PAGE LOAD TIME

அட இவங்க திருந்தவே மாட்டாங்களா?

பாத்து பாத்து அலுத்துப் போச்சுங்க.கேட்டு கேட்டு புளிச்சிப் போச்சுங்க.இவங்க இன்னமும் மாறலையே.எத்தனையோ பேர் வந்துட்டாங்க.நீ பெரியவனா?நான் பெரியவனான்னு போட்டி போட்டாப் போதுமா?
போட்டி இருக்கிற எடத்துல கொஞ்சம் பொறுப்பும் இருக்கனும்.
கம்ப்யூட்டர் கிராப்பிக்ஸ்னு பிலிம் காட்டுனா போதுமா லாஜிக் வேனாமா?கொஞ்சமாச்சும் ரியாலிட்டி வேனாமா?

அசட்டுத்தனம்னு வந்துட்டா அது சின்னத்திரையா இருந்தா என்ன சீரியலா இருந்தா என்னங்க
லட்ச கணக்குல பணம் போட்டு சீரியலும் கோடி கணக்குல பணம் போட்டு சினிமாவும் எடுப்பாங்க.ஆனா பத்து ரூபாய் செலவு மேட்டர்ல கோட்டை விடுவாங்க.

இதைத்தான் அம்புஜம் மாமி சொல்லுவா
''பூசணிக்கா போற எடம் தெரியாது
கடுகு போற எடத்துல தடிய தூக்கிட்டு ஓடுவான்''

காதலன் காதலிக்கு பூ வாங்குவான் கூடை கணக்கா ஆனா ரெண்டு ஹேர்பின் வாங்க மாட்டான் அப்படியே கொத்தா முடியப் புடிச்சி தலையில் வைப்பான்

அழகான இண்ட்டீரியர் டெகரேஷனோட பங்களா.நல்லா டிரஸ் பண்ணி அழகானா டைனிங் டேபிள் காட்டுவாங்க.ஆனா காப்பி குடிக்கிற சீன்ல பாருங்க வெறும் கிளாஸ் தான் இருக்கும்.ஏன் நாலு டீ யோ காபியோ வாங்கி டம்ப்ளர்ல ஊத்தி குடுத்தா என்ன?

ராத்திரி 10 மணிக்கு நடக்கிற சீன் என்றாலும் காஸ்ட்லி புடவை நகை லிப்ஸ்டிக் மறக்காம கையில் வாட்ச் அதை விட முக்கியமா ஹை ஹீல்ஸ் செருப்போடதான் நம்ம தாய்க்குலம் நடிக்கும்.

அப்புறம் இந்த கோபிச்சிக்கிட்டு போற சீன் இருக்கு பாருங்க இன்னும் காமெடியா இருக்கும்.
வீட்டை விட்டு போறேன்னு சொன்னதுமே கதாநாயகி வேகமமா ஓடிப் போயி பீரோவத் திறந்து கையில கெடச்ச நாலு புடவையை அள்ளி அப்படியே மூட்டை மாதிரி சூட்கேஸுல திணிக்கும்
அதுக்கு முன்ன பீரோவுல ஹேங்கர்ல தொங்கும்.ஆனா பெட்டியில வைக்கும் போது மட்டும் அப்படியே அள்ளிப் போட்டு மூடுவாங்க.அதுக்கு வேண்டிய ஜாக்கெட் இன்னபிற அயிட்டமெல்லம் நஹி...அட இதெல்லாமா காட்டுவாங்கன்னு கேக்கறீங்களா?
சரிங்க குறைந்தபட்சம் அடுக்கி எடுத்துப் போகலாம்.
கதாநாயகன்னா கவலையில்லை அப்படியே கெளம்பிடுவாரு.ஆனா டூயட் சாங்ல செம கெட்டப்ல வருவாரு.

அது போல கதாநாயகிக்கு காதலனோ அம்மாவோ தோழியோ அட யாரோ ஒருத்தங்க ஒரு புடவை குடுத்து'போம்மா போய் கட்டிக் கிட்டு வான்னு' சொல்லுவாங்க'.உடனே அந்தம்மா ரூமுக்குள்ள போய் மாத்திக்கிட்டு வரும்போது பார்த்தா அழகா அட்டாச்டு பிளவுஸோட மேட்சா போட்டுகிட்டு வரும்.
நாங்க தீபாவளிக்கு குடுத்தாலே எங்க டெய்லர் பொங்கலுக்குத்தான் தைத்து குடுக்குறாரு.

இதெல்லாம் விட கொடுமை சின்னத்திரையில் வரும் சமையல் நிகழ்ச்சி.

பொதுவா சமைக்கும் போது ஏப்ரன் கட்டிக்கிட்டு தலையெல்லாம் வாரி முடிஞ்சிகிட்டு நம்ம வீட்டுல செய்வோம்.அங்க பேட்டி காணும் பாப்பா விரித்து விட்ட கூந்தலை நொடிக்கு ஒரு தரம் விரலால் கோதி விட்டபடியே தமிங்கலம் பேசிகிட்டே பேட்டி காணும்.

பெரிசா அறிவாளி மாதிரி பேசறதா நெனைச்சிக் கிட்டு ஓ முதல்ல அடுப்பைப் பத்த வைக்கனுமானு கிளியர் பண்ணிகிட்டி கிக்கீ பிக்கீ னு சிரிக்கும்.

சமைச்ச பின்னாடி டேஸ்ட் பாக்கும் பாருங்க.ஒரு ஸ்பூனால் எடுத்து வாயில் போட்டுட்டு ஜூப்பர்...டெலீஷியஸ் னு சொல்லிட்டு அந்த எச்சில் ஸ்பூனை மிச்ச பலகாரத்து மேலேயே வைக்கும்.கொடுமை.
ரெண்டு வாரம் முன்ன நம்ம பறவை மினியம்மா ஒரு கொழம்பு வச்சிக் கட்டினாங்க.அதுல ஹைலைட் என்னன்னா அதை கரண்டியால் மொண்டு உள்ளங்கையில் ஊத்தி நக்கிப் பார்த்துட்டு ஆஹா...ஓஹோ...னு பாடுனாங்க.

நம்ம வீட்லயும் சிலர் அப்படி டேஸ்ட் பார்க்கும் வழக்கம் இருக்கலாம் ஆனா ஒரு தொலைக்காட்சி சேனல்ல இப்படி காட்டனுமா?

சரி இந்த கூத்தெல்லாம் தனியார் தொலைக் காட்சியிலதானே பேசாம நாம வயலும் வாழ்வும் பாப்போமின்னு பொதிகை பக்கம் போன அதை விடக் கொடுமை.

கொஞ்சம் கூட சேனல் இங்கிதமே இல்லாத நடை உடை பாவனையில் ஏதோ தூக்கத்துல தட்டி எழுப்புன மாதிரி [கொட்டாவி மட்டும் உடமாட்டாங்க அது நமக்கு வரும்] தெய்வமேனு நொந்து போய் பேட்டி குடுப்பாங்க.
பேட்டி எடுக்கிறவங்களும் கேமராவைப் பார்க்க கொடுப்பவரும் கேமராவைப் பார்க்க சம்மந்தமே இல்லாத ரெண்டு பேர் போல பேசிக்ககுவாங்க.

அட இவங்க திருந்தவே மாட்டாங்களா?

15 மறுமொழிகள்::

பாச மலர் / Paasa Malar said...

//அட இவங்க திருந்தவே மாட்டாங்களா?//

இன்னும் எத்தனை வருஷமானாலும் மாறாத சில விஷயங்களில் இதுவும் ஒண்ணுதான் கண்மணி..டெய்லர் பிளவுஸ் சமாச்சாரம், காபி சமாச்சாரமும்..உண்மையிலேயே உலக அதிசயந்தான்..

Anonymous said...

அட இவங்க திருந்தவே மாட்டாங்களா?

--

முதல்ல நீங்க திருந்துங்க... பின்னால அவங்களப் பார்க்கலாம்.

கும்மி அடிக்கிற வரைக்கும் அடிக்கிறது. பிறகு எல்லோரையும் திட்டுறது. என்னா... இது.

இப்படிக்கு
அபி அப்பா பதில் கும்மி அடித்த அனானி.

சின்னப் பையன் said...

ஏங்க இந்த கொலை வெறி???......:-)))))))))))))))

Anonymous said...

யாருப்பா அனானி நீயும்தானே கும்மின அப்புறம் ரீச்சர குறை சொல்ற

ச்சின்னப் பையா உனக்கு வெளங்கிடுச்சா

அபி அப்பா said...

நல்ல கோவமாத்தான் இருக்கீங்க!!

Anonymous said...

அபி அப்பா இங்க என்ன பண்ணுரீங்க. உங்க கும்மி பதிவைப் போய் பாருங்க.

Anonymous said...

Anonymous said...
யாருப்பா அனானி நீயும்தானே கும்மின அப்புறம் ரீச்சர குறை சொல்ற

---
நான் சொன்னது என்னன்னா சொல்றது ஒன்னு, செய்றது ஒன்னா இருக்கக் கூடாதுன்னுல்ல சொன்னேன். இருந்தாலும் நான் சொன்னது பகடியாத்தாங்க. டீச்சருக்கு எல்லாம் பாடம் நடத்த முடியுமாங்க.

இதெல்லாம் சும்மா தமாசு லுசுல விட்டுடுங்க. இதுக்காக என்னை கும்மிடாதீங்க.

delphine said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொறுத்தது பொறுத்துட்டீங்க இன்னும் ஒரு 50 வருசம் தான் பொறுத்து பாத்துட்டு இப்படி கேட்கலாம் இல்ல..?
எனக்கு அந்த கடைசி டிடிபத்தி சொன்னீங்களே அதை படிச்சதும்..
சின்னவயசில் எங்க வீட்டுல டிவி வாங்கறதுக்கு முன்னாடி ஊருல சித்தி வீட்டுல போய் ஆறுமணிக்கு வயலும்வாழ்வும் போட்டாலும் அணைக்காம பாத்துட்டு இருந்தது நியாபகம் வருது....:)

pudugaithendral said...

:))))))))))))))))))))))

காட்டாறு said...

செம காமடி தான்.... என்னாக்கா நீங்க? திருந்த ஏகப்பட்ட விஷயங்கள் சினிமாவில இருக்குதே. நீங்க காமெடியப் போயி.. திருந்த சொல்லிட்டீங்க. இதெல்லாம் இல்லைன்னா... இவங்கள வச்சி நாம எங்கே காமெடி பண்ண முடியும்.

நிஜமா நல்லவன் said...

அட இவங்க எல்லாம் திருந்திட்டா இப்படி ஒரு அருமையான பதிவு கிடைக்குமா? ரொம்ப நாள் கோபம் போலிருக்கு.

சென்ஷி said...

:))))

நானானி said...

இன்னொன்னு சொல்ல விட்டுடீங்களே!
குடிசையானாலும் சரி, பங்களாவானாலும் சரி வாசக்கதவு விரியத் திறந்தேயிருக்கும். யார் வேணுமானாலும் உள்ளே நுழையலாம்.
ஊருக்குப்போவதானலும் திரும்பிவருவதானாலும் கையில் காலி சூட்கேஸை சுலபமாக ஆட்டிக்கொண்டே வருவது இன்னும் சூப்பராயிருக்கும்.

மங்களூர் சிவா said...

:)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)