PAGE LOAD TIME

இனி[ய]positive அந்தோணிமுத்துவைப் பாருங்க....ஹலோ சொல்வோம் வாங்க

இருபத்திநாலு மணி நேரமும் கணிணி முன் என்ன வேலை என தங்கமணிகளும்,ரங்கமணிகளும் பரஸ்பரம் திட்டு வாங்கினாலும் தமிழ் மணத்தை திறக்காட்டி வேலையே ஓடாது நமக்கு.
ஏதோ ஒரு பரிச்சயமான உலகத்தில் நம் நண்பர்களுடன் பேசுவது,அரட்டை அடிப்பது,சண்டை போடுவது போல ஒரு நிஜமான சந்தோஷத்தைப் பெறுகிறோம்.

ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 25 வருடங்களாக ஒரே அறைக்குள் முடங்கிப் போய் இன்று சின்னஞ்சிறு திரைக்குள் மட்டுமே உலகத்தை கண்டு கொண்டிருக்கும் ஒரு நண்பர் தான்
திரு.அந்தோணி முத்து.

சென்னை செங்குன்றம் பகுதியில் வசிக்கும் அவர் தன் 11 வயதில் ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்கீழ் செயலற்று போனதால் கால்கள் நடமாட்டமின்றி கைகள் மட்டுமே இயங்கக் கூடிய அளவில் மற்றவரைச் சார்ந்து இருக்கும் நிலை.

இன்று 35 வயதாகும் அவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்.
இயற்கை உபாதைகளுக்குக் கூட அடுத்தவரின் தயவு வேண்டியுள்ள நிலையிலும் ,தன் மனதை இசை மீது செலுத்தி ,விரல்களால் கீ-போர்டு வாசிக்கப் பழகியவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் இசையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார்.அந்த துறையில் மேற்கொண்டு முன்னேற உடலும் பொருளாதாரமும் சரிவராததால் அதைக் கைவிட்டு விட்டார்.

நண்பர்கள் உதவியால் கிடைத்த கணிணீயில் வலைப் பக்கம் எழுதி வருகிறார்.
மருத்துவ 'டிரான்ஸ்கிரிப்ஷன்' படிப்பும் படித்து வருகிறார்.

அவருடைய தற்போதைய தேவை ஒரு சக்கர நாற்காலியும் ,ஒரு மடிக் கணிணியும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஆதரவான அன்பான வார்த்தைகள்.

இவ்வளவு முடியாத நிலையிலும் நேர்மறை எண்ணங்களும் சிந்தனைகளும் தேவையென உணர்ந்து தன் வலைப் பதில் பாஸிடிவ் அந்தோணி முத்து என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு 19.03.08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்

அந்த நண்பரை தமிழ்மணத்தில் இணையச் சொல்லி அழைத்திருக்கிறேன்.அது தொடர்பாகவும் மேலும் அவருக்கு உதவிகள் செய்வது தொடர்பாகவும் சென்னைப் பதிவர்கள் ஆவன செய்ய முன்வந்தால் நானும் இன்னும் நம் பல வலை நண்பர்களும் உதவுவார்கள் என்பது நிச்சயம்.
சென்னைப் பதிவர்கள் யாரேனும் இதைச் செய்தால் நலமாக இருக்கும்.

ஏற்கனவே அவருடைய நண்பர்கள் பட்டியலில் மதுமிதா,இட்லிவடை என பல பெயர்கள் காணப்படுகின்றன.

:அந்தோணிமுத்துவின் வலைப் பக்கம்

பிற்சேர்க்கை:இன்று ஆ.வியில் பார்த்த கட்டுரை இதை எழுதத் தூண்டியது.ஆனால் அதற்கும் முன்பே என்றென்றும் அன்புடன் பாலா உதவ முயற்சிகள் மேற்கொள்வது சந்தோஷம்.

5 மறுமொழிகள்::

தமிழச்சி said...

