PAGE LOAD TIME

என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...

இன்னும் ரெண்டு நாள்ல முட்டாள்கள் தினம் வரப் போகுது.

மக்கள் எது எதுக்கோ தினம் கொண்டாடும் போது இதையும் விட்டு வைக்கலை.

ஏப்ரல் ஒன்னாந்தேதின்னா காலையிலேயே யாரு யாரை முதல்ல முட்டாளாக்குகிறோம் என்பதில் மிக ஆர்வமாயிருப்போம்.

காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது டிரஸ்ஸிங் டேபிள் ,பேஸ்ட்,குளிக்கிற சோப்புனு எதுலயாவது ஏப்ரல் ஃபூல் னு எழுதி வச்சிடுவோம்.

இல்லைனா 'அய்யே என்ன சட்டை கிழிஞ்சிருக்கு? டிரஸ்ல ஏதோ ஒட்டியிருக்கு என்பதாகவோ அல்லது இங்க் ஐ தெளித்தோ முட்டாளுக்குவது...

கொஞ்சம் அதிகப் படியா செய்யனும்னா மணியார்ட்டர் அனுப்புவோம்.எவ்வளவுக்கு தெரியுமா 10 காசு ஒரு ரூபாய்னுட்டூ...

இப்பெல்லாம் அந்த அளவு ஆர்வமில்லை.ஆனா ரங்கமணி மட்டும் சொல்வார் எல்லாம் ஒரு நாளைக்கு முட்டாள் ஆனா நான் தான் வாழ்க்கை பூரா முட்டாளாயிட்டேன்னு ...[காதை கொண்டாங்க ஏப்ரல் மாதத்தில் தான் எங்க வெட்டிங் டே...அதேன்]

ஆர்வமின்மைக்கு வயசாவது மட்டும் காரணமில்லை .பல நேரம் நாமே முட்டாள்கள் போல ஏதாவது செய்து கொண்டுதானிருக்கிறோம் ..அதென்ன நாமே னு எங்களையும் சொல்றீங்கன்னு சண்டைக்கு வராதீங்க.ஒப்புக் கொள்ளும் தைரியம் எனக்கிருக்கு அய்யே உங்களுக்கு இல்லையே.!!!??

ஒரு முறை ரங்கமணி ஊருக்குப் போகனும் சீக்கிரம் லன்ச் ரெடி பண்ணு னு சொல்லிட்டு போனார்.நானும் சாதத்துக்கு அரிசியைக் களைந்து எலெக்ட்ரிக் குக்கரில் வைத்து விட்டு மற்ற அயிட்டங்களை தயார் செய்து கொண்டிருந்தேன்.
வெளியே போயிருந்தவர் சாப்பிட வந்ததும் எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் வச்சிட்டு சாதத்தைத் திறந்தா அரிசியும் தண்ணியும் வச்ச மாதிரீயே முழிச்சிக்கிட்டு இருக்கு.எனக்கு அப்படியே ஆடிப் போச்சு.
கரண்ட் கட்டும் இல்லை..ஸ்விட்ச் போட மறந்தோமானு பார்த்தா ஆன் பண்ணியிருக்கு.
குக்கரில் சப்ளை போகலையோன்னு பார்த்தா அதிலும் லைட் எரியுது.
என்னதான் காரணம்னு பார்த்தா ஸ்விட்ச் 'வார்ம்' மோடுல இருக்கு.'குக்' மோடுக்கு மாத்தவில்லை.
அப்புறமென்ன?ஓடிப் போய் பக்கத்து வீட்ல சாதம் மட்டும் வாங்கும் நிலைமை ஆச்சு..அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஒருமுறை உறவினர் குடும்பத்தோடு ஒரு பெரிய ஹோட்டலுக்குப் போனோம்.அங்கு புல்வெளி சர்வீஸ்[லான் சர்வீஸ்] இருந்ததால் காற்றோட்டமாக புல்வ்வெளியில் அமர்ந்தோம்.
அது கொஞ்சம் பெரிய ஹோட்டல் என்பதால் அந்த ஓட்டலின் பெயரில் 'ஸ்பெஷல்' அயிட்டம் மெனு கார்டில் இருந்தது.அதை ஆர்டர் செய்து விட்டு மற்ற அயிட்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது ஒரு பேரர் கையில் மண் கலயம் போல ஒன்றைக் கொண்டுவந்து டேபிள் மீது வைத்தார்.அதிலிருந்து ஏதோ இலை மாதிரி இருக்க புகை வந்து கொண்டிருந்தது.
எங்களுடன் வந்திருந்த உறவினர் சுகாதாரத்துறையில் உயர் பதவியில் இருப்பவர்.எனவே லானில் கொசுக்கள் இருப்பதால் கொசுவை விரட்ட நம் டேபிளில் மட்டும் வைத்திருக்கிறார் என்றேன்.
ஆர்டர் கொடுத்தவைகளை சாப்பிட்டு முடித்த பின்பும் 'ஹோட்டல் ஸ்பெஷல்' அயிட்டம் வரவில்லை.சரி கேன்சல் செய்யச் சொல்லுவோம்னு சொன்ன போது பேரர் அப்போதே கொண்டு வந்து வைத்து விட்டேன் என்றார்.
நான் எதை கொசு விரட்டி என்று நினைத்தேனோ அதுதான் ஸ்பெஷல் டிஷ்ஷாம்.
என்னமோ இனிப்பும் புளிப்பும் காலந்து முட்டை கோஸ் இலையில் வைத்து அலங்கரித்து.....டேஸ்ஸ்ட்டா....நான் சாப்பிட்டுப் பார்க்கலைப்பா.

