PAGE LOAD TIME

கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரே ஒரு வரம் தருகிறேன் என்றால்....என்ன கேட்பீங்க?

அய்யா சாமிகளே ஆசாமிகளே சாமி பூதம் வரம் என்றதும் இங்கன அனானியா வந்து சாமியாடாதீங்க.
என் பதிவு கடவுள் பற்றியது இல்லை.கடவுள் நம்பிக்கை என்பது தனிமனித உரிமை அதைக் குறை சொல்லவோ பாராட்டவோ இது இடமில்லை.

பள்ளியில் படிக்கும் போது 'நான் முதலமைச்சரானால்' 'நான் பிரதமரானால்' என தலைப்பு கொடுத்து கட்டுரை எழுதச் சொல்லுவாங்கல்ல அது மாதிரிதான் இதுவும்....

ஒரே ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் கேள் னு நேர்ல வந்து கடவுள் கேட்டா நாம என்ன கேப்போம் என்று ஒரு கற்பனை...

பொதுவா என் குடும்பம் நல்லாயிருக்கனும்,எனக்கு நல்ல வேலை கிடைக்கனும்,சம்பள உயர்வு கிடைக்கனும்,பதவி உயர்வு....இப்படித்தான் கேட்போம்.[எப்பவும் அப்படித்தானே இருக்கிறோம்]
இல்லை நண்பருக்காகவோ,தெரிந்தவர்களுக்காகவோ...சிலசமயம் கேட்போம்.கடவுளைக் கும்பிடும்போது கூட பெரும்பாலும் சுயநலமாகத்தான் இருக்கிறோம்.

அப்படியெல்லாம் இல்லாமல் பொதுப்படையான வேண்டுகோளாக சமுதாயத்திற்காக
ஒரே ஒரு வரம் கேட்கலாம் னா அது என்னவாக இருக்கும்???.

மனிதருக்கு மனிதர் சிந்தனைகள் ஆசைகள் கனவுகள் மாறுபடலாம்.அதை விரும்பியவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

ஏதோ கடவுள் நேரா வந்து எங்க வூட்டு வரவேற்பரையில் காத்திருப்பது போலவும் நீங்க பின்னூட்டம் போட்டதும் அதை நான் அவரிடம் சொல்ல உடனே நிறை வேறும் னு கனவு காணாதீங்க.

கற்பனைக்கும் ஆசைகளுக்கும் அளவேது.பொதுவான சமூகப் பிரச்சினைகளைப் பார்க்கும் போது ஹூம்..அது இப்படியிருந்தா நல்லாருக்கும் இது அப்பயிருக்கனும் நடக்குமா னு மனது நினைக்கும்.அந்த மாதிரியான எண்ணங்களைக் கேட்டு வரமாகப் பெற்றால் எப்படியிருக்கும் ,யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்பதுதான் பதிவின் நோக்கம்.

முறையற்ற ,வீண் விதண்டாவாதமான பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட மாட்டாது என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

நான் கேட்கும் வரம்:

தினசரிகளிலும் விளம்பரங்களிலும் மருத்துவ உதவி வேண்டி நன் கொடை கேட்பதைப் பார்க்கிறோம்.உயிர் என்பதும் மனித வாழ்வு என்பதும் எல்லோருக்கும் ஒன்றுதானே.ஆனால் இருப்பவர்கள் ராஜ வைத்தியமும் இல்லாதவர்கள் நோய்க்குப் பலியாவதும் அல்லது உதவி கேட்டும் இறைஞ்சுவதுமான நிலை மாறி.....

யாவருக்கும் எல்லா நேரத்திலும் எந்தவிதமான மருத்துவ சேவையும் ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.


ரெடி......ஸ்டார்ட்...முயூசிக்...

52 மறுமொழிகள்::

Yogi said...

அகால மரணங்கள், கொடுமையான மரணங்கள் (கும்பகோணம் தீவிபத்து) போன்றவை எல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன்.

வீ. எம் said...

மக்கள் நலனில் அக்கரையுள்ள, மக்கள் பிரச்சனைகளை புரிந்து அதற்கேற்ப செயல்படக்கூடிய, நல்ல உள்ளம் படைத்தவர்களே அரசு உயர் பதவிகளில் (முதல்வர், பிரதமர் உட்பட) அமர்ந்திட வேண்டும்

நாமக்கல் சிபி said...

அடுத்த ஜென்மத்துல கண்மணி அக்காவுக்கு நான் தம்பியா பிறக்கணும்னு வரம் கேப்பேன்!

Subbiah Veerappan said...

”விரும்புகிற படிப்பைப் படிக்கும் விதமாக எந்தவித இடையூறும், கச்சா முச்சா பணச் செலவுமில்லாமல், எல்லா மாணவகளுக்கும் படிக்கும் விதமாக இடம் கிடைக்கக் கல்லூரிகளும், பல்கழைக்கழகங்களும் கூவிக் கூவி இடம் கொடுக்கும் நிலை வரவேண்டும்!'

என்று கடவுளின் சட்டையைப் (அவர் என்ன போட்டிருப்பார் அம்மணி?)பிடித்துக் கொண்டு கேட்டு வாங்கித் தமிழகத்திற்கு, முடிந்தால் இந்திய முழுமைக்கும் கொடுத்து விட்டுத்தான் அவரை விடுவேன்.

மணியன் said...

மனிதனை ஆறாம் அறிவு இல்லாமல் படைக்க விண்ணப்பிப்பேன், மிருகங்களாகவே இருந்திருந்தால் எவ்வளவு நிம்மதி ? எவ்வளவு ஒற்றுமை ?

சாலிசம்பர் said...

மனித இனத்தின் சிந்தனைத்திறனை நீக்கி விட கேட்டுக்கொள்வேன்.மற்ற மிருகங்களைப்போல மனிதனும் பிறந்து,வளர்ந்து,மடிந்து விடலாம்.உலகம் நிம்மதியாய் இருக்கும்.

கண்மணி/kanmani said...

பொன்வண்டு சரியாச் சொன்னீங்க.
கேட்டகதையொன்று....யாரோ ச்சாபம் விட்டாங்களாம் பூ உதிர பிஞ்சு உதிர என்று..அப்படி ஏதுமறியா பிஞ்சுகள் உதிர வேண்டாம்

கண்மணி/kanmani said...

