கள் ,கையில் குழந்தைகளோடு இருக்கக் கூடிய பெண்கள் இதைத் தவிர்த்து வேலைக்குப் போய் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும் செய்கின்றனர்.

துணையைப் பிரிந்த பிறகும் மறுமணம் செய்யாமல் தம் பிள்ளைகளுக்கு
தகப்பன்சாமியாக வாழும் பெண்களும் ,தாயுமானவனாக வாழும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.


வேறு எந்த ஆதரவும் இல்லாமல் நிர்கதியாய் இருக்கும் பெண்களுக்கு மறுமணம் அவசியமே .அதுவும் அவர்கள் சம்மதிக்கும் பட்சத்தில்.

ஆனால் இந்த விஷயத்தில் பெரும்பாலும் பாசமலர் குறிப்பிட்டது போல சொந்தத்திலேயே குறிப்பாக கொழுந்தனுக்கே முடிக்கும் வழமையே அதிகம் காணப் படுகிறது.

இரண்டாம் திருமணம் என்பது ஆண்களுக்கு எளிதாகிறது.ஆனால் பெண்களுக்கு அதுவும் குழந்தைகளோடு இருக்கும் பெண்களுக்கு அவ்வளவு எளிதல்ல.யாரும் எளிதில் முன் வரமாட்டார்கள் என்பதாலேயே சடுதியாக கொழுந்தனுக்கே முடித்து விடுகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் 17 வயதில் மணம் முடிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளும் பெற்று விட்டாள்.சில வருடங்களில் அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து போக அவளுடைய தாத்தா பாட்டி மற்றும் உறவினர்கள் அவளை அவள் கணவனின் தம்பிக்கே [கொழுந்தனுக்கு] கல்யாணம் செய்து வைத்து விட்டனர்.

இன்னொரு பெண்ணை,அவளின் அக்கா திடீரென்று இறந்து விட அவளுடைய குழந்தையை வளர்க்க அவள் அக்கா கணவருக்கே மணம் முடித்து விட்டனர்.

இப்படி ஒவ்வொருவரிடமும் இது போல நாமறிந்த பல கதைகள் இருக்கும்.இது சரியா தவறா என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை.ஒரு பெண்ணின் எதிர்காலம் கருதி இவ்வாறான மறுமணங்கள் வரவேற்பையே பெறுகின்றன.

ஆனால் அண்ணன் இறந்தால் கொழுந்தனைக் கட்டுவதும்,அக்கா இறந்தால் மாமனைக் கட்டுவதும் சரியா?இதில் சம்மந்தப் பட்டவர்களின் மனநிலை அறியப் படுகிறதா?

அண்ணன் பொண்டாட்டி அன்னைக்கு சமம்னு சொல்ற நம்ம கலாச்சாரமே

அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி
தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி னும் சொல் வழக்கு சொல்லுது

அண்ணி என்ற மரியாதைக் கொடுத்து பழகி வந்தவளிடம் மனைவியாக உரிமை பாராட்டுவதும்
அக்காள் கணவன் என்ற மரியாதையோடு இருந்தவருக்கே மனைவியாக்கப் படுவதும் சம்மந்தப் பட்டவர்களால் மனதார முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறதா?

இப்படியான மறுமணங்களில் அவர்களை வலுக் கட்டாயப் படுத்தியோ அல்லது பச்சாதாபத்தைக் காரண காட்டியுமே பெரும்பாலும் சம்மதம் பெறப்படுகிறது.

விளம்பரம் கொடுத்தோ ,வெளியிடங்களில் தேடியோ மாப்பிள்ளை தேடும் சிரமம்,பொருட்செலவு கருதியே சுலபமாக இந்த வழி பின்பற்றப் படுகிறது.சொத்து பத்தும் வெளியே போகாது என்பதும் காரணமாக அமையலாம்.

ஒரு பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப் படாமல் அவளுக்கு மறுவாழ்வு தருவது எவ்வளவு முக்கியமோ அந்தளவு அவளின் மனநிலை விருப்பு வெறுப்பு அறிந்து செயல்படுதலும் முக்கியம்.

