PAGE LOAD TIME

நல்லதொரு வீணை நீயடி...உனை நலம் கெட புழுதியில் எறிந்தது யார்?

இன்னும் ஒரு வாரத்தில் சர்வதேச மகளிர் தினம் வரப்போகிறது.
சுஜாதா மேட்டர் தேய்ந்து ஓய்ந்து போய் மகளிர் தின பதிவுகள் தமிழ்மணமெங்கும் காணக் கிடைக்கும்..
வருடா வருடம் மகளிர் தினம் வந்து கொண்டுதானிருக்கிறது.ஆனால் மகளிர்க்கு உரிய உரிமைகள் சுதந்திரங்கள் அதிகரித்ததிருக்கின்றதா?
அல்லது அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்பட்டிருக்கின்றதா என்றால்

இல்லை...இல்லை என்றே அடித்துச் சொல்லலாம்.

இன்னமும் பெண்கள் வேண்டாமென்றால் தூக்கியெறியப்படும் 'யூஸ் அண்ட் த்ரோ' பொருளாகத் தான் பாவிக்கப் படுகின்றனர்.

அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டு வரதட்சணை காரணமாக காரிலிருந்து தள்ளிவிடப் பட்டு உயிர் பிழைத்த ஜெனிதா முதல் இன்னமும் பல கொடுமைகள் தொடர் கதைகளாக தொடர்கின்றன.

எங்கோ பத்திரிக்கையில் படித்த செய்தியாக இல்லாமல் என் வசிப்பிடத்திற்கு அருகே எங்க ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு வருட இடைவெளிக்குள் நடந்தகொடுமைகள்....

இரண்டு பெண்களுமே நல்ல நிறமும் அழகும் கொண்டவர்கள்.இருவருமே நல்ல படித்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.வசதியானவர்கள்.நல்ல குணம் படைத்த பெண்கள்

முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை டாக்டர்.நல்ல அழகு பொருத்தம்.மிக ஆடம்பரமாக திருமணம் நடந்தது.வெளிநாட்டில் வேலை.

திருமணத்துக்குப் பின் கணவனோடு வெளிநாடு சென்ற பெண் தன் தாயுடன் அடிக்கடி போனில் பேசுவாள்.பல நாட்கள் அந்த விரதம் இந்த விரதம் என்று சொல்லுவாள்.
அவளின் மாமியார் மிகுந்த பக்தியுடயவர்.எனவே மருமகளையும் அப்படி விரதம் பக்தி புத்தகம் படித்தல் அப்படியென்று பழக்கப் படுத்துகிறார் என்று நினைக்க,பல மாதங்கள் இதுவே தொடர்ந்து கொண்டிருந்தது.

லேசான சந்தேகம் வந்து தாய் மகளிடம் போனில் கேட்க இதுவரை தன்னைக் கணவருடன் நெருங்க விடவில்லை என்றாள்.
நெருடல் அதிகரிக்க விசாரித்த போதுதான் மாப்பிள்ளையாக வந்தவன் இல்லற வாழ்க்கைக்கே தகுதியற்றவன் என்பது தெரிந்திருக்கிறது.

அதைக் கூட ஏற்றுக் கொண்டிருப்பாள் அந்தப் பெண் ஆனால் அவள் கணவனும் மாமியாரும் செய்த சித்திரவதை தாங்க முடியாததாக இருந்திருக்கிறது.
வீட்டுக்குள் பூட்டி வைக்கப் பட்டவள் பக்கத்து வீட்டுக்காரரின் உதவியோடு பெற்றவர்களுக்கு போன் பண்ணி வரச் செய்து ஒரு வழியாக மீண்டு வந்து விட்டாள்.


இன்னொரு பெண்ணும் நல்ல அழகான மாப்பிள்ளை வெளிமாநிலத்தில் வேலை என்று கட்டி வைத்தனர்.ஆரம்பத்ததில் சில மாதம் வாழ்க்கை சந்தோஷமாகவே இருந்திருக்கிறது.