சிபி....நாமக்கல் ...சிபி
இன்று இல்லை நாளையில்லை
எப்பவும் நீ[ங்க] தம்பி
சொந்தமில்லை பந்தமில்லை
அப்ப்பவும் நீ[ங்க] தம்பி.......

கண்மணி/kanmani said...

வீ.எம் இந்த ஆசை நிறைவேறாது.ஏன்னா நீங்க கேக்கறதுக்கு முன்னமே கடவுளும் சரிகட்டப் பட்டிருப்பார்.....

கண்மணி/kanmani said...

சுப்பையா அண்ணாச்சி உங்களுதும் ஞாயமானது தான்
ஆமா நானென்ன அவரைப் பார்த்தேனா அவர் என்ன அணிந்திருந்தார்னு சொல்ல
சினிமா பிரகாரம் ஆல் மேல் காட்ஸ் பேர் பாடி தான்.இடுப்புல மட்டும் கச்சை.மார்பில் நிறைய அணிகலன்.
சோ நீங்க சட்டையைப் பிடிக்க முடியாதே...

கண்மணி/kanmani said...

மணியன்,ஜாலி ஜம்பர் அடடா....மனித குலத்தின் மீது இத்தனை வெறுப்பா[இருக்காதா பின்ன]....உங்க ஆசை எளிதில் நிறைவேற்றப் படலாம்.
மனிதனை மிருகமா மாத்தறது ரொம்பச் சுலபம்.

Thamiz Priyan said...

அடுத்த ஜென்மத்துல கண்மணி டீச்சருக்கு நான் மாணவனாக பிறக்கணும்னு வரம் கேப்பேன். அடுத்த ஜென்மமெல்லாம் இல்லையென்றால் உலகில் பசியால் யாரும் அவதிப்படக் கூடாது என்று வரம் கேட்பேன்.. :)

மங்களூர் சிவா said...

ஒரு பங்களா ஸ்விம்மிங் பூலோட, அதுல ரெண்டு கார், எனக்கு கீழ 4 பேர் அந்த 4 பேர்க்கு கீழ 40 பேர் வேலை பாக்கணும் இப்பிடி பில்லா படத்துல அஜித் ஒரே ஒரு வரம் கேப்பாரே அதுதான் ஞாபகத்துக்கு வருது.

இந்தியாவில ஊழலே இருக்ககூடாது ஒழிஞ்சிடனும்னு கேக்கலாம். (ஆண்டவன் தலை சுத்திடும் அது வேற விசயம்)

நிஜமா நல்லவன் said...

எல்லோரும் நலமா இருக்கணும் எல்லாம் நல்லவிதமா நடக்கணும்.

நிஜமா நல்லவன் said...

///நாமக்கல் சிபி said...
அடுத்த ஜென்மத்துல கண்மணி அக்காவுக்கு நான் தம்பியா பிறக்கணும்னு வரம் கேப்பேன்!///என்னால அடுத்த ஜென்மம் வரைக்கும் எல்லாம் காத்திருக்க முடியாது. நான் செஞ்சிருக்கிற சேவைகளுக்கு அடுத்த ஜென்மத்துல மனிதப்பிறவி உண்டான்னு வேற தெரியல. அதனால எப்படியாவது இந்த ஜென்மத்துலேயே கண்மணி அக்கா என்னைய தம்பியா தத்து எடுத்துக்கணும்னு கேட்பேன். திரும்ப திரும்ப.......... கேட்பேன்.

கண்மணி/kanmani said...

தமிழ்ப் பிரியன் ரேட்டிங்ல நீங்கதான் ..உங்க வரம்தான் பர்ஸ்ட்!!!!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொன்னான்.
விருந்து கேளிக்கைகள்...வீணாய்ப் போகும் பண்டங்கள் பார்க்கும் போது தெருவோரத்து வயிறு ஒட்டிய சிறுவர்களும் பிச்சைக்காரர்களும் ஞாபகம் வரும்
நாம் எத்தனை பேருக்கு உணவிட முடியும்.சோ இந்த பொறுப்பு கடவுளுக்குத்தான்.

கண்மணி/kanmani said...

சிவா நீங்கதான் ஸ்விம்மிங்பூல்...நயண்தாரா கேக்கறீங்களோன்னு நெனைச்சேன்...[வீக் என்ட்ல ஜொள்ளுற பார்ட்டியாச்சே]இதுன்னா கடவுளால முடியும்...ஊழல்னா...ஹூம் நோ சான்ஸ்

கண்மணி/kanmani said...

நிஜமா நீங்க நல்லவன்தாம்பா
இப்படி பொதுவா கேட்டுட்டா பிரச்சினையே இல்லை...[கடவுளுக்கும்]

Thamiz Priyan said...

///கண்மணி said...

தமிழ்ப் பிரியன் ரேட்டிங்ல நீங்கதான் ..உங்க வரம்தான் பர்ஸ்ட்!!!!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு பாரதி சொன்னான்.
///விருந்து கேளிக்கைகள்... வீணாய்ப் போகும் பண்டங்கள் பார்க்கும் போது தெருவோரத்து வயிறு ஒட்டிய சிறுவர்களும் பிச்சைக்காரர்களும் ஞாபகம் வரும்///
நாம் எத்தனை பேருக்கு உணவிட முடியும்.சோ இந்த பொறுப்பு கடவுளுக்குத்தான்//
நன்றி டீச்சர்., உலகில் மனிதனுக்கு இரண்டு விதமான பசி இருக்கிறது. இரண்டுல் உடல் சார்ந்ததே! இவற்றிற்கு வழி கிடைத்து விட்டால், அரசியல் சமூகம் என்று ஏதும் இல்லாமல் ஏதாவது துருவப்பிரதேசத்தில் சென்று கூட தனது வாழ்வைக் கழித்து விடமுடியும்தானே?.., ;)
முதல் வரத்திற்கு பதில் சொல்லலையே? கட்டை விரல் வேண்டுமாலும் வெட்டித் தந்து விடுகிறேன்... :)

கண்மணி/kanmani said...