மாமன் மகள் அத்தைப் பையன் கட்டுவது என்பது
1.சொந்தம் விட்டுப் போகக்கூடாது
2.சொத்து குடும்பத்துக்குள்ளேயே இருக்கும்.
3.நன்கு அறிந்த வரன் என்பதால் பெண்ணின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும்
போன்ற காரணங்களை முதன்மைப் படுத்தியே நடக்கின்றன.

அவ்வாறே மறுமணங்களிலும் குடும்பத்தை நன்றாக அறிந்த பையன் என்ற அளவில் கொழுந்தனுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறது.
ஆனால் அறிவியல் ரீதியாக இப்படி சொந்தத்தில் மணம் முடிப்பதால் பிறக்கும் பிள்ளைகளுக்கு 'ஜெனிடிக்' [மரபு]ரீதியாக ஏற்படக் கூடிய குறைபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கொழுந்தன் இல்லாத பட்சத்தில் எப்படி வெளியிடத்தில் வரன் பார்ப்பார்களோ அப்படி முயல வேண்டும்.
இது மரபு கோளாறு ஏற்படுத்தக் கூடியது என்பது ஒரு புறமிருந்தாலும்,தார்மீக ரீதியாக மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்காலத்தில் அந்தப் பெண் எந்த வித குற்ற உணர்ச்சி மன உளைச்சலுக்கும் ஆளாகாதவாறு அவளின் சம்மதம் முதன்மைப் படுத்தப் பட வேண்டும்.
இத்தகைய விழிப்புணர்வும் அவசியமானதே.

பெண்கள் மறு மணத்திற்கு சம்மதிப்பதே பெரிய விஷயம் இதில் இப்படியான மன உளைச்சல்கள் ஏற்படக் கூடுமானால் எந்த எதிர்கால நலனுக்காக அவளுக்கு மறுமணம் நடத்தப் படுகிறதோ அது நிம்மதியற்றதாகவும் மாறக்கூடும்.

17 மறுமொழிகள்::

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் கண்மணி..அண்ணன் பொண்டாட்டி என்று பழமொழிகள் பெண்ணுக்கு இருப்பது போல் ஆணுக்கு இருப்பதில்லை..

வரவேற்கத்தக்கது மறுமணம்..இருப்பினும் சம்பந்தப்பட்ட ஆணிடமும் பெண்னிடமும் சம்மதம் பெற்றுக் கொண்டு செய்வதுதான் சரி.

TBCD said...

முக்கியமான விசயம்,

பெற்றக் குழந்தையயை வரும் ஆனோ, பெண்ணோ, முழு மனதாக ஏற்றுக் கொடுமைப்படுத்தாமல் இருப்பார்களா என்ற சந்தேகமே, கொழுந்தனோ, கொழுந்தியாளைத் திருமணம் செய்து வைப்பதில் இருக்கிறது. குழந்தை இல்லாத படச்த்தில் வெளியே பார்ப்பதும் நடக்கும். கொழுந்தனோ, கொழுந்தியாளோ இல்லாத போது கண்டிப்பாக வெளியே தான் பார்த்து ஆகனும். ஆனா, மறுமணம் செய்துக் கொள்கிறவர்களும், ஏற்கனவே திருமணம் ஆன, ஆண்கள் தான்.

ஆண்களும், பெண்களும், இதில் சரி சமமாகவே இருக்கிறோம். திருமணம் ஆனவர்களை மணமுடிப்பதில் திருமணம் ஆகாதவர்களுக்கு மனச்சங்கடம் இருக்கத் தான் செய்கிறது.

ஆண் எப்போதும் ஆனாகவே இருப்பான். பெண் எப்போதும் பெண்ணாகவே இருப்பாள். இதில் மணத்தடை இருக்காது என்பது தான் என் கருத்து.

delphine said...

http://delphine-victoria.blogspot.com/2008/01/blog-post_18.html
check out this post Kanmani. and let me know what you and Paasamalr has to say about this.

மணியன் said...

//எதிர்காலத்தில் அப்பெண் தங்களுக்கு பாரமாக இருந்துவிடக்கூடாது என்ற மற்ற உறவுகளின் சுயநலமே //
இந்த சிந்தனைகள் மணமுறிவு ஏற்பட்ட இளம்பெண்கள் வாழ்விலும் பொருந்தும். அவர்கள் படும் பாட்டையும் உங்கள் சிந்தனைகளையும் பதியுங்கள்.