எங்க ஊரில் ஒருமுறை பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது.நானும் எங்க பக்கத்துவீட்டுத் தோழியும் போனோம்.ஸ்கூலில் ஏதோ டெஸ்ட் என்பதால் பிச்சுவும் கிச்சுவும் வரலை.
ஆனா ஏதாச்சும் தின்பதற்கு வாங்கி வரனும்னு ஆர்டர்.சரின்னு போனோம். அங்கே மீன் வறுவல்,பஜ்ஜி போண்டா இந்த மாதிரி அயிட்டங்கள்தான் விற்பனைக்கு இருந்தது.வெளியில் செய்தது வேண்டாம்னுட்டு பெரியா ராட்சத சைஸில் பஞ்சு மிட்டாய் மிஷினில் போட்டுக் கொண்டிருந்ததை ரெண்டு மட்டும் வாங்கிக் கொண்டேன்.
வீட்டுக்குப் போக ஒரு ஆட்டோ பிடித்து கிளம்பினோம்.ஆட்டோ ஓடத் தொடங்கியதும் காற்று அடிக்கும் வேகத்தில் பெரிய பந்து மாதிரி இருந்த மிட்டாய் சுருங்கத் தொடங்கியது.

'ஏம்ப்பா கொஞ்சம் வேகமாகப் போ....இன்னும் வேகமா...ன்னுட்டு 'ஏதோ கிளைமேக்ஸ் சீன்ல வர்ற சேஸிங் மாதிரி ஆட்டோவை விரட்ட

'ஏம்மா இதெல்லாம் அங்கேயே வாங்கி சாப்பிடனும் னு'ஆட்டோக்காரர் அட்வைஸ் வேறு.

அதுக்குள்ள ஒன்னு சின்னதாகவும் இன்னொன்னு இன்னும் சின்னதாகவும் சுருங்க சரி பெரியதை பிச்சுவுக்கும் சின்னதை கிச்சுவுக்கும் கொடுத்துடுவோம் னு நெனைச்சேன்.

ஒரு வழியா ஆட்டோ வீட்டுக்கு வந்த போது ...வெறும் குச்சிங்க மட்டும் தான் இருந்தது.
பிள்ளைங்களிடம் சாரி கேட்ட போது பிச்சு பேசாமல் முறைத்துக் கொண்டு போக
கிச்சு கேட்டது,'நீயும் ஆண்ட்டியும் சாப்பிட்ட பிறகு குச்சியை மட்டும் ஏன் எடுத்து வந்தீங்க?'
என்ன சொல்ல?

இப்ப சொல்லுங்க என்னை யாராலும் முட்டாளாக்க முடியுமா?

39 மறுமொழிகள்::

Yogi said...

:)

ஆயில்யன் said...

வந்தாச்சு :)

ஆயில்யன் said...

//'நீயும் ஆண்ட்டியும் சாப்பிட்ட பிறகு குச்சியை மட்டும் ஏன் எடுத்து வந்தீங்க?'
என்ன சொல்ல?
//

அதானே குச்சியை தூக்கி போட்டு வராம, அதை வைச்சு பசங்க விளையாடட்டும்னு ஒரு ஆர்வம்தானே..!!!

சின்னப் பையன் said...