தமிழ்ப் பிரியன்!அடுத்த ஜென்மத்திலும் நான் டீச்சர்தானா?...கொடுத்துவைத்திருக்க வேண்டும்...பலதரப்பட்ட பிள்ளைகள்...பலப்பல அனுபவங்கள்...ஆமாம் நான் ரொம்ப கண்டிப்பான டீச்சர்...நீங்க மாணவரா இருக்க பயமில்லையே...:(
அப்படின்னா சரி..கட்டைவிரல் கேட்க நானென்ன வில்வித்தையா சொல்லித்தரப் போகிறேன்...படிச்சு டீச்சர் பேரக் காப்பாத்தினாப் போதும்


நிஜமா....நல்லவா...உன் கோரிக்கை ஏற்கப்பட்டது...கொஞ்சம் போகட்டும்

மங்களூர் சிவா said...

//
கண்மணி said...
சிவா நீங்கதான் ஸ்விம்மிங்பூல்...நயண்தாரா கேக்கறீங்களோன்னு நெனைச்சேன்...[வீக் என்ட்ல ஜொள்ளுற பார்ட்டியாச்சே]இதுன்னா கடவுளால முடியும்...ஊழல்னா...ஹூம் நோ சான்ஸ்
//

டீச்சர் நான் ஜொள்ளர பார்ட்டிதான் ஓகே.

ஜொள்ளாத பார்ட்டிங்களை நம்பித்தான் சிவராஜ் சித்த வைத்திய சாலையே ஓடிக்கிட்டிருக்காம்.

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said... இந்த ஜென்மத்துலேயே கண்மணி அக்கா என்னைய தம்பியா தத்து எடுத்துக்கணும்னு கேட்பேன்.///
///கண்மணி said... நிஜமா.... நல்லவா...உன் கோரிக்கை ஏற்கப்பட்டது...கொஞ்சம் போகட்டும்///
டீச்சர்., வளர்ப்புத் தம்பிக்கு ஆடம்பர திருமணம் நடத்தினா பந்தல் காண்ட்ராக்ட் எனக்குத் தான் தரனும்..:)))))

Thamiz Priyan said...

///கண்மணி said...படிச்சு டீச்சர் பேரக் காப்பாத்தினாப் போதும்///
மாதவிப்பந்தல் புதிரா புனிதமாவில் அடிச்சு ஆடி 10/10 வாங்கிட்டேன். சந்தோசம் தானே டீச்சர்... :)
மாதவிப்பந்தல்

நிஜமா நல்லவன் said...

கண்மணி said...
நிஜமா....நல்லவா...உன் கோரிக்கை ஏற்கப்பட்டது...கொஞ்சம் போகட்டும்


அக்கான்னா அக்கா தான். ரொம்ப நல்லவங்களா இருப்பீங்க போல.

நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
டீச்சர் நான் ஜொள்ளர பார்ட்டிதான் ஓகே.

ஜொள்ளாத பார்ட்டிங்களை நம்பித்தான் சிவராஜ் சித்த வைத்திய சாலையே ஓடிக்கிட்டிருக்காம்.///இது மேட்டரு. போற போக்குலையே யோசிப்பாங்களோ? (உக்காந்து யோசிக்கத்தான் நேரமில்லையே?)

Anonymous said...

எல்லாவருக்கும் தினமும் 5 வேளை சாப்பாடு (மூணு வேளை ஸ்நாக்ஸ் தனி) கிடைக்கனும்னு கேட்பேன்.

Anonymous said...

மனிதர்கள் கடவுள் பெயரால் போடும் சண்டையை உலகில் இருந்து மறைத்து விடு என்று கேட்பேன்.

கண்மணி/kanmani said...

வெல்செட் சித்ரா இதுவும் நல்ல கோரிக்கை...கடவுள் குடும்பத்துலயே..குரூப் பாலிடிக்ஸா;)

கண்மணி/kanmani said...

வாம்மா கண்ணு G3 இதை...இதை..இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் உங்கிட்டேயிருந்து...
5 வேளை போதுமா 3+3=6 தானே
ஸ்நாக்ஸ் தனி டைமா?இல்லை 24 மணிநேரமுமா?

ஆயில்யன் said...

இறுதிப்பயணம்!
நல்லதொரு உல்லாசமான பயணம்தான் என்றதொரு மனநிலை தோன்றும்படியான எனக்கு வரம் கொடுக்கவேண்டும்!

சிறில் அலெக்ஸ் said...

இந்த நாகரீகம், கல்வி, அரசு, சாதி மதம் etc. etc. இல்லாத uncivilized காலத்துக்கே மனித இனத்த கொண்டுபோயிடப்பா எனக் கேட்பேன்.

வவ்வால் said...

கண்மணி,

ரொம்ப நன்றிங்க போலியான பேச்சுக்களை கேட்க இது போன்ற பதிவுகள் அதிகம் உதவுகின்றன :-))

முதலில் கடவுள் னா என்னா? சரி அதை விடுங்க,

பெருமாள் வடிவில் வந்து கேட்டா ஒரு இஸ்லாமியர் நீ கடவுளே இல்லை அல்லாஹ் மட்டுமே கடவுள் , உன் கிட்டே வரம் கேட்க மாட்டேன் சொல்லிட மாட்டாரா?

அல்லா வடிவில் கிருத்துவரிடம் கேட்டால் நீயும் என் கடவுள் இல்லை ... நீ போலினு சொல்லிட மாட்டாரா!

கிருத்து வடிவில் இந்துவிடம் வந்து கேட்டால் யார்டா நீ , உன்னையா கூப்பிட்டேன் எங்கே சிவபெருமான்னு (இந்த எடத்தில பயங்கர குழப்பம் வரும் சிவனா, பெருமாள, முருகன...etc) கேட்க மாட்டானா?

ஆக மொத்தம் எவனுமே வரம் கேட்க மாட்டான் :-))

இப்படியா கடவுளே வந்து நின்னாலும் அவரை அடையாளம் தெரியாமல் புறக்கணிக்க போற கூட்டத்துக்கிட்டே கடவுள் வரம் கொடுத்தா என்ன செய்வேன்னா? எப்படி :-))

எந்த கடவுளையும் சரி சமமாக பார்க்க கூடியவன் நாத்திகனே , நடு ராத்திரி 12 மணிக்கு உண்மை கடவுளே வந்தாலும் இப்போ எனக்கு ஒரு டீ வாங்கி கொடு என்று யதார்த்தமா கேட்பான் :-))(நான் ஒரு 1/4 கேட்பேன்)

Anonymous said...