/// அந்த நண்பரை தமிழ்மணத்தில் இணையச் சொல்லி அழைத்திருக்கிறேன்.///

கண்மணி அவர்களுக்கு வணக்கம். அந்தோணி ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கின்றார்.
வந்து 3 மாதங்கள் இருக்கும்

கண்மணி/kanmani said...

நன்றி தமிழச்சி.
நான் பார்த்த அவர் வலைப் பக்கத்தில் தமிழ்மணக் கருவிப் பட்டை காணப்படவில்லை.எனவேதான் சொன்னேன்.அவர் பதிவுகளும் தமிழ்மணத்தில் பார்த்த ஞாபகம் இல்லை.
எப்படியோ நாலு சுவருக்குள் முடங்கிப் போன அவருக்கு கணிணி மூலம் உலகைக் காணும் வாய்ப்பு நீடிக்கட்டும்.நம்மாளான உதவியைச் செய்வோம்.

Aruna said...

hi,
The need of the hour post kaNmaNi!
thanx a zillion!
anbudan aruna

தமிழச்சி said...

கண்மணி என்னுடைதளத்தில் "ப்ளீஸ் ஆண்டெனிக்கு உதவ முடியுமா?" என்ற எழுத்தில் க்ளீக் செய்தால் ஆண்டெனி தளத்திற்கு சென்று பார்க்கலாம். நேற்று கூட ஒரு கட்டுரை தமிழ்மணத்தில் வந்தது.

ஆண்டெனியின் கவிதைகளில் ஓன்று


****

மனது மிகவும் பாரமாய் இருக்கிறது.
நம்பியவர்களின்...
கழுத்தறுப்பு...
நேசித்தவர்களால் முதுகில் குத்துப்படல்.
சுற்றிலும் நடக்கும்...
சின்னத்தனங்கள்.
தவறுகளைப் பெரிதுபடுத்தி...
அதற்குத் தண்டனை கொடுத்து...
சந்தோஷம் காண்பவர்களின்...
குரூரம்...
அன்பு காட்டுவதாய்...
இதுவரையில்...
நடித்தவர்களின்...
நாடகம்....
பக்திமான்களாய்க்
காட்டிக்கொண்டு...
உள்ளுக்குள் வெறிநாய்களாய்த்
திரிபவர்களின்...
குதறியெடுக்கும்...
கொடூரம்.

அய்யோ...
மனமும் உடலும்...
ஒருங்கே...
தீப்பிடித்து எரிவதாய்...
உணர்கிறேன்.

நரகம் என்பது இப்படித்தான் இருக்குமோ...?

எதையும் வெளிக்காட்ட முடியாமல்
தனிமையில்...
வாய்விட்டுக் அழவும்..
வழியின்றித் துடிக்கிறேன்.

போராடச் சக்தியின்றி...
சோர்ந்து...
விழுகிறேன்.

என் இயலாமையின்...
அதிகபட்ச வெளிப்பாடாய்...
துடித்து...
துவண்டுபோய்...
மௌனமாய்க்
கண்ணீர் சிந்துகிறேன்.

இந்த உலகம்...
எனக்கு வேண்டவே...
வேண்டாம்.

கடவுளே...
தயைசெய்து...
என்னை...
எடுத்துக் கொண்டுவிடேன்...!

இந்த உலகில்...
வாழ...
அசிங்கமாயிருக்கிறது...!

அவமானமயிருக்கிறது...!

ஒன்று...
என்னை...
நீ...
கொன்றுவிடு...

இல்லை...
நான் கொல்கிறேன்.

மனம் சாகடிக்கப்
பட்டபிறகு...
உடலைக் கொல்வது...
மிகச் சாதாரணம்.

கால்வாசி இயங்கும்
iஇந்த உடல்...
ஒரு முக்கால்... பிணம்...

மனம்...
முழுப் பிணம்.!

****

cheena (சீனா) said...

கண்மணி - நானும் வலைச்சர ஆசிரியராக இருந்த போது அங்கு ஒரு பதிவு போட்டுள்ளேன்,.

Post a Comment

Labels

;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)