PAGE LOAD TIME

என் காதலர் தின அனுபவங்கள்

காதலர் தினத்தை காதலர் மட்டும்தான் கொண்டாடுவாங்களா? தெரியலை
ஆனா....இந்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பண்ணும் அலம்பலில் வயதுவரைமுறையின்றி யார் வேணும்னாலும் கொண்டாடலாம் னு ஆகிப் போச்சி

போன வருஷம் பிப்ரவரி 14.

நான் வகுப்பில் இருந்தேன்.அப்போது 9 வது படிக்கும் பையன் ஒருவன் வந்து கையில் ஒரு சிகப்பு ரோஜாப் பூவைக் கொடுத்து 'மிஸ் வாழ்த்துக்கள்' னு சொன்னான்.
தூக்கிவாரிப் போட,''என்னடா' னு கேட்க

'ராணி மிஸ் இந்தப் பூவைக் உங்ககிட்ட கொடுத்து வாழ்த்துக்கள்னு சொல்லச் சொன்னாங்க'

என் சக ஆசிரியை என்னிடம் கொடுக்கச் சொல்லியிருந்தார்.ஏன்னு கேட்டப்ப இன்னைக்கு வேலண்டைன்ஸ் டே யில்ல அதான் நம் பிரண்ட்ஸ் எல்லோருக்கும் கொடுத்தேன் என்றார்.

காதலர் தினம் அவர் பார்வையில் ஒரு நட்பின் தினமாகப் பட்டது போலும்.

இந்த வருடம் பிப்ரவரி 14.

+2 பிராக்டிகல் தேர்வுக்காக தேர்வாளராக வேறு ஊருக்குச் சென்றிருந்தேன்.

பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே சில மாணவிகள் சந்தனம் ரோஜாப் பூக்கள் ,குங்குமம் வைத்திருந்த தட்டை கையில் ஏந்தியபடி வந்து ,'யூ ஆர் மோஸ்ட் வெல்கம் மேம்'என்றனர்.

இதென்ன கூத்து?நான் என்ன கல்யாண வீட்டிற்கா வந்திருக்கிறேன்.
''நோ கேர்ள்ஸ் எக்ஸாமுக்கு வரும்போது இப்படி ஏன் செய்யறீங்க.இதென்ன ஃபங்ஷனா.இப்படி செய்யக் கூடாது சரியா'
'இல்லை எங்க மிஸ் தான் சொன்னாங்க' என்றனர்.

அன்று தேநீர் இடைவேளையின் போது தேநீருடன் தட்டில் 'லிட்டில் ஹார்ட்ஸ்' பிஸ்கட்ஸ் வைக்கப் பட்டிருந்தது.பொதுவாக குட் டே அல்லது மாரி பிஸ்கட் தரப் படும்.இது வித்தியாசமாக இருக்க ஏன் என்று கேட்டடேன்.

அந்த ஆசிரியை சிரித்தபடியே சொன்னார்,'இன்னைக்கு வாலண்டைன்ஸ் டே'இல்லையா அதான் 'லிட்டில் ஹார்ட்ஸ் தருகிறேன்'

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவங்களில் ஒன்று தெளிவாகப் புரிந்தது.இது வெறும் காதலர்களுக்கான தினமாக பார்க்கப் படவில்லை.
பொதுவாகவே பண்டிகைகளையும் கொண்டாட்டத்தையும் விரும்பும் நம் மக்கள் புதுவருடப் பிறப்பு,மகளிர்தினம்,உழைப்பாளர் தினம்,பிரண்ட்ஸ்ஷிப் டே போல இதையும் கொண்டாடத் தலைப் பட்டு விட்டார்கள்.

ஆனால் இது அன்பின் தினமாக நேசிப்பின் தினமாக கருதப் பட்டால் தப்பில்லை.
ஆனால் காதலர் தினக் கொண்டாட்டங்களும் ,ஊடகங்கள் பரப்பும் அருவருக்கத் தக்க கலாச்சாரமும் ,இதற்காக வரும் விளம்பரங்கள்,போட்டிகள் அதற்கான பரிசுப் பொருட்கள் நம் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
எல்லா தொலைக்காட்சியிலும் புஷ்பவனம் குப்புசாமி-அனிதா; கருணாஸ்-கிரேஸ் என ஏதாவது
ஒரு காதல் தம்பதியின் பேட்டி.எப்படி காதலிச்சீங்க?யார் முதலில் புரபோஸ் பண்ணது என்பது போன்ற அதி முக்கியமான கேள்விகள்.