கடவுளே உலகத்திலுள்ள எல்லோர் மனங்களிலும் நல்லெண்ணங்களை மட்டுமே
உற்பத்தியாகும் படி
செய்திடப்பா கடவுளே!
___/\___

துளசி கோபால் said...

எதுக்குங்க இது?

//யாவருக்கும் எல்லா நேரத்திலும் எந்தவிதமான மருத்துவ சேவையும் ஏழை பணக்காரன் என்ற
பாகுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.//

மனிதனுக்கோ இல்லை வேற எந்த உயிருக்குமோ நோயே வரக்கூடான்னு வேண்டிக்குவேன்.

ஆமாம் ஒரே ஒரு வரம்தானா? இன்னும் கொஞ்சம் போட்டுக்கொடுக்கக்கூடாதா?:-)

sury siva said...

கடந்த 25 வருடங்களில் பல நேரங்களில் பலவிதமான மனிதர்களிடையே முக்கியமாக அலுவலர் பயிற்சி மையத்திற்கு வரும் உயர் நிலை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு இதே கேள்வியைக் கேட்பது மட்டுமல்ல, இந்தக் கேள்விக்கு ஒரு 5 நிமிட நேரம் மேடை ஏறி பேசவும் அழைத்திருக்கிறேன். ஒரு வித்தியாசம். இந்தப் பொருளினை முன்னமேயே கொடுத்து அதற்கான தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்ள அவகாசம் தராது மேடையில் வந்து இருக்கும் ஒரு கிண்ணத்தில் இருக்கும் பல்வேறு தலைப்புகளில் ஒன்றை எடுத்து உடன் மைக்கிற்குச் சென்று பேசத் துவங்க வேண்டும். ex tempore எனும் பேச்சுக்கு அதுவும் மேடைப் பேச்சுக்குத் தயார் செய்யும் உக்தியில் இதுவும் ஒன்று.
நிற்க.

திடீரென் ஒருவன் முன்னால் கடவுள் தோன்றி உனக்கு வரம் என்ன வேண்டும் எனக் கேட்டால் என்ன கேட்பது என்ற கேள்விக்கு நம்மில் பலர் உண்மையாக ஆயத்தமாக வில்லை.ஆனால் நீங்களோ சமுதாயத்திற்காக கடவுளிடம் என்ன கேட்பீர்கள் எனக் கேட்டிருக்கின்றீர்கள். உண்மையில் ஆண்டவன் அதிரடியாக இந்தக்கணம் நம் எவர்முன்னேயாவது தோன்றிவிட்டான்/ர் என ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது சமுதாயத்திற்காகவா முதல் வரத்தை நம்மிடையே பெரும்பாலானவர் கேட்பர் ? !! எனக்குத் தெரியவில்லை. சாமி ! கொஞ்ச‌ம் அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணி என‌க்கும் அப்ப‌டியே ஒரு வ‌ர‌ம் தாருங்க‌ள் என்று கேட்பார்க‌ளோ என்ன‌வோ ?
நிற்க‌.

இந்தப் பதிவுக்கு பதில்/பின்னூட்டம்/முன்மொழி தந்தோர் பலர் போலவே தான் பெருவாரியான மக்கள் பேசுகிறார்கள். சுமார் 30 விழுக்காடு தமக்கு என்ன கேட்பது என்றே தெரியவில்லை என ஒப்புக் கொண்டுள்ளனர். விபத்து ஏற்படக்கூடாது, ஏழைகள் என இருக்கவே கூடாது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்பதெல்லாம் கடவுளிடம் கேட்கவேண்டுமா என்ன? அதற்கான resources நம்மிடம் ஏற்கனவே ஆண்டவன் தந்துள்ளானே ? இருக்கும் வ‌ள‌த்தை நியாய‌மான‌ தார்மீக‌ அடிப்ப‌டையில் ப‌ங்கு போட்டுக்கொள்ள‌வில்லை நாம் என்ப‌துதானே உண்மை நிலை !

எல்லோரும் இன்புற்றிருக்க‌வே அல்லாது வேறொன்றும் அறியேன் ப‌ராப‌ர‌மே என‌ச் சொல்வ‌து எல்லாம் அறிவு ஜீவிகள் இந்தக் கேள்விக்கு தம்மைத் த‌யார் செய்த‌பின் த‌ரும் விடையே. இப்ப‌டி இல்லை என உண்மையாகவே நினைப்பவர் அல்லது சொல்வோர் வ‌ள்ள‌லார் அவ‌ர்க‌ள் நிலைக்குத் த‌மை உய‌ர்த்திக் கொண்ட‌வ‌ர் ஆவ‌ர். ஆனால் அதுபோன்ற‌வ‌ர் பேசுவ‌தில்லை. செய்கிறார்க‌ள்.

க‌டைசியாக‌ ஒன்று. பெரு மதிப்புக்குரிய நாகூர் அனிபாவின் பாட‌ல் ஒன்றைப் ப‌ல‌ கால‌மாக‌ நான் திரும்ப‌த்திரும்ப‌க் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இறைவ‌னிட‌ம் கையேந்துங்கள்.அவன் இல்லையென்று சொல்லுவதில்லை எனும் பாடல் துவங்கித் தன் கணீர் எனும் குரலில் இன்னொரு பாடல் பாடியிருக்கிறார்.மிகவும் பிரபலமான பாடலது. இறைவன் ஒரு நாள் தம்முன் வந்து உனக்கு என்ன வேண்டும் எனக்கேட்பின் அவர் என்ன சொல்வார் தெரியுமா ?
அப்பாடலின் எல்லா வார்த்தைகளும் கோர்வையாகச் சொல்ல இயலவில்லை. அதன் பொருள் இதோ:

"இறைவா ! நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல எனது வாழ்வின் மீதமிருக்கும் நேரம்
போதாது. அப்படி இருக்கையில் நான் இன்னும் வேறென்ன கேட்பேன்..."

ஹ‌னீபா அவ‌ர்க‌ள் ம‌ன‌ நிலைக்கு நான் உய‌ர்வேனா ? தெரிய‌வில்லை.