முடியாது.. கண்டிப்பாக யாராலும் முடியாது... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்ப .. கல்யாண நாள் வாழ்த்தை இப்பயே கேட்ச் பிடிச்சிக்கோங்க கண்மணி..
அப்பறமா சார்கிட்ட .. சோகத்தை விசாரிச்சிக்கறேன்.. :))

ஆயில்யன் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அப்ப .. கல்யாண நாள் வாழ்த்தை இப்பயே கேட்ச் பிடிச்சிக்கோங்க கண்மணி..
///

அக்கா வாழ்த்து சொன்ன மாதிரி என்னால இவ்ளோ தூரத்திலேர்ந்தெல்லாம் தூக்கிப்போட முடியாது !

கல்யாண வாழ்த்துக்கள் :)))))

Thamiz Priyan said...

///"என்னை யாரும் முட்டாளாக்க முடியாது..."///
:) :) :) :)

Thamiz Priyan said...

அப்ப .. கல்யாண நாள் வாழ்த்தை இப்பயே கேட்ச் பிடிச்சிக்கோங்க டீச்சர்..

Thamiz Priyan said...

//'நீயும் ஆண்ட்டியும் சாப்பிட்ட பிறகு குச்சியை மட்டும் ஏன் எடுத்து வந்தீங்க?'
என்ன சொல்ல? //
:))))))))

Unknown said...

//...(காதை கொண்டாங்க ஏப்ரல் மாதத்தில் தான் எங்க வெட்டிங் டே...அதேன்)//
காதிலேயே சொல்லிடுங்க. (ஏப்ரல் ஒண்ணாந்தேதியா?)
என் தங்கமணிகிட்டே எப்பாவாவது 'ஏப்ரல்ல பிறந்தவங்கல்லாம் அப்டித்தான் இருப்பாங்கன்னு' சொன்னா - 'நாங்க ஒன்னும் ஏப்ரல் ஒண்ணாந்தேதி பிறக்கல்ல'ன்னு சொல்வாங்க.:))

//அப்போது ஒரு பேரர் கையில் மண் கலயம் போல ஒன்றைக் கொண்டுவந்து டேபிள் மீது வைத்தார்.அதிலிருந்து ஏதோ இலை மாதிரி இருக்க புகை வந்து கொண்டிருந்தது.//
யாரோ ஒருவர் அந்த ஹோட்டலில் சிஜ்லர்(sizzler) நல்லாருக்கும்னு சொல்ல, குடும்பத்தோட போய், ஆர்டர் செய்து, பேரர் அடுப்புல ஏதோ பிடித்துக் கொண்ட கலயத்தை ஏன் நம் டேபிளில் வைக்கிறார் என பேந்த பேந்த விழிக்க,
அம்மணிதான் தைரியமா கலயத்தையும் கரண்டியையும் பார்த்துட்டு, அதான் நீங்க சொன்ன ஐட்டம் போலிருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. எல்லோருக்கும் நடக்கிறதுதான்.:)))

Thamiz Priyan said...

எங்க வீட்டு தங்கமணிக்கு ஏப்ரல் 1 ந்தேதி தாங்க பிறந்தநாள்.... முட்டாளை ஏமாற்றி கட்டி வைத்து விட்டார்கள் என்பேன்,, சும்மா தான்... :)))
(இளிக்கலைனா அடி விழுமே..)

Anonymous said...

//பல நேரம் நாமே முட்டாள்கள் போல ஏதாவது செய்து கொண்டுதானிருக்கிறோம் ..அதென்ன நாமே னு எங்களையும் சொல்றீங்கன்னு சண்டைக்கு வராதீங்க.ஒப்புக் கொள்ளும் தைரியம் எனக்கிருக்க//

உங்களுக்குப் பிடிக்காத வலைப்பதிவாளர்களைப் பற்றி இப்படி
நேரடியாகவா தாக்குவது !!

கோபிநாத் said...

\\...[காதை கொண்டாங்க ஏப்ரல் மாதத்தில் தான் எங்க வெட்டிங் டே...அதேன்]\\

ஆஹா..அப்படியா!!!!

வாழ்த்துக்கள் அக்கா ;)

\\ஸ்விட்ச் 'வார்ம்' மோடுல இருக்கு.'குக்' மோடுக்கு மாத்தவில்லை.\\

சுத்தம்...இங்கையும் இப்படி தான் அடிக்கடி...அப்புறம் என்ன ஒட்டல் தான் ;))

நானானி said...

நீங்களே ஆகிக்கிட்டா சர்தான்!!!

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

///பல நேரம் நாமே முட்டாள்கள் போல ஏதாவது செய்து கொண்டுதானிருக்கிறோம்///


அது என்ன பல நேரம்? முழு நேரமுமே நாம அப்படித்தான்.
ஒப்புக் கொள்ளும் தைரியம் எனக்கிருக்கு?!?!?!?!?!?

