இந்த பதிவில் வரும் யாவும் என் சொந்த கற்பனையில்லை. பலரும் அறிந்த விஷயமமே.யாரையும் குறிப்பிடுவனவும் இல்லை.இதில் வரும் சங்கதிகள் பார்த்த மாதிரியோ கேட்ட மாதிரியோ இருந்தா அது பதிவரின் பொறுப்பாகாது என்பதை அறிவுறுத்துகிறேன்.
தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுதாம்.
தமிழ்மணத்துல ஏதோ கிச்சு கிச்சு பதிவு போட்டு நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாலும் பொறுக்கலை சாமீ.
பாருங்க என் போன பதிவுக்கு ரெண்டு -2 குத்து விழுந்திருக்கு.
நானென்ன அமெரிக்க ஏகாதி பத்தியம் பேசினேனா இல்லை இந்திய கிரிக்கெட் பத்தி எழுதினேனா
இல்லை இப்ப மாதிரி அப்படி இப்படி னு எழுதி தமிழ் மணக்கச் செய்து சூடான இடுகையில எடம் புடிக்க போட்டி போட்டேனா.?
யாரோ எதுவோ எழுதட்டும் அது மொக்கையோ சப்பையோ உப்புமாவோ கொசுவர்த்தியோ னு
புடிச்சா படி இல்லை போனமான்னு இருக்கனும் எனும் மனப் பக்குவம் இல்லைங்க.
அதான் இனி இந்த மாதிரி பிரச்சினையே வராத பதிவா போட்டாவது ஜூடான இடுகையில் வரமா பாப்போமின்னு நெனைக்கேன்.
இது ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்.நெறைய இருந்தாலும் இது சாம்பிள் மட்டும்தான்.இது மாதிரி ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள் [கதைகள் இப்ப வேனாம் அடுத்த டேக் குக்கு]எழுதி தொடருங்கள்.
இதையே கொசு வர்த்தியா நெனச்சு 'தொடர் விளையாட்டு' ஆரம்பிப்போமா'
முதல்ல நான் கூப்பிடப் போவது ஐந்து பேர்................
பாசமலர்
காட்டாறு
கயல்விழி முத்துலஷ்மி
டெல்பின்
புதுகைத் தென்றல்
அப்பால அவங்க யாரையாச்சும் கூப்பிடட்டும்
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
ஹௌ ஐ வொண்டர் வாட் யூ ஆர்
அப் அபௌவ் த வேர்ல்ட் சோ ஹை
லைக் ய டைமண்ட் இன் த ஸ்கை
ஜானி ஜானி யெஸ் பப்பா
ஈட்டிங் ஷுகர் நோ பப்பா
டெல்லிங் லைஸ் நோ பப்பா
ஓப்பன் யுவர் மௌத்
ஹா...ஹா...ஹாஹ்..ஹாஹாஆஆ
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
உங்களுக்கும் வேணுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும் அரைச்சி சுட்ட தோசை
அப்பாவுக்கு நாலு
அம்மாவுக்கு மூணு
அண்ணனுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒன்னு
திங்கத் திங்க ஆசை
இன்னும் கேட்டா பூசை
பனை மரமே பனைமரமே
ஏன் வளர்ந்தாய் பனைமரமே
படுக்க நல்ல பாயாவேன்
பஞ்சணைக்கு நாராவேன்
அடுக்கடுக்காய் பானைகளை
அடுக்கி வைக்க உறியாவேன்
PAGE LOAD TIME
வகை*
தொடர் விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
Labels
reverse/flip text விளையாட்டு
(1)
test
(1)
அனுபவம்
(12)
உரையாடல்-கவிதை--போட்டிக்கு
(3)
உலகம்
(6)
எப்ரல் 1
(1)
கண்மணி
(9)
கருத்து கந்தசாமி
(4)
கலாய்ப்பு
(5)
கவிதை
(32)
கவிதை--போட்டிக்கு
(1)
கிசு கிசு
(2)
கிசுகிசு
(2)
குறும்படம்
(2)
சிறுகதை
(2)
சிறுகதை-போட்டிக்கு
(1)
சுட்ட மொக்கை
(1)
சுப்பிரமணி
(4)
செய்தி
(6)
செய்தி விமர்சனம்
(6)
சோதிடம்
(1)
டி.வி.விமர்சனம்
(1)
டி.விவிமர்சன.ம்
(1)
டெல்லி சித்தப்பூ
(1)
டோண்டு
(2)
தகவல் தொழில்நுட்பம்
(1)
தமிழ் நயம்
(4)
தமிழ் மணம்
(1)
தமிழ்மணம்
(6)