ஒருவேளை க‌ண்ம‌ணி அவ‌ர்க‌ள் (ஆசிரிய‌ரா நீங்க‌ள் ? குட் மார்னிங் மேட‌ம்.) என‌க்காக‌ சிபாரிசு செய்து க‌ட‌வுள் என்முன் வ‌ருகை த‌ந்தால், நான் கேட்க‌ இருப்ப‌து:

இறைவா ! போதும் என்ற‌ ம‌ன‌ நிலை கொடு. அது போதும்.

அற்புத‌மான‌ ப‌திவு. என்னை அச‌த்தி விட்டீர்க‌ள்.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.
பி.கு: உங்கள் இந்தப் பதிவினைப் படித்த 31 பேர் பதிலளித்துள்ளனர். இன்னும் 3 கோடி மக்கள் இந்தக் கேள்விதனைப் படித்து அதற்கு பதிலளிக்கவேண்டும்

http://arthamullavalaipathivugal.blogspot.com

கண்மணி/kanmani said...

அனானி,துளசியக்கா
சூரி அய்யா,வவ்வால் அனைவருக்கும் நன்றி!

வவ்வால் நீங்க இந்த பதிவுக்கு வருவீங்கன்னு தெரியும்....[கடவுள் பேர் இருக்கே]

கடவுள் நம்பிக்கையைப் பொறுத்தவரை எனக்கென்று ஒரு கொள்கை உண்டு.அது ரெண்டு கெட்டான் தனமாகக் கூட இருக்கலாம்.
கடவுள் சிவனா,யேசுவா,அல்லாவா என்பதல்ல என் கவலை.
நம் துன்பங்களை ஆற்றாமையை யாரிடமாவது சொல்ல நினைக்கும் போது அதைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கும் சொந்தமேயானாலும்.
அளப்பறியா துன்பமும் சோதனையும் வரும்போது மனது விட்டு அதை வெளிக் கொட்டினால்தான் உடம்புக்கும் நல்லது.அதை கல்லாயிருக்கும் கடவுள் /படமாய்த் தொங்கும் கடவுளிடம் சொல்வது போல ஒரு பாவனையில் நம் மனது ஒரு வடிகால் தேடுகிறது.
அது பலருக்குத் தேவையும் படுகிறது.

கடவுள் பலப் பல கிளைச் சொந்தங்களைக் கொண்ட உறவுகளைக் கொண்டவனைப் போல சித்தரித்துத் தான் என் சாமி உன் சாமி என்று சண்டை வருகிறது.

அன்பே கடவுள்

கவனிங்க அன்பே கடவுள் னு தான் சொன்னேன்.

அன்பே சிவம்...

அன்பே இயேசு.

அன்பே அல்லாஹ்

னு சொல்லலை.
நம்மிடம் அன்பு காட்டுபவர்கள் அம்மாவா,அப்பாவா,சகோத/சகோதரிகளா,நண்பர்களா என்பதல்ல பிரச்சினை.
நாம் அன்பு செய்யப் படுகிறோமா என்பதுதான் முக்கியம்.
கல்லான கடவுளுக்கு என்ன சக்தி அது எப்படி அன்பைக் காட்டும்னு கேக்காதீங்க.

கடவுள் குறித்த என் நட்சத்திர வாரப் பதிவை நேரமிருந்தால் படியுங்க.

கடவுள் என்ற கோட்பாடு மனிதன் நல்லவைகளிலிருந்து விலகி நடக்காமல் இருக்க பயப் படுத்தும் ஒரு சித்தாந்தம்.
அன்பு, உலகீன் தேவை உயிர்களின் தேவை என்பதை உணர்ந்தால் எல்லோரும் நல்லவர்களாகவே இருந்திருப்போன் கடவுள் என்ற சித்தாந்தமும் ஏற்பட்டிருக்காது.

விலங்குகளிலேயே எளியதை வலியது அடித்து வெல்லும் போது பாவம் மனிதம் எம்மாத்திரம்....

வரம் கொடுக்க கடவுள் எதற்கு?நம்மை நாமேஆளும் போது நமக்கானவைகளை நாமே பெற்றுக் கொள்ள முடியாதா? என்ற கேள்வி எழுவது சகஜம்.

ஆனால் அது சாத்தியமா வவ்வால்....
உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்கள் வரிசையில் நாலு இந்தியர்களும் உண்டாம்.
இதே நாட்டில்தான் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப் போன அந்தோணி முத்துவும்? ஒரு சக்கர நாற்காலிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்.

எங்கோ எப்போதோ சிபாரிசோடு சிலருக்கு செய்யப்படும் கல்வி,மருத்துவ உதவிகள் மட்டுமே விளம்பரப் படுத்தப் படுகின்றன.

தேவைப் படுபவர்கள் யார் என பொறுப்பில் உள்ளோர் அக்கறை காட்டி தேடவா செய்கின்றனர்?

நமக்காக சாக்கடை சுத்தம் செய்தும் மலம் அள்ளியும் வேலை செய்கிறார்களே அவர்களுக்காக நாம் என்றாவது கவலைப் பட நேரமிருக்கிறதா?இத்தனை வருடத்திற்கு பிறகு அரசு இந்தவருட நிதிநிலை அறிக்கையில் பல சலுகைகள் வழங்கியிருக்கு.
இருந்தும் அந்த தொழிலாளி யாராவது நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையில் மிக உயர்ந்த சிகைச்சையைப் பெற முடியுமா?
இல்லை அவருடைய பிள்ளைகள் எளீதாக மருத்துவம் பொறியியல் படிக்க முடியுமா?
இல்லை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விருந்துண்ண முடியுமா?
சாதாரண குக்கிராமத்து டீக் கடையிலேயே இரட்டைக் குவளையில் டீ குடிப்பவர்கள்தானே அவர்கள்?......

இதெற்கெல்லாம் கடவுள் எதற்கு ஆட்சியாளர்கள் பதவியில் இருப்பவர்கள் செய்யட்டும்னு சொல்றீங்களே பூனைக்கு யார் மணி கட்டுவது....