நிஜமா நல்லவன் said...

///...[காதை கொண்டாங்க ஏப்ரல் மாதத்தில் தான் எங்க வெட்டிங் டே...அதேன்]///

வாழ்த்துக்கள்.

சிங். செயகுமார். said...

Kanmani teacher "my best wishes to u and ur better half"

Anonymous said...

nalla kavithai!

abiappa

மங்களூர் சிவா said...

/
"என்னை யாரும் முட்டாளாக்க முடியாது..."
/

"என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...அதுதானே அதுக்கான அவசியமே ஏற்படாது"

தலைப்பு இப்பிடி இல்ல இருக்கணும் :)))

டீச்சர் உதைக்க வரதுக்குள்ள எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

மங்களூர் சிவா said...

//'நீயும் ஆண்ட்டியும் சாப்பிட்ட பிறகு குச்சியை மட்டும் ஏன் எடுத்து வந்தீங்க?'
என்ன சொல்ல?
//

'நச்'னு ஒரு கேள்வி
:)))

மங்களூர் சிவா said...

/
கயல்விழி முத்துலெட்சுமி said...

அப்ப .. கல்யாண நாள் வாழ்த்தை இப்பயே கேட்ச் பிடிச்சிக்கோங்க கண்மணி..
/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

பாச மலர் / Paasa Malar said...

//ஆர்வமின்மைக்கு வயசாவது மட்டும் காரணமில்லை//

ஒரு காலத்தில் இப்படிக் கூத்தடிக்கும் போது அம்மா மற்ற பெரியவர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஏன் இந்த அளவு அனுபவித்து ரசிக்கவில்லை என்று தோன்றும்..இப்போது என் பொண்ணு என்னைப் பாத்து அப்படி நினப்பாளோ என்னவோ..

அது சரி..என்ன வரவேற்றுச் சிரிக்கும் அழகிய பூக்களை மாற்றி விட்டீர்களே..

திருமணநாள் வாழ்த்துகள்.

மங்களூர் சிவா said...

/
கயல்விழி முத்துலெட்சுமி

அப்பறமா சார்கிட்ட .. சோகத்தை விசாரிச்சிக்கறேன்.. :))
/

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஏன் இப்பிடி ச்சின்ன பசங்களை பயமுறுத்தறீங்க
:(((((

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

///பல நேரம் நாமே முட்டாள்கள் போல ஏதாவது செய்து கொண்டுதானிருக்கிறோம்///


அது என்ன பல நேரம்? முழு நேரமுமே நாம அப்படித்தான்.
ஒப்புக் கொள்ளும் தைரியம் எனக்கிருக்கு?!?!?!?!?!?
/

நீ நெஜமா நல்லவன்யா அதனாலதான் அப்பிடி ~!~!~!~!

:))))))))

பாச மலர் / Paasa Malar said...

//அந்த ஓட்டலின் பெயரில் 'ஸ்பெஷல்' அயிட்டம் மெனு கார்டில் இருந்தது.//

இந்த ஓட்டலில் மட்டுமில்லை..எந்த ஓட்டலின் ஸ்பெஷல் அயிட்டம் மட்டும் ஆர்டர் பண்ணவே கூடாது..

நல்லா எழுதிருக்கீங்க கண்மணி..

நிஜமா நல்லவன் said...

/////மங்களூர் சிவா said...
/
"என்னை யாரும் முட்டாளாக்க முடியாது..."
/

"என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...அதுதானே அதுக்கான அவசியமே ஏற்படாது"

தலைப்பு இப்பிடி இல்ல இருக்கணும் :)))/////


ரிப்பீட்டு(எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஊஊஉ)

கண்மணி/kanmani said...

வாழ்த்து சொல்லும் நல்ல உள்ளங்கள் அனைவரும் இன்னும் கொஞ்சம் பொறுங்கப்பா...ஏப்ரல் மாதம்னு சொன்னேன் முதல் தேதின்னா சொன்னேன்...ஒரு க்ளூ....

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருந்தாலும் ஆண் எப்போதும் நெம்பர் ஒன் தான் பெண் பூஜ்யம் தான் இப்ப தெரியுதா...அது எந்த தேதின்னுட்டு....
நிச்சயம் உங்க அன்பான வாழ்த்துக்களை எதிர் நோக்கும்...
கண்மணி....

கண்மணி/kanmani said...