திரை விமர்சனம்
(2)
தேர்வு டிப்ஸ்
(1)
தொடர் விளையாட்டு
(3)
நகைச்சுவை
(7)
நட்சத்திரம்
(13)
நித்தியா
(1)
நையாண்டி
(8)
படம் காட்டுதல்
(6)
பதிவர் வட்டம்
(4)
பயணம்-1
(1)
புதிர்
(2)
புலிநகம்
(1)
மகளிர்
(3)
மகளிர் தினம்
(1)
மாமா
(3)
மாமி
(5)
முதுமை
(2)
மொக்கை
(17)
ரீமிக்ஸ் பாடல்கள்
(1)
ரெண்டு போட்டிக்கு
(1)
வாலண்டைன்ஸ் டே
(4)
வாழ்க்கை
(1)
வாழ்த்து
(3)
வியர்டு
(1)
விவாதம்
(5)
விழிப்புணர்வு
(3)
விழிப்புணர்வு மீள்பதிவு
(1)
விழிப்புணர்வு/அனுபவம்
(1)
வெட்டி ஆராய்ச்சி
(1)
32 மறுமொழிகள்::
ஆகா இது நல்லாருக்கே... கண்டிப்பா போடலாம் ஆனா நியாபகம் தான் வரமாட்டேங்குது இருங்க யோசிச்சு போட்டுறலாம்.. :) முதல்ல போட்டதால ஈசியான பாட்டெல்லாம் போட்டுட்டீங்க நீங்க..
எனக்கு தெரிஞ்தையெலல்லாம் நீங்கள் போட்டுட்டீங்க....வரேன் இதோ....
யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டிக்கரும்பைக் கடிக்கும் யானை
காவேரித்தண்ணீரைக் கலக்கும் யானை
அப்படின்னு ஒரு பாட்டு ஒண்ணாப்பில் படிச்ச ஞாபகம் இருக்கு :)
டீச்சர், இந்த விளையாட்டு நல்லாதான் இருக்கு.
டீச்சர், நாங்களும் பாட்டு சொல்லலாமா? தேவையில்லையென்றால் பிரசுரிக்க வாணாம் :)
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போடு
ஈயை தூர ஓட்டு!
உன்னைப் போன்ற நல்லவர்
ஊரில் எவரும் இல்லையே
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இனி இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அ'தே எனக்கு வழியாம்
மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
ஆறு ஓட வா வா
அடடா போட ஓடி வா
(Rain Rain Go away க்கு இது போன்ற நல்ல பாடல்கள் கற்றுக் கொடுக்கலாம்)
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கும் வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
நல்ல கொசுவத்தி விளையாட்டு...விளையாடுங்கள் ;))
யக்கோவ்.. நீயெல்லாம் புலம்பலாமா? சொல்லுங்கன்னேன்... சொல்லுறவுக நால சொல்லத்தான் செய்வாக.. நீ மனசுல போட்டுக்காத தாயீ.... எப்பவும் போலவே உங்களுக்கு என்ன தோணுதோ கொட்டுங்க இங்கே. அம்புட்டு தான் சொல்ல முடியும். ஆமா.
// இதையே கொசு வர்த்தியா நெனச்சு 'தொடர் விளையாட்டு' ஆரம்பிப்போமா'
//
அம்மாடி.. இப்போ தானே முடிச்சோம். அதுக்குள்ளேயா? :-)
//இது ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்//
ஸ்கூல்ல படிச்சா தானே எழுத முடியும்? என்னவோ போங்க.... ஒரு மார்க்கமான விளையாட்டை தான் ஆரம்பிச்சிருக்கீங்க.
நீங்க கேட்டதால ட்ரை பண்ணுறேன். எங்க அம்மாவை தான் கேக்கனும். இல்ல எங்க டீச்சருக்கு தான் போன் பண்ணனும். ;-)
இன்னொரு தொடர் விளையாட்டா? தாங்காகுதுங்க. எல்லாரும் தொடர் விளையாட்டுல கடுப்பா இருக்காங்க.
http://pettagam.blogspot.com/2008/03/tag.html
போட்டாச்சு.....
டீச்சரம்மா.. எல்லாம் மறந்து போச்சு... ஆனா கண்டிப்பா எழுதுகிறேன். கொஞ்சம் அவகாசம் தேவை...(வேலை அதிகம் டீச்சர்)
டீச்சர், எனக்கு பிடிச்ச பாட்டு என்னான்னே ஞாபகம் வரலையே:-))
என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க.
போட்டுவோம்.