இதெல்லாம் நம் கைமீறிப் போனது...நடக்காது என்பதால்தான் கற்பனையிலாவது நமக்கும் மேலான ஒரு சக்தி வந்து வரம் தந்தால் யார் யார் என்ன கேட்பார்கள் என்று ஒரு கேள்வி வைத்தேன்.

பின்னூட்ட போதைக்கோ சூடான இடுகைக்கோ எழுதப் பட்டதல்ல இப்பதிவு....

மனதைப் பாதித்து கேள்வியான விஷயங்களை ஒரு பதிவாகப் பகிர்ந்து கொல்கிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் னு சொன்னா
உணவு உடை உறையுள் வசதி வாய்ப்புகளும் சமச்சீராக இருக்கனும்.
மலையைப் படைத்த இயற்கைதான் மடுவையும் உண்டாக்கியது.இது உலக நியதி..ஏற்றத்தாழ்வுகள் இருந்தாத்தான் வாழ்க்கை சுவாரஸ்யப் படும்னு வியாக்கியானம் மட்டும்தான் பேசுவோம்.

என்னாலோ...உங்களாலோ..இல்லை இப்பதிவைப் படிக்கும் யாருமோ இந்நிலை மாற ஏதும் செய்ய முடியுமா....???

நிச்சயம் முடியாது....

அதற்குத்தான் இந்த கற்பனை...யார் எண்ண ஓட்டம் எப்படியிருக்கிறது என்பதை அறியும் முயற்சி...

இது போற்றுதலுக்கு உரிய சேவையும் இல்லை.....
தூற்றுதலுக்குரிய பாவமும் இல்லை.....

அனைவருக்கும் நன்றி..

Thamiz Priyan said...

///Sury Said அப்பாடலின் எல்லா வார்த்தைகளும் கோர்வையாகச் சொல்ல இயலவில்லை. ///
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்..
இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்,,,, யா அல்லாஹ்,,
எனது தேவை என்னவென்று படைத்த உனக்குத் தெரியும்
என் அவசரத்தில் புலம்பி உன் அருளில் என்ன குறையும்...
நாடியதைச் செய்து காட்டும் நாயகனே அருள்வாய்..
;;;;;;;;;;
இதில் அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்...

Unknown said...

I ask for
"Peace between People & Countries."

Also please read my post
"http://sultangulam.blogspot.com/2007/03/blog-post_24.html"

வவ்வால் said...

//நமக்காக சாக்கடை சுத்தம் செய்தும் மலம் அள்ளியும் வேலை செய்கிறார்களே அவர்களுக்காக நாம் என்றாவது கவலைப் பட நேரமிருக்கிறதா?இத்தனை வருடத்திற்கு பிறகு அரசு இந்தவருட நிதிநிலை அறிக்கையில் பல சலுகைகள் வழங்கியிருக்கு.
இருந்தும் அந்த தொழிலாளி யாராவது நாட்டின் மிகப் பெரிய மருத்துவமனையில் மிக உயர்ந்த சிகைச்சையைப் பெற முடியுமா?
இல்லை அவருடைய பிள்ளைகள் எளீதாக மருத்துவம் பொறியியல் படிக்க முடியுமா?
இல்லை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விருந்துண்ண முடியுமா?
சாதாரண குக்கிராமத்து டீக் கடையிலேயே இரட்டைக் குவளையில் டீ குடிப்பவர்கள்தானே அவர்கள்?......

இதெற்கெல்லாம் கடவுள் எதற்கு ஆட்சியாளர்கள் பதவியில் இருப்பவர்கள் செய்யட்டும்னு சொல்றீங்களே பூனைக்கு யார் மணி கட்டுவது....//

"same side goal" நீங்களே இதை எல்லாம் சொல்லிட்டதால் எனக்கு வேலை சுலபம் ஆகிடுச்சு,

பூனைக்கு யார் மணிக்கட்டுவாங்க கேள்வி சரி, இப்படிப்பட்ட சமூக பிரச்சினைக்கு நேரா தீர்வுக்கு வழி சொல்லைவில்லைனாலும் குறைந்த பட்சம் ஒரு பதிவாவது போட்டு ஆற்றாமையை காட்டி இருப்பிங்களா? இல்லை அப்படி பேசும் பதிவு பக்கம் போய் ஒரு பின்னூட்டம் போட்டு இருப்பிங்களா? சாதாரண இந்த புரிதல் கூட இல்லதவர்கள் எப்படி அப்படிலாம் பிரச்சினை இருக்கு அதுக்கு தீர்வு வராது, அதான் கடவுள் வரம் கொடுத்தானு கதை பேசி களிக்கிறோம் என்பது செம காமெடி :-))

அதே போல இங்கே கடவுள் வரம் கேட்டா உலகத்துக்கே நலம் தர வரம் கேட்பேன் என்று பெரும்பாலும் சொல்பவர்களின் சமூக அக்கறை குறைந்த பட்சம் கூட பதிவுகளில் வெளிப்பட்டதே இல்லை.

நீங்க எப்படி வேண்டுமானாலும் பதிவு போடலாம், ஆனால் இப்போ சொன்னிங்களே அந்த விளக்கம்லாம் பம்மாத்தாக தான் இருக்கு.

நான் இங்கே யாரையும் கேள்விக்கேட்க முன்னர் பின்னூட்டம் போடவில்லை, அதில் பல கடவுள் இருக்கும் இந்த உலகில் யார் கடவுள்னு மனிதன் ஏற்றுக்கொள்வான், எனவே ஆள் ஆளுக்கு அடுத்த கடவுளை இல்லை என்று சொல்லி எந்த கடவுளையும் இல்லை என்பதாக முடியும் என்பதை சொல்வதே எனது எண்ணம்.

நீங்களாக சமூக அக்கறைப்பற்றி பேசி வழி உண்டாக்கிட்டிங்க!

நிஜமா நல்லவன் said...
This comment has been removed by the author.
பாச மலர் / Paasa Malar said...

கடவுளின் பெயரால் மதங்கள்..அவற்றின் பெயரால் போராட்டம்..தீவிரவாதம், படுகொலை..

"உன் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் நீதான் போக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்வேன்.

sury siva said...

நிசமாவே கடவுள் வந்துட்டார் போலத்தெரியுது.
அத்தனை பேரையும் அழைச்சுக்கிட்டு உடனே போங்க..
ஒரு பெரிய விழாவே நடக்குது.