காதல் திருமணமின்றி பெற்றோர்கள் அமைத்துத் தருகின்ற அனைத்து வகை மணங்களிலும் பெண்ணின் மனதை அறிதல் ஒரு சம்பிரதாயமாகவே நடைபெறுகிறது. பெண்் எதிர்த்து சொல்லமாட்டாள் என்ற எதிர்ப்பார்ப்பின் தாக்கத்தில் அவளது விருப்பம் கேட்கப்படுகிறது.

மறுமணத்தில் கொழுந்தனை ரெடிமேட் மாப்பிள்ளையாக வரிப்பதுபோல் கன்னிப்பெண்களூக்கு மாமன்களோ அத்தைப் பையன்களோ 'முறை'யாகி விடுகிறார்கள்.உற்றத்திற்கு தேடுவது எளிதாகிறது.

பாச மலர் / Paasa Malar said...

//ஆண்களும், பெண்களும், இதில் சரி சமமாகவே இருக்கிறோம். திருமணம் ஆனவர்களை மணமுடிப்பதில் திருமணம் ஆகாதவர்களுக்கு மனச்சங்கடம் இருக்கத் தான் செய்கிறது//

உண்மைதான்..சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் சமம்தான்..ஆனால் சுற்றி இருப்பவர்கள்தானே வித்தியாசப்படுத்தி நியாயம் கற்பிக்கிறார்கள்..

சம்பந்தப்பட்ட ஆணுக்கோ பென்ணுக்கோ அல்லது இருவருக்குமோ தன் நிலையை வெளிப்படுத்து சந்தர்ப்பங்கள் தருவதில்லை பிறர்.

அதை மீறி முடிவு எடுக்கும் உரிமை சிலருக்கே வாய்க்கிறது.

கண்மணி/kanmani said...

பாசமலர்,டிபிசிடி,டாக்டரம்மா,மணியன் கருத்துகளுக்கு நன்றி.

நிராதரவான ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்வதால் அவளின் எதிர்காலம் குறித்த பிரச்சினை தீரும் என்பதால்
இந்த விஷயத்தில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் எப்படியோ யாருக்கோ தள்ளிவிட்டு கடமை முடிந்தால் போதும் என பெற்றவர்களோ சகோதரர்களோ நினைக்காமல் சம்மந்தப் பட்ட
ஆண்/பெண் இருவரின் விருப்பத்திற்கும் செவி சாய்க்க வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்

cheena (சீனா) said...

இது மாதிரி திருமணங்களில் பொதுவாக மணமக்களின் சம்மதம் பெறப்படுவதில்லை. சூழ்நிலைகளின் கட்டாயத்தாலும், பெண்ணின் எதிர்கால வாழ்க்கை, பாதுகாப்பு கருதியும், சொந்த்ததில் மணமுடித்தால் குறயும் செலவுகளாலும் இத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. பொதுவாக ஒரு குறையுமில்லாமல் வாழ்க்கை ஒடுகிறது. அவ்வளவு தான்

Unknown said...

குழந்தைகளுக்காக தாயோ தந்தையோ சில தியாகம் செய்தாலும் தப்பில்லை என்று தோன்றுகிறது.
என்றாலும் இருவரின் சம்மதத்தையும் கேட்டுப் பெறுவதே சிறந்தது. சம்மதம் பெறுவதற்கு அல்லது கொடுப்பதற்கு, உரிய கால அவகாசம் கொடுப்பதன் மூலம், அண்ணி அல்லது தம்பி மனைவி என்பது மறந்து போய், அவர்களின் துன்பமும், வாழ்க்கையை அவர் குழந்தைகளுடன் தனியாளாய் சந்திக்கவிருக்கும் அபாயமும் கண் முண் வந்து மற்றதை பின் தள்ளும்.

குசும்பன் said...

குழந்தையுடன் இருக்கும் பொழுது அண்ணன் மகன் என்ற பாசத்தில் குழந்தைக்கும் சரியான பாதுகாப்பு கிடைக்கு என்ற ஒரு காரணமும் இருக்கிறது!

மறுமணம் பல இடங்களில் பிரச்சினையாகி இருக்கிறது! செய்வதற்கு முன்பு பல முறை யோசிக்கவேண்டியது!!!

Anonymous said...