இன்னுமொரு ஸ்பெஷல்...இது வெள்ளிவிழாவும் ஆண்டும் கூட;)))))))
ஹய்ய்ய்.....வயசு சொல்லிட்டேனோ.[தெரிஞ்சிடுமே]...சரி நான் என்ன நடிகையா?டீச்சர்தானே....சொல்லலாம்..

கண்மணி/kanmani said...

மலர் இந்த டெம்ப்ளேட் எனக்கு ் பிடிச்சது...கண்மணி நட்சத்திரமானது அப்பதான்....அதேன் ...கொஞ்சம் பிரண்ட்லியா இருக்கும் எனக்கு...உங்களுக்கு??

நிஜமா நல்லவன் said...

பத்தாம் தேதியா?
அப்ப இன்னைக்கு வாழ்த்து சொன்ன எல்லோரும்.....?

நிஜமா நல்லவன் said...

///நிச்சயம் உங்க அன்பான வாழ்த்துக்களை எதிர் நோக்கும்...
கண்மணி....////
வாழ்த்துக்கள் கண்டிப்பா உண்டு.

Thamiz Priyan said...

டீச்சர் உங்க கல்யாண நாள் ஏப்ரல் பத்து 1992.... கண்டு பிடிச்சுட்டேனா? சீக்கிரம் அறுபதாவது கல்யாண நாள் கொண்டாட வாழ்த்துக்கள்.... அதுக்கும் 5 வருஷமாவது இருக்கும். இருந்தாலும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

//கோபிநாத் said...

\\...[காதை கொண்டாங்க ஏப்ரல் மாதத்தில் தான் எங்க வெட்டிங் டே...அதேன்]\\

ஆஹா..அப்படியா!!!!

வாழ்த்துக்கள் அக்கா

\\ஸ்விட்ச் 'வார்ம்' மோடுல இருக்கு.'குக்' மோடுக்கு மாத்தவில்லை.\\

சுத்தம்...இங்கையும் இப்படி தான் அடிக்கடி...அப்புறம் என்ன ஒட்டல் தான்
///

ஹய்!

அங்கயுமா?

ஸேம் ஃபீலிங்க்ஸ்
ஸேம் பிளட் :)))

ஆயில்யன் said...

//ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருந்தாலும் ஆண் எப்போதும் நெம்பர் ஒன் தான் பெண் பூஜ்யம் தான் இப்ப தெரியுதா...அது எந்த தேதின்னுட்டு....
நிச்சயம் உங்க அன்பான வாழ்த்துக்களை எதிர் நோக்கும்...
கண்மணி....///

ஒ.கே டீச்சர்
ஒ.கே !

அன்னிக்கு வசூல்ராஜா எம்பிபிஎஸ்லேர்ந்து பாட்டு ஒண்ணு போட்டப்போச்சு :))
(எப்பிடி நாங்களும் நாசூக்கா சொன்னோம்ல!!)

ஆயில்யன் said...

// கண்மணி said...
மலர் இந்த டெம்ப்ளேட் எனக்கு ் பிடிச்சது...கண்மணி நட்சத்திரமானது அப்பதான்....அதேன் ...கொஞ்சம் பிரண்ட்லியா இருக்கும் எனக்கு...உங்களுக்கு??
//

இந்த டெம்பளட்தான் டீச்சர் சூப்பர்!

அது லோட் ஆக டைம் எடுக்குது :)

அப்பிடியே கும்மிக்கும் கூட மாத்துலாம்ல??? :))

துளசி கோபால் said...

கல்யாண நாளும் அன்னிக்கேவா?

த்ச்..த்ச்..........

ஹூம்.............


மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

Thamiz Priyan said...

///தமிழ் பிரியன் said...

டீச்சர் உங்க கல்யாண நாள் ஏப்ரல் பத்து 1992.... கண்டு பிடிச்சுட்டேனா?///
டீச்சர் தட்டச்சு தப்பாயிடுச்சு.10 மார்க் குறைச்சுக்கங்க.. ஏப்ரல் 10 1982.. இப்ப சரி...

Thamiz Priyan said...

///கண்மணி said...

மலர் இந்த டெம்ப்ளேட் எனக்கு ் பிடிச்சது...கண்மணி நட்சத்திரமானது அப்பதான்....அதேன் ...கொஞ்சம் பிரண்ட்லியா இருக்கும் எனக்கு...உங்களுக்கு??///
டீச்சர், இடதுபுற மூலையில் ச்சுப்பிரமணி இருந்தது மட்டும் மிஸ்ஸிங் மாதிரி தெரியுது.... :)

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)