இடம்:
http://arthamullavalaipathivugal.blogspot.com
நேரம்: ஞாயிறு
வருக..வருக.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

தென்றல்sankar said...

என்னிடம் கேட்டால் மக்களுக்கு விழிப்புனர்வை தருமாரு கேட்பேன்

கல்வெட்டு said...

கண்மணி,
கடவுள் என்பவர் எல்லாம் அறிந்தவர்.

சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று மனிதன் வரமாகக் கேட்டபின்தான் அவர் செய்யும் நிலையில் இருக்கிறார் என்பது கேவலமான் ஒன்று.

எல்லாம் அவன் விருப்பப்படியே நடப்பதால், சமுதாயக் கொடுமைகளுக்கும் காரணம் அவரே.

சில பக்திமான்கள் கேட்ட சமூக விசயங்கள்....

//யாவருக்கும் எல்லா நேரத்திலும் எந்தவிதமான மருத்துவ சேவையும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் கிடைக்க வேண்டும்.//

//அகால மரணங்கள், கொடுமையான மரணங்கள் (கும்பகோணம் தீவிபத்து) போன்றவை எல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன்.//

//விரும்புகிற படிப்பைப் படிக்கும் விதமாக எந்தவித இடையூறும், கச்சா முச்சா பணச் செலவுமில்லாமல், எல்லா மாணவகளுக்கும் படிக்கும் விதமாக இடம் கிடைக்கக் கல்லூரிகளும், பல்கழைக்கழகங்களும் கூவிக் கூவி இடம் கொடுக்கும் நிலை வரவேண்டும்!'//

//மனிதனுக்கோ இல்லை வேற எந்த உயிருக்குமோ நோயே வரக்கூடான்னு வேண்டிக்குவேன்.//


இதெல்லாம் உலகில் இருப்பது கடவுளுக்கு தெரியாதா? இதை ஒருவன் வரமாகக் கேட்டபின்தான் செய்வார் என்றால், அவர் என்ன கடவுள் ? :-((

வரம் கேட்பது கற்பனைதான் என்றாலும், நம்பிக்கையாளர்களுக்கு கடவுள் கற்பனை இல்லையே? நம்பிக்கையாளர்களுக்கு கடவுள் எல்லாம் அறிந்தவர் ஆயிற்றே? :-((((


***

பக்தனுக்கு என்ன தேவை என்று தெரியாமல், "என்ன வேண்டும் கேள்" என்று சொல்பவர் எப்படி எல்லாம் அறிந்த கடவுளாக இருக்க முடியும்?

**

//என்னாலோ...உங்களாலோ..இல்லை இப்பதிவைப் படிக்கும் யாருமோ இந்நிலை மாற ஏதும் செய்ய முடியுமா....???//

//உலகின் நெம்பர் ஒன் பணக்காரர்கள் வரிசையில் நாலு இந்தியர்களும் உண்டாம்.இதே நாட்டில்தான் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப் போன அந்தோணி முத்துவும்? ஒரு சக்கர நாற்காலிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்.//

உண்மைதான். நாம் 3 வேளை சாப்பிடும் வீடு உள்ள அதே தெருவில்தான், பிச்சைக்காரர்களும் நடமாடுகிறார்கள்.

கடவுள் என்பவர் தனியாக எங்கும் இல்லை. நிச்சயம் நீங்களும் நானும் நினைத்தால் கடவுளாக வாழலாம்.

மனிதம் அழிந்து, ஆன்மீகம் வாழும்போது உலகம் இப்படித்தான் இருக்கும்.

கண்மணி/kanmani said...

கல்வெட்டு அய்யா

//கடவுள் என்பவர் தனியாக எங்கும் இல்லை. நிச்சயம் நீங்களும் நானும் நினைத்தால் கடவுளாக வாழலாம்.//

உங்க கூற்றை முழுமையாக ஏற்கிறேன்.கடவுள் என்பது மனிதத்தின் உன்னத நிலை என்பதே என் சித்தாந்தம்.
சரி...ஆனால் இப்போது மனிதம் எப்படியுள்ளது
எனக்கு ஒரு கண் போனாலும் அடுத்தவனுக்கு ரெண்டும் போகனும் என்று தானே?
அதனால்தான் ஒரு கற்பனையான வரம் கேட்டால் எப்படியிருக்கும்னு யோசிச்சேன்.
நம்மால் நல்லவர்களாக இருக்க முடியாத போது நமக்கும் மேலே யாரோ நல்லவர்களாக வல்லவர்களாக இருந்து வரம் குடுக்கட்டுமே....
நீங்களும் வவ்வால் போன்ற பகுத்தறிவு கடவுள் மறுப்பாளர்கள் உங்கள் கருத்தைத் திணிப்பதிலேயே குறியாக இருக்கீங்க.அடுத்தவங்க சொல்வதை நக்கலடிப்பீங்க
ஆனா என் கேள்விக்கு பதிலில்லை.

சரி உங்களுக்காக மாற்றி கேட்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவான சமச்சீரான ஒரு நன்மை
நிகழக்கூடிய சாத்தியக் கூறு
இருக்கும் பட்சத்தில் உங்கள் தேர்வு எது குறித்ததாக இருக்கும்?

கல்வெட்டு said...

கண்மணி,

//நீங்களும் வவ்வால் போன்ற பகுத்தறிவு கடவுள் மறுப்பாளர்கள் உங்கள் கருத்தைத் திணிப்பதிலேயே குறியாக இருக்கீங்க.அடுத்தவங்க சொல்வதை நக்கலடிப்பீங்க ஆனா என் கேள்விக்கு பதிலில்லை.//

:-))

***

கடவுள் நம்பிக்கையாளர்கள் பார்வையில் "எல்லாம் அறிந்த" கடவுளிடமே , "நாட்டைக் காப்பாற்று" என்ற ரேஞ்சில் வரம் கேட்கிறார்கள்.

என்ன முரண்?

அவர்களுக்கு "இதுவும்" கடவுளுக்கு தெரியும், ஆனால் அவன் செய்யவில்லை (அனைத்தும் அவனே என்ற போது ) என்ற உண்மை தெரியாமல் , நாட்டைக் காப்பாற்று என்று சொல்வது அவர்களின் நம்பிக்கையின்மையை அவர்களே சொல்வது போன்றது.