வேலை செய்யும் வெளி மாநிலத்திற்கே தனிக் குடித்தனம் போன பின்னர் தொட்டதெற்கெல்லாம் சந்தேகப் பட்டிருக்கிறான் கணவன்.பலமுறை அவளும் பொறுத்துப் போயிருக்கிறாள்.ஆனால் பின்னர்தான் தெரிந்திருக்கிறது அவனுக்கு அங்கே வேறு பெண்ணுடன் மணமாகி குழந்தையும் இருக்கும் விஷயம்.அவன் வீட்டுக்கேத் தெரியாமல் [தெரியாமான்னும் தெரியலை?]இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததோடு தன் தப்பை மறைக்க இவளைக் குற்றம் சொல்லியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் தம் மாமா முறை உறவுக்காரருடனே அவளை இணைத்துப் பேச,அவனின் குடும்பமும் அதற்கு துணை போக மனம் வெறுத்துப் போன அவள் மூன்றே மாதத்தில் திருமண பந்தமே வேண்டாமென வந்து விட்டாள்.

அக்கம் பக்கம் அடுத்தவர்களின் பேச்சை எதிர் கொள்ள முடியாத அவர்கள் வேறு ஊருக்கே போய்விட்டனர்.

ஒரு டாக்டராக இருந்தும் தன் இயலாமையை மறைத்து ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக்குறியாக்கியதோடு அவளை அடித்தும்கொடுமைப் படுத்திய குரூரன்....

இன்னொரு பெண்ணோடு வாழும் ஒருவன் தன் தப்பை மறைத்து மனைவிமீது வீண்பழி சுமத்திய பாவி....

இது போல் உங்களிடமும் இன்னும் நிறைய உண்மைக் கதைகள் இருக்கக் கூடும்....

வாழ்க்கையின் எந்த பாதிப்பானாலும் குறிப்பாக திருமண பந்தம் என்று வரும்போது பெரிதும் பாதிக்கப் படுவது பெண்களே.....இதில் யாரைக் குற்றம் சொல்வது?

தவறு செய்யும் ஆண்கள் கடுமையாக தண்டிக்கப் பட்டால் மட்டுமே இப்படியான குற்றங்கள் குறையலாம்[குறைய மட்டுமே].ஆனாலும் பாதிக்கப் பட்ட பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

'நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ'பாரதி எவ்வளவு தீர்க்க தரிசனமாக பாடியிருக்கிறான்.

4 மறுமொழிகள்::

Thamiz Priyan said...

டீச்சர் உங்களது கட்டுரை மிகவும் அருமையான விஷயத்தை கூறுகிறது. ஆனால் பெண்கள் சம்பந்தமான அனேக (குறிப்பாக திருமணத்திற்குப் பிறகு நடப்பவற்றில் ) 90 சதவீதத்திற்கு பெண்கள் தான் காரணம். மாமியார். நாத்தனார் என்ற பெயரில் அவர்கள் செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை. பாவம் அந்த புதிய பெண்கள். அந்த கொடுமைகள் அவர்களை அழுத்தி வருங்காலத்தில் இன்னும் கொடுமையான பெண்களாக மாற்றி விடுகிறது.
//'நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ'//
இதில் புழுதி என்பது என்னைப் பொறுத்தவரை புகுந்த வீடுதான் பெரும்பாலான பெண்களுக்கு... :)

Anonymous said...

ம்ம் பொண்ணைக் குடுக்கறவங்களும் நல்லா யோசிக்கனும்.

ரசிகன் said...

/தவறு செய்யும் ஆண்கள் கடுமையாக தண்டிக்கப் பட்டால் மட்டுமே இப்படியான குற்றங்கள் குறையலாம்[குறைய மட்டுமே].ஆனாலும் பாதிக்கப் பட்ட பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும்.

'நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ'பாரதி எவ்வளவு தீர்க்க தரிசனமாக பாடியிருக்கிறா//

கண்மணி அக்கா.. நீங்க சொல்லறது நிஜம் தான்:)

காட்டாறு said...

//தவறு செய்யும் ஆண்கள் கடுமையாக தண்டிக்கப் பட்டால் மட்டுமே இப்படியான குற்றங்கள் குறையலாம்//

தவறு செய்யும் ஆண்கள், அதை மூடி மறைக்க வழி செய்யும் பெண்கள் என சேர்த்து சொல்லுங்க. பெண்கள் (படித்திருப்பினும்), சுய அறிவை உபயோகப் படுத்துவதில்லை.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)