Hello Kanmani Ma'm,
I think u misunderstood marriage between close relatives. BIL is not a close relative unless he is a blood relative. In that case she shouldnt have married his brother. Hope i didnt hurt u.

கோவி.கண்ணன் said...

இது பெண்ணின் மாமனார் மாமியார் முடிவெடுப்பதில் இருக்கிறது. எனக்கு தெரிந்து அண்ணன் விபத்தில் இறந்ததும் தம்பியை மருமகளுக்கு கட்டிவைத்த பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

கண்மணி/kanmani said...

மதன் BIL நெருங்க்கிய சொந்தம் இல்லைனு தெரியும்.நான் சொல்ல வந்தது அத்தை மாமன் உறவுகள் பற்றியது.
நாந்தான் தமிழ்99 விசைப் பலகை போட்டிருக்கிறேன்.
மதன் ஏன் தமிழில் தட்டச்ச முயற்சிக்கவில்லை?
தட்டச்சு செய்து பின் காபி+பேஸ்ட் பண்ணனும்.
நன்றி

கண்மணி/kanmani said...

வாங்க கோவி.கண்ணன்.இது எத்தனை உணர்வு பூர்வமான விஷயம் னு நானும் அறிந்திருக்கிறேன்.இதில் சம்மந்தப்பட்டவர்களும் சூழ்நிலையுமே முடிவெடிக்க வேண்டிய விஷயம்
இருந்தாலும் இதுவரை பின்னூட்டியவர்கள் 100% சாதகமான பதிலையே தந்திருக்கின்றனர்.
நிறைய இம்மாதிரி நடந்து கொண்டுதானிருக்கிறது.
'சதி' முறை ஒழிந்து இம்மாதிரி புரட்சிக்கு வித்திட்டவர்களின் கனவு நனவாகி விட்டதையே இது காட்டுகிறது..
நான் எதிர்க்கவோ வாதம் செய்யவோ இல்லை.
ஒரு விவாதப் பொருளாகவே வைத்தேன்.
கருத்துக்கு நன்றி.

காட்டாறு said...

ஆராயாமல் முடிவெடுப்பது மட்டுமே தவிர்க்க வேண்டியது. மறுமொழி அளித்த அனைவருமே அதைத் தான் சொல்ல வந்தது போல் இருக்குது.

Unknown said...

மறுமணம் வரவேற்கத்தக்கது!
ஆனால், கொழுந்தனையோ மச்சினிச்சியையோ கல்யாணம் செய்து வைக்கும் பழக்கம் கண்டிக்கத்தக்கது. பெரும்பாலும், சம்பந்தப்பட்டவர்களின் சம்மதம் இல்லாமல்தான் இந்த மாதிரி மறுமணம் செய்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் சுயமாகச் சிந்திக்கும் காலம் வரை, இது ஒரு கட்டாய மறுமணமாகத்தான் இருக்கும்!

ரசிகன் said...

//இது மாதிரி திருமணங்களில் பொதுவாக மணமக்களின் சம்மதம் பெறப்படுவதில்லை. சூழ்நிலைகளின் கட்டாயத்தாலும், பெண்ணின் எதிர்கால வாழ்க்கை, பாதுகாப்பு கருதியும், சொந்த்ததில் மணமுடித்தால் குறயும் செலவுகளாலும் இத் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.//

வழிமொழிகிறேன்...:)

//பொதுவாக ஒரு குறையுமில்லாமல் வாழ்க்கை ஒடுகிறது. //

கருத்துக்கு வேறுபடுகிறேன்...:)

Anonymous said...

//அவ்வாறே மறுமணங்களிலும் குடும்பத்தை நன்றாக அறிந்த பையன் என்ற அளவில் கொழுந்தனுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுகிறது.
ஆனால் அறிவியல் ரீதியாக இப்படி சொந்தத்தில் மணம் முடிப்பதால் பிறக்கும் பிள்ளைகளுக்கு 'ஜெனிடிக்' [மரபு]ரீதியாக ஏற்படக் கூடிய குறைபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.//

சொந்தத்தில் மணமுடிப்பதல் மரபு ரீதியாக சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்... (சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்பது வேறு விஷயம்)

ஆனால் அண்னனை திருமணம் செய்தாலும் தம்பியை திருமணம் செய்தாலும் ஒரே வாய்ப்புதான்....

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)