நம்பிக்கையாளர்களின் பின்னூட்டத்தைப் பார்த்ததால் வந்த நகைப்பில் ஒரு பின்னூட்டம் இட்டு வைத்தேன். ..அதைத்தாண்டி விவாத நோக்கம் ஒன்றும் இல்லை. நிச்சயம் நான் எனது கருத்தை திணிக்கவில்லை.
மேலும் நம்பிக்கையாளர்களிடம் விவாதம் செய்யவும் மாட்டேன். நான் சொல்வது conversation ஆக மட்டுமே argument ஆக இல்லை. நம்புங்கள்.

****

//சரி உங்களுக்காக மாற்றி கேட்கிறேன்.
எல்லோருக்கும் பொதுவான சமச்சீரான ஒரு நன்மை நிகழக்கூடிய சாத்தியக் கூறு இருக்கும் பட்சத்தில் உங்கள் தேர்வு எது குறித்ததாக இருக்கும்?//

அதற்கு முதலில் "இறைவன் உள்ளார்" என்றும் , அவருக்கு "நாம் வரமாக கேட்டால் தவிர, மக்களைக் (நாட்டைக்) காப்பாற்றும் சுயபுத்தியோ அல்லது நாட்டில் என்ன நடக்கிறது என்ற அறிவோ இல்லை" என்றும் நான் நம்ப வேண்டும் அல்லவா?

அப்படி நம்பும் பட்சத்தில், நான் கேட்கும் வரம் " கடவுளே, தயவு செய்து பதவி விலகிவிடு."

**
எறும்புகள் வாழ்வில், மனிதர்களுக்கு என்ன பெயர் என்று தெரியுமா?

அல்லது தாவரங்கள் உலகில் மனிதனுக்கு என்ன பெயர் என்று தெரியுமா?

அவைகளும் உயிர்களே. நம்முடன் உண்டு ,உறங்கி,பிறந்து,வாழ்ந்து ,மடிந்து கொண்டுள்ளன.

சில விசயங்களுக்கு விடை தெரியாமல் இருக்காலாம். நமக்கு தெரியவில்லை என்பதால் விடை இல்லை என்பது அர்த்தம் இல்லை.கேள்வியுடன் கடந்து செல்லலாம், ஆனல் விடையாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டு பிரச்சனைகளைக் கடந்து போக முடியாது.

**
உலகின் நம்பர் 1 பணக்காரர் அம்பானி என்றால் ...எனது பதில் "அதனால் என்ன?" என்பதுதான்.

அதுபோலவே.. "கடவுளா? இருந்துவிட்டுப் போகட்டும்" ..என்ற அளவில்தான் நான் உள்ளேன். மறுக்கவோ,ஏற்கவோ இல்லை.
***

அய்யா என்றெல்லாம் சொல்லவேண்டாம். கல்வெட்டு என்றே சொல்லலாம். பெயர்கள் அழைப்பதற்கே.

வவ்வால் said...

கண்மணி,

//அய்யா சாமிகளே ஆசாமிகளே சாமி பூதம் வரம் என்றதும் இங்கன அனானியா வந்து சாமியாடாதீங்க.
என் பதிவு கடவுள் பற்றியது இல்லை.//

என்னைப்போன்றவர்கள் கருத்தை திணிக்கப்பார்க்கிறாங்கனு வருத்தப்படுறிங்க, அது உங்கள் புரிதலில் உள்ள குறைப்பாடு என நினைக்கிறேன். ஏன் எனில் ஒத்த கருத்து இருக்க இடத்துக்கு மட்டும் போய் கருத்து தெரிவிப்பவர்கள் தான் இங்கே இருக்காங்க, ஆனால் மாற்றுக்கருத்து சொல்லும் இடத்திற்கு எத்தனைப்பேர் போய் கருத்து தெரிவிக்கிறாங்க, ஏன் நீங்க அப்படி எத்தனை இடத்துக்கு போய் தைரியமா சொல்லி இருக்கிங்க, ஒரு குறுகீய வட்டம் போட்டுக்கிட்டு அதுக்குள்ள மட்டும் சொல்வது கருத்துப்பரிமாற்றமா? என்னைப்பொருத்தவரை கருத்துப்பரிமாற்றம் செய்கிறேன், திணிப்பல்ல.

நீங்க அய்யா சாமிகளா நான் இப்படி சொல்கிறேன் யாரும் வந்து மாற்று கருத்து சொல்லாதிங்கனு சொல்வது என்ன , நான் இதான் சொல்வேன், அதுக்கு மாற்றுக்கருத்தே வரக்கூடாது என்று சொல்வதும் கருத்து திணிப்பு தான்.

அதே மாதிரி ஒருத்தர் மாற்றுக்கருத்து சொல்லிட்டா , சம்பந்தம் இல்லாம இன்னோருத்தர விட்டு எதிர் வினையாற்றுவது எல்லாமே , தாங்கள் நினைத்தப்படி தான் எல்லாம் நடக்கணும் என்கிற அதிகார போக்கு, அவங்க தான் கருத்து திணிப்பு செய்வாங்க என்னை போன்றவர்கள் அல்ல.

ரசிகன் said...

கடவுளே... நான் நினைக்கும்போதெல்லாம் வந்து நான் கேற்க்கும் வரங்களை தந்துவிட்டு போகனும். இதான் நான் கேற்கும் ஒரே வரம்.:P:P:P

ரசிகன் said...

// நாமக்கல் சிபி said...

அடுத்த ஜென்மத்துல கண்மணி அக்காவுக்கு நான் தம்பியா பிறக்கணும்னு வரம் கேப்பேன்!//

எதுக்கு அடுத்தப் பிறவி?
இப்பவே நாமெல்லாம் தம்பிங்க தானே,,:)

balu said...

எண்ணங்கள்/உயிர்கள் அற்ற உலகம். (or) எல்லா உயிரினங்களையும் கடவுளாக்கிவிடவும்.( Nothing or go(o)dness)

balu said...

@கண்மணி எல்லா உயிரினங்களையும் கடவுளாக்கிவிடவும்

balu said...

ஆதலால், எல்லா உயிரினங்களையும் கடவுளாக்கிவிடவும்...

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)