ஒரு பிரபல செல்போன் கம்பெனி காதலர் தினத் தன்று ஒரு புது மாடலை அறிமுகம் செய்கிறது.
ஒரு மாணவன் 2 ரூபாய்க்கு ஒரு கண்ணாடிக்குழாய் வாங்கி வந்தான்.அதில் சிகப்பு நிறத்தில் திரவம் நிரம்பியிருக்க இரண்டு சிறிய பட்டாணி அளவில் பொம்மைகள்.ஒன்று திரவத்திலும் இரண்டாவது திரவ மட்டத்திற்கு மேலும்.கண்ணாடிக் குழலை சாய்த்தால் ஒன்றின் பின் ஒன்று ஓடும்.இது என்னவெனக் கேட்டதற்கு அவன் சொன்ன பதில்
ஒன்று ஆணாம் இன்னொன்று பெண்ணாம் இதன் பேர் 'லவ் சேஸாம்'.எங்க போய்ச் சொல்ல?

இந்த தினத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் போல் அன்னையர் தினம்;தந்தையர் தினத்திற்கு இருக்கிறதா?

மேலே சொன்ன நிகழ்வுகள் மட்டுமில்லாது ஒரு வேதனையான சம்பவமும் இதே காதலர் தினத்தில் நடந்து விட்டிருக்கிறது.
பொறியியல் படித்துக் கொண்டிருக்கும் நண்பரின் மகன் அந்த படிப்பை விட பெற்றவர்களை விட தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியே பெரிதென்று தற்கொலை செய்து கொண்டு விட்டான்.
காதல் என்பது மனம் சம்மந்தப் பட்ட உணர்வு.அனுபவித்து உணர வேண்டியது.இதை இப்படி வெட்ட வெளிச்சமாக்க வேண்டாம்.கூத்தடிக்கவும் வேண்டாம்.

காதலர் தினம் வெறும் 'காதலுக்கான தினமாக' மட்டும் இல்லாமல் 'அன்பின் தினமாக' நேசிப்பின் தினமாக' பார்ப்போம்.

என் நாட்டை நேசிக்கிறேன்
என் தாய்மொழியை நேசிக்கிறேன்
என் மக்களை நேசிக்கிறேன்
என்னைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கிறேன்
அதற்கான தினமாக இந்த காதலர் தினம் அமையட்டும் என்று நினைப்போம்.

14 மறுமொழிகள்::

பாச மலர் / Paasa Malar said...

பாவம்.அந்தப்பையன்..ஏதோ பெரிய விஷயம் சாதித்த திருப்தியில் செத்துப் போயிருக்கிறான்..என்ன சொல்வது...

காட்டாறு said...

//நான் வகுப்பில் இருந்தேன்.அப்போது 9 வது படிக்கும் பையன் ஒருவன் வந்து கையில் ஒரு சிகப்பு ரோஜாப் பூவைக் கொடுத்து 'மிஸ் வாழ்த்துக்கள்' னு சொன்னான்.
//

எனக்கு இந்த வருடம் எல்லா 60-80 வயசு பெரியவங்களும் கொடுத்தாங்க. சரி..சரி... வயசுக்கு தகுந்த மாதிரி தானே கிடைக்கும். ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லிட்டில் ஹார்ட்ஸ் ... நேசிப்பின் தினம் நல்லா இருக்குப்பா..

அந்தப்பையன் ம் பாவம் தான்..

காட்டாறு said...

//காதலர் தினம் வெறும் 'காதலுக்கான தினமாக' மட்டும் இல்லாமல் 'அன்பின் தினமாக' நேசிப்பின் தினமாக' பார்ப்போம்.//

வாங்க... நாம் முதல் அடி எடுத்து வைக்கலாம்.

Thamiz Priyan said...

இது போன்ற தினங்களை பழக்கப்படுத்துவதில் ஊடகங்களே முன்னிலையில் உள்ளன. தீபாவளி பொங்கலை விட விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை என்ற ஒரு தீபத்திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவது மிகவும் குறைந்து விட்டதும் ஒரு சான்று.

Thamiz Priyan said...

//இந்த வருடம் பிப்ரவரி 14.
+2 பிராக்டிகல் தேர்வுக்காக தேர்வாளராக வேறு ஊருக்குச் சென்றிருந்தேன்.//
என்ன டீச்சர் External Examiner ஆக வந்தால் எங்கள் பள்ளியிலெல்லாம் 'சிறப்பு' கவனிப்பு கிடைக்கும். உங்களுக்கு சந்தனமும் குங்குமமும் மட்டும் தானா?

Thamiz Priyan said...

//காதலர் தினக் கொண்டாட்டங்களும் ,ஊடகங்கள் பரப்பும் அருவருக்கத் தக்க கலாச்சாரமும் ,இதற்காக வரும் விளம்பரங்கள்,போட்டிகள் அதற்கான பரிசுப் பொருட்கள் நம் பண்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.//
பெரும்பாலானவர்கள் இதற்கு ஆட்பட்டு விடுகிறார்கள். இது கிராமங்களையும் இன்று எட்டி விட்டது.

Thamiz Priyan said...

//காதலர் தினம் வெறும் 'காதலுக்கான தினமாக' மட்டும் இல்லாமல் 'அன்பின் தினமாக' நேசிப்பின் தினமாக' பார்ப்போம்.

என் நாட்டை நேசிக்கிறேன்
என் தாய்மொழியை நேசிக்கிறேன்
என் மக்களை நேசிக்கிறேன்
என்னைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கிறேன்
அதற்கான தினமாக இந்த காதலர் தினம் அமையட்டும் என்று நினைப்போம்.*///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே :)

C.N.Raj said...

Kanmani,

Your article was good.
But Kathalar Thinam is meant mainly for Lovers.Nothing wrong in proving it for affectionate people also.

C.N.Raj.

குசும்பன் said...

ரைட்டு!தலைவியாரே

//இந்த தினத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் போல் அன்னையர் தினம்;தந்தையர் தினத்திற்கு இருக்கிறதா?//

அந்த நிலமையிலா நாம இருக்கோம், வெளிநாட்டினருக்கு வேண்டும் என்றால் இது போல் கொண்டாடலாம், நம்ம நம் அப்பாவிடம் அப்பா என்னை ஸ்கூலில் கொண்டு விட்டதுக்கு மிக்க நன்றி அப்பா என்கிறோமா?

அல்லது அம்மா சைத்து கொடுத்ததுக்கு மிக்க நன்றி என்று சொல்கிறோமா?

அதுபோன்ற தினங்கள் எல்லாம் வாரத்தின் கடைசி நாட்களில் மட்டும் சந்தித்துக்கொள்ளும் குடும்பத்துக்கு நல்லா இருக்கும், நம் ஊரிலும் அதுபோல் வரனுமா?

டிஸ்கி : என்னடா காதலர் தினத்தை பற்றி எழுதிய பதிவில் இதுக்கு பின்னூட்டம் போடுற என்று நீங்க திட்ட வரலாம், காதலை பற்றி சின்ன பிள்ளை நான் என்ன சொல்ல முடியும்:))

கண்மணி/kanmani said...

பாசமலர் அந்த ஒரூ பையன் மட்டுமில்லை சமீபத்தில் என் தூரத்து உறவுக்கார பொண்ணு கூட வேற்று ஜாதி பையனைக் காதலித்து வீட்டில் சொல்ல பயந்து தற்கொலை பண்ணிகிடுச்சி.இது போன்ற முட்டாள்தனமான கோழைத்தனமான தற்கொலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கு.

காட்டாறு நேசத்திற்கு வயது ஏது?9 ஆனாலும் 90 ஆனாலும் ஒன்றுதான்

முத்து 'லிட்டில் ஹார்ட்ஸ்' எனக்கும் சர்ப்ரைஸாக இருந்தது.

கண்மணி/kanmani said...

வாங்க தமிழ்ப்பிரியன் ஊடகங்கள்தான் இன்று நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆக்கத்திற்கு பயன் படுத்தப் பட வேண்டியவை சினிமாவுக்கும் கேளிக்கைகளுக்கும் துணை போகின்றன

ஆமாம் நீங்களும் ஆசிரியரா?எந்த மாவட்டம்?

குசும்பா இது பெரிசுங்க மேட்டர்.நீயேன் சின்னப் புள்ளை இங்கன வந்து பேசுறாய்;(

சி.வி.ராஜ் காதலுக்கோ காதலர் தினத்துக்கோ எதிரியில்லை .ஆனாலும் உண்மையான காதல் எதுன்னு தெரியாம விட்டில் பூச்சிகள் போல் மடியும் இளைஞர்களை மேலும் மோசமாக்க இது போன்ற தினங்கள் தேவையா?
உண்மையான எந்தக் காதலும் விளம்பரம் தேடாது.

கோபிநாத் said...

\\குசும்பா இது பெரிசுங்க மேட்டர்.நீயேன் சின்னப் புள்ளை இங்கன வந்து பேசுறாய்;(\\

அண்ணனுக்கே இப்படின்னா!! அப்போ நான் எல்லாம்...சாரி...எஸ்கேப்பு ;))

Thamiz Priyan said...

//கண்மணி said...
ஆமாம் நீங்களும் ஆசிரியரா?எந்த மாவட்டம்?//
இல்லை டீச்சர், பாலைவனத்துல வந்து குப்பை கொட்டி, ஆணி, கடப்பாறை புடுங்குற சராசரி தமிழன் தான். அதெல்லாம் படித்த(?) காலத்தின் அனுபவம்

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)