பதிவு போட்டிருக்கேன்.
www.pudugaithendral.blogspot.com
பாட்டு எல்லாம் நல்லா இருக்கு. அதைவிட உங்க புலம்பல் சூப்பர்.
ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க. இங்கே தொடர் விளையாட்டை முடிச்சு வெச்சுடலாம் இந்த சுட்டியா பாருங்க..
http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Nursery%20Rhymes/
http://aashamrutha.blogspot.com/2008/03/blog-post.html
இந்தச் சுட்டியில் பாருங்க..
நிஜமா நல்லவனும் போஸ்ட் போட்டிருக்காரு அங்கையும் பாருங்க.
https://www.celextel.com/childrensongstamilvol2-p-1719.html
இந்த லிங்குல விறபனைக்குன்னு இருக்கு. ஆனாலும் பாடல்கள் தரவிறக்கம் செய்ய முடியுமான்னு பருங்க
http://tamilforkids.tripod.com/
இளா சுட்டிக்கு நன்றி.அது ஸ்டார் ஓட்டல் சாப்பாடுன்னா என் முயற்சி கூட்டாஞ்சோறு.யார் வீட்லயோ விருந்துன்னு நான் சமைக்காம இருக்க முடியுமா?ஹாஹா....இது அரும்புகளுக்கான என் கூட்டாஞ்சோறு முயற்சி.
ஹை ஹைய் ..எப்படியாச்சும் தொட்ர் விளையாட்டுக்கு மங்களம் பாட ஆசையா?அஸ்கு புஸ்கு...உங்க பங்குக்கு நீங்களும் எழுதுங்க.
கண்மணி அழைக்காமலே வந்து பதிவு போட்டிருக்கிறேன். பாருங்க.
//www.9-west.blogspot.com//
அக்கா! உங்களுக்கு மட்டும் எப்டி இப்படி புத்சு புத்சா ஐடியா தோணுது? :)
பனை மரத்திற்கு போட்டிருக்கும் படம் பனை மரத்தினுடையதல்ல. http://farm1.static.flickr.com/5/8316694_a144c12fef.jpg
வாங்க சந்திரன் நான் பாம் ட்ரீ னு கூகிள் தேடினப்போ இதான் கிடைச்சது.ஹி..ஹி கண்டுக்காதீங்க நக்கீரரே.
அரும்புகள் ல போடும்போது உங்க சுட்டியைப் பயன் படுத்திக்கிரேன்.
காயூ அதுக்குத்தான் கொஞ்சம் கிட்னி வேனும்.உன்னை மாதிரி காதல்[அழுகாச்சி]கவுஜ எழுத தெரிஞ்சா நான் ஏன் பாப்பா பாட்டு எழுதப் போறேன்;)
டீச்சர் நம்ம பங்குக்கு
http://majinnah.blogspot.com/2008/03/blog-post.html
நம்ம பங்குக்கு இன்னொன்னு --- http://www.youtube.com/user/shankargn
பாட்டு எனக்கு பாடமில்லையே
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
மகளிர் தின வாழ்த்துக்கள்...
நல்ல முயற்சிதான்!
http://tamilrhymes.com/ இணையதளம் பார்த்திங்களா?
PDF கோப்பு வேணும்னா அனுப்பிவைக்கிறேன்!
நாங்களும் இங்கே சின்னவங்களாயிட்டோம். :-)
http://kaattaaru.blogspot.com/2008/03/blog-post.html
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!
http://sirumuyarchi.blogspot.com/2008/03/blog-post_10.html
வாங்க வீட்டுப்பாடம் ரெடி
இதோ கண்மணி உங்களுக்குப் பாட்டு.
கரடி மலை மேல் ஏறி
கரடி மலை மேல் ஏறி
கரடி மலை மேல் ஏறி ...
என்ன பாத்துதாம்
அது ஊரைப் பார்த்ததாம்..
ஆனை ஆனை அழகர் ஆனை
கட்டிக் கரும்பைக் கடிக்கும் ஆனை
குட்டி ஆனைக்குக்
கொம்பு முளச்சிதாம்
பட்டணம் எல்லாம் பாக்க வாருங்கோ
மிட்டாய் மிட்டாய்
பஞ்சு மிட்டாய்
குச்சி சுத்திப்
பறக்கும் மிட்டாய்
சிகப்பு கலரில்
தித்திக்கும் மிட்டாய்
பாப்பா கைக்கு வந்ததுமே
பாசத்தோட கரைஞ்சுடுமே.!!
சரியாப்பா:)
இன்னும் ஞாபகம் வந்தா எழுதறேன்.
Post a Comment