PAGE LOAD TIME

புதுப்பித்தல்...

வேற்று சாதிக்காரனோடு
ஓடிப் போன பெரியம்மா பொண்ணு
பாகம் பிரித்து தனித்துப் போன
சித்தப்பா பையன்
அஞ்சு வருஷம் கழித்து வந்திருக்கும்
ஆர்மிக்கார மாமாப் பையன்
வரதட்சணை போதலைனு நித்தம்
வறுத்தெடுக்கும் சம்மந்தியம்மா
வேலை அதிகம் வரமுடியலைனு
மெயில் அனுப்பும் அண்ணன் மகன்
பெரியக்காவுக்கு செஞ்சதெல்லாம்
எனக்கு செய்யலைனு
மூக்கை சிந்தும் சின்னக்கா
எதுவாக இருந்தாலும்
வேலை மொத்தமும்
எந்தலையில் தான் விடியும்
எனப் புலம்பும் ஓரகத்தி
பச்சைப் புள்ளைக்காரி என
நேரில் வராமல் போனில் விசாரிக்கும்
மகள் வயிற்றுப் பேத்தி
காசைப் பார்க்க வேண்டாம்
நல்லபடியா நடத்தனும்
வாய்ப் பந்தல் போடும்
வேலையில்லாத கொழுந்தன்
ஓடிப் பிடித்து விளையாடும்
உறவுக்கார குழந்தைகள்
வாயே திறக்காமல்
மூலையில் முடங்கிக் கிடக்கும் தாத்தா
எல்லோரும் மொத்தமாக கூடியிருக்க
பார்க்க வேண்டும் என்ற ஆசை அடக்கி
மூச்சடங்கிக் கிடக்கும் பாட்டி
பிரிந்து போன உறவுகளை
புதுப்பித்துக் கொண்டிருக்கிறது
பாட்டியின் மரணம்

15 மறுமொழிகள்::

பொன்வண்டு said...

டீச்சர் நல்லா இருக்கு !! ஆனால் கடைசியில் சோகம் !!

// ஓரகத்தி //
இது என்ன உறவுமுறை??

கப்பி பய said...

அருமை!

காட்டாறு said...

நீங்களே லேபில் பண்ணிட்டீங்க நிதர்சனமின்னு.... மரணம்! ம்ம்... என்னென்ன எண்ணகளோ கொண்டுவரும் இது. தமிழ்மணம் பார்த்தாலே தெரியும் ஒவ்வொரு மனதிலும் ஓடும் எண்ணங்கள்!

கண்மணி said...

பொன்வண்டு ஓரகத்தின்னா ஓர்ப்படி அதாவது கணவருடைய அண்ணன் /தம்பி மனைவி

வாங்க கப்பி நன்றி!இது கவிதையில்லை கவிதை மாதிரி ஆனாலும் நிஜமான நிஜம்

காட்டாறு என்ன சொல்ல! இதுவும் ஒருவகை அனுபவமாக உணர்ந்தே எழுதினேன்.[சில மிகைப் படுத்தல் கற்பனையோடு]

தமிழ் பிரியன் said...

டீச்சர் நல்லா தான் வந்திருக்கு.
சோகம் கவிதைக்கழகோ?
:)

kalyanakamala said...

நல்ல வேளை இப்பவாவது சேர்ந்தாங்களே!இப்பவும் வராட்டி அடிக்கவா முடியும்?
அன்புடன்
கமலா

கோபிநாத் said...

கவிதை நல்லாயிருக்கு...ஆனா கடைசியில படிக்கும் போது நீங்களுமான்னு தோணுது!

கண்மணி said...

newcomer kalyanakamala?hmmmm...thanks yaar

கண்மணி said...

கோபி இதுதான் உங்கிட்ட பிரச்சினை.நீங்களுமா?னு கேட்டா என்ன அர்த்தம்?கவிதையா?சோகமா?கவிதைப் பொருளா?எதுனாலும் அது நிஜந்தானே...நடப்பதுதானே

delphine said...

நல்ல அருமையான கவிதை கண்மணி..
எங்க ரொம்ப நாளா காணோம்!

கயல்விழி முத்துலெட்சுமி said...

நல்லா வந்திருக்கு கண்மணி..
இதுக்கும் கூட போகம இருக்கற பழக்கம் நகரத்தில் அதிகமாகிட்டிருக்கு.. :(

கோபிநாத் said...

\\கண்மணி said...
கோபி இதுதான் உங்கிட்ட பிரச்சினை.நீங்களுமா?னு கேட்டா என்ன அர்த்தம்?கவிதையா?சோகமா?கவிதைப் பொருளா?எதுனாலும் அது நிஜந்தானே...நடப்பதுதானே\\

ம்ம்ம்...சோகம் தான்...எல்லோரும் எங்க பார்த்தாலும் தொடந்து மரணத்தை பத்தியே பேச்சு...அதான் நீங்களுமான்னு கேட்டேன். ;)

வாசுதேவன் இலட்சுமணன். said...

மரணம் உறவுகளை மாத்திரம் புதுப்பிக்கவில்லை!
உணர்வுகளையும்தான்.

அருட்பெருங்கோ said...

இன்னைக்கு வாசிச்ச மரணம் பற்றிய ரெண்டாவது கவிதை.

கல்யாணத்துக்குப் போகலன்னாலும் துக்கவீட்டுக்கு கண்டிப்பா போயிடனும்னு இருக்கில்லையா?

நல்லாருக்குங்க.

கண்மணி said...

வாங்க அருட்பெருங்கோ வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி....ஹூம் சோகம் கொஞ்சம் அழகுதான்
நன்